என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, September 30, 2017

ரஜினியிடம் பாடம் கற்பாரா டி.ராஜேந்தர்?


   டி.ராஜேந்தர் அவ்வப்போது பரபரப்பாக ஏதாவது பேசி தான் இருப்பதை காட்டிக் கொள்வார். அடுக்கு மொழி பேசி நம்மையும்  கொல்வார். அவரது அடுக்கு மொழியை இன்னும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை  என்னவென்று சொல்வது.  அவரது தற்பெருமை பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்கு அலுத்துப் போய்விட்டது என்றாலும் அவர் விடுவதில்லை. தன்னை கோமாளியாக பலரும் பார்ப்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா  என்று தெரியவில்லை. உலகத்திலேயே மிகச சிறந்த திறமை சாலி  தான்தான் என்று உண்மையாகவே நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். இளையவர்களுக்கு தன் நடத்தை மூலம் வழி  காட்ட  வேண்டியவர் அவர்கள் வெறுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக்  கொள்ளத் தவறுவது இல்லை. 

   இவரது சமீபத்திய பரபரப்பு நடிகை தன்ஷிகாவை அழ வைத்தது. "விழித்திரு" ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகை  தன்ஷிகா( கபாலியில் ரஜினியுடன்  நடித்தவர்) மேடையில் உள்ளோர் அனைவரையும் பற்றி  பேசியவர் அவரது போதாத காலம்  டி.ராஜேந்தரைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டார். பின்னர் மைக்கைப்பிடித்த டி. ராஜேந்தர் சபை நாகரீகம் கற்றுத் தருவதாக சொல்லி தான் நாகரிகத்தை மறந்து தன்சிகாவை காய்ச்சி எடுத்து விட்டார். ரஜினி படத்தில் நடித்ததால்  என்னை மறந்து விட்டார் என்றார். தவறை உணர்ந்த தன்ஷிகா காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டும் விடாமல் வெறி பிடித்தவர் போல சாடியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியதை அறியாமல் தொடர்ந்தார். உங்கள் மேல் நான் மதிப்பு வைத்திருக்கிறேன். என்று குறுக்கிட்டு சொன்ன தன்ஷிகாவை 'உன்னுடைய  மதிப்பை கொண்டு எந்த மார்க்கெட்ல விக்கப் போறேன்' நீ சொல்லிதான் நான் வாழனும்னு அவசியம் இல்லை.' என்று மேலும் தாக்கினார்.  மீண்டும் சமாதானம் சொல்லியும்  அதை ஒப்புக்கேனும் ஏற்கவில்லை  ஓரளவுக்கு மேல் தாங்க இயலாத தன்ஷிகா அழ ஆரம்பித்து விட்டார். 
    மூத்த கலைஞர்  டி.ராஜேந்தரின் இப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரவித்துள்ளனர். ரஜினியின் மீது  பொறாமை கொண்டாற்போல் பேசிய டி.ஆர்,  ரஜினியிடம்  இருந்து பாடம் கற்க வேண்டும். 

   எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பேசினார் . அப்போது படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.ரகுமான் , அதில் பணியாற்றிய கலைஞர்கள் ஆடியன்ஸ் உள்ளிட்ட  அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்த ஐஸ்வர்யா ராய்  ரஜினியை மறந்துவிட்டு பேச்சை முடித்து விட்டார். மேடையில் இருந்து இறங்கு முன் சட்டென்று நினைவுக்கு வதவராக மீண்டும் வந்து நன்றி கூறினார். ரஜினி அதை தவறாகக் கருதவில்லை. தன்னைத் தூற்றுபவரையும் தன் வசப் படுத்தும் பண்பு அவரிடத்தில் இருந்தது. ஜெயலலிதாவுக்காக தேர்தல் மேடைகளில் தன்னை கண்டபடி தூற்றிய மனோரமாவைக் கூப்பிட்டு தன் படத்தில் நடிக்க வைத்தார்.ஒரு வேளை அது விளம்பரத்திற்காகவே செய்திருந்தாலும் பாதகமில்லை. .
 ஐஸ்வர்யா  ராய் ரஜினியை மறந்த வீடியோ டி.ராஜேந்தர் தான் ஒரு வாசமில்லா பெருங்காய டப்பி என்பதை உணர்ந்தால் நல்லது.

இவரது பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டு அம்மணி சொன்னது " அஞ்சு நிமிஷம்  பேச்சை கேட்டதுக்கே இப்படி இருக்கே . பாவம்  உஷா  " 19 comments:

 1. தமிழ்மணத்தில் இணைத்து வோட்டு போட்டுவிட்டேன்...இனிமேல்தான் படிக்க வேண்டும்

  ReplyDelete
 2. அதுனால முதல்வடை எனக்குதான்

  ReplyDelete
 3. அவரின் விட்டில் பருப்பு வேகாது அதனால்தான் வெளியில் காட்டுகிறார் டி ராஜேந்தர்

  ReplyDelete
 4. எங்கே நண்பரே நீண்டநாளாய் காணவில்லை! தம 2

  ReplyDelete
 5. வணக்கம் நண்பரே ரொம்ப நாள் ஆகிவிட்டது இப்பொழுதுதான் மீண்டும் தலைக்காட்டுகிறேன், உங்கள் பதிவும்
  அவர் வந்த புதில் நிரம்ப பாராட்டை பெற்று கர்வமேறி ஏறியதில் இருந்து விழுந்ததை உணராமால் இன்னும் மயக்கத்திலேயே இருக்கிறார் போல் கலங்கிய மூளையுடன்

  ReplyDelete
 6. வணக்கம், நலமா ?

  விசுவின் வலைப்பக்கத்தில் பின்னூட்டமிட்ட வரிகளையே இங்கும் பதிகிறேன்...

  நீங்களே குறிப்பிட்டத்தை போல டி.ராஜேந்தர் ஒரு அநாகரீக கோமாளி ! தங்களை அதீத திறமைசாலிகளாக பாவித்துக்கொண்டு ஒரு வட்டத்துக்குள் தேங்கிவிட்டவர்கள் ! அவரை போலவே நாகரீகம் இன்றி சொல்லவேண்டுமானால்...

  இடம் பொருள் ஏவல் தெரியாமல் கிடைத்த இடத்திலெல்லாம் " டண்டனக்கா... டணக்குனக்கா... " என தாளம் போடுவது திறமை அல்ல... ஒருவகையான மனநோய் !

  இந்த ஆளால் என்ன் பயன் என்று அந்த விழா நிர்வாகிகள் பேசவிட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள் ? அல்லது பார்வையாளர்களில் சிலராவது ஒன்றுகூடி கண்டித்திருக்க வேண்டும்.

  எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
  https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 7. நடிகைகளை அழ வைப்பதில், இவரோட பையனுக்கும் அப்படியென்ன சுகமோ :)

  ReplyDelete
 8. சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ நாய் ஊழையிடுவதுபோல்... கேவலம் இவன் வீட்டில் யாரும் கேட்க மாட்டார்களோ...

  ReplyDelete
 9. கடைசியா அம்மணி சொன்னாங்களே.. அதையே தான் முகநூலில் போட்டு இருந்தேன்..

  பாவம் உஷா..

  ReplyDelete
 10. நாகரீகம் தெரியாதவர். பொறாமையும் கர்வமும் பிடித்தவர். அருகிலிருந்தவர்கள் தலையிட்டிருக்கலாம்.

  ReplyDelete
 11. வேதனை
  சபையின் நாகரிகம் தெரியாதவர்

  தங்களின் பதிவினைக் கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஐயா
  தொடர்ந்து எழுதுங்கள்
  படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்
  நன்றி
  தம +1

  ReplyDelete
 12. சபை நாகரீகம் அறியாதவர். தலைக்கேறிய கர்வம் அவரை ஆட்டுவிக்கிறது. கடைசி வரி சொன்னீங்க பாருங்க அது அது தான்!!!

  ReplyDelete
 13. நெடுநாள் கழித்து கண்டதில் மகிழ்ச்சி. மேடை நாகரிகம் பேண வேண்டியது அவசியம்.

  ReplyDelete
 14. பொது வெளியில் அவரது நடத்தை மேன் மேலும் சகதியை அவர்மேலேயே தெறிக்க வைக்கும்

  ReplyDelete
 15. அவையடக்கம் இவர் பரம்பரைக்கே சொல்லித்தரனும் போல. இவர் பல துறைகளில் கரை கண்டவர் என்பதால் மற்றவர்களை முட்டாள்கள் என எண்ணுகிறார்.ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்பதை அறியா! அறிவிலி.

  ReplyDelete
 16. இவனைச் சொல்ல என்ன இருக்கு? பக்கத்தில் எருமை மாடு மாதிரி உக்காந்து இருக்கானுக பாருங்க, வாயைத் திறக்காமல், அவனுகளைப் பார்த்தால்தான் கடுப்பாகுது.

  "மூடுடா வெண்ணை"னு மேடையிலேயே நாலு அரை அறைஞ்சிருக்கணும் இவனை!

  ReplyDelete
 17. தமிழ் சினிமாவின் அசிங்கம்

  ReplyDelete
 18. இந்த மாதிரி மெண்டல்கள் வெளியில் தான் நாய் மாதிரி
  வீட்டில் பூனை போல் பம்மிக்கிட்டு இருப்பார்கள்

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895