என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 15 ஜூன், 2012

பால குமாரன் கவிதைகள் -பகுதி 2

  
  பாலகுமாரனின் கவிதைகள் பற்றிய பதிவைப் போட்டதும் பதிவுலகம் முழுவதும் பாலகுமாரனின் தீவிரமான ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்கள் அணு அணு வாக பால குமாரனின் எழுத்தை ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் இட்ட கருத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.  நான் பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இந்த நாவலைப் படித்தேன். நாவலைவிட இந்தக் கவிதைகளே என்னை மிகவும் ஈர்த்தது. குதிரைக் கவிதைகள் திடீரென நினைவுக்கு வர நூலகத்தில் இந்த நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்ததன் விளைவே இந்தப் பதிவு.

    இந்த நாவலில் பல்வேறு மோட்டார் துறை  தகவல்கள்   இயல்பாக திணிக்கப்படாமல்  விரவிக் கிடப்பது இந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும்.

 அவற்றில் ஒன்று லாரி ஓட்டுனர் ஆக்சிடென்ட் செய்துவிட்டு சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை எழுந்தால் லாரி கிளீனர் வண்டியை தான் ஒட்டியபோதுதான் விபத்து நடந்தது என்று சொல்லி ஒப்புக்கொண்டு சிறை  செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி.அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறதாம்.பின்னாளில் கிளீனர்கள் ஒட்டுனராக மாற இது தகுதியாகக் கருதப்படுகிறது. இதை கிளீனர்கள் தவறாது கடை பிடித்து வருகிறார்கள். ஒட்டுனர்களை காட்டிக் கொடுப்பதில்லை. இது போலீசுக்கும் தெரியும்.
 
 ****************** 
இரண்டாம்  வேதம் 

                      குளம்படி  ஓசைக் கவிதை 
                      குதிரையின் கனைப்பு கீதம்
                      வீசிடும்  வாலே கொடிகள்
                      பொங்கிடும் நுரையே கடல்கள் 
                      பிடரியின் வரைவே வயல்கள் 
                      உருண்டிடும் விழியே சக்தி 
                      குதிரையின்  உடம்பே பூமி 
                      சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு-இது 
                      குதிரைகள் எனக்கு சொன்ன 
                      வேதத்தின் இரண்டாம் பாடம்


மூன்றாம்  வேதம் 

                      குதிரைகள்  பயணம் செய்யா 
                      கூட்டமாய் பறவை போலே
                      இலக்குகள் குதிரைகளிலில்லை
                      முன்பின்னாய் அசைதல் தவிர
                      குதிரையை மடக்கிக் கேளு
                      போவது எங்கே என்று
                      புறம் திரும்பி முதுகு காட்டும்
                      கேள்வியே அபத்தம் என்று 
                      இலக்கிலா மனிதர் பெரியோர் 
                      உள்ளோர்  அடைய மாட்டார் -இது 
                      குதிரைகள் எனக்குச் சொன்ன
                      வேதத்தின் மூன்றாம் பாடம்.

                      (குதிரைக் கவிதைகள் தொடரும்)

17 கருத்துகள்:

 1. பாலகுமாரன் கதைகள் தான் அருமை என்றால் அவர் எழுதிய கவிதைகளும் அருமை தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமை! கவிதையில் தனித்துவம் தெரிகிறது!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((

  பதிலளிநீக்கு
 4. //ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((//

  என் சார்பாகவே மோகன் பின்னூட்டம் இட்டது போலிருக்கு....

  எத்தனை முறை படித்திருக்கிறேன் என எனக்கே தெரியாது.

  பதிலளிநீக்கு
 5. கவிதைகளை நேசித்த எனக்கு கவிதைகளை சுவாசிக்க கற்றுத்தருகிறீர்கள்...
  நன்றி தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 6. தொடருங்கள் தொடர்கிறோம்.!

  பதிலளிநீக்கு
 7. குதிரையின் மூலம் பால குமாரன் நடத்துகிற
  வேத பாடங்கள் நிறைய யோசிக்கச் செய்து போகிறது
  இதனை மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. //சீனு said...
  பாலகுமாரன் கதைகள் தான் அருமை என்றால் அவர் எழுதிய கவிதைகளும் அருமை தொடருங்கள்//
  நன்றி சீனு சார்.

  பதிலளிநீக்கு
 9. //புலவர் சா இராமாநுசம் said...
  அருமை! கவிதையில் தனித்துவம் தெரிகிறது!
  சா இராமாநுசம்//
  தங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 10. //மோகன் குமார் said...
  ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன்.//
  நன்றி.பாலகுமாரன் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணரும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
 11. //வெங்கட் நாகராஜ் said...
  //ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((//
  என் சார்பாகவே மோகன் பின்னூட்டம் இட்டது போலிருக்கு....
  எத்தனை முறை படித்திருக்கிறேன் என எனக்கே தெரியாது.//
  பாலகுமாரன் பேனா மைக்கு பதிலாக காந்த விசையை ஊற்றி எழுதுகிராறோ?

  பதிலளிநீக்கு
 12. //Gobinath said...
  கவிதைகளை நேசித்த எனக்கு கவிதைகளை சுவாசிக்க கற்றுத்தருகிறீர்கள்...
  நன்றி தொடருங்கள்//
  ஜாம்பவான்களின் எழுத்துக்களை ரசிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. Ramani said...
  குதிரையின் மூலம் பால குமாரன் நடத்துகிற
  வேத பாடங்கள் நிறைய யோசிக்கச் செய்து போகிறது
  இதனை மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்//
  தங்கள் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 14. ''...குதிரையை மடக்கிக் கேளு
  போவது எங்கே என்று
  புறம் திரும்பி முதுகு காட்டும்
  கேள்வியே அபத்தம் என்று
  இலக்கிலா மனிதர் பெரியோர் ...''
  I like these lines. Thank you so much. Nalvaalththu....
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 15. குதிரையின் உடம்பே பூமி
  சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு-இது
  குதிரைகள் எனக்கு சொன்ன
  வேதத்தின் இரண்டாபாடம்///


  இலக்குகள் குதிரைகளிலில்லை
  முன்பின்னாய் அசைதல் தவிர//

  இரண்டாம் பாடமும், மூன்றாம் பாடமும் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895