என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, March 9, 2017

பிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-   கடந்த வாரம் குமுதத்தில்(08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. முகநூலில் அந்த தகவலை மட்டும் 
பகிர்ந்திருந்தேன். கதையை வெளியிட வில்லை.ஒரு வாரம் ஆகி விட்ட படியால் அக் கதையை வலைப் பதிவில் பதிவிடுகிறேன். குறுகிய காலத்தில் பரிசீலித்து வெளியிட்ட குமுதம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..இதுவரை  மூன்று கதை குமுதத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது

இக்கதைக்கு நான் வைத்த தலைப்பு பிரேக்கிங் நியூஸ். ஆனால் குமுதத்தில் யமுனா என்று  மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அந்த இதழ் பெண்கள் சிறப்பிதழ் என்பதால் பெண்களின் பெயர்கள் மூன்று ஒரு பக்கக் கதைகளுக்கும் வைக்கப் பட்டிருந்தன.

       பிரேக்கிங் நியூஸ்
                                          (ஒரு பக்கக் கதை )

             எல்லா பரபரப்பும் அடங்கியும்   பிரேக்கிங்  நியூஸ்  ஃபோபியா ராஜியை விட்ட பாடில்லை...  பள்ளியில் இருந்து திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும் மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். சே!  உருப்படியாக ஒன்றும் இல்லை.
   “என்னம்மா இப்படி பண்றியேம்மாபசிக்குது ஏதாவது குடும்மாஎன்றாள் யமுனா .
   “ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி சமயக்கட்டுல  ஜூஸ் பிழிஞ்சு வச்சுருக்கேன் எடுத்துக் குடிஎன்று தலையைத் திருப்பாமல் கூறினாள் ராஜி.
   “அம்மா! கொஞ்ச நாளா  உனக்கு என்னமோ ஆயிடிச்சிஎன்று சொல்லிக் கொண்டே ஜூசைக் எடுத்துக் கொண்டு வந்து  சோபாவில் ராஜியின்   பக்கத்தில் அமர்ந்து குடிக்கத் தொடங்கினாள் யமுனா
 அதற்குள் விளம்பர இடைவேளை வர இதோ பாருடி உனக்கு நான் மேகி செஞ்சு கொண்டு வரேன். அதுவரைக்கும்  ஜூஸ் குடிச்சிக்கிட்டே  டிவி  பாத்துக் கிட்டு இரு. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வந்தா உடனே என்னை கூப்பிடு . சரியா
என்று சொல்லி விட்டு வேகமாக சமையலறை  சென்றாள்.  
   ஒரு சில நிமிடங்களிலேயே யமுனாவின் குரல் ஒலித்தது அம்மா ஒரு பிரேக்கிங் நியூஸ். சீக்கிரம் வா!"
என்ன? என்ன? கையில் கரண்டியுடன் டிவியைப் பார்த்துக் கொண்டே ஓடிவந்தாள் ராஜி..
அம்மா! ஓடிவராதே! கீழே பாத்து வா!என்று கத்த  ராஜி கீழே பார்த்தாள்.ஜூஸ் டம்பளர் கீழே விழுந்து  சுக்கு நூறாக உடைந்திருந்தது .
அடியே! உன்ன... என்று கரண்டியை தூக்கி வீச யமுனா நகர்ந்து கொள்ள கரண்டி டிவியை நோக்கி பறந்து கொண்ருந்தது யமுனா சிரித்துக் கொண்டே கலாய்த்தாள் 
" அம்மா! இன்னொரு பிரேக்கிங் நியூஸ்" 

30 comments:

 1. நீங்கள் இட்ட தலைப்பு தானே சரியானது. அதை 'break'செய்தது, தமிழனுக்கு செய்யப்பட்ட துரோகம். யப்பா ஒடனே யாராச்சும் இதுக்கொரு போராட்டம் ஆரம்பிங்க. breaking news இல்லாம சோறு தண்ணி எறங்க மாட்டேங்குது.

  ReplyDelete
 2. கதை நன்று வாழ்த்துகள் நண்பரே
  த.ம. 1

  ReplyDelete
 3. கதையைப் படித்தேன். குமுதத்தில் முதல் பதிவானது தொடர்ந்து மென்மேலும் உங்களது எழுத்தின்மீதான எங்களின்ஆர்வத்தை மேம்படுத்தியது. பாராட்டுகள்.

  ReplyDelete
 4. அருமை ஐயா
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இப்போதெல்லாம் தொலைக்காட்சி செய்திச் சானல்களில் எல்லாமே ப்ரேக்கிங் நியூஸ்தான் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நாசூக்கான கிண்டலை
  மிகவும் இரசித்தேன்
  கதைகள் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பெண்களில் பெரும்பாலோர் சீரியல் அடிமைகள் ,யமுனா ஏதோ பரவாயில்லை என்று நினைத்தேன் ,இப்படி பண்ணீட்டீங்களே :)
  வாழ்த்துகள் ஜி :)

  ReplyDelete
 8. பாராட்டுக்கள் முரளி வேலைக்கு செல்லும் நேராமாகிவிட்டதால் மீண்டும் வந்து படித்து கருத்துகள் இடுகிறேன்

  ReplyDelete
 9. ஹாஹா.. நல்ல கதை. குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. கதை புன்னகைக்க வைத்தது. வாழ்த்துகள். ஒரு பக்கக் கதைக்கு எவ்வளவு தருகிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. முன்பு எழுதிய ஐந்து பக்கக் கதைக்கு 750 என் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டது முதல்ப ஒரு பக்கக் கதைக்கு எவ்வளவு வந்தது என்று பார்க்கவில்லை வங்கிக் கணக்கை பார்த்து விட்டு சொல்கிறேன். விகடன் . காமில் எழுதியமைக்கு 500 கிடைத்தது.

   Delete
 11. மனதில் பதிந்துவிட்ட கதை. வாழ்த்துகள் முரளி.

  ReplyDelete
 12. கதை ஹஹஹ் அட போட வைத்தது. மனமார்ந்த வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 13. வணக்கம்
  அண்ணா

  நல் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

  ReplyDelete
 15. அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

  ReplyDelete
 17. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
  https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

  ReplyDelete
 18. ஹா ஹா நிஜ பிரேகிங்க் நியூஸ்

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நிறைய கதைகள் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.

  - இறைய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
 21. குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவது என்பதெல்லாம் என்னைப் போன்றோருக்கு நிறைவேறா கனவு.
  கதை மிக அருமை.
  வாழ்த்துகள் .

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் மிகச் சிறந்த தரமான கவிஞர்.ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு உண்டு .அவர்களின் நானும் ஒருவன். இப்போதெல்லாம் வாரப் பத்திரிகை படிப்பவர்கள் மிகக் குறைவு. இணையத்தின் வழியாக ஏராளமான வாசகர்களைப் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.குமுதம போன்ற பத்திரிகை வாயிலாகசிறு எழுத்தாளர்கள் பெயர் அறியப்படுமா என்பது ஐயமே. இணையமே நம்மை அறிந்தோரை அறிய உதவுகிறது.மேலும் இணையமே இந்த வாய்ப்பபைப் பெற்றுத் தந்தது

   Delete
 22. நல்ல பிரேக்கிங்க் நியூஸ்/

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895