என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, April 13, 2015

ஜெயகாந்தன் இளையராஜாவை அவமதித்தாரா?


     தமிழின் முக்கிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் மறைவு காரணமாக கடந்த சில நாட்களாக ஜெயகாந்தனைப் பற்றிய செய்திகளை அதிக அளவில் இணையத்தில் இடப் பெற்றிருந்தது. வாழும்போதே உரிய அங்கீகாரத்துடன் வாழ்ந்த ஒரு சிலரில் ஜெயகாந்தனும் ஒருவர் என்பதை பலரும் சுட்டிக் காட்டி இருந்தனர். மனதில் தோன்றுவதை எழுதவும் சொல்லவும் இவர் தயங்கியதில்லை என்பதை கடந்த நாட்களில் படித்த செய்திகள் மூலம் அறிந்து  கொள்ள முடிகிறது. இவர் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடான  குணங்களும் அகம்பாவமும் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப் படுகிறார்.

  இசைஞானி இளையராஜாவும் ஜெயகாந்தனும்  நண்பர்கள்  என்பது எல்லோரும் அறிந்ததுதான்.  தன்  சகோதரர்களோடு  சென்னைக்கு வந்ததும் முதன் முதலில் சென்றது ஜெயகாந்தனின் வீட்டுக்குத்தானாம்  'நாங்கள் உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்'  என்று ராஜா  சொன்னபோது "என்னை நம்பி எப்படி வரலாம் " என்றுகேட்டு நம்பிக்கையை விதைத்தவர்.ஜெயகாந்தன் " என்று கூறி இருக்கிறார் 
(இப்படி சொன்னால் நிஜமாவே நம்பிக்கை வருமா?).
மேலும் ஜெயகாந்தனைப் புகழ்ந்த இளையராஜா திருவண்ணாமலையில் அவருக்காக மோட்ச தீபம் ஏற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவருக்குமான நெருக்கம் புலனாகிறது.
   ஆனால் ஒரு முறை ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் பற்றி ஒரு கேள்வி வைரமுத்துடம் கேட்கப் பட்டது . அந்தக் கேள்வி
"ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது எது?" என்ற கேள்விக்கான பதிலில் ஒரு நிகழ்வைக் கூறி இருந்தார் .
 ஜெயகாந்தன் தன்மகனின் திருமணத்தை வைரமுத்துவின் திருமண மண்டபத்தில் வைத்திருந்தார்.மகனின் திருமணத்திற்கு தன் நண்பரான இளையாராஜாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்று அழைப்பிழைக் கொடுத்து திருமணத்திற்கு அழைத்திருக்கிறார். நிச்சயம் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்  அழைப்பிதழைப் பிரித்த ராஜா, மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் முகம் மாறினார். 'நான் அங்கு வர முடியாதே' என்றார். கோபத்துடன் வாசல்வரை சென்ற ஜெயகாந்தன்  சட்டென்று திரும்பி  வந்து, "நீதான் திருமணத்திற்கு வரப் போவதில்லையே உனக்கு எதற்கு அழைப்பிதழ்" என்று கொடுத்ததை  பிடுங்கிச் சென்று விட்டாராம் . இந்த சம்பவத்தை நண்பரின் வாயிலாக தெரிந்து கொண்டேன் என்று கூறிய வைரமுத்து சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற கண்ணதாசனின் வரிகள்  நினைவுக்கு வந்ததாக  கூறி மகிழ்ந்துள்ளார் . 

    ஜெயகாந்தனைப் பற்றி அறிந்தவர்களின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது அவர் இப்படிக் கூறி இருந்தாலும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இப்படி  நடந்திருந்தால் இளையராஜா ஜெயகாந்தன்  மீது நிச்சயம் கோபம் கொண்டிருப்பார். தப்பித் தவறிக் கூட புகழாரம் சூட்டி இருக்க மாட்டார் என்றே கருத்துகிறேன்.
   அறிவுச்செருக்கு  இலக்கிய வாதிகளின் சொத்து  என்பதை நாம் அறிந்திருந்தாலும்  அது ஜெயகாந்தனுக்கு  சற்று கூடுதலாக இருப்பதாகவே படுகிறது.. 

      பிரபல பதிவர் எழுத்தாளர்,பத்திரிக்கை   அனுபவம் உள்ள அமுதவன் அவர்கள்  கலை இலக்கியம்  ,திரைப்படம் என்று அரிய செய்திகளைத்  தருபவர். பதிவர் வருணின் ஜெயகாந்தன் பற்றிய பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டம் இன்னும் ஆச்சர்யம் அளித்தது .  அமுதவன் அவர்கள் மூலம் அறிந்த செய்தி இதுதான்
     ஜெயகாந்தன் ஞான பீடப் பரிசு பெற்ற போது அப்போதைய முதல்வர் கலைஞர் அவரை  சந்திக்க் விரும்பியதும் அதற்கு அவரது முகவரி கேட்ட போது ஒரு முதலவருக்கு இது கூட தெரியாதா?  வேண்டுமானால் கண்டுபிடித்து வரட்டும்  என்று  சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

   சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் இவ்வளவு அகங்காரம் உடையவரா  என்று எண்ணும் அளவுக்கு  நிறைய சம்பவங்கள் உதாரணமாக சொல்லப் படுகின்றன . இதே போன்ற ஒருகருத்தை விகடனில் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்திலும் ஒருவர் தெரிவித்திருந்தார்.
   ஆனால் இத்தனையும் தாண்டி அவரது படைப்புகள் அவரது  தனி மனிதக்  குணங்களை  பொருட்படுத்தாமல் இருக்க செய்யும் வல்லமை பெற்றிருக்கிறது.
       உண்மையில் இந்தப் பதிவில் எழுத நினைத்தது நாள் பள்ளி வயதில் புரியாமல் படித்த சில ஜெயகாந்தன் கதைகளைப் பற்றி. ஜெயகாந்தனை கரைத்துக் குடித்த நிறையப்பேர் அதை பற்றி எழுதிவிட்டனர். ஏதோ சில கதைகளை மட்டுமே படித்த நான் அவரது எழுத்தைப் பற்றி  புதிதாகவோ சிறப்பாகவோ  என்ன எழுதிவிட முடியும்? 
    அதனால் மற்ற ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றை இணையத்தில் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன் .  பள்ளி வயதில் நான் படித்த ஜெயகாந்தனின் மிகச்சில கதைகளில் " இது என்ன பெரிய விஷயம்"  என்ற கதை என்னை மிகவும் கவர்ந்தது.  அதன் சாரம் நினவு இருக்கிறதே தவிர முழுமையாக ஞாபகத்தில் இல்லை. அதனை மீண்டும் படிப்பதற்காக இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. அப்போது "நீ என்னா சார் சொல்ற" என்ற ஜெயகாந்தனின் கதையை  முதன்முறையாக படித்தேன்.  இதற்கு முன் அந்தக் கதையை நான் படித்ததில்லை. 
      எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. நான் கடந்த ஆண்டு 'நான் ரொம்ப நல்லவன் சார்' என்று ஒரு கதை எழுதி பதிவிட்டிருந்தேன். தன்னைப் பற்றி ஒருவன் சொல்லிக் கொண்டே போகும் அந்தக் கதையின் இறுதி வரி "என்ன சார் சொல்றீங்க".  அதேபோல தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டே போகும்  ஜெயகாந்தன் கதையின் கடைசி  வரியும்  "நீ என்னா சார் சொல்ற" என்று முடிந்திருந்தது. (இதெல்லாம் ஒரு பெருமையான்னு கேக்கப் படாது) எனது கதையை நான் ஏதோ வித்தியாசமாக எழுதியதாக நினைத்திருந்தேன். 55 வருஷத்துக்கு முன்னாடியே நான் எப்படி எழுதி இருக்கேன் பாரு என்று சொல்வதுபோல  ஒரு வித்தியாசமான நடையில் எழுதி அசத்தி இருந்தார் ஜெயகாந்தன் .ஹோட்டல்  ரூம் பாய்  ஒருவன் தன் சொந்தக் கதையை தானே விவரிக்கும்  அற்புதக் கதை அது.  அவன் தனது கதையை சொல்லிக் கொண்டே போக நம்மையும் கதைக்குள் ஈர்த்து  இறுதி வரி  வரை படிக்க வைத்து விடுகிறார்.  ஜெயகாந்தனின் எழுத்துக்கள் செய்த ரசவாதம் புரிந்தது. இதோ உங்களுக்காக அந்தக் கதை

எனது மொக்கை    (கதையைப்) படிக்க கீழே கிளிக்கவும்
ஜெயகாந்தனின் கதை கீழே இணைக்கப் பட்டுள்ளது உள்ளே க்ளிக் செய்து ஸ்க்ரோல் செய்து படிக்கவும்


*************************************

கொசுறு :1. ஜெயகாந்தன் எழுதிய வெண்பா 

'பட்டேன் பலதுயரம் பாரிலுள்ளோ ரால்வெறுக்கப்
பட்டேன், படுகின்றேன், பட்டிடுவேன் - பட்டாலும்
நாட்டுக் குழைக்குமெனை நாடேவெறுத்திட நான்
வீட்டுக்கும் வேண்டா தவன் '

இதை ஜெயகாந்தனுக்கு  ஞானபீடப் பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசியபோது குறிப்பிட்டவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் 

கொசுறு :2 ஜெயகாந்தன் பற்றிய அனைத்து அம்சங்களையும் அலசக் கூடிய ஒரு திறனாய்வுக் கட்டுரையை கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான  முத்து நிலவன் வளரும் கவிதை வலைப்பதிவில் எழுதி உள்ளார். அதற்கான இணைப்பு 

ஜெயகாந்தன் படைப்புகள் - ஒரு முழு விமர்சனம் - நா.முத்து நிலவன்


********************************************************

மன்னிக்கவும் ,தற்காலிகமாக Comment Moderation வைக்கப்பட்டுள்ளது 

39 comments:

 1. ஜெயகாந்தனின் தனிப்பட்ட குணத்தைப்பற்றி நாம் கவலைபடவேண்டியதில்லை. அது அவரின் தனிப்பட்டவிஷயம்...... சிறுவயதில் அவரின் கதைகளை தேடிப்படித்தவன்.... பேஸ்புக் இல்லாத அந்த காலத்திலே அவரின் கதைகள் மிகவும் விமர்சிக்கப்பட்டன. அதிலும் அவர் எழுதிய ஒரு கதையில் ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துவிடுவான். அதன் பின் அழுது கொண்டே வந்த அந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லி அழுவாள். அந்த அம்மாவோ நீயாக செய்த செயல் அல்ல என்று சொல்லி அவள் மீது கிணற்றில் இருந்து ஒரு வாளி தண்ணிரை எடுத்து அவள் மீது ஊற்றிவிட்டு உன்மீது பட்டதீட்டு கழிந்துவிட்டது என்று சொல்லி செல்வாள்.

  இது அந்த காலத்தில் மிகப் பெரும் விமர்சணத்திற்கு உண்டாகி கடும் கண்டனதிற்கு உள்ளானார். இருந்த போதிலும் அவர் பலருக்கு தக்க பதில் அளித்தார் பேஸ்புக் இல்லாத காலங்களில்

  ReplyDelete
  Replies
  1. 'அக்னிப் பிரவேசம்'

   Delete
  2. அக்னி என்ற சொல் மட்டும் நினைவில் இருந்தது அதன் பின் குருவியா சிறகா என்று நினைத்தேன் உங்கள் பதில் மூலம் அது பிரவேசம் என்று அறிந்து கொண்டேன். நன்றி ஸ்ரீராம்

   Delete
 2. ஜெயகாந்தனின் தனிப்பட்ட குணத்தைப்பற்றி நாம் கவலைபடவேண்டியதில்லை. அது அவரின் தனிப்பட்டவிஷயம்...... சிறுவயதில் அவரின் கதைகளை தேடிப்படித்தவன்.... பேஸ்புக் இல்லாத அந்த காலத்திலே அவரின் கதைகள் மிகவும் விமர்சிக்கப்பட்டன. அதிலும் அவர் எழுதிய ஒரு கதையில் ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துவிடுவான். அதன் பின் அழுது கொண்டே வந்த அந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லி அழுவாள். அந்த அம்மாவோ நீயாக செய்த செயல் அல்ல என்று சொல்லி அவள் மீது கிணற்றில் இருந்து ஒரு வாளி தண்ணிரை எடுத்து அவள் மீது ஊற்றிவிட்டு உன்மீது பட்டதீட்டு கழிந்துவிட்டது என்று சொல்லி செல்வாள்.

  இது அந்த காலத்தில் மிகப் பெரும் விமர்சணத்திற்கு உண்டாகி கடும் கண்டனதிற்கு உள்ளானார். இருந்த போதிலும் அவர் பலருக்கு தக்க பதில் அளித்தார் பேஸ்புக் இல்லாத காலங்களில்

  ReplyDelete
 3. சிறந்ததொரு அலசல் அருமை நண்பரே
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 4. இதுவரை அந்தக் கதையைப் படித்ததில்லை.
  வித்தியாசமாயிருந்தது.

  ReplyDelete
 5. ஞானச் செருக்கு என்பது அவரிடம் கூடுதல்தான் ,சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் :)

  ReplyDelete
 6. உண்மையில் ஜெகே அதிக செருக்குடைவர் என்றே நானும் அறிந்திருக்கின்றேன். அருமையான அலசல்.

  ReplyDelete
 7. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!
  புதுவை வேலு

  ReplyDelete
 8. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. அருமை. இந்தக் கதையை முன்பு எப்போதோ இருக்கிறது.

  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எனது பின்னூட்டத்தில் 'படித்த மாதிரி நினைவு' என்ற வரிகள் வேகமான டைப்பிங்கில் விடுபட்டுப்போய் விட்டது!

   Delete
 10. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
 11. நண்பரே,

  நல்ல கட்டுரை. ஆனால் பொருத்தமில்லாத தலைப்பு.

  ReplyDelete
 12. வைரமுத்து அவர்களின் மகிழ்ச்சி - அற்ப மகிழ்ச்சி...

  படைப்புகளை மட்டும் கவனித்தால் மகிழ்ச்சி... மற்றவைகள் அல்பத்தனம்...

  ReplyDelete
 13. நல்லது ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பு மற்றும் ஊடல் பற்றி தெரிந்து கொள்ள உதவியது. த.ம.1

  ReplyDelete
 14. வணக்கம்
  முரளி அண்ணா
  இரண்டு பேருக்கும் உள்ள நிலையை புரிந்து கொண்டேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  த.ம10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. ஜெயகாந்தனின் சிறுகதை சிறுகதைத் தொகுப்பொன்றெ முதன் முதலில் ஏழாம் வகுப்பில் படித்தேன். தூக்கி எறிந்து விட்டேன்.
  என்ன கதைகள் இவையெல்லாம் என்று.
  பின் ஒன்பதாம் வகுப்பில் படிக்க வேறொன்றும் கிடைக்காமல் மீள வாசித்த போது உள்ளிழுத்துப் போயின அவர் எழுத்துகள்.

  தாங்கள் கூறும் செய்தியை இப்பொழுதே அறிகிறேன்.

  முத்துநிலவன் அய்யாவின் இடுகையையும் பகிர்ந்திருப்பது உதவியாய் இருக்கிறது.

  த ம 11

  நன்றி.

  ReplyDelete
 16. எழுத்தாளரின் செருக்கைப்பற்றியெழுத வந்த நீங்கள் அவரின் ஒரு சிறுகதையையும் போட்டுவிட்டீர்கள். ஏதாவது ஒரு பொருளைப்பற்றிமட்டும் பதிவு போட்டிருக்கலாம். ஜெயகாந்தன்-இளையராஜா பிணக்கு பற்றி நானும் படித்திருக்கிறேன். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையென்று எடுத்தாலும், இருவருக்கும் செருக்கு இருப்பது திறமையும் செருக்கும் சேர்ந்திருக்கும் என்ற ஃபார்முலா படி சரியே. இளையராஜா ஒரு ஆன்மிக வாதி. ஜெயகாந்தன் அப்படியில்லை. செருக்கிருப்போர் ஆன்மீக உணர்வால் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து அழிக்க முடியும். ஜெயகாந்தன் கடவுள் நம்பிக்கையற்றவர். செருக்கு இல்லாவிட்டால் தானில்லை என்ற முடிவுக்கு வந்தவர்.

  ஜெயகாந்தனின் கதையைப் படித்தேன். நன்றி. எப்படி அற்புதம் என்று தெரியவில்லை. பிழைகள் நிறைந்த கதை. சென்னைச் சேரி பாஷை பேசுவோர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவராக இருப்பர். சென்னையில் குடியேறி பல்லாண்டுகளாயினும் கூட தன்னுடன் பிறந்த தமிழ் ஓடிவிடாது. லாட்ஜ் பையன் தமிழக்கிராமமொன்றிலிருந்து சென்னைக்கு வந்தேறியவன். லாட்ஜில் வேலைபார்க்கும் பையன்கள் சென்னைச்சேரி பாஷையைப்பேச மாட்டார்கள். அப்படி எவரேனுமிருந்தால், அவனை ரூம் பாய் வேலைக்குப் போடமாட்டார்கள் சென்னைச் சேரிப்பாஷையில் கதை சொல்லப்பட்டதே இக்கதையின் முதற்பிழை.

  கதை நெடுக திடீர் திடீரென அவன் குணம் மாறுகிறது. வந்த நடிகை அவனைக் குழந்தையென அழைத்துப் பின்னர் அவனைகக்ட்டிப்பிடித்து உன்னை என் காதலானாகவும் கணவனாகவும் ஏற்க முடியவில்லையே என்கிறாள். ஒரு லாட்ஜ் ரூம்பாய் தங்கவந்த ஒரு பெரிய நடிகையோடு வெகு சுலபமாக கட்டிப்பிடிக்கும் வரைக்கும் பழக முடிந்தால், அஃதென்ன எதார்த்தம்?

  சிறுகதைகளைப்படித்து மூடிவிட மாட்டார்கள். முடிவு நம்மைச் சிறிதளவாவது சிந்திக்க வைக்கும். பெரிய எழுத்தாளர் கதையென்றால், ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்.

  இக்கதை என்ன நமக்குள் அப்படி செய்கிறது? அந்த ஐயர் மேனேஜர் சொன்னதாக வருவதுதான் சரி. அப்படி எடுத்தால்தான் இக்கதையை நாம் சிறந்த கதையென்று சொல்லமுடியும் மேற்சுட்டிக்காட்டிய பிழைகளை மறந்தால்.

  கொஞ்சம் மென்டல் இந்த பையன். சிகிஜியோஃபிரீனியா (schizophrenia) அவனுக்கு. இதைத்தெரிந்த ஐயர் அவனைக்கேரகடர் என்கிறார். இந்த மனநோயின் ஒரு பிரிவு: நோயாளி தன்னைப் பற்றிய ஒரு உண்மைக்கு அப்பாற்பட்ட மகத்தான் பிம்பத்தை உருவாக்கி அதை நம்பி வாழ்வான். (megalomania) சிலர் தன்னை கிருஸ்ணனின் 11வது அவதாரமென நினைப்பர். சில பெண்கள் தான் சிவனின் அடுத்த மனைவி என நினைப்பர். சிலர் தன்னை இந்நாட்டு முதல்வர் என்றும் சிலர் தன்னை கலெகடர் என்றும் நினைப்பர். சிலர் தன்னை சினிமா ஹீரோவென்றும் நினைப்பர். அவர் தலைவாரிக்கொண்டிருக்கும்போது எங்கே அவசரம் என்றால், கால்சீட் கொடுத்திருக்கேன்; சொன்ன வாக்கைக்காப்பாற்றவேண்டும். எனக்காக பாரதிராஜா காத்துக்கொண்டிருப்பார் என்பார்கள்.

  இப்பையன் தன்னை அழகன் என்று நினைத்து அந்த நடிகை தன்னை மையல் கொண்டதாக நினைத்து அவள் தன்னைக்கட்டிப்பிடித்து உன்னைத்தான் நான் கலியாணம் செய்யவேண்டும் என்ற ஒரு sexual fantasy கொண்டு தனிமையில் நெஞ்சொடு கிளத்தல் அல்லது பிதற்றல் செய்கிறான் என்றெடுத்தால் மட்டுமே இக்கதை ஒரு தனித்தன்மை பெறும். இப்படிப்பட்ட கதைகள் ஃப்சைக்காலஜிகல் கதைவகைகளுள் ஒன்றாகும். ஃபசைக்காலஜிக்க்கல் நாவல்களுமுண்டு. இவரின் பல நாவல்கள் அவ்வரிசையில் வரும். இவரின் பலமே அந்த ஜென்ராதான். (genre).

  The genre suited him well. Because he just used his novels and short stories for 'thinking'.

  -- Bala Sundara Vinayagam

  ReplyDelete
 17. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி அலசல்... அருமை...!

  நான் கேள்விப்பட்டது திரு.வலம்புரிஜான் அவர்களை ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்திய பொழுது “இவர் அண்ணாவால் பாராட்டப் பெற்றவர்” என்று சொல்ல, ஜெயகாந்தன் அவர்கள் ” எனக்கு அண்ணாவையே தெரியாது...!” என்று சொன்னாராம்.

  ஒரு தடவை பேருந்தில் பயணம் செய்ய ஜெயகாந்தன் ஏறிய பொழுது அவருக்கு இடம் கொடுப்பதற்காக
  “சார்... ஒக்காருங்க...” ஒருவர் சொல்லி எழுந்திருக்க...
  “பரவாயில்லை...உக்கார்” என்று ஜெயகாந்தன் சொல்ல...
  மீண்டும் அவர், “உக்காருங்க சார்...” எழுந்திருக்க... ஜெயகாந்தன்,

  “உக்காருடா...” என்று கோபமாக சொன்னாராம்.

  கூட்டத்திற்கு அழைத்தவர்களையே மேடையிலே திட்டுவார் என்றும் சொல்வார்கள்.

  கர்வம் நிறைந்தவராக... விமர்சனங்களுக்கு அதிகம் இவரது எழுத்துகள் உட்பட்டாலும்... இவரது படைப்புகள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை என்பது உண்மை.

  ஜெயகாந்தன் மறைந்தாலும் அவரது எழுத்துகள் என்றும் தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழும்.

  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் அவரது படைப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.

  நன்றி.
  த.ம. 12.

  ReplyDelete
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் + 2

  ReplyDelete
 19. சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செருக்குடன் இருப்பது இயல்பே. ஜெயகாந்தனின் கதைகள் பல ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாக வந்தபோது படித்திருக்கிறேன் வித்தியாசமாய் சிந்திப்பவர் எவரும் போற்றவும் தூற்றவும் படலாம்

  ReplyDelete
 20. ஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபாத்திரங்களை படைத்துக் காட்டினார்.
  த.ம.14

  ReplyDelete
 21. ஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபாத்திரங்களை படைத்துக் காட்டினார்.
  த.ம.14

  ReplyDelete
 22. ஜெயகாந்தன், இளையராஜா, வைரமுத்து மூவருமே சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்ளும் "பெரியமனிதர்கள்" னு உங்க கட்டுரை மூலம் அறிந்துகொண்டேன். ஒருவனுடைய திறமைக்கும் அவன் பண்புக்கும், தரத்துக்கும் சம்மந்தம் கிடையாது என்கிற சிறிய உண்மையை இதுபோல் நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவதுண்டு. இருந்தாலும் நமக்கு மறதி ஜாஸ்தி என்பதால் அது நம் மனதில் நிற்பதில்லை! :)

  நந்தவனத்தில் ஒரு ஆண்டிகதையில் வரும் நாயகன் அறியாமையில் வாழ்பவன். உலக அனுபவம் இல்லாதவன். அவன் வாயில் முனகும் பாடலுக்கு அர்த்தம் தெரியாதவன். அறியாமையில் வாழும் அவன் செய்யும் தவறை எளிதாக மன்னித்து, அவனுக்காக, அவன் அறியாமைக்காக, அவன் இழப்பை நினைத்து நாமும் வருந்தலாம். ஆனால் இவர்களைப் போல் பெரியமனிதர்களின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. :)

  ஒருவனுடைய அறியாமையைப் பார்த்து கேலி செய்வதும், படித்தவனிடம் உள்ள செருக்கையும் அகந்தையையும் பார்த்து அவனை சகித்துக் கொள்வதும்தான் இவ்வுலகம்!

  ReplyDelete
 23. அவரது சில கதைகளைப் படித்ததுண்டு. இக்கதையும் படித்திருக்கிறேன்.....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. //சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செருக்குடன் இருப்பது இயல்பே/

  ஆனால் இவருக்கு அளவுகடந்து இருந்தது. சமசுகிருதமே உயர்ந்த மொழி. தமிழ் தாழ்ந்த மொழி. தமிழைச் சிறந்த மொழி என்பவன் நாயைப்போன்று தன்னையே நக்கிக்கொள்பவன். இப்படிப் பேசிய இவரை தமிழ்மக்கள் விட்டார்கள் என்பது அவர்களது பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது. அண்ணாதுரை மறைந்தன்று, இரங்கல் கூட்டத்தில் அவரைத்திட்டிப்பேசியது. திரு பாலசுப்பிரமணியம் அவர்களே. சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற நாவலைப் படைத்து எம்ஜீஆரின் மேல் தான் கொண்ட தனிநபர் வெறுப்பை இலக்கியம் என்ற போர்வையில் உமிழ்ந்தது. இவையெல்லாம் கொஞ்சம் நஞ்ச செருக்கல்ல

  திரு மணவை ஜேம்சு அவர்களே!

  இவரின் படைப்புக்கள் படிக்கப்பட்டு வருகின்றன. இவர் மறைந்து நெடுங்காலமானபின், இவரின் தனிநபர் வாழ்க்கையைப்பற்றி நினைவும் பேச்சுக்களும் மறையும். வருந்தலைமுறை இவரின் படைப்புக்களைக் காய்தல் உவத்தலின்றி தன்னிச்சையாக எடைபோடும். அது ஹீரோ வர்ஷிப் பண்ணாது. புலவர்கள் வாழ்க்கையை வைத்தா சங்கப்பாடலகள் இலக்கியதரத்தை எடைபோடுகிறோம் ? அதைப்போல வருந்தலைமுறை கொடுக்கும் கணிப்பே உண்மையானது.. இப்போது போடுவதெல்லாம் Don't talk ill of the dead வகையைச் சார்ந்தவை. எதைப்படித்தாலும் அற்புதம் என்றுதான் சொல்வார்கள். எ.கா திரு முரளிதரன் இங்கு மீள்பதிவு செய்த சிறுகதைக்கு கொடுத்த பாராட்டு: அற்புதம். ஆனால் அக்கதையில் முடிச்சே இல்லை.

  ஒரு சிறுகதையின் இலக்கணம் முடிச்சு (Knot) பின்னர் இறுதியில் அஃதவிழ்க்கப்படும். அந்த முடிச்சுதான் ஃபோகஸ். (Focus) இக்கதை ஒரு மனம்பிறழ்ந்தவனின் பினாத்தல். எவருமே எழுதிவிடலாம். இதில் என்ன அற்புதத்தைக் கண்டுவிட்டார் என்பது தெரியவில்லை. அதே வேளையில் சிரிராம் எடுத்துக்காட்டிய அக்னிப்பிரவேஷம் சிறுகதையில் சிற்றுந்தில் ஏறி அவள் அமரவும் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. இதுவே முடிச்சு. இதை அவளும் பிறகதாபாத்திரங்களும் எப்படி எதிர்நோக்குகின்றன. பின்னர் எப்படி அந்நிகழ்வை இறுதியாக ஏற்கின்றன; அல்லது தள்ளுகின்றன - இது முடிச்சவிழ்ப்பு. சிங்கில் ஃபோகஸ். அந்த நிகழ்வே. இவையனைத்தையும் தன் மொழி நடையில் எப்படி அழகாக நம்மை ஈர்க்கும் வண்ணம் சொல்கிறார் என்பது ஒரு அலகு. Knot, single incident, focus on the incident, progress in untying the knot. At the end, either untying or inability to untie like முன்னுமில்லை; முடிவுமில்லை; இறைவன் வகுத்த வழிகளுக்கு தெளிவுமில்லையே என்ற வருத்தத்தில் முடியலாம். We can accept that despair - indeed that will mark him out as a great writer! and the beautify handlling of the language to sustain our interest to the end. These are the characterists of a short story. இவையனைத்திலும் தேறிய கதையது அக்னிப்பிரவேஷம். அஃதை அற்புதம் என்றால் ஓகே. திரு முரளிதரன் மன்னிக்கவும்.

  சென்னைச்சேரிப்பாசையைக் கையாண்ட எழுத்தாளர்கள் நிறைய. அவர்களுள் இவர் ஒருவர். சினிமாவுக்குப் போன சித்தாளு முழுவதும் இப்பாசையில்தான் எழுதப்பட்டது. ஆனால். அங்கு இது சாலப் பொருத்தம். அந்நாவலைப்பற்றி நான் மேலும் பேசினால், எனக்கும் ஜெயகாந்தனின் செருக்கு வந்ததுபோலாகிவிடும்: இரங்கல் பதிவில் இறந்தவரைப் போட்டுத்துவைப்பது சரியா?

  -- பால சுந்தர விநாயகம்.

  ReplyDelete
 25. ஜெயகாந்தன் பற்றிய பகிர்வு அருமை. எங்கள் கல்லூரிக்கும் முத்தமிழ் விழாவுக்கு வந்திருக்கிறார். கொஞ்சம் அகங்காரம் பிடித்தவர்தான்.நிறைய பேருக்குப் பிடிக்கும். எனக்கு அவர் எழுத்து பிடிக்கும். ஆனால் அவரைப் பிடிப்பதில்லை. அதுதான் பதிவு போடவில்லை. நிறைய பேர் நெக்குருகி இருக்கிறார்கள் முகநூலில். அவர்களை சங்கடப்படுத்துவானேன் என்றுதான் போடலை :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 26. முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி

  ReplyDelete
 27. அசத்தல் பதிவு அற்புத இணைப்பு ...
  நன்றி தோழர்...

  ReplyDelete
 28. தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றிகள் பல

  ReplyDelete
 29. ஜெயகாந்தனைப் பற்றிய இம்மாதிரியான தகவல்கள் இன்னமும் நிறையவே இருக்கின்றன.. சிலவற்றை எழுதலாமா என்ற எண்ணமும் இருக்கிறது. பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் எழுதுங்கள் அமுதவன் சார்.இது போன்ற எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் அவர்களது படைப்புகளை வைத்து உயர் பிம்பங்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும்

   Delete
  2. அழிக்கப்பட்ட ஆவணங்களால் எழுதப்படாத வரலாறு ஏராளம். சிதைக்கப்பட்ட தகவல்களால் மாற்றத்திற்குண்டான வரலாறும் உண்டு. ஆனால் வாழும் பொழுதே அனைத்தும்அறிந்து அமைதியாகத் தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலை ஒவ்வொரு சமயத்திலும் இருக்கின்றது. அமுதவன் போன்றவர்கள் அவசியம் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.

   Delete
 30. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 31. பல தகவல்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 32. ஜெயகாந்தனை பற்றிய செய்திகளையும், நிகழ்வுகளையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ள விதம் அருமையாக இருந்தது. ஒரு கலைஞனின் குணத்தை வைத்து நிறைகுறையை ஆராய்ந்ததோடு அவரது எழுத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளமைக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 33. "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற நாவலை ஜெயகாந்தன் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதனைப் படித்த யாரோ, எம்ஜியாரிடம் போட்டுக் கொடுத்துவிட, அடியாட்களை வைத்து, திரு. ஜெயகாந்தனை தூக்கிவந்து, ராமாவரம் தோட்டத்தில் வைத்து மொத்தி அனுப்பினாராம் அந்த எம்ஜியார். இது நான் சிறிய வயதில் கேள்விப்பட்ட சம்பவம்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895