என்னை கவனிப்பவர்கள்

அங்கீகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அங்கீகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

அதிர்ச்சி செய்தி!


   ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் ஆக விருப்பம் கேட்டு ஓர் மின்னஞ்சல் கிடைக்க  பெற்றேன். கரும்பு தின்னக் கூலியா? சம்மதம்  தெரிவித்து பதில் அனுப்பினேன்.

   நாளை முதல் 20.08.2012 முதல் 26.08.2012 வரை ஒரு வாரம் தமிழ்மணம்
நட்சத்திரப் பதிவராக பதிவுகள் இட இருக்கிறேன்.(இப்ப தெரியுதா என்ன அதிர்ச்சின்னு ஹிஹிஹி )
   திரட்டிகளில் தமிழ்மணத்திற்கே முதலிடம் என்பது பதிவுலகம் அறிந்த உண்மை.தமிழ் மணத்தின் மூலம் கிடைத்த  அங்கீகாரம்  உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.எனது பதிவுகள் இன்னும் அதிக பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

  முன்னதாக திரு கோவி கண்ணன் அவர்கள் என்னை நட்சத்திரப் பதிவராக பரிந்துரைக்க சம்மதம் கேட்டிருதார். அவர் சொன்ன  தேதியில் நட்சத்திரப் பதிவராக இருக்க இயலாத சூழ்நிலை இருந்தது. எனது சூழலை தெரிவித்தேன்.அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு 20.08.2012 முதல் ஒரு வாரம்  நடச்சத்திரப் பதிவராக இருக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவருக்கு  என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   23.10.2011 அன்றுதான் தமிழ்மணத்தில் இணைந்தேன். ஓராண்டிற்குள் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக்  கருதுகிறேன்.பரிந்துரைக்குத் தகுதியானவனாக என்னை மேம்படுத்திக் கொள்வேன்.

  தமிழ் மணத்தின்  தரவரிசையில் 2000 த்திற்கும் மேல் இருந்து மெதுவாக முன்னேறி இன்று 48 இல்  உள்ளேன். அலெக்சா தர வரிசை முன்னேற்றத்திற்கும் தமிழ்மணமே காரணம்.பலருடைய நல்ல பதிவுகளை நமக்கு அறிமுகப்படுத்தியும் நமது பதிவுகளை பிறருக்கும் அறிமுகப்படுத்தும்  அரிய  செயலை தமிழ்மணம் செய்து வருகிறது.

    இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி.தினமும் ஒரு பதிவை கவிதை நகைச்சுவை இலக்கியம் என்று பல்சுவையும் கலந்து கொடுக்க விரும்புகிறேன். இவற்றைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை  தெரிவித்து என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   தொடர்ந்து தமிழ் மணத்தின் முகப்பு பக்கத்தில் நட்சத்திரப் பதிவாக பதிவுகள் தெரியச் செய்வதற்கான  வாய்ப்பமைத்துக் கொடுத்த தமிழ்மணத்திற்கு  என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரங்களில் ஜொலித்த 10 நட்சத்திரப் பதிவர்கள் 

  1. .அறிவன்#11802717200764379909
  2.  Prabu Krishna
  3.  பக்றுளி ஆறு
  4. DrPKandaswamyPhD 
  5. Ramani 
  6. பழமைபேசி 
  7. தேனம்மை லெக்ஷ்மணன் 
  8. சசிகுமார் 
  9. Federation of Tamil Sangams of North America (FeTNA)
  10. BHARATHIRAJA

 இன்னும் அனைத்து  நட்சத்திரப் பதிவர்களை அறிந்துகொள்ள கீழே க்ளிக் செய்யவும் 

நாளை சந்திப்போம்!