"வெறுங்கை என்பது மூடத் தனம் விரல்கள் பத்தும் மூலதனம்"
பட்டிமன்றங்களிலும் சொற்பொழிவுகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் இந்தக் கவிதை வரிகளை மேற்கோளாக சொல்வதை கேட்டிருப்பீர்கள் தன்னம்பிக்கையின் உச்சம் தொடும் இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? கவிஞாயிறு தாராபாரதிதான் அந்த அற்புதக் கவிஞர்
பட்டிமன்றங்களிலும் சொற்பொழிவுகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் இந்தக் கவிதை வரிகளை மேற்கோளாக சொல்வதை கேட்டிருப்பீர்கள் தன்னம்பிக்கையின் உச்சம் தொடும் இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? கவிஞாயிறு தாராபாரதிதான் அந்த அற்புதக் கவிஞர்
இவரது கவிதைகள் நம்முள் மறைந்து கிடக்கும் தமிழுணர்வையும் சமூக உணர்வையும் தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை.
புதுக்கவிதை கோலோச்சும் காலத்திலும் இவரது கவிதைகள் மரபுக் கவிதைகள் கேட்போர் அனைவரையும் கவர்ந்தன. அடுக்கடுக்கான சந்தங்கள் பொருட்செறிவோடு பின்னப் பட்டிருப்பது இவரது கவிதைகளின் பலநாகத் திகழ்கிறது. கவிதைகளை விரும்பாதவர்களையும் இவரது பாடல்கள் ஈர்க்கும் என்றல் அது மிகை ஆகாது .
தமிழாசிரியராகப் பணியற்றிய தாரா பாரதி இன்று நம்மிடையே இல்லை. 2000ம் ஆண்டு வரை வாழ்ந்த இவரது கவிதை நூல்கள் நாட்டுடைமை யாக்கப் பட்டுள்ளன
ஏற்கனவே இவரது இரண்டு கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்.
இதோ இதையும் படித்து பாருங்கள் நான் சொன்னதை ஏற்றுக் கொள்வீர்கள்
இன்னொரு விடுதலை எப்போது?
ஒருமைப்பாடு குறைபாடு
உண்மை போனது சுடுகாடு
தருமம் போனது வனவாசம்
தாயே இதுதான் உன்தேசம்
மாண்புகள் வாழும் திருநாடு
மன்னர்கள் கையில் திருஒடு
வீண்புகழ் பேசும் வள நாடு
விடுதலை வந்தும் ஒழியாது
சிறுமைகளுக்கு செல்லுபடி
சில்லறைகளுக்கு பல்லக்கு
பெருமைக் குணங்கள் கல்லறையில்
பிரிவினைக் குரல்கள் கொடிநிழலில்
பட்டப் பகலில் வழிப்பறிகள்
பலர் முன்னிலையில் படுகொலைகள்
வெட்ட வெளியில் கற்பழிப்பு
வீதியின் நடுவில் மதுக் கடைகள்
ஒழுக்கம் யாவும் தரைமட்டம்'
ஊழல்களுக்குப் பரிவட்டம்
அழுக்குகளுக்குப் பெரும்பதவி
அழுகல் சட்டம் அதற்குதவி
அரசியல் கட்சிகள் விலைபோகும்
ஆண்டவன் கட்சிகள் நிலைமாறும்
சரிவைநோக்கி நடைபோடும்
சாதிக் கட்சிகள் வலையாகும்
ஏய்ப்பவன் எல்லாம் கோபுரத்தில்
ஏமாந்தவர்கள் ஒர்புரத்தில்
மேய்ப்பவன் எல்லாம் புலியாக
மேயும் ஆடுகள் பலியாக
பத்துப்பேர்க்கு சோலைவனம்
பாதிப் பேர்க்கு பாலைவனம்
எத்திப் பிழைக்கும் மீதிப்பேர்க்கு
இந்திய நாடு சொந்த நிலம்
ஏனோதானோ மனப்பான்மை
எங்கும் இதுதான் பெரும்பான்மை
ஆணோ பெண்ணோ என்றாலும்
அவரவர் தொழிலில் பொறுப்பின்மை
நானோ நீயோ உழைக்காமல்
நமது கூரை வழியாக
வானோ மண்ணோ வழங்குமென
வாசல் திண்ணையில் காத்திருப்போம்
பொம்மைகள் தானா பொது மக்கள்?
பொய்யர்கள் தானா தலைமக்கள்?
நம்மை நாமே சுரண்டுவதா
நகமே விரலை விழுங்குவதா?
சின்னக் கோல்களின் ஏவலுக்கு
சேவகம் செய்யும் செங்கோல்கள்
அன்னைக் கால்களின் விலங்குகளை
அகற்றப் போவது யார் கைகள்
சுதந்திர தேவி நாற்பதிலே
சூதாட்டத்தில் பலியாடு
இதந்தரும் விடியலை கொண்டுவர
இன்னொரு விடுதலை எப்போது?
***************************************************************************
தொடர்புடைய பதிவுகள்
படிக்கப் படிக்க வியப்பு
பதிலளிநீக்குநன்றிஐயா
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி.
பத்துப்பேர்க்கு சோலைவனம்
பதிலளிநீக்குபாதிப் பேர்க்கு பாலைவனம்
எத்திப் பிழைக்கும் மீதிப்பேர்க்கு
இந்திய நாடு சொந்த நிலம்
நான் மிகவும் ரசித்தேன் நண்பரே...
தமிழ் மணம் 2
அருமையான கவிதை என்று சொல்லி விட்டுப்போகும் விடயம் அல்ல சேமிக்க வேண்டிய கவிதைப்பகிர்வு!
பதிலளிநீக்குகவிதை நூல் தொகுப்பு இனி தேடி வாங்க வேண்டும்!பார்க்கலாம் பாண்டி பஜாரில் [[[
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅருமையான கவிதை புரியும்படி மிக எளிமையாக சொல்லி சென்று இருக்கிறார். பகிர்வுக்கு நன்றி
அற்புதமான கவிதைப் பகிர்வு சகோதரரே!
பதிலளிநீக்குநானும் அண்மையில்தான் கவிஞரின் கவிதை நூலைத்
தரவிரக்கினேன். இடையிடையே படித்துள்ளேன்.
அவரின் கவிதைகளைப் படித்து அருமை என்று
சொல்வதெல்லாம் மிகக் குறைவான சொற்களே!..
நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!
ரசித்தேன்.
பதிலளிநீக்குஇன்றைய உண்மை நிலைகள் வரிகளாய்...
பதிலளிநீக்குநிச்சயமாய் இன்னொரு விடுதலை வேண்டும் ,அருமை :)
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும்
பதிலளிநீக்குசிந்தனை.
கேள்விகளை
விதைத்தவர் மறைந்தார்
பதில் எனும் பயிரை
காக்கப் போவது யார்
பயிரை க்காக்க வேண்டியவரோ
உயிரை த்தானே விலையாய் கேட்கின்றார்.
எளிமையாக ஆனால் வலிமையான வரிகள்! அருமை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅறிமுகத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான கவிதை வரிகள்
சங்கீதம் வரும் மூங்கில் காற்றும் சுடுகிறது....
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன்
மறைந்தும் மறையா மானிதர்!நன்றி!முரளி!
பதிலளிநீக்கு//அரசியல் கட்சிகள் விலைபோகும்
பதிலளிநீக்குஆண்டவன் கட்சிகள் நிலைமாறும்
சரிவைநோக்கி நடைபோடும்
சாதிக் கட்சிகள் வலையாகும்
ஏய்ப்பவன் எல்லாம் கோபுரத்தில்
ஏமாந்தவர்கள் ஒர்புரத்தில்//
அருமை!
த ம 12
வணக்கம்
பதிலளிநீக்குமுரளி அண்ணா
சொல்லிய கருத்தும் சொல்லிய கவிதையும் மிக அருமை.. அண்ணா படிக்க வேண்டிய புத்தகம் பகிர்வுக்கு நன்றி
த.ம 13
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக எளிமையாகப் புரியும் படி சொல்லியிருப்பது அழகு. ரசித்தோம்
பதிலளிநீக்குயதார்த்தத்தை மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள். தங்களது கவிதை வரிகளில் உயிர் பெறும்போது அவை மேலும் பொருள் உள்ளனவாகிவிடுகின்றன. நன்றி.
பதிலளிநீக்கு//மாண்புகள் வாழும் திருநாடு ,மன்னர்கள் கையில் திருஒடு//
பதிலளிநீக்குநல்ல வரிகள். இருந்தாலும் இங்கே.. மன்னர்கள் என்பதை விட மக்கள் அல்லது மாக்கள் என்று சொல்லி இருக்கலாமோ என்று தோன்றியது ...
இன்னொரு விடுதலை எப்போது..... இப்போதும் பொருந்தும் கவிதை.
பதிலளிநீக்குமிகச் சிறந்ததோர் கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.