என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்

                      Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

             தேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறோம் என்று தெரிந்து விடும். நம்ம அப்பாவி அய்யோசாமி க்கு(அடிக்கடி அய்யோன்னு சொல்றதால அவருக்கு அந்தப் பெயர்) தேர்தல்ல நிக்க ஆசை. அதுக்கு என்ன தகுதி வேணும்னு கேக்கறார் .வேட்பாளாராக என்ன தகுதி வேண்டும் என்று தேர்தல் கமிஷன் என்ன சொன்னதோ அதை அப்படியே அய்யோ சாமிக்கு சொல்லி இருக்கேன்.. அடுத்த தேர்தல் களத்தில நீங்களும் குதிக்க தயாராகுங்க . (அட! முன்னாடியே சொல்லி இருந்தா நாங்களும் தேர்தல் கிணத்துல சாரி தேர்தல் களத்துல குதிச்சி இருப்போமில்ல)
அதுக்கு முன்னாடி இந்த தேர்தல்ல வாக்காளர் வேட்பாளர் புள்ளி விவரங்கள்
தமிழ்நாடு தேர்தல் 2021 மொத்த வேட்பாளர்கள்: 3998
அதிகபட்ச வேட்பாளர் நிற்கும் தொகுதி : கரூர். 77 பேர்.
குறைந்தபட்ச வேட்பாளர்கள் பங்கேற்கும் தொகுதி பவானி சாகர்-6 பேர்
வால்பாறை- 6 பேர்
இப்போ அப்பாவி அய்யோசாமியின் கேள்விகள்
1. இவ்வளோ பேர் தேர்தல்ல நிக்கறாங்களே நானும் வேட்பாளரா ஆக முடியுமா?
- தாராளமா ஆனா .இந்த எலக்ஷன்ல முடியாது. தேதி முடிஞ்சி போச்சு
2. அய்யோ! அது தெரியும்.அடுத்த தேர்தலுக்கு உதவும் இல்ல . வேட்பாளருக்கு எவ்வளோ வயசு ஆகி இருக்கணும்?
-அதிகம் இல்ல ஜென்டில் மேன் 25 வயசு முடிஞ்சி இருக்கணும்
3. வோட்டர் லிஸ்ட்ல என் பேர் இல்லன்னாலும் -வேட்பாளரா ஏத்துக்கு வாங்களா?
முடியாது முதல்ல உங்க பேரை லிஸ்ட்ல சேருங்க
4.வேட்பாளர் டெபாசிட் கட்டணும்னு சொல்றாங்களே . எவ்ளோ கட்டணும்
-ரூ10000 கட்டணும். எஸ்.சி. எஸ் டி. வேட்பாளர் 5000 கட்டினா போதும்
5. அய்யோ ரொம்ப அதிகமா இருக்கே. இதுக்கு முன்னாடி எவ்வளோ இருந்தது ?
-இதுக்கு முன்பு 250 ரூபாதான் இருந்தது.அதனாலதான் ஏராளமான பேர் எல்கஷன்ல நின்னாங்க. ஒரு முறை(1996) அதிகபட்சமா மொடக்குறிச்சி தொகுதியில 1033 பேர் நின்னாங்க. வாக்கு சீட்டே பொன்னியின் செல்வன் புக் மாதிரி இருந்ததாம்
6. தேர்தல்ல ஜெயிக்கலன்னா டெபாசிட் திரும்ப கிடைக்குமா?
பதில்:ஜெயிக்கலன்னாலும் பதிவான செல்லத்தக்க ஓட்டுல ஆறில் ஒரு பங்கு ஓட்டுக்கு மேல் வாங்கி இருந்தா டெபாசிட் திரும்ப கிடைக்கும் இல்லன்னா கட்டின டெபாசிட் கோவிந்தாதான்
7.ஒருத்தர் எந்த தொகுதியில வேணும்னாலும் நிக்கலமா?
பதில்:எந்த தொகுதியில வேணும்னாலும் நிக்கலாம். அவரை அவர் நிக்கப் போற தொகுதி வாக்காளர் யாராவது முன்மொழியனும்.ஆனா தன்னோட ஓட்டை தன் பேர் இருக்கிற தொகுதியில்தான் போட முடியும் .
8. ஒருத்தர் ஒரு தொகுதியில்தான் நிக்கனுமா?
பதில்:-அதிக பட்சமா 2 தொகுதியில மட்டும் நிக்கலாம்.
9. ஏதாவது கட்சியில உறுப்பினரா இருந்தாதான் எலக்ஷன்ல போட்டி முடியுமா?
பதில்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல . சுயேச்சையாகக் கூட நிக்கலாம் அங்கீகரிக்கப் பட்ட கட்சியாய் இருந்தால், ஒருத்தர் உங்களை,வேட்பாளரா முன்மொழிஞ்சா போதும். அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேச்சையா இருந்தா அந்த தொகுதியில் இருக்க 10 வாக்களர்களின் முன்மொழிதல் வேனும்.
10. அய்யோ அவ்வளோ பேருக்கு நான் எங்க போறது? தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு வேட்பாளர் எவ்வளோ செலவு பண்ணலாம்?
பதில் : அதிக பட்சம் 30.8 லட்சம் செலவு பண்ணலாம்.
11. ஜெயில் கைதிகள் ஒட்டு போடமுடியுமா?
பதில்:தடுப்புக்காவலில் இருக்கறவங்க மட்டும் ஓட்டு போடமுடியும் நீதிமன்றக் காவலில் இருக்கறவங்க தண்டனை பெற்ற கைதிகள் இவர்கள் ஒட்டு போட முடியாது. பெயிலில் வந்தவர்கள் ஓட்டு போடலாம்.
12. வெளிநாட்டில இருக்கற தமிழர்கள் தபால் ஓட்டு அல்லது ஆன்லைன் ஓட்டு போட முடியுமா?
பதில்:முடியாது
13. என்கிட்ட ஓட்டர் ஐடி இல்ல. ரேஷன் கார்ட காட்டி ஓட்டு போடலாமா
பதில்: ரேஷன் அட்டைய ஆவணமா தேர்தல் கமிஷன் அனுமதிக்கல. ஆதார் உள்ளிட்ட இதர 11 ஆவணங்களைக் காட்டி ஓட்டு போடலாம்.
14. வாக்காளர் அடையாள அட்டை இருக்கு. ஆனால் வாக்காளர் பட்டியலில் பேர் இல்லன்னாகூட ஓட்டு. போட முடியுமா?
பதில்: இல்லை: அனுமதிக்கப் படாது. அவர்கள் வைத்துள்ள பட்டியல்ல நிச்சயமா பேரு இருக்கனும். ஓட்டு போடறதுக்கு முன்னாடி நெட்ல வாக்காளர் பட்டியல் இருக்கு அதுல இருக்கான்னு பாத்துட்டு வாக்குச் சாவடிக்கு போறதுதான் நல்லது.
                                ===========================================
15 என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடியுமா?
16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சி இயந்திரத்தில வேற சின்னமோ இருந்தா என்ன பண்றது
17.சால்ஞ்ச் ஓட்டுன்னா என்ன?
18 வாக்குப் பதிவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஓட்டிங் மெஷின் சரியா ஒர்க் பண்ணுதான்னு வேட்பாளர்கள் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?
19. எல்லா பூத்லயும் நாம போடற ஒட்டு சரியா பதிவாச்சாங்கறதை உறுதிபடுத்தற VVPAT இயந்திரங்கள் வைப்பாங்களா?
20. மெஷின் காட்டற எண்ணிக்கையையும் இயந்திரம் ப்ரிண்ட் செய்த ஸ்லிப்களையும் எண்ணி சரிபாப்பாங்களா?
21 சில கட்சிக்காரங்க ஓட்டுப் பதிவு இயந்திரத்தை எடுத்துவந்து ஓட்டு எப்ப்படிப் போடறதுங்கறதை டெமொ காட்டறதா சொல்றாங்களே! அவங்களுக்கு எப்படி மெஷின் கிடைச்சது?
இந்தக் கேள்விகளுக்கு பதில் நாளை

 

7 கருத்துகள்:

  1. என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு ஆச்சர்யமான, அறிய வேண்டிய தகவல்கள். நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. அய்யாசாமி எனக்கு வோட்டுரிமை இல்லை வேட்பாளராகவும் போட்டி இட முடியாது அதனால உங்களை வேட்பாளராக வருகிற தேர்தலில் நிக்க வைக்கலாம் என பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. 19, 20 - விரிவான பதில்களுக்காக காத்திருக்கிறேன்...

    22. டெமொ போல மொத்த இயந்திரங்களையும் மாற்றுவதை தடுக்க முடியாதா...?

    பதிலளிநீக்கு
  4. சரியான சமயத்தில் தேவையான பதிவு - சிலருக்குப் பயன்படலாம்!

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895