என்னை கவனிப்பவர்கள்

கிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

செவ்வாய் கிரகம்-தொட்டுவிடும் தூரம்தான்

ரோவர் க்யூரியாசிட்டி அனுப்பிய படம் 
    இன்று செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க் கிரகத்தை பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

   நாசா சாதித்து விட்டது.ஆம்.மீண்டும் ஒருமுறை செவ்வாயில் ரோவர் Rover Curiosity விண்கலத்தை இறக்கி சாதனை படைத்து விட்டது.இந்திய நேரப்படி 06.08.2012 பகல் 11.00 மணிக்கு தரை இறங்கிய இச்செய்தியை தொலைக்காட்சிகள் வெளியிடும் முன்னரே பதிவிட்டு அசத்திய "அவர்கள் உண்மைகள்" மதுரைத் தமிழனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்வோம்.அவரது பதிவிற்கான இணைப்பு நாசாவில் இருந்து லைவ் தொலைக்காட்சி கவரேஜ்.

     இது தொடர்பான வேறு சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  1. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பப் படுவது இது ஏழாவதுமுறை.
  2.  ராக்கெட்டின் பின் புறத்தில் இருந்து ஓர் டன் எடையுள்ள ரோவர் கயிற்றில் தொங்க விடப்பட்டு செவ்வாயின் தரையில் இறங்கிய அந்த கடைசி ஏழு நிமிடக் காட்சி ஆங்கிலப் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சி போல பரபரப்பாக இருந்தததால் அதனை "The Seven Minutes of Terror has turned into the Seven Minutes of Triumph," என்று நாசா விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர்..
  3.   இந்த விண்கலம் அடுத்த இரண்டு ஆண்டுகள் செவ்வாயில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவைமக்கப் பட்டுள்ளது.
  4. ஒருகாரைப் போல இருக்கும் Curiosity அணு ஆற்றலில் இயங்குகிறது.
  5. இதில் துல்லியமாக படமெடுக்கக் கூடிய கேமராக்கள்,வானிலை அறியக்கூடிய கருவிகள்,பாறைகளைக்கூட துளையிட்டு ஆய்வு நடத்த ரோபோட்,வேதியியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கருவிகள் உள்ளன.
  6. இந்த  விண்கலம்  செவ்வாயில் உள்ள கேல் க்ரேட்டர்  என்ற 96 மைல் அகலமும் 3 மைல் உயரமும் உள்ள மலையை ஆய்வு செய்து பல தகவல்களை அளிக்கும்  என்று கூறப்படுகிறது.
  7. செவ்வாயின் மேற்பரப்பில் இரும்புத் துகள்கள்  தூசுபோல் நிறைந்திருப்பதால் செந்நிறமாக இக்கோள் கானப்படுகிறது.அதனால் செவ்வாய் செங்கோள் என்று அழைக்கப் படுகிறது.
  8. செவ்வாய்க்கும்  பூமிக்கும் சிலஒற்றுமைகள் காணப்படுகின்றன
  9. பூமியைப் போலவே செவ்வாய்க்கும் பருவ காலங்கள் உண்டு
  10. செவ்வாயில் ஒரு நாள் பூமியின் ஒரு நாளை விடசற்று அதிகமாக இருக்கிறது.
  11. செவ்வாயில்  ஒரு ஆண்டு என்பது பூமியின் ஒரு ஆண்டு மற்றும்  320 நாட்களுக்கு சமமாக இருக்கிறது.
  12. செவ்வாயின்  அச்சு 25.9 டிகிரி சாய்ந்திருக்கிறது.(பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது.
  13. செவ்வாய்க்கு ஃபோபோஸ், டெய்மாஸ் இரண்டு நிலாக்கள் உண்டு. 
  14. செவ்வாயின் காற்று மண்டலத்தில் பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடே நிறைந்துள்ளது.
  15. செவ்வாயின்  ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 சதவீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில்  38 கிலோ மட்டுமே இருப்பார்.
  16.  செவ்வாயில் அடிக்கடி புழுதிப் புயல் விசுமாம்.

செவ்வாயில் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி தரை இறங்கியபோது நாசா வெளியிட்ட வீடியோ.

 

**** 
நன்றி: நாசா இணைய தளம் .
மேலும் தவல்கள் அறிய 
உங்கள்  கருத்துக்களை தவறாமல் தெரிவிக்கவும்