* |
| படம்:கூகிள் தேடுதல் |
எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்துவிட்டார்கள் என்று அவ்வப்போது பதிவர்கள் புலம்புவது வழக்கம். பழைய பதிவர்கள் இதை ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்துள்ளனர். சமீபத்தில் இதயத்தின் குரல் என்ற வலைப்பூ எழுதிவரும் எழுதி வரும் ஹமீத்(என்ன சிக்கலோ அவரது வலைப் பக்கம் வேலை செய்யவில்லை.)அவரது பல பதிவுகள் அடுத்த சில நிமிடங்களில் காப்பி அடிக்கப்பட்டு வேறு பதிவர் பெயரில் தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டி ஒரு பதிவிட்டிருந்தார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ஒரே நாளில் ஒரிஜினல் பதிவும் காப்பி அடிக்கப் பட்ட பதிவுகளும் தமிழ் மணத்தில் காணப்பட்டது. ஆனால் இவரது சில பதிவுகளுமே நாளிதழ்களில் வந்த செய்திகளை அப்படியே காப்பி செய்யப்பட்டிருந்தது.
யாருமே ஒரிஜனல் கிடையாது எங்கேயோ, யாரோ சொன்னது,
எழுதியதுதானே! பெரும்பாலான பதிவுகள் வேறொரு செய்தியின் மறு ஆக்கமாகவோ தழுவலாகவோ அமையவே வாய்ப்புகள் அதிகம் கவிதைகள்,கதைகள் போன்ற படைப்புகளும் நம்மை அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு படைப்பைப் போலவே இருப்பது தவிர்க்க இயலாது என்று வாதத்தையும் மறுக்க முடியாது. அது உண்மைதான் என்றாலும் நாம்
பார்த்தவற்றை கேட்டவற்றை,படித்தவற்றை அனுபவங்களை நமது சொந்த வார்த்தைகள்
போட்டு பல மணிநேரம் சிந்தித்து எழுதியவற்றை எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு
சில நிமிடங்களில் பறிபோவதையும் வேறு பெயரில் வெளியாவதையும் பொறுத்துக்
கொள்வது என்பது கடினமானதுதான். இதை முழுமையாக தடுக்க முடியாது என்பதே உண்மை. ஓரளவிற்கு தடுக்கலாம்.
மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் போன்றவற்றால் கூட மென்பொருள் நகலெடுப்பை கட்டுப் படுத்த முடியவில்லையே! கண்டறிந்தவற்றை இது காப்பி என்று உரைக்கலாம். தமிழ் மணம் உள்ளிட்ட அனைத்து திரட்டிகளுமே காப்பி பேஸ்ட் பதிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் தானியங்கி முறையில் பதிவுகள் திரட்டப் படுவதால் பதிவுகள் காப்பியா என்பதை திரட்டிகள் அறிய முடியாது. தகவல் தெரிந்து புகார் தெரிவித்தால் பதிவை திரட்டிகள் நீக்கி விடும்.

தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் அதன் பட்டியலில் ஒரு பதிவு ஆபாசப் பதிவாகவோ,உங்கள் பதிவை காப்பி செய்யப் பட்டதாகவோ இருந்தால் அல்லது வேறு காரணங்களுக்காக தமிழ் மணத்தில் வெளியிடப்பட்ட இடுகை தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம்.
எப்படி தெரிவிக்கலாம் என்பதற்கு உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பாருங்கள்.
எனது பதிவு தமிழ்மண பட்டியலில் உள்ளது. இந்த பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் மஞ்சள் நிற முக்கோணத்தை கிளிக் செய்து கீழுள்ள விவரங்களை தர வேண்டும். நான்குகாரணங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கும். பொருத்தமான காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அது நிர்வாகிக்கு சென்று விடும் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பதிவை நீக்கி விடுவார்கள்.
தொடர்ந்து அதே வலைதளத்திற்கு புகார்கள் வந்தால் தமிழ்மணத்திலிருந்தே நீக்குவதற்கும். வாய்ப்பு உள்ளது.பிற திரட்டிகளில் ஆட்சேபம் தெரிவிப்பது சற்று கடினம்.
சமீபத்தில் எனது இப்படியும் கிராமம் இப்படியும் ஒரு தலைவர் என்ற பதிவை முகநூலில் என் பெயரோடு வெளியிடவே என் சம்மதத்தை கேட்டார் பிரபல தொழில் நுட்பப் பதிவர் நண்பர் பிரபு கிருஷ்ணா. நான் சரி என்று சொன்ன பின்னரே முகநூல் பக்கத்தில் என் பெயரோடு வெளியிட்டார்.
சம்மதம் கேட்கவில்லை என்றாலும் ஒரிஜினல் பக்கத்தின் முகவரியையும், எழுதியவர் பெயரையும் வெளியிட்டால் பெரும்பாலும் ஆட்சேபம் ஏதும் இருக்காது. அது பதிவை பகிர்ந்ததாக கொள்ள முடியும்.
எனக்கும் எனது பதிவுகள் ஏதேனும் காப்பி அடிக்கப் பட்டிருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. (நம்ம பதிவை நாலு பேரு காப்பி அடிச்சா நாம நல்லா எழுதி இருக்கோம்னு அர்த்தம்)சும்மா ஒரு பதிவை வைத்து தேடித் பார்த்தேன்.என்ன ஆச்சர்யம் அதையும் சிலபேர் தன் பெயர் போட்டு காப்பி அடித்திருந்தார்கள்.
நான் எழுதியது
நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

இந்தப் பதிவை ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் அப்படியே சுட்டு போட்டிருக்கார் பவுன்ராஜ் என்பவர்.
http://www.eegarai.net/t97719-topic
இதே பதிவை முத்து முஹம்மது என்பவர் சேனை தமிழ்உலாவில் சூப்பரா காபி அடிச்சிருக்கார்.
http://www.chenaitamilulaa.net/t37736-topic
"இந்தப் பதிவை இவர் வலைப் பக்கத்துக்கு வந்து யார் படித்திருக்கப் போகிறார்கள் காப்பி அடித்தால் என்ன தெரியவா போகிறது. அப்படித்தான் தெரிந்தாலும் என்ன செய்ய முடியும்னு என்று நினைத்திருக்கலாம் இந்த நண்பர்கள்.எப்படியோ நம் பதிவையும் காப்பி அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது கொஞ்சம் மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது
சரி போகட்டும்.
நம் பதிவை யாராவது காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்களா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
காப்பி செய்வதை கொஞ்சமாவது தடுக்க என்ன வழி இருக்கிறது?
இது பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஒருவேளை புதியவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கலாம்.
**************************************************************************************
இதைப் படிச்சிருக்கீங்களா?
பதிவர்குறள் பத்து

*