எங்கள் தெருவில் புஷ்பா மாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.புஷ்பா மாமிக்கும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைக் கண்டாலே அஞ்சி ஓடுவார்கள்.காரணம் அவரது புலம்பல்கள். மாட்டிகொண்டால் குறைந்தது அரை மணி நேரத்திற்கு தப்பிக்க முடியாது. மாமியின் புலம்பல்களில் இடம்பெறாத சப்ஜெக்டே இல்லை.குடும்ப பிரச்சனை, (தன்னுடையது மட்டுமல்ல பிறருடையதும்) சமூகப் பிரச்சனை,சினிமா பொருளாதாரம், இலக்கியம்,தொலைகாட்சி, என்றுபட்டியல் நீளமானது.அந்தப் புலம்பல்கள் சில சமயங்களில் நியாயமாக இருப்பதாக தோன்றும். கௌரவம் கருதி நாம் வெளிப்படையாக புலம்புவதில்லை. மாமியின் புலம்பல்களை பெரும்பாலானவர்களின் மன வெளிப்பாடாகக் கருதலாம்.
நான் கேட்ட புஷ்பா மாமியின் புலம்பல்களை நீங்களும் கேட்டு இன்புற/துன்புற ஒரு சதித் திட்டம் தீட்டி அவ்வப்போது புலம்பல் பதிவுகளை வெளியிட இருக்கிறேன்.
இன்று ஆரம்பித்து விடுகிறேன்.
ஞாயிற்றுக் கிழமை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன்.
"முரளி!முரளி!" என்று கூப்பிட்டுக் கொண்டே வேகமாக புஷ்பா மாமி நுழைந்தார்.
அவர் கையில் மின் கட்டண அட்டை
"கரண்ட் பில் 3000 ரூபாய்க்கு மேல வந்திருக்கு சரியா பாருடா?. இதுக்கு முன்னாடி இவ்வளோ வந்ததில்லை. அநியாயமா இருக்கு.தப்பா போட்டிருக்கான்னு நினைக்கிறேன்."
"தப்பா எல்லாம் இருக்காது மாமி.அவன் ரெடியா டேபிள் வச்சிருக்கான்.அதை வச்சித்தான் குறிச்சிருப்பான்" என்றேன் நான்
"எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.உங்களுக்கு எவ்வளோ வந்திருக்கு."
"எங்களுக்கு 3105 ரூபாய் வந்திருக்கு."
மாமியின் முகத்தில் சிறிது மகிழ்ச்சி,"அப்படியா அவ்வளவா வந்திருக்கு?. எதுக்கும் நெட்ல சரிபார்த்து சொல்லேன். எங்காத்தில நான்,மாமா ரெண்டு பேர்தான இருக்கோம்?"
"சரி மாமி கொஞ்சம் இருங்க பாத்து சொல்றேன்".
மாமியின் மின் அட்டையில் 710 யூனிட் பயன்படுத்தி இருந்ததாக குறிப்பிடப் பட்டிருந்தது..
நான் மின் வாரியத்தின் இணைய தளத்தில் நுழைந்து பயன்பாட்டு யூனிட்டை உள்ளீடு செய்து கணக்கீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன். எங்கள் வீட்டின் கட்டணத்தையும் சரிபார்க்க எல்லாம் மிகச் சரியாகவே இருந்தது.
"மாமி! எல்லாம் சரியாத்தான் இருக்கு. 500 யூனிட்டுக்குள்ள யூஸ் பண்ணாதத்தான் பில் கம்மியா வரும்."
"எப்பவும் கம்மியாத்தான் ஆகும். லீவுக்கு என் பையனும் பொண்ணும் ஊர்ல இருந்து வந்திருந்தாங்களே.அதனால அதிகமாயிருக்கும்னு நினக்கிறேன். அதுவும் என்மருக வந்தப்ப 24 மணி நேரமும் ஏசி யும் டிவியும் ஓடிட்டிருந்தது. அப்ப பில் கரெக்டுன்னு சொல்லறியா. தப்பா இருந்தா ஈபி காரனை ஒரு புடி புடிக்கலாம்ம்னு நினைச்சேன். கொஞ்சம் தனித் தனியா கணக்கு போட்டு சொல்லேன்."
"மாமி! அப்புறமா எழுதி தரட்டுமா?"
"அப்புறம் உன்ன புடிக்க முடியாதேடா!"
வேறு வழியின்றி ஒரு பேப்பரில்
மொத்தம் 710 Unit
500 யூனிட்டுக்கு மேல போனா முதல்
200 unit 200 x 3.00 = 600.00
201-500 300 x 4.00 = 1200.00
501-710 210 x 5.75 = 1207.50
Fixed Charges 40.00
Total 3047.50
Rounded Amount 3048 .00
என்று எழுதி கொடுத்தேன்.
"ரொம்ப தேங்க்ஸ்டா. கரண்டே பாதி நேரம்தான் இருக்கு.முழு நேரமும் இருந்தா இன்னும் எவ்வளோ கட்டனமோ தெரியல.மாமா பென்ஷன்ல பாதி கரண்ட் பில்லே ஆகிடும் போல இருக்கே" என்று புலம்பிக்கொண்டே போனார் புஷ்பா மாமி. மாமியின் புலம்பல் எத்தனையோ பேரின் எதிரொலியாகத் தெரிந்தது.
நீங்களும் உங்கள் மின்கட்டணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து அதில் வரும் பெட்டியில் பயன்படுத்திய யூனிட்டுகளின் எண்ணிக்கையை உள்ளீடு செய்தால் செலுத்த வேண்டிய கட்டண விவரம் கிடைக்கும்
உங்கள் மின்கட்டணம் அறிந்துகொள்ள/ சரிபார்க்க

***************
நான் புஷ்பா மாமியின் ரசிகனாகிவிட்டேன்
பதிலளிநீக்குமாமியை ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்கோ
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அட அங்கயும் இதுதான் பிரச்சினையா??????
பதிலளிநீக்குநாம ஈழத்தில இருந்தாலும் தமிழகத்தில இருந்தாலும் தலையெழுத்து ஒன்றுதான் பாஸ் :(
கரண்டே இல்லாம இருந்தும் இவ்வளவு கட்டணமா.... சரி தான்.
பதிலளிநீக்குஇணைப்பு நல்ல இணைப்பு - பில் வரதுக்கு முன்னாடியே ஷாக் எவ்வளவு அடிக்கும்னு தெரிஞ்சிக்கலாம்.....
புலம்பல் ன்னு சொல்லி மின் கட்டண விவரத்த வெளங்க வச்சுட்டிரே. தொடர்ந்து புலம்பி இது போல வெளங்க வையும்
பதிலளிநீக்குநச் பதிவு.., தொடருட்டும் இது போன்ற பதிவுகள்.!
பதிலளிநீக்குஉபயோகமான தகவல். நன்றி!
பதிலளிநீக்குஅழகாக உரையாடல் மூலம் அனைவருக்கும் பயன் தரும் தகவலை சொல்லி விட்டீர்கள் ! வாழ்த்துக்கள் ! தொடருங்கள் ! நன்றி !
பதிலளிநீக்குNo current. Even when it is there, lot of power flactuation, but the bill has raised more than 100 %. This is the status of us today !
பதிலளிநீக்கு//ரொம்ப தேங்க்ஸ்டா. கரண்டே பாதி நேரம்தான் இருக்கு.முழு நேரமும் இருந்தா இன்னும் எவ்வளோ கட்டனமோ தெரியல.மாமா பென்ஷன்ல பாதி கரண்ட் பில்லே ஆகிடும் போல இருக்கே//
பதிலளிநீக்குபுஸ்பா மாமி என்ற கற்பனைக் கதபதிரதிர்க்கு உயிர் கொடுத்த விதம் அருமை சார். புஸ்பா மாமியுடன் சமுக அவலங்களை அலசுவதை கேட்க நாங்களும் ஆவலாய் உள்ளோம்
மிக மிகப் பயன் தரும் - பலரிற்கு - .
பதிலளிநீக்குநல்ல சேவை சகோதரா முரளி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
//Ramani said...
பதிலளிநீக்குநான் புஷ்பா மாமியின் ரசிகனாகிவிட்டேன்
மாமியை ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்கோ
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி ரமணி சார்!
//Gobinath said...
பதிலளிநீக்குஅட அங்கயும் இதுதான் பிரச்சினையா??????
நாம ஈழத்தில இருந்தாலும் தமிழகத்தில இருந்தாலும் தலையெழுத்து ஒன்றுதான் பாஸ்// :
நன்றி கோபி!
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குகரண்டே இல்லாம இருந்தும் இவ்வளவு கட்டணமா.... சரி தான்.
இணைப்பு நல்ல இணைப்பு - பில் வரதுக்கு முன்னாடியே ஷாக் எவ்வளவு அடிக்கும்னு தெரிஞ்சிக்கலாம்.....//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
24 மணி நேரமும் A/C ஓடியே மூவாயிரம் ரூபாய்தானா.... அட... மீட்டரில் ஐஸ் வச்சிட்டாங்களா...! புதிய கணக்கீடு தந்திருப்பது பயனளிக்கும் செயல். குறைந்த மின் அழுத்தம் இருந்தாள் பயனீட்டு அளவு அதிகரித்து 'பில்' கையைச் சுடுமாம்....
பதிலளிநீக்கு//சேக்காளி said...
பதிலளிநீக்குபுலம்பல் ன்னு சொல்லி மின் கட்டண விவரத்த வெளங்க வச்சுட்டிரே. தொடர்ந்து புலம்பி இது போல வெளங்க வையும்//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சேக்காளி சார்!
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குநச் பதிவு.., தொடருட்டும் இது போன்ற பதிவுகள்.!//
நன்றி நண்பரே!
//வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குஉபயோகமான தகவல். நன்றி!//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு24 மணி நேரமும் A/C ஓடியே மூவாயிரம் ரூபாய்தானா.... அட... மீட்டரில் ஐஸ் வச்சிட்டாங்களா...! புதிய கணக்கீடு தந்திருப்பது பயனளிக்கும் செயல். குறைந்த மின் அழுத்தம் இருந்தாள் பயனீட்டு அளவு அதிகரித்து 'பில்' கையைச் சுடுமாம்..//
மாமி கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில்ட் அப் பண்ணிக்குவாங்க.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஅழகாக உரையாடல் மூலம் அனைவருக்கும் பயன் தரும் தகவலை சொல்லி விட்டீர்கள் ! வாழ்த்துக்கள் ! தொடருங்கள் ! நன்றி !
தவறாமல் கருத்தளிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி சார்,
மோகன் குமார் said...
பதிலளிநீக்குNo current. Even when it is there, lot of power flactuation, but the bill has raised more than 100 %. This is the status of us today !//
உண்மைதான்.கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரத்தை வெட்டி படாத பாடு படுத்திவிட்டார்கள்
//சீனு said...
பதிலளிநீக்குபுஸ்பா மாமி என்ற கற்பனைக் கதபதிரதிர்க்கு உயிர் கொடுத்த விதம் அருமை சார். புஸ்பா மாமியுடன் சமுக அவலங்களை அலசுவதை கேட்க நாங்களும் ஆவலாய் உள்ளோம்//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு சார்,
மிகவும் உபயோகமான பதிவு. புஷ்பா மாமியைக் கேட்டதாகச் சொல்லவும். அடிக்கடி இதுபோன்ற கேள்விகளை கேட்கச் சொல்லவும். :-)
பதிலளிநீக்குமாமியின் புலம்பல் நன்மையில் முடிந்தது.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவலை எளிமையாக விளக்கிய விதம் அருமை!
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்கு