ஒரு பதிவு நிறையப் பேரை சென்றடைவதற்கு திரட்டிகள் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! இதில் தமிழ்மணம் தமிழ் 10 இன்டலி முதலியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. திரட்டிகளின் உதவியின்றி அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட வலைப் பதிவுகள் மிக சொற்பமே. திரட்டிகளில் இணைக்கப் படவில்லை என்றாலும் எழுத்துலகப் பிரபலங்களான எஸ்.ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா, ஜெய மோகன் போன்றவர்களின் பதிவுகள் அதிக விமர்சனங்களுக்கு உள்ளானாலும் நிறையப் பேரால் படிக்கப் பெற்றுவிடுகின்றன.
தமிழ்மணம் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் பலருக்கு பதிவுகளை கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது என்பது உண்மையே!அதற்கு முக்கிய காரணம் அது பதிவை எளிமையான முறையில் திரட்டுவதே!
தமிழ்மணம் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் பலருக்கு பதிவுகளை கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது என்பது உண்மையே!அதற்கு முக்கிய காரணம் அது பதிவை எளிமையான முறையில் திரட்டுவதே!
திரட்டுவதோடு மட்டுமல்லாமல் பதிவுகளின் இணைப்பை முகப்பு பக்கத்தில் பல வகைகளில் காட்டுவதும் ஒரு காரணம். பதிவு இணைக்கப் பட்டவுடன் பின்னர் ஏழு ஒட்டு பெற்றால்( இரண்டு நாட்களுக்குள்) அதை தெரிவிக்கும். அது மட்டுமின்றி குறிப்பிட்ட lable களுக்கு கீழும் பதிவுகள் அடுத்தடுத்து அதே லேபிளில் வரும் வரை காட்சியளிக்கிறது. நாம் இடும் குறி சொற்கள்(lable) தமிழ் மணம் வகைப் படுத்தும், அரசியல் சமூகம், நிகழ்வுகள் நகைச்சுவை, நையாண்டி,சினிமா,விமர்சனம்,புனைவுகள், கவிதை.சிறுகதை சமையல் குறிப்பு, என்ற பிரிவுகளில் அமைந்தால் அவற்றின் கீழ் பதிவுகள் இடம் பெறும் மேலும் பதிவிற்கு ஒரு மறுமொழி(பின்னூட்டம்,கருத்து) கிடைத்தாலும் அந்தப் பதிவின் தகவலும் ஒருபுறம் காண முடிகிறது. இதோடு ஒரு நாளில் அதிகமாகப் பார்க்கப்பட்ட முப்பது இடுகைகள், ஒரு வாரத்தில் பார்க்கப்பட்டவை, என்று பல்வேறு வகைகளில் ஒரு பதிவரின் பதிவுகள் கண்ணில் படுவதால் தலைப்பு ஈர்க்கும் பட்சத்தில் வாசகர் வருகை தருகின்றனர். இது மட்டுமல்லாது தமிழ் மணம் மகுடம் என்று இரண்டு நாட்களில் அதிக வாக்குகள் பெற்றபதிவும் வெளியிடப் படுகிறது. (இது தொடர்பாக சர்ச்சைகளும் உண்டு .)
அது மட்டுமல்லாமல் ஒரு தரவரிசைப் பட்டியலை(இதில் பின்பற்றப் படும் முறை கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை போல புரியாததாகவே இருக்கிறது ) வெளியிட்டு ஒரு சுவாரஸ்யத்தையும் போட்டியையும் ஏற்படுத்துகிறது. என்னதான் ஓட்டைப் பற்றி கவலைப் படமாட்டேன். தர வரிசையை பற்றி கவலைப் படமாட்டேன் என்று சொல்லும் பிரபலங்களும் தமிழ்மணத்தில் இணைக்கத் தவறுவது இல்லை. சில பதிவர்கள்(வளரந்தபின்) பதிவுக்கு ஓட்டளிப்பதையும் கருத்திடுவதையும் கௌரவக் குறைவாகக் கருதுகிறார்கள். இங்கு கருத்திடுபவர்களும் வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் சக பதிவர்கள் என்பதால் பரஸ்பர அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பானதே! நீண்ட நாட்களாக எழுதி வரும் பதிவர்கள் சிலருக்கு பதிவுக்கு வாக்களிப்பது என்பதை அறியதவர்களாகக் கூட இருக்கிறார்கள் சிலர் ஆர்வம்காட்டுவதும் இல்லை.
நமது பதிவுகளுக்கு தமிழ்மண வாக்குப் பட்டை மூலம் வாக்களிப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள நாம் விரும்பலாம். அது முடியுமா என்றால் முடியும். ஆனால் அவர்களின் மெயில் Id அல்லது பயனர் பெயர் தான் அறிந்து கொள்ள முடியும். என்றாலும் சில நேரங்களில் அவர்களுடைய பெயருக்கும் மெயில் ஐடிக்கும் தொடர்பு இருக்காது. இருந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

தமிழ்மணத்தை பொறுத்தவரை ஒரு பதிவுக்கு ஒருவர் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க முடியும். சர்ச்சைக்குரிய அரசியல்,மத சார்பான, சமூக,சினிமா பதிவுகளுக்கு எதிர் வாக்குகள் இடப் படுவது உண்டு.
ஏழு பேர் உங்கள் பதிவுக்கு வாக்களித்துவிட்டால்அப்பதிவு முகப்புப் பக்கத்தில்வாசகர் பரிந்துரையில் பகுதியில் இடம்பெறும்
உயர்த்தப்பட்ட கட்டை விரல் படத்தை கிளிக் செய்தால் அந்தப் பதிவிற்கு வாக்களிக்கத்தவர்களின் ஈமெயில் முகவரி அல்லது தமிழ்மணத்தில் அவர்களின் பயனர் பெயர் இருப்பதை காணலாம். மேலுள்ள பதிவில் கவியாழி கண்ணதாசன் 7 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
இதோ அவருக்கு வாக்களித்தவர்கள்
ஏழு வாக்குகள் பெற்றால் மட்டுமே இவ்வாறு பார்க்க முடியும்
இதை விட குறைவாக இருந்தால் எப்படிப் பார்ப்பது? அதற்கும் வழி உண்டு. தமிழ் மணம் ஒவ்வொரு பதிவிற்கும்( இணைக்கும்போது) ஒரு ID எண் வழங்குகிறது.அந்த அடையாள எண்ணை அறிய தமிழ்மண உங்கள் பதிவின் ஓட்டுப பட்டையின் மீது மௌஸை வைத்தால் ஸ்டார்ட் பட்டனுக்கு மேலே இடது கீழ்ப்புறத்தில் கேழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும். மௌஸை எடுத்தால் மறைந்து விடும்.இதில் கடைசியில் உள்ளதே பதிவுக்கு தமிழ் மணத்தால் வழங்கப்பட்ட அடையாள எண்ணாகும்.இணைப்புப் பட்டையைக் கிளிக் செய்தலும் அட்ராஸ் பாரில் அடையாள எண்ணைக் காணமுடியும்
இந்த அடையாள எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர்
http://tamilmanam.net/who_voted.php?id=
என்ற முகவரியை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து கொண்டு = பக்கத்தில் பதிவின் அடையாள எண்ணை டைப் செய்து எண்டர் விசை கொடுத்தால் ஒட்டளித்தவர்களை அறியலாம்.
யாருடைய பதிவாக இருந்தாலும் இந்த விவரங்களை பார்க்கமுடியும்.
இதே போல தமிழ் 10 லும் நாம் இணைத்துள்ள வோட்டுப் பட்டை மூலம் உள் சென்று நமக்கு யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். தமிழ் 10 இல் பதிவுகளை இணைப்பவர்கள் கட்டாயம் குறைந்தது ஏதேனும் 3 பதிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும். இதில் காத்திருப்புப் பட்டியலில் இருந்து பதிவுகள் வெளியாவதற்கு குறைந்தது 11 வாக்குகள் பெற வேண்டும்.
இதையெல்லாம்
ஆராய்ந்து பார்த்து உங்கள் வலைப் பக்கத்திற்கு வரும் நண்பர் பதிவுக்கு
வாக்களிக்க வில்லையே என்று வருத்தப் பட வேண்டாம். அனைவரும் பொறுமையாக
வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அவர் நமது பதிவுக்கு ஒட்டு
போடவில்லையே நாம் அவரது பதிவுக்கு ஒட்டுபோடக்கூடாது என்று நினைக்கவும்
வேண்டாம்.திரட்டிகளில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஒரு சிலருக்கு திரட்டிகளில் இணைக்க மட்டும்தான் அறிந்திருப்பார்கள்.
நாமும் மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பது தெரியாதவர்களும் உண்டு.
என்னதான் இவையெல்லாம் ஒரு பதிவை ஹிட்டாக்க உதவும் என்றாலும் தொடர்ந்து வாசகர் வருகை தர பதிவுகள் தரமாக இருக்க வேண்டியது அவசியம்.
*************************************************************************
கொசுறு: சிலரது வலைப்பூக்களில் தமிழ்மண ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்வதில்லை. பெரும்பாலும் blogspot.in ஐ blogspot.com ஆக மாற்றும் நிரலை இணைத்தால்ஓட்டுப் பட்டை வேலை செய்யத் தொடங்கும்.
அதற்கான வழி முறைகளை நானும் எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவு அலெக்சா தர வரிசையில் பின்னிலை ஏன்?
பொன்மலர் அவர்களின் பதிவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

பிரபல தொழில் நுட்பப் பதிவர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள். நானும் உதவ தயாராக இருக்கிறேன்.
திண்டுக்கல் தனபாலனும் பலருக்கும் ப்ளாகர் தொழில் நுட்ப சிக்கல்களை தீர்க்க உதவி இருக்கிறார். அவரையும் தொடர்பு கொள்ளலாம்.
*******************************************************************************