பாலகுமாரனின் இரும்புக் குதிரையில் இடம்பெற்றுள்ள கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ள வாசகர்களுக்கு நன்றி.பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அவரது இந்த நாவலின் இடம் பெற்றுள்ள இன்னொரு செய்தி.
பழைய வாகன உதிரி பொருட்களை வாங்கி விற்கும் தொழில் முதன் முதலில் காயல் பட்டினத்தில்தான் நடை பெற்றது.பின்னர் அது பல இடங்களுக்கும் பரவியது. அதனால்தான் பழைய பொருள் விற்கும் வாங்கும் கடைகளை காயலான் கடை என்று அழைக்கிறார்கள்.
குதிரைகள் இந்த அளவுக்கு ஒரு கவிஞனை பாதித்தது ஆச்சர்யம் அளிக்கிறது. கவிதைகளை படிக்கும்போது அந்த பாதிப்பு நமக்கும் ஏற்படுவதை தவிர்க்க இயலாது
இதோ இன்றைய குதிரை வேதம்
நான்காம் வேதம்
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போலே
நிலம்பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுத்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போலே
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினப் போக்கும் குதிரை
தொட்டதும் சிலிர்த்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்துகொள்ளும்
தூங்குதல் பெரிய பாவம்
தூங்கவா பிறந்தீர் இங்கு?
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்கமாட்டார்.
குதிரைகள் கண்கள் மூடி
குறிவிரைத்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்சக் கட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம் -இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்.
************************************************************************
இதைப் படித்துவிட்டீர்களா
தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிப்பீர்!

அற்புதம் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் படம்போட்டுக்காட்டியிருக்கிறார். எனக்கு தங்கள் தொடரின் மூலம்தான் பாலகுமாரனை பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. நன்றி முரளிதரன்.
பதிலளிநீக்குஅறிவும் ஆற்றலும் எங்கும் பரவிக்கிடக்கிறது
பதிலளிநீக்குஞானமுள்ளவன் அள்ளிப் பருகுவதோடு
அனைவரின் தாகமும் தீர்க்கிறான்
ஆற்றலுள்ளவன் அதனுடன் இணைந்து பல்
அரிய பொருட்கள் படைத்து
அனைவருக்கும் பயன்படத் தருகிறான்
ஞானமில்லையெனினும்
தாகமுள்ளவர்களே பாக்கியவானகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 1
பதிலளிநீக்குகுதிரைகள் தூங்குவதில்லை
பதிலளிநீக்குஏனைய உயிர்கள் போலே
நிலம்பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுத்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போலே
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினப் போக்கும் குதிரை
தொட்டதும் சிலிர்த்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்துகொள்ளும்
தூங்குதல் பெரிய பாவம்
அற்ப்புதம் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன் .
அருமை... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்...
பதிலளிநீக்குகுதிரையைப் பற்றி ஒரே கவிதையில் இவ்வளவு தகவல்கள் கூறிவிட்டார், மேதை தான் அவர். கயல் பட்டினம் புதிய தகவல் அய்யா
பதிலளிநீக்குபடித்துப் பாருங்கள்
சென்னையில் ஓர் ஆன்மீக உலா
காயலான் கடை, வியப்பான தகவல் நண்பரே :)
பதிலளிநீக்குநன்றி... ரசித்துப் படித்தேன் !
பதிலளிநீக்குஆரம்பத்தில் (ஆவலாய்ப் படித்த நாட்களில்) விரும்பிப் படித்த இவரது நாவல்களில் இதுவும் மெர்க்குரிப் பூக்களும் அடக்கம். இவையும் இன்னும் சில புத்தகங்களும் இன்றும் என் கலெக்ஷனில்!
பதிலளிநீக்கு//Gobinath said...
பதிலளிநீக்குஅற்புதம் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் படம்போட்டுக்காட்டியிருக்கிறார். எனக்கு தங்கள் தொடரின் மூலம்தான் பாலகுமாரனை பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. நன்றி முரளிதரன்.//
நன்றி கோபிநாத்
//Ramani said...
பதிலளிநீக்குஅறிவும் ஆற்றலும் எங்கும் பரவிக்கிடக்கிறது
ஞானமுள்ளவன் அள்ளிப் பருகுவதோடு
அனைவரின் தாகமும் தீர்க்கிறான்
ஆற்றலுள்ளவன் அதனுடன் இணைந்து பல்
அரிய பொருட்கள் படைத்து
அனைவருக்கும் பயன்படத் தருகிறான்
ஞானமில்லையெனினும்
தாகமுள்ளவர்களே பாக்கியவானகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்திற்கும் வாக்குக்கும் நன்றி ரமணி சார்!
//Sasi Kala said...
பதிலளிநீக்குகுதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போலே
நிலம்பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுத்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போலே
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினப் போக்கும் குதிரை
தொட்டதும் சிலிர்த்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்துகொள்ளும்
தூங்குதல் பெரிய பாவம்
அற்ப்புதம் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. .
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குஅருமை... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
சீனு சாருக்கு நன்றி.
பதிலளிநீக்கு//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குகாயலான் கடை, வியப்பான தகவல் நண்பரே :)//
வருகைக்கும் கருத்திருக்ம் நன்றி.
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குநன்றி... ரசித்துப் படித்தேன் !//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஆரம்பத்தில் (ஆவலாய்ப் படித்த நாட்களில்) விரும்பிப் படித்த இவரது நாவல்களில் இதுவும் மெர்க்குரிப் பூக்களும் அடக்கம். இவையும் இன்னும் சில புத்தகங்களும் இன்றும் என் கலெக்ஷனில்!//
நன்றி ஸ்ரீராம்.
குத்ரையைப்பற்றி அருமையானக் கவிதை...பாலகுமாரனனின் கவிதையை பகிர்ந்ததற்கு நன்றி...
பதிலளிநீக்குகாயலான் கடை அதிசய தகவல்.இரும்புக்குதிரை நல்ல நாவல்,பாலக்குமாரன் அவர்களின் பெரும்பாலான எழுத்துகள் நன்றாகவே இருந்ததுடன் வீடுகளுக்குள் போய்விட்டது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
பதிலளிநீக்குகுதிரைகள் தூங்குவதில்லை
பதிலளிநீக்குஏனைய உயிர்கள் போலே
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினப் போக்கும் குதிரை
தொட்டதும் சிலிர்த்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்துகொள்ளும்//
சரித்திர நாவல்களில் தலைவனின் தொடுதலை புரிந்து கொண்டு சிட்டாய் பறக்குமே அது தான் நினைவுக்கு வந்தது.
பகிர்வுக்கு நன்றி.
பாலகுமாரனின் "பச்சை வயல மனது" படித்து முடித்தவுடன் அவரின் எழுத்தால் கவரப்பட்டு நான் படித்த நாவல் இரும்புக்குதிரைகள். மிகவும் அருமையான நடை, நடுவே வரும் கவிதைகள் அருமை.
பதிலளிநீக்கு36451A9963
பதிலளிநீக்குTakipçi Satın Al
3D Car Parking Para Kodu
Coin Kazanma
Lords Mobile Promosyon Kodu
Titan War Hediye Kodu
70AD95E21F
பதிலளிநீக்குBeğeni Satın Al
Havale ile Takipçi
Youtube Bot Basma