என்னை கவனிப்பவர்கள்

புதன், 25 நவம்பர், 2026

சிகரங்களும் இவனுக்கு சின்னமலை-சூர்யவன்ஷி

 


                                சிகரங்களும் இவனுக்கு சின்னமலை-சூர்யவன்ஷி

ஆறு மட்டுமே அவனுக்குத் தெரியும். நான்கு அவ்வப்போது சொந்தம் கொண்டாடும் ஒன்றும் இரண்டும் அவனுக்கு அதிகம் அறிமுகமில்லாத தூரத்துச் சொந்தங்கள்.ஸ்கோர் போர்டு இவன் களத்தில் இருக்கும்போது “ விலைவாசிபோல் ஏறும். யார் அவன் நாமெல்லாம் ஏளனமாகப் பார்க்கும் பீகார் மண்ணில் பிறந்தவன் என்றாலும் சாதனையாளன் எங்கும் பிறப்பான் அவன்தான் வைபவ் சூரியவன்ஷி. 15 வயதே ஆன பாலகன்.
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தரேன் தின்னுட்டு விளாண்டிட்டிரு என்று வடிவேலு சொல்வது போல உண்மையாகவே தூக்கிக் கொஞ்சவேண்டியது போல சாக்லேட் பாய் தோற்றத்தில் உள்ள இந்தப் பொடியன்.Asia Cup Rising Stars (50-overs, Group B, 12th Match), Doha போட்டியில் UAE ஐ அலற வைத்து விட்டான். 53 பந்துகளில் 204 ரன்கள். 100 ரன்னை 28 பந்துகளில் எட்டிவிட்டான்.அதில் 1.2கள் ஒன்று இரண்டுதான். எல்லா பந்துகளையும் 6 ஆகவும் 4 ஆகவும் மாற்ற முடிகிறது என்றால் பார்வைக் கூர்மையும் மனவலிமையும் ஒருங்கிணைவும் இவனுக்கு வாய்த்திருக்கிறது

ஏற்கனவே இலங்கையில் இவனது ஆட்டத்தைக் கண்டு ஆச்சர்யப் படாதவர் இல்லை. இவனது தொடர் ஆட்டம் அசரவைக்கும் விதத்தில் இருந்தாலும் தொடர்ந்து அதனை தக்க வைக்கமுடியுமா என்றுதான் பலரும் நினைத்திருப்பர்.. சில நாள் மட்டும் ஒளிரும் வால் நட்சத்திரம் போல சிலர் திடீர் சாதனை செய்து காணாமல் போவது கலையிலும் விளையாட்tiலும் வழக்கம்தான். ஆனால் நான் அப்படி அல்ல என்று ஒவ்வொரு முறையும் தனது மட்டையால் சாதிக்கிறான் இச்சிறுவன், உலகின் அத்தனை முன்னணி வீரர்களையும் ஜாம்பவான்களயும் தன் பக்கம் கவனம் ஈர்த்துள்ளான். பலரும் இவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சகவீரர்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூரியனின் ஓளியில் நம்மைப்போன்ற நட்சத்திரங்கள் பார்வையில் படாமல் போய் விடுவோமோ என்று அஞ்சும் அளவுக்கு உள்ளது. இவனது அறிமுகப் போட்டிகள். . . நாலாபுறமும் குவியும் பாராட்டுகளால் திணறிக் கொண்டிருக்கிறான் இந்தப் பாலகன், பணமும் குவியத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை.. ஆனால் புகழ்ச்சிக்கும் துதி பாடலுக்கும் மயங்க விடாமல் அவனது பெற்றோர் அவனை வழி நடத்த வேண்டும். பணமும் அதீத புகழுரைகளும் ஒருவரை வீழ்த்தக் கூடிய ஆயுதங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்து ஜென்சி இளம் பெண்களின் பந்துவீச்சையும் சமாளிக்க வேண்டும். ரன்களால் பெற்ற புகழை பெண்களால் இழந்துவிடக்கூடாது. சச்சினை முன்மாதிரியாகக் கொண்டு ஒழுக்கம் பேண வேண்டும். கடிவாளம் கட்டிய குதிரைபோல கிரிக்கெட் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டால் சிகரங்கள்: கூட இவனுக்கு சின்ன மலைதான். #Suryavanshi #VaibhavSuryavanshi #cricker #World Record