என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 10 மே, 2022

குமுதத்தில் கதை-வாத்தியாரை அடித்தவன்

  


வாத்தியாரை அடித்தவன்

(ஒரு பக்கக் கதை)

                                                                ……டி.என்.முரளிதரன்….

              பள்ளியின்  எச்.எம் ரூமில்   ஆசிரியர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். அதில் ஒருவர் தலைமை ஆசிரியரிடம்சார்நம்ம முத்துசாமி சாரை, அந்தப் பையன் அடிக்க வந்திருக்கான். இன்னிக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு இந்த வீடியோதான் வைரலா போயிக்கிட்டிருக்கு.. அவனை சஸ்பெண்ட் பண்ணனும் சார். ரெகார்ட் நோட் ஏன் எழுதலன்னு கேட்ட து தப்பாரிசல்ட் குறைஞ்சா மட்டும் நம்மளைக் கேள்வி மேல கேள்வி கேக்கறாங்க இல்ல. எவனோ ஒரு வாத்தியார் தப்பு செஞ்சா எல்லாருமே அப்படித்தான்னு பரப்பறாங்க இல்ல. இப்படியே விட்டா  சொல்லிக்கொடுக்கற  டீச்சருக்கு என்ன பாதுகாப்பு?” என்று கோபாவேசமாகப் பேச மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

    அப்போது  முத்துசாமி சாரும் உள்ளே வர,

    “நீங்க சொல்றதும் சரிதான். முத்துசாமி சார்! நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க, சி.. கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். சிவியர் பனிஷ்மெண்ட் கொடுத்தாத்தான் ரவுடிப் பசங்க திருந்துவாங்கஎன்றார் எச்.எம்.
       “
வேணாம்  சார்! என்றார் முத்துசாமி

    ”ஏன்? சாதிப் பிரச்சனையாகிடும்னு பயப்படறீங்களா?”

    “இல்ல சார். நான் சின்ன வயசுல  வீட்டுப்பாடம் எழுதலன்னு வாத்தியார் என்ன நல்லா திட்டிட்டார். அதனால நான் அவர் மேல கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டேன். இருந்தாலும் அவர் என்னை மன்னிச்சி ஸ்கூல்ல சேத்துக்கிட்டார்.. ஒரளவுக்கு படிச்சு இன்னைக்கு  நல்ல நிலைமையில இருக்கேன். அவர் மன்னிக்கலன்னா ஸ்கூல விட்டு நின்னுருப்பேன். அந்த நிலை அந்தப் பையனுக்கு வராம இருக்கணும்னு  விரும்பறேன். இதோட விட்டுடலாம் சார்.”

என்ற முத்துசாமி சாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

8 கருத்துகள்:

  1. நல்லாசிரியர்.

    குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. அருமை... "தவறு என்றாலும் திருந்தும் வயது" என்பதை தன்னைக் கொண்டு உணர்ந்த ஆசிரியர்...

    பதிலளிநீக்கு
  3. பதிவின் தலைப்பு சிறிது நிறுத்தி வாசிக்க விட்டால், பொருள் மாறி விடுகிறது...

    குமுதத்தில் என் கதை

    அல்லது

    வாத்தியாரை அடித்தவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டிடி . நீங்கள் சொல்வது சரிதான். நான் அதை கவனிக்கவில்லை. இப்போது மாற்றி இருக்கிறேன்.

      நீக்கு
  4. கதை நன்று. சமீபத்திய செய்தி அடிப்படையில் எழுதிய கதையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க மட்டுமில்லை மாணவனை நல்வழிப்படுத்துவதும்தான், தன் அனுபவத்தையும் உணர்ந்து செயல்பட்ட ஆசிரியர். கதை அருமை

    வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895