என்னை கவனிப்பவர்கள்

சனி, 4 ஜூன், 2016

ஆரோக்கிய ஆத்திச் சூடி   என்னை தினந்தோறும் பார்க்கும் பலருக்கு  நான் கதை கவிதை கதைகள் கட்டுரைகள்  எழுதுவேன் என்று தெரியாது. வலைப்பூவில் எழுதுகிறேன் என்பதும் தெரியாது. சிலர் மட்டும் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளனர். வலைப்பூவை வாசிக்கவும் செய்கின்றனர். அவர்கள் சற்று அளவுக்கதிகமாகவே என்னை மதிப்பிடுவது உண்டு..(குறைவாக மதிப்பிடுவோர்தான் மெஜாரிட்டி)
   விழாக்கள், பயிற்சிகள் . கருத்தரங்குகள்,கூட்டங்களில் எப்போதாவது கவிதை என்ற பெயரில் எதையாவது எடுத்து விடுவதுண்டு. ஒரு ஆண்டில் சுதந்திர தின விழாவில் கவிதை படித்தால் அடுத்த ஆண்டும்  அதேபோல்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 
  அப்படி செய்யாவிட்டால்  நீங்கள் கவிதை படிப்பீர்கள்  என்று நினைத்தேன். சாதாரணமாக பேசி விட்டீர்களே என்பார் ஒருவர். அவர்களுக்கு கவிஞர் என்றால்  எப்போதும் வைரமுத்து போல் கவிதை சொல்ல வேண்டும். நாமே ஏதோ கவிதை என்று எதையாவது கிறுக்குவோம். திடீரென்று தனியாகப் பாடு என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தையே  சரியாகப் பாடுவோமா என்பது சந்தேகம்தான். அதற்கு ஒரு மன நிலை தேவை. நினைத்தபோது   எல்லோராலும் கவிதை எழுத முடியாது  என்பதை விளக்க முடியாது.  
   இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு  உடல் நலம் சுகாதாரம் உணவு முறை பற்றிய பயிற்சி நடைபெற்றது.. என்னை அறிந்த நண்பர்களும் கலந்து  கொண்டனர். நானும் எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அப்போது என் இஷ்டத்துக்கு சொன்னதுதான் இந்த உடல்நல ஆத்தி சூடிஆனால்ஒன்று. எப்படி மொக்கையாய் இருந்தாலும்  பாராட்டுவார்கள்.   

ஆரோக்கிய  ஆத்திச் சூடி 

 1. அன்றாடம் உடற்பயிற்சி செய்
 2. ஆசைப் பட்டதெல்லாம்  உண்ணாதே
 3. இலைக்கறி  அதிகம் கொள்
 4. ஈரழுந்தப் பல்தேய்
 5. உப்பு அதிகம் வேண்டாம்
 6. ஊளைச் சதை குறை
 7. எண்ணெய்ப் பண்டம் தவிர்
 8. ஏழைபோல் உண்
 9. ஐம்பது நெருங்கினால் இதயம் கவனி
 10. ஒழுக்கம் பேண்
 11. ஓயாத பேச்சுக்கு ஓய்வு தா
 12. ஒளவை வயதாயினும்  இளமையாய் நினை
 13. எஃகு போல் மன உறுதி கொள் 
                             ------------   டி.என்.முரளிதரன்-    ----------

இன்னமும் கொஞ்சம் எழுதியதாக நினைவு . இப்போது நினைவில்  இல்லை

***************************************************************************


18 கருத்துகள்:

 1. மிக மிக அருமை...முன்னுரையும்....கவிதையும்

  பதிலளிநீக்கு
 2. ஆத்திச்சூடி அருமை நண்பரே ரசித்தேன்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 3. உடல் நலம் பேண உங்கள் ஆத்திச்சூடி அருமை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான் ஐயா! தோன்றுகிற சமயத்தில் உதிப்பதே சிறந்த படைப்பாக இருக்க முடியும். ஆத்திச்சூடி சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. இதற்கு நீங்கள் ஹோம் வொர்க் செய்யவில்லையா ? நினைத்த மாத்திரத்தில் எழுதியதா. கவிதை நன்று பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை. அவசர அவசரமாக அரை மணிநேரத்திற்குள் எழுதியதுதான்ஐ,ஐயா. பொதுவாக எந்த சப்ஜெக்டாக இருந்தாலும் இந்த அகர வரிசை ஆத்திச்சூடி கை கொடுத்து விடும் சமாளித்து விடலாம் என்றாலும் மன நிறைவு இருக்காது

   நீக்கு
 6. மிகப் பிரபலம் அல்லாமல் ஓரளவு -அல்லது சிறிதே சிறிது பிரபலம் -என்றிருப்பவர்களுக்கு இம்மாதிரியான சங்கடங்கள் விளைவது உண்மைதான். ஏதோ ஒரு கூட்டத்திற்குப் போயிருப்போம். வெறும் பார்வையாளராக. சட்டென்று மேடையேற்றி அந்த விஷயம் பற்றிப் பேசச் சொல்வார்கள்.
  முன்பு ஒருமுறை சாவி பத்திரிகை விழா ஒன்றிற்குப் போயிருந்தேன். சுஜாதா அழைப்பின் பேரில். ஓரிரண்டு சிறுகதைகள் மட்டும் எழுதியிருந்தேன். திடீரென்று மேடைக்குக் கூப்பிட்டு "இப்போது இவர் ஒரு புதிய ஜோக் சொல்லுவார்" என்று அறிவித்துவிட்டார் சாவி. அதுமட்டுமல்ல,"இங்கு வந்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் ஆளுக்கொரு ஜோக் சொல்லுவார்கள்" என்று அறிவித்துவிட்டார். குழம்பிக் குழறி ஏதோ உளறி வைத்தோம். இதில் அன்றைக்கு மாட்டிக்கொண்டவர்களில் நம்முடைய பாலகுமாரனும் ஒருவர். அததற்கு ஒரு மனநிலை தேவை என்று மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா, சட்டென்று ஒரு பொறி தோன்றினாலும் அது கவிதையாகவோ கட்டுரையாகவோ வடிவம் பெறுவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகி விடுகிறது.தக்க மனநிலை இல்லையெனில் அந்தப் பொறி அணைந்தும் போகிறது.

   நீக்கு
 7. ஆரோக்கிய ஆத்திச்சூடி அருமை :)

  பதிலளிநீக்கு
 8. அடி ஆத்தி ,இதுக்கு மேல் சொல்ல என்ன இருக்கு :)

  பதிலளிநீக்கு
 9. ஆரோக்கியத்திற்கான ஆத்திச்சுடியை அனைவரும் கடைபிடிக்கலாம். (குறைவாக மதிப்பிடுவோர்தான் மெஜாரிட்டி) என்று கூறியுள்ளீர்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவர்களுக்கு நன்றி கூறுவோம். ஏனென்றால் நம்மையெல்லாம் முன்னுக்குக் கொண்டுவருவோர் இவர்களைப் போல் உள்ளவர்கள்தான் என்பது என் எண்ணம்.

  பதிலளிநீக்கு
 10. ஆரோக்கிய ஆத்திச்சூடி அருமை.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 11. ஆரோக்கிய ஆத்திச்சூடி அருமை.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 12. ஆத்திசூடி அருமை நண்பரே.நல்ல யோசனை

  பதிலளிநீக்கு

 13. பின்பற்ற வேண்டிய வரிகள் ....அருமை

  பதிலளிநீக்கு
 14. அட உடல் நலம் பேணும் ஆத்திச்சூடி அருமை.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895