சென்னை புதுப்பேட்டையில் பழைய வாகனப் பொருட்கள் விற்றல் வாங்கல் பிரசித்தம்.காணாமல் போகும் வாகனங்கள் ரகசியமாக இங்குதான் வந்து சேரும் என்று சொல்கிறார்கள்.வந்ததும் சில நிமிடங்களில் பிரித்து இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்களாம். எப்படிப்பட்ட பழைய*புதிய வாகனங்களுக்கும் இங்கு உதிரி பாகங்கள் கிடைக்கும். உபயோகமற்ற பழைய பொருட்களை பழுது தெரியாமல் மறைத்து விற்று விடுவார்களாம். அது போன்ற செயலால் ஏற்படும் விபத்தை இரும்புக் குதிரைகள் நாவலில் அழகாக சொல்வார் பாலகுமாரன்.லாரி முதலாளிக்குத் தெரியாமல் ஓட்டுனர்கள் இது போன்று செய்வதுண்டு. இது போல பலவேறு நெளிவு சுளிவு தகவல்களை சுவாரசியமாக பாலகுமாரன் அள்ளித் தெளித்திருப்பார்..
இதோ இன்றைய குதிரை வேதம்.
நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுவது மிருகம் என்பார்
சீர்குணம் அறியமாட்டார்
வேறொன்று குடிக்கும்போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி
கால் வைத்த இடங்களெல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்?
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்
***********************************
(பால குமாரனின் கவிதைகள் தொடரும் )
மறவாமல் தங்கள் கருத்துக்களை கூறவும்.
மிருகத்தில் குழந்தை ஜாதி //
பதிலளிநீக்குஒரே ஒரு வரிதான்
ஆயினும் சிந்திக்கச் சிந்திக்க
அதன் பாதை நீண்டு கொண்டே போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குசார் குமுதத்தில் பாலகுமாரன் பேட்டி படித்தீர்களா? கிட்ட தட்ட மரணத்தை தொட்டு பிழைத்துள்ளார். இன்னும் முழுதாய் உடல் சரியாக வில்லை :(
பதிலளிநீக்கு// குதிரையின் குளம்பைப் பாரும்
பதிலளிநீக்குஇடுக்கிலே ரோமம் சிரிக்கும்//
பாலா குமரன் தந்த தகவல்களை பகிரும் விதம் அருமை தொடருங்கள் தொடர்கிறோம்
த ம 2
படித்துப் பாருங்கள்
சென்னையின் சாலை வலிகள்
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.html
அருமை...அருமை...ஒவ்வொரு வரியும். எடுத்துக் காட்ட வேண்டிய தேவையற்ற கவிதை. மிக்க நன்றி பகிர்தலிற்கு.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்..
அருமை!
பதிலளிநீக்குத.ம 4
பதிலளிநீக்குமிக நல்ல கவிதை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குபாலகுமரன் கவிதைகள் பால் கோவா! நன்றி! முரளி!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
அருமையன கவிதை பாஸ். ஆனால் எனக்கு கவிதையின் நேரடிப்பொருள் விளங்குமளவிற்கு உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லை :(
பதிலளிநீக்குகலக்கல் கவிதை...குதிரையா மிரளும் மிருகம்? ..நச் ...பாலகுமாரனின் பன்ச் கவிதை..
பதிலளிநீக்கு//கால் வைத்த இடங்களெல்லாம்
பதிலளிநீக்குபூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்?
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்//
மிகவும் ரசித்த வரிகள். தொடர்ந்து பகிரும் உங்களுக்கு பாராட்டுகள்.
அருமை ! ரசித்தேன் ! வாழ்த்துக்கள் ! (TM 7)
பதிலளிநீக்குஇரும்புக்குதிர்ரை முன்னால் படித்தது,திரும்பவும் ஒரு முறை படிக்க வேண்டும்,உங்களது பதிவை கண்ட நாள் முதல் இரும்புகுதிரையய் தேடிப்ப்டிக்க ஆவல் கொண்டுள்ளேன்.இதுதான் ஒரு படைப்பு அல்லது பதிவு உண்டாக்கும் பாதிப்பு என்கிறார்கள்.
பதிலளிநீக்குRamani said...
பதிலளிநீக்குமிருகத்தில் குழந்தை ஜாதி //
ஒரே ஒரு வரிதான்
ஆயினும் சிந்திக்கச் சிந்திக்க
அதன் பாதை நீண்டு கொண்டே போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி சார்.
//மோகன் குமார் said...
பதிலளிநீக்குசார் குமுதத்தில் பாலகுமாரன் பேட்டி படித்தீர்களா? கிட்ட தட்ட மரணத்தை தொட்டு பிழைத்துள்ளார். இன்னும் முழுதாய் உடல் சரியாக வில்லை //
பேட்டியைப் படித்தேன்.புகை பிடிக்கும் பழக்கம் இந்த நிலைக்கு தள்ளிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். பேட்டி கூட அவரது தனித் தன்மை வெளிப்படுவதாக அமைந்துள்ளது.
அவர் முற்றிலும் குணமடைந்து பல்லாண்டு வாழ வேண்டும்.
நன்றி மோகன் குமார்.
வரலாற்றுச் சுவடு நண்பருக்கு வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.
பதிலளிநீக்குs suresh said...
பதிலளிநீக்குமிக நல்ல கவிதை! பகிர்வுக்கு நன்றி!
நன்றி சுரேஷ்.
//Gobinath said...
பதிலளிநீக்குஅருமையன கவிதை பாஸ். ஆனால் எனக்கு கவிதையின் நேரடிப்பொருள் விளங்குமளவிற்கு உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லை :(//
நேரடி அர்த்தமே போதுமானது கோபி. நாவலைப் படித்தால் உள்ளர்த்தங்களும் புலப்படும்.
வருகைக்கும் வெளிப்படையான கருத்துக்குயம் நன்றி.
//Manimaran said...
பதிலளிநீக்குகலக்கல் கவிதை...குதிரையா மிரளும் மிருகம்? ..நச் ...பாலகுமாரனின் பன்ச் கவிதை..//
நன்றி மணிமாறன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட் நாகராஜ் சார்
பதிலளிநீக்குவிமலன் said...
பதிலளிநீக்குஇரும்புக்குதிர்ரை முன்னால் படித்தது,திரும்பவும் ஒரு முறை படிக்க வேண்டும்,உங்களது பதிவை கண்ட நாள் முதல் இரும்புகுதிரையய் தேடிப்ப்டிக்க ஆவல் கொண்டுள்ளேன்.இதுதான் ஒரு படைப்பு அல்லது பதிவு உண்டாக்கும் பாதிப்பு என்கிறார்கள்.//
நன்றி விமலன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விமலன் சார்௧
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஅருமை ! ரசித்தேன் ! வாழ்த்துக்கள் ! (TM 7)//
தவறாமல் வருகை தந்ததற்கும் வாக்கிற்கும் நன்றி தனபாலன் சார்!
kavidhaigal miga arumai sir
பதிலளிநீக்குபாலகுமாரனின் எழுத்தை படிக்கும் போது வயிறு குழைந்து போகும் ஒரு உணர்வு தோன்றும் பாலகுமாரனின் வரிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
பதிலளிநீக்கு////சென்னை புதுப்பேட்டையில் பழைய வாகனப் பொருட்கள் விற்றல் வாங்கல் பிரசித்தம்.காணாமல் போகும் வாகனங்கள் ரகசியமாக இங்குதான் வந்து சேரும்///
இப்படிபட்ட இடம் சென்னையில் மட்டுமல்ல நான் வசிக்கும் நீயுஜெர்ஸியில் "பெர்தம்பாய்" என்ற இடத்திலும் இப்படிதான் நடக்கிறது
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசுவாரசியமான பகிர்வுகள்..
பதிலளிநீக்குஆறாம் பாடம் அருமை.
பதிலளிநீக்குபாலகுமாரனின் கதைகளை விட கவிதைகளை ரசிக்கலாம்...
பதிலளிநீக்குஆரம்ப காலக் கதைகளில் நிறையக் கவிதைகளை எழுதி இருக்கிறார்..
//நீர் குடிக்கக் குனியும் குதிரை
பதிலளிநீக்குநிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுவது மிருகம் என்பார்
சீர்குணம் அறியமாட்டார்
வேறொன்று குடிக்கும்போது
தான் கலக்கல் கூடாதென்று//
எவ்வளவு உயர்ந்த குணம்!
குதிரை குழந்தை சாதிதான்.
மனிதன் குழந்தையாக இருக்கும் வரை எல்லோருக்கும் என்பான், வளர்ந்த பின் எனக்கு மட்டும் என்பான்.
நல்ல பகிர்வு.
25381770CD
பதிலளிநீக்குkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek
7FA34B565E
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
MMORPG Oyunlar
Razer Gold Promosyon Kodu
Viking Rise Hediye Kodu