என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அந்நியன் வருவானா? தண்டனை தருவானா?

                     


                        கணினி விசைப் பலகை-மேல் 
                             என் கண்ணீர் விழுந்திடுதே 
                         கவிதை எழுதுமுன்னே  -என் 
                             கைகள் நடுங்கிடுதே

                        நெஞ்சு  கொதிக்கிறதே-பாவிகளை
                             நிழலும் வெறுக்கிறதே 
                        பஞ்சு  மனங்கள் எல்லாம்-இன்று 
                            பதறித் துடிக்கிறதே!  

                         ஆசிஃபா மலர்மொட்டை

                                 அழித்த பாவிகளே! 
                         காஷ்மீர் கோவிலிலே ஒரு 
                                கொடுரம் நிகழ்த்திவிட்டீர் 

                           மதம்தான் காரணமா -பிடித்த

                                 மதம்தான் காரணமா ?
                            மனிதம் மறந்துவிட்டீர் -சொந்த 
                                    மதத்தை அவமதித்தீர்  

                         பச்சிளங் குழந்தையினை-படு 
                                 நாசம் செய்து விட்டீர்
                          இச்சை தீர்ப்பதற்கு - நீங்கள் 
                                 இழி செயல்  செய்தீரே

                            வாரித் தூற்றுதற்கு 
                                    வார்த்தைகள்  போதவில்லை 
                           காரித் துப்புதற்கு -  வாய்
                                   எச்சில் போதவில்லை                      


                        அகிம்சை விரும்பி;நான்-இன்று
                            இம்சை விரும்பினேன் 
                        அந்நியன்  தேடுகின்றேன்- ஒரு 
                            அதிரடி நாடுகின்றேன்.

                        அப்படிஒருவன் இருந்தால்-இந்த
                            அநியாயம் கண்டபின்னே
                        இப்படி  தண்டனைகள் -இன்று
                            தந்துதான் செல்வானோ!

                        கண்ணைப்  பிடுங்கிடிவான்- அவன் 
                            காட்சி பறித்திடுவான்
                        புண்ணாய் ஆக்கிடுவன் -அவனை 
                            பொத்தல் செய்து வைப்பான்

                        காமக்  கொடுஞ்செயல்கள் - பல
                            புரிந்த   பாவிகளைப்
                        சாமப் பொழுதுக்குள் --கொடும்
                            சாவறிய வைத்திடுவான்.

                        பாம்புகள் நடுவேதான் -அவனை 
                             படுக்கவே வைத்திடுவான் 
                        சாம்பல் ஆகும்வரை  -அவனை
                            எரித்துப் பொசுக்கிடுவான் 

                       நாக்கைப் பிடுங்கித்தான் -அவனை 
                            நடுங்க வைத்திருப்பான் 
                       காக்கையை அழைத்து -அதை
                            வீசி எறிந்திருப்பான்
  
                       உடலில்  ஆடையுருவி-அவனை 
                            உறுமீன் இரையாக 
                       கடலில் வீசிடுவான் -அவன்
                            கால்களை கட்டிவைத்து
  
                       காலில் செருப்பகற்றி -அவனை
                           கடும்பகல் வெயிலிலே
                       பாலையின் நடுவேதான்-தனியாய் 
                           பரிதவிக்க விட்டிடுவான் 

                       சுட்ட நீரைத்தான் -எடுத்து 
                           முகத்தில் வீசிடுவான் 
                       கட்டி நெருப்பெடுத்து-அவன் 
                           கையில் தைத்திடுவான்  

                       உறுப்பை  அறுத்திடுவான் -அவன் 
                            உடலை சிதைத்திடுவான்
                       வெறுப்பை  காட்டிடுவான் -இன்னும்
                            வேறுபல  செய்திடுவான்

 
                   அந்நியா  வருவாயா?  -கடுந்

                              தண்டனை தருவாயா  
                       புண்ணியம் உனக்கே தான்- உடனே  
                                புறப்பட்டு  வருவாயே!   

                    

  

18 கருத்துகள்:

  1. இது திரைப்பட்டம் அல்ல அந்நியன் வருவதற்கு.... அதனால் மக்கள்தான் அந்நியனாக மாற வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. இந்த நிகழ்விற்கு மதத்தை குறை சொல்ல முடியாது கயவ்ர்கள் தங்கள் செய்யும் தவறுக்ளை மறைக்க மதத்தை கேடயமாக பயன்படுக்கிறார்கள் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு


  3. கவிதை அருமையாக வந்து இருக்கிறது என்று பாராட்ட ஆசைதான் ஆனால் அதற்கு முன் நிற்பது ஆசிஃபாதான் அதனால் கண்கள் குளமாகின்றன

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் அன்னியமாகி விட்டோம்.... அந்நியன் வரமாட்டான் என்ற தைரியம் மக்களுக்கு

    பதிலளிநீக்கு
  5. பச்சிளங்குழவிகளை சீரழிக்க எப்படித்தான் மனம் வருகிறதோ வக்கிர எண்ணங்களின் உச்சம் நிரூபிக்கப்பட்டால் சுட்டுத்தள்ளவேண்டும்

    பதிலளிநீக்கு
  6. காமம் கண்ணை மறைக்கும் இந்த கயவர்களுக்கு குழந்தை என்பது கூட தெரிவதில்லை. மிருகம் என்று சொல்ல மனம் வரவில்லை. மிருகம் கூட இப்படிச் செய்யாது. இவர்களுக்கெல்லாம் உடனடி மரண தண்டனை கொடுத்தால்தான் மறுபடி இப்படிச் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வரும். விசாரணை, ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றை இதில் விலக்கி உடனடி தண்டனை. மாங்காட்டில் சிறுகுழந்தை ஒன்றைச் சீரழித்துக் கொன்றுவிட்டு, குழந்தியைத் தேடியவர்களுடன் தானும் தேடினானே சென்னையில் பாவி... நினைவிருக்கிறதா? தாயையும் கொன்று தந்தையைக் கொல்லக் காத்திருந்த .மிருகம்.

    கவிதை மிக நன்றாய் வந்திருக்கிறது. உணர்வுகள் அப்படியே வார்த்தைகளாகி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. உள்ளத்து உணர்வுகள் கவிவரிகளில் முழுமைபெற்றுள்ளன ஐயா
    இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு
  8. கொடுமை!
    மிருகத்தைவிட மோசம்.
    மனிதன் ஏன் இப்படி ஆகிவிட்டான்?
    பிஞ்சு குழந்தையை இப்படி சீரழிக்க எப்படித்தான் துணிந்தார்களோ.

    கவிதை உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு
  9. கவிதையை பாராட்ட மனமில்லை.

    ஆசிஃபாவின் ஓலம் இறைவனுக்கு கேட்கவில்லையா ? இறைமீது நம்பிக்கை இழக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் கவிதை வடிவில் எங்கள் எல்லோரது உணர்வுகளும் வந்துவிழுந்து தெரித்துவிட்டது. பாராட்ட மனமில்லை குழந்தையின் மனம் தான் கண்களில் நம் குழந்தை போல் பதற்றம்....

    கீதா: எங்கள் இருவரின் அக்கருத்துடன் ....இவர்களுக்கு எந்த நீதி மன்றத்திலும் தப்பித்தல் கூடாது. இந்த இடத்தில் மனித ம் அது இது என்று எந்த வக்காலத்தும் கூடாது தூக்குத்தண்டனைதான் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் கூடாது இவர்களுக்கு இவர்களை அப்படியே
    கயவர்கள் படு பாவிகள், அரக்கர்கள்..கொடும்பாவிகள்...இழிமக்கள் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும்....மிருகம் என்று மட்டும் சொல்ல மாட்டேன்...அந்த ஜீவன்களைக் கேவலப்படுத்துவது போல் ஆகிவிடும் என்பதால்...வழக்காடல் சாட்சிகள் அது இது என்று வழக்கை நீட்டிக் கொண்டே போகாமல் அவர்களைத் தூக்கிலிட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  11. இவர்கள் திருந்தப்போவதே இல்லையா? இவற்றுக்கெல்லாம் விடிவே கிடையாதா?

    பதிலளிநீக்கு
  12. அந்நியன் நமக்குள் இருந்துதான் வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  13. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் ... ஆனால் காமத்திற்கு கண், கண்ணியம் மட்டுமல்ல எந்த கருமாந்திரமும் கிடையாது என்பதுதான் உண்மை....
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு
  14. We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


    Best Digital Marketing Agency in Chennai
    Best Content Marketing companies in Chennai
    Best SEO Services in Chennai
    leading digital marketing agencies in chennai
    digital marketing agency in chennai
    best seo company in chennai
    best seo analytics in chennai

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895