என்னை கவனிப்பவர்கள்

consumer awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
consumer awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2015

உண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா?

  
  நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினர்,  பணப் புழக்கம் காரணமாகவும்  மீடியா விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம். தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் அம்சங்களாகும். இவை வாங்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது 

   பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும்  நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

   நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை  கீழே கொடுக்கப் பட்டவற்றோடு  ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
  1. பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
  2.  கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
  3.  பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
  4. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
  5.   பொருளின் பெயர் சீட்டில் அல்லது உறையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
  6. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
  7.  சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
  8. எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
  9. சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
  10.  நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
  11. நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும்  உதவுவேன்.
  12. எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான்  வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே  வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
இவற்றில் எட்டுகேள்விகளுக்காவது உங்களுடைய நேர்மையான பதில் ஆம் என்றால் நீங்கள் சமூக ஆர்வலர் என்றும் விழிப்புணர்வு மிக்கவர் பெருமை கொள்ளலாம். 

   (நான் ஆம் சொன்னதை எண்ணிப் பார்த்தேன். எட்டு தேறவில்லை. முயற்சிக்க வேண்டும்)