டி.ராஜேந்தர் பற்றிய முந்தைய பதிவுக்கு வரவேற்பு அளித்ததற்கு மிக்க நன்றி. பல திறமைகளை கொண்டவராக இருக்கும் டி.ராஜேந்தர் தன்மீது சொல்லப்படும் விமர்சனங்களை தாங்க முடியாதவராக இருக்கிறார்.இவர் குறள் டிவி என்று ஒரு இணைய டிவியை நடத்தி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் அவ்வப்போது பரபரப்பாக தற்பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது இவரது வழக்கம். இவர் குறள் டிவி ஆரம்பிக்கப் போவதாக ஓராண்டுக்கு முன்பாக சொல்லி இருந்தார்
அப்போது இது இவருக்கு தேவையா என்ற ரீதியில் விமர்சனம் செய்ததாம் ஆனந்த விகடன். இவருடைய சானலைபார்க்காமல் திருப்பிவிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்ததால் பொங்கி எழுந்து ஆனந்த விகடனை சாடுவதை சமீபத்தில் வீடியோவில் பார்த்தேன்.இது ஒரு பழைய வீடியோதான். நீங்களும் பார்த்திருக்கக் கூடும். பார்த்தவர்கள் இன்னொரு தடவை பாருங்கள் பார்க்காதவர்கள் முதன் முறையாகப் பாருங்கள்.
அவர் சீரியசாகச் சொல்வதை நீங்கள் காமெடியாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.
பகுதி 1
பகுதி 2
******************************************
