என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, April 8, 2015

வெற்றிச் சூத்திரம்


முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாய்க் கொள்

நம்பிக்கைச் செடியை
நட்டு வை

உழைப்பு என்ற
நீரை ஊற்று

நாணயம் என்ற
நல்லுரம் இடு

உறுதி என்ற
வேலி போடு

எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று

பொறுமையாய்க்
கவனத்துடன் 
காவல் இரு

பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!

ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்


*********29 comments:

 1. Replies
  1. கில்லர்ஜி நீங்க திரும்ப போடணும் உங்கட ஓட்டு விளவில்லை.

   Delete
  2. இனியா! கில்லர்ஜி நான் இணைப்பதற்கு முன்பாக தமிழ்மணத்தில் பதிவை இணைத்து விட்டார். இணைப்பதற்கும் ஒட்டு போடுவதற்கும் ஒரே வழிமுறையே அதனால் ஒட்டு போட்டதாக நினைத்திருக்கக் கூடும் .

   Delete
  3. வணக்கம் சகோ இனியா அவர்களுக்கு.....
   செல் மூலம் இணையவில்லை ஆகவே பிறகு வந்து ஓட்டு போட்டேன் நாங்களெல்லாம் அரசியல்வாதி கிடையாது சொன்ன வாக்கு தவற மாட்டோம் தெரியுமுள்ள...

   Delete
 2. சூப்பர்
  தம 1 தானே இது எப்படி சாத்தியம் 0 வில தானே இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இனியா. தமிழ் மணத்தில் இணைத்தும் முதல் ஓட்டை நாம் போட்டால்தான் ஒன்று என்று காட்டு. பொதுவாக எனது ஓட்டை ஒரு நாள் கடந்த பிறகும் ஏழு ஓட்டுகளுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே போடுவேன்.

   Delete
  2. அய்யா கவிதை அருமை... தன்னம்பிக்கைத் தலைவா!
   அதை உஙக்ள் தமிழ்மணப்பதிவிலும் கையாள்வது அருமை.
   தொடரட்டும் கற்றுக்கொண்டேன் நன்றி த.ம ப்ளஸ் 1

   Delete
 3. அருமை.

  நம்பிக்கை விதையை விதைக்கிறது.

  ReplyDelete
 4. ///முன்னேறியவர்கள்
  சொன்னதை
  முன் மாதிரியாய்க் கொள்///
  முன்னேறியவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்ற உண்மையை சொல்லுவதே இல்லையே அப்புறம் எப்படி பின் பற்றுவது

  ReplyDelete
 5. வெற்றி பெற தாங்கள் கூறியுள்ள சில வழிகளை நான் கடைபிடித்து, வெற்றி கண்டுள்ளேன். நல்ல தன்னம்பிக்கையினைத் தருகிறது. உங்களது பதிவு. அண்மையில் நாட்டாணியில் நாங்கள் சமணர் சிலையைக் கண்டுபிடித்தற்கும் இதுபோன்ற நம்பிக்கையே உதவி செய்தது. எங்களது பயணத்தைப் பற்றி அறிய எனது வலைப்பூவினைக் காண வாருங்கள். http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
 6. உரமும் வேலியும் ரொம்பவே முக்கியம்...

  ReplyDelete
 7. ஆம் ! மனிதனின் முழுமுதல் மூலதானம் தன்னம்பிக்கை தான் !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 8. ஆம்
  எல்லாம் உன்
  தன்னம்பிக்கையில்

  ReplyDelete
 9. உந்துதலை ஊக்குவிக்கும் வரிகள்.

  ReplyDelete
 10. தலைப்பையும் முடித்த வரிகளையும் படிக்க தத்துவார்த்துவமான வரிகள்.

  ReplyDelete
 11. அன்புள்ள அய்யா,

  வெற்றி பெற வேண்டுமா? நம்பிக்கையூட்டும் வரிகள்!


  வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
  சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
  எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
  கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது!


  வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்...

  -நன்றி.
  த.ம. 8.

  ReplyDelete
 12. வெற்றி பெற வேண்டும் என்னும் மனநிலைமுக்கியம் அது இருந்தால் வழிகள் தானே திறக்கும்

  ReplyDelete
 13. படமும் பதிவும் உபயோகமானவை. அடிக்கடி இப்படி போடுங்க பாஸ் !

  ReplyDelete
 14. #கவனத்துடன்
  காவல் இரு#
  சரியாக சொன்னீர்கள் காவல் இல்லேன்னா வெற்றிக் கனியை வேறு யாராவது பறித்து விடக்கூடும் :)

  ReplyDelete
 15. வணக்கம்
  முரளி அண்ணா
  நல்ல உவமை மிக்க கவி மூலம் மனித வாழ்க்கையை சொல்லியுளீர்கள் ..... இரசிக்க வைக்கும் வரிகள். பகிர்வுக்கு நன்றி த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 16. வெற்றியின் சூத்திரத்தை
  சூளுரைக்கும் சுகமான கவிதை!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 17. அருமையான கவிதை அண்ணாச்சி.

  ReplyDelete
 18. அருமையான தன்னம்பிக்கை கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 20. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 21. அருமையான கவிதை வரிகள். நம்பிக்கை ஊட்டும் வரிகள்! வாழ்த்துகள்!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895