அதன் உண்மையான சூரர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத் என்பதும் எழுதிய Simply Fly என்ற தன் அனுபவ நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்பதும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி தோல்விகளை சந்தித்தாலும் பட்ஜெட் விமானப் பயணத்திற்கு வித்திட்டவர் என்ற வகையில் சூரரைப்போற்று படத்தின் மூலம் கேப்டன் கோபிநாத் நம் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்தப்படத்தை பார்த்தபின் அவரது வானமே எல்லை என்ற கோபிநாத்தின் சுய சரிதை நூலைப் படிக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வத்தின் காரணமாக படிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் தமிழில் B.R மகாதேவன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு அப்துல்கலாம் அவர்கள் முன்னுரை எழுதி இருக்கிறார்.
சுவாரசிய எழுத்து நடை சுவாரசியமான சம்பவங்கள் என ஒரு தேர்ந்த எழுத்தாளரின்படைப்பாக அமைந்துள்ளது ”வானமே எல்லை”. தேர்தலில் தேவகவுடாவுவை பிஜேபி சார்பில் எதிர்த்து நின்று தோற்றது சுவாரசியத்தில் ஒன்று.
கேப்டன் கோபிநாத் ஒரு அசாதரண மனிதர். அவர் முயற்சித்துப் பார்க்காததே இல்லை என்று கூறும் அளவிற்கு பல துறைகளையும் தொட்டுப்பார்த்திருக்கிறார்.
என்னுரை என்று கோபிநாத் எழுதியதே இந்நூலின் சுருக்கமாக அமைந்து ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. இலக்கியத்திலும் இயற்கை மீதும் ஆர்வம் உடைய கோபிநாத் தாகூர் ,வோர்ட்ஸ் வொர்த், சோமர்செட் போன்ற கவிஞர்கள், அறிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளது அவரது நூலறிவை வெளிக்காட்டுகிறது.தொழிலதிபர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பது அதிசயம்தான்.
கர்நாடகத்தில் ஹேமாவதி ஆற்றங்கரையில் உள்ள சிறு கிராமமான கொரூரில் பிறந்த கோபிநாத் சிறுவயதில் இருந்தே சாகசங்கள் நிகழ்த்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். கோபிநாத்தின் தந்தை ஒரு ஆசிரியர். அவர் ஒரு விவசாயியாகவும் இருந்தார் என்று பெருமை கொள்கிறார் கோபிநாத். பிராம்மணராக இருந்தபோதும் செல்வாக்கும் செல்வ செழிப்பும் ஏதும் இல்லை என்று கூறுகிறார். படேல் மற்றும் கவுடா இனத்தவரிடம்தான் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தது என்கிறார் கோபிநாத். கோபிநாத்துக்கு. 12 வயதில் ஷைனிக் பள்ளி எனப்படும் ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பை முடித்து 15 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் கோபிநாத் தன் வேலையை இராஜினாமா செய்து விட்டார். அவரது இராணுவ அனுபவங்களும் சுவாரசியமானவை
ஹேமாவதி ஆற்றின் குறுக்காக அணை கட்டுவதற்காக இவரது பூர்வீக நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஒரு வறண்ட நிலம் அளிக்கப் பட்டது. இராணுவத்தில் இருந்து திரும்பிய கோபிநாத் வறண்ட புல்வெளியில் கூடாரம் அடித்துத் தங்கினார். அடுத்த பல ஆண்டுகள் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வித்தியாசமான முயற்சிகளைச் செய்தார். விவசாயத்திற்காக அவர் போராடி மின்சாரம் பெற்றது ஒரு சாதனை விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்தாலும் போதிய வருமானம் இன்மையால் வறுமையும் கடனும் அவருடனேயே இருந்தது. குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்
பசுக்கள் வளர்த்தார் பால் வியாபாரம் செய்தார். கோழிப்பண்ணை நடத்தினார். பட்டுப்பூச்சி வளர்த்தார். மோட்டார் வாகன டீலராக இருந்தார் ஹோட்டல் நடத்தினார்,பங்கு சந்தை தரகராக இருந்தார். விவசாயக் கருவிகள் விற்றார். விவசாய ஆலோசகர் வேலையையும் அவர் விட்டு வைக்கவில்லை
கடைசியாக பல தடைகளுக்குப் பின் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரானார். முதலில் டெக்கான் ஏவியேஷன் மற்றும் ஏர் டெக்கான் நிறுவனங்களைத் தொடங்கியபோது தன்னிடம் எல்லாம் இருந்தது போல் செயல்பட்டார். திடீர் போட்டியாளராக முளைத்த இவரை எதிர்கொள்ள சிரமப் பட்டனர் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவரை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். நண்பர்களாலும் உறவினர்களாலும் சக ஊழியர்களாலும்கூட இவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை
தன்னையே தன்னால் சமாளிக்க முடியவில்லை என சுய மதிப்பீடு செய்துகொள்ளும் கேப்டன், பொறுமையற்றவர், கோபக்காரர், சிறிய தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொள்ளாதவர் என்ற பெயரைத்தான் பெற்றிருந்தார். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாத துன்பங்களைக் கொடுத்திருக்கிறேன் என்று கவலைப்படவும் செய்கிறார்.
இன்னும் கொஞ்சம் நல்ல கணவராக, தந்தையாக,மகனாக,நண்பராக முதலாளியாக இருந்திருக்கலாம் என்று ஆதங்கமும் கொள்கிறார்.இந்தப் புத்தகத்தில் குறிப்பிடாத பல நண்பர்கள் இக்கட்டான சமயங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று வருத்தம் தனக்கு இருப்பதாக குறிப்பிடுகிறார். நிறைகளோடு தன் குறைகளையும் கூறத் தயங்காதது கேப்டனின் சிறப்பு.
ராணுவத்திலிருந்து ஒய்வு பெறும்போது வெறும் ரூபாய் 6000 மட்டுமே செட்டில்மெண்ட் பெற்ற ஒருவர் மிகப் பெரிய மூலதனம் தேவைப்படும் விமானத் துறையில் எப்படி சாதித்தார் என்பது சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்.
”நீங்கள் இளைஞரா? வித்தியாசமாக எதையாவது சாதிக்க விரும்புகிறீர்களா? கடுமையாகப் போராடுகிறீர்களா? அடிமேல் அடி விழுகிறதா? பலரால் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களா? தடைகளை யெல்லாம் தகர்த்தெறிந்து முன்னேற முயற்சி செய்கிறீர்களா? உங்களுக்கு இந்த நூல் ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும். ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறுகிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே பின்பற்ற முயலாதீர்கள். தனி வழியை உங்களுக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள் புதிய தனித்துவமான சாதனையை படைத்துக் காட்டுங்கள். மற்றவர்கள் இப்புத்தகத்தை வெறுமனே படித்து மகிழ்ச்சி அடையுங்கள்” என்று முன்னுரையை முடிக்கிறார்
மேலே குறிப்பிட்டவை அனைத்தும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டவையே. முன்னுரையே சுவாரசியமாக இருக்கிறது அல்லவா?.
சூரரைப் போற்று படம் கேப்டன் கோபிநாத்தின் கதையாக இருந்தாலும் சினிமாவிற்காக கற்பனை கலந்து கதை கொடுக்கப் பட்டிருக்கிறது, படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது உண்மைக் கதை என்று மெய்ப்பிக்க உதவுகிறது.
நிஜக்கதை திரைப்படத்தைவிட சுவாரசியமாகவே இருக்கிறது என்பதும் உண்மை
----------------------------------------
முந்தைய பதிவு

கோபிநாத் அவர்களின் 'வானமே எல்லை' நூலைப் படிக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வம், இந்தப் பதிவும் தூண்டுகிறது...
பதிலளிநீக்குதங்களின் பதிவு நூலினைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது
பதிலளிநீக்குநன்றி ஐயா
எனக்கும் படிக்க ஆவல் வருகிறது.
பதிலளிநீக்குசரியான மதிப்புரை. நூலை வாசிப்பேன். படத்தில் இனரீதியாக (வணிக நோக்கிற்காக?) ஏதோ மாற்றம் செய்துடுள்ளார்கள் என்பது பரவலாகப் பேசப்படுவதைக் காணமுடிகிறது.
பதிலளிநீக்குஅருமையான திறனாய்வு. 'வானமே எல்லை' நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது தங்களின் மதிப்புரை.பாராட்டுகள்!
பதிலளிநீக்குF20C3A5DB5
பதிலளிநீக்குBeğeni Satın Al
Garantili Takipçi
Youtube Bot Basma
பதிலளிநீக்குİç Anadolu'nun güzellikleriyle ünlü bölgesinde, tarih boyunca birçok medeniyete ev sahipliği yapmış şehirler bulunmaktadır. Ziyaretçiler, bu şehirlerde hem kültürel mirası keşfedebilir hem de doğal güzelliklerin tadını çıkarabilirler. Özellikle, https://bayanserik.space/ bölgesinde yer alan peri bacaları ve yer altı şehirleri, ziyaretçilerine unutulmaz anlar yaşatmaktadır. Bu nedenle, seyahat planlarını yaparken bu bölgeyi mutlaka listenize eklemelisiniz.