

























அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2


























15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடியுமா?
பதில் :போடலாம். அதுக்கு பேர்தான் டெண்டர் ஓட்டு. ஏற்கனவே தவறான ஆதாரங்களைக் காட்டியோ தவறுதலாகவோ உங்க ஓட்டை வேற ஒருத்தர் போட்டுட்டார்னு வச்சுகுவோம். நீங்க போகும்போது ஏற்கனவே நீங்க போட்டாச்சுன்னு சொல்வாங்க. நீங்க நான் ஓட்டு போட வரவே இல்லைங்கறதை நிரூபிக்கலாம்.யாரோ ஏமாத்தி என் ஓட்டைப் போட்டுட்டாங்க. விரலைக் காட்டி நான் மைகூட இல்லன்றதை உறுதிப்படுத்தலாம். கட்டாயம் என்னை ஓட்டு போட அனுமதிக்கனும்னு கேட்க உங்களுக்கு உரிமை இருக்கு. நான் ஓட்டு போட்டே ஆகனும்னு உறுதியா சொன்னா வாக்குச் சாவடி அலுவலர் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் விசாரணை செய்து இவர் ஓட்டுப் போடலை வேறு யாரோ கள்ள ஓட்டு போட்டுட்டாங்கறதை உறுதிபடுத்திக்கிட்டு. ஏஜெண்டுகளின் சம்மதத்தோட உங்களை ஓட்டு போட அனுமதிப்பார். ஆனால் நீங்க மெஷின்ல ஓட்டுபோட முடியாது. உங்களுக்குன்னு தனியா வாக்குச் சீட்டு கொடுப்பாங்க அதுல நீங்க முத்திரை இட்டு தனியா குடுக்கனும் அதை அதிகாரி தனி கவர்ல போட்டு சீல் வச்சு தனியா பாதுகாப்பா வச்சுப்பார். அந்த வாக்குச் சீட்டின் எண்ணை ஏஜெண்டுகளுக்கு குடுத்துடுவாங்க.
முன்னாடியே இதை ஏன் தடுக்கலன்னு நாம நினைக்கலாம். என்னதான் வாக்காளர் ஆவணங்களை வச்சுருந்தாலும் ஆள் மாறாட்டத்தை தவிர்ப்பதற்காகத்தான் ஒவ்வொரு கட்சியும்/வேட்பாளரும் தனக்காக ஏற்கனவே ஏஜெண்டுகளை நியமிச்சி தேர்தல் கமிஷன்ல அனுமதி வாங்கிடுவாங்க. இந்த பூத்துக்கு இந்த ஏஜெண்ட்தான் வருவாங்கன்னு அவங்களோட பட்டியலை அதிகாரிகள் வச்சுருப்பாங்க. அந்த ஏஜெண்டுகளைத் தவிர வேறு யாரும் பூத்துக்குள்ள அனுமதிக்க மாட்டாங்க இவங்கதான் வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவாங்க. அவங்க ஒகே சொன்னதுக்கப்புறம்தான். ஓட்டுப் போட அனுமதிப்படும். ஏஜெண்டுகளும் அவர்கள் வச்சுருக்க பட்டியல்ல இவங்களை டிக் பண்ணிடுவாங்க. சில நேரங்களில் பெரிய நகரங்கள்ல ஏஜெண்டுகளுக்கு தவறான ஆள் வந்தா கூட அடையாளம் தெரியாது. எந்த ஏஜெண்டும் அப்ஜெக்ஷன் பண்ணாம விட்டுடறது உண்டு, அதனால தவறான நபர் ஓட்டளிக்க வாய்ப்பு இருக்கு.
சில நேரங்கள்ல பெயர் ஒற்றுமை காரணமா இந்தத் தவறு நடக்கறதும் உண்டு.
16. இந்த டெண்டர் ஒட்டை வாக்கு எண்ணிக்கையின்போது சேத்து எண்ணுவாங்களா? ஏற்கனவே போட்டவரோட ஓட்டை கேன்சல் பண்ணுவாங்களா?
உண்மையில் இந்த டெண்டர் ஓட்டு வாக்காளரோட திருப்திக்காக போடப்படுகிறதே தவிர பெரும்பாலும் ஓட்டு எண்ணிக்கையின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தவறா போட்டு இருந்தாலும் ஏற்கனவே போட்டவரோட ஓட்டுதன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சில வேளைகளில் ஓட்டு எண்ணிக்கை சமமாக இருந்து இன்னொரு ஓட்டு வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் மட்டும் டெண்டர் ஓட்டுகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்
16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சி இயந்திரத்தில வேற சின்னமோ இருந்தா என்ன பண்றது
-----------
17.சால்ஞ்ச் ஓட்டுன்னா என்ன?
18 வாக்குப் பதிவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஓட்டிங் மெஷின் சரியா ஒர்க் பண்ணுதான்னு வேட்பாளர்கள் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?
19. எல்லா பூத்லயும் நாம போடற ஒட்டு சரியா பதிவாச்சாங்கறதை உறுதிபடுத்தற VVPAT இயந்திரங்கள் வைப்பாங்களா?
20. மெஷின் காட்டற எண்ணிக்கையையும் இயந்திரம் ப்ரிண்ட் செய்த ஸ்லிப்களையும் எண்ணி சரிபாப்பாங்களா?
21 சில கட்சிக்காரங்க ஓட்டுப் பதிவு இயந்திரத்தை எடுத்துவந்து ஓட்டு எப்படிப் போடறதுங்கறதை டெமொ காட்டறதா சொல்றாங்களே! அவங்களுக்கு எப்படி மெஷின் கிடைச்சது?
--- தொடரும்
16. டெண்டர் ஓட்டு சும்மா தான் போல...
பதிலளிநீக்குஅடுத்தும் 16-வது கேள்வி - பதில்...?
தகவல்கள் தொடரட்டும்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பயனுள்ள பகிர்வு
பதிலளிநீக்குhttps://saglamproxy.com
பதிலளிநீக்குmetin2 proxy
proxy satın al
knight online proxy
mobil proxy satın al
QQ345
8D0E062243
பதிலளிநீக்குhacker bul
hacker kirala
tütün dünyası
hacker bulma
hacker kirala
0B9C557228
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
Google Konum Ekleme
Osm Promosyon Kodu
101 Okey Vip Hediye Kodu