இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்பெற ஆலோசனை வழங்குவது மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது.
அப்படி என்னதான் நடக்கிறது இந்த நிகழ்ச்சியில?.ஏன் மாணவர்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.?
தன் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெற வைக்க பெற்றோர்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். எந்த இலவசத்தையும் விட்டுவிடக் கூடாது அது அறிவுரையாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தர சிறிதும் தயங்காதவர்கள் பெற்றோர்.
இதில் ஏதேனும் பயன் உள்ளதா?
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ப்ளூ பிரிண்ட் எனப்படும் கேள்வித்தாள் அமைப்பு இலவசமாக கொடுக்கப் படுகிறது. ஏதேனும் கைடுகள், புத்தகங்கள் இலவசமாக கொடுப்பார்கள்.விளம்பரதார்களின் இலவசங்களும் உண்டு. ப்ளூ பிரிண்ட் என்பது ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எப்படி கேள்விகள் கேட்கப்படும் அதற்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற விவரங்கள் அடங்கியது.
முன்பு வினாத்தாள் ப்ளூ பிரிண்ட் என்ற வார்த்தையை பி.எட் படித்தவர்களும் ஆசிரியர்களும்தான் தான் அறிவார்கள்.முன்பெல்லாம் ப்ளூ பிரிண்ட் பற்றி ஆசிரியர்கள் ஏதுவும் சொல்ல மாட்டார்கள். இப்போதோ மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது.(உண்மையில் அப்படி தெரிய வேண்டிய அவசியம் இல்லை)
இதற்கு மேலாக ஆலோசனைகள் என்ற பெயரில் சில பிரபலங்கள் அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். பாவம் மாணவர்கள் ஒரு நாள் முழுக்க கேட்டுத் தான் ஆகவேண்டும். ஆசிரியர்கள் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுதும் முறையை விளக்குவார்கள். எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும் என்பதை விவரிப்பார்கள். இதெல்லாம் பயனுள்ளதுதான் என்றாலும் இவை எல்லாம் தினந்தோறும் பள்ளிகளில் சொல்லப் படுவதுதான் .
இந்த நிகழ்ச்சில் ரமேஷ் பிரபா கொடுத்த அறிவுரை என்ன தெரியுமா? கேட்டால் மெய் சிலிர்த்துப் போவீர்கள்."தேர்வு அறையில் வேடிக்கை பார்த்து நேரத்தை செலவிட வேண்டாம்." என்று சொன்னது வேடிக்கையாக இருந்தது
தேர்வின்போது வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிக்க எந்த மாணவன் விரும்புவான்?
எந்தக் கேள்விக்கும் விடை தெரியாதவர்கள் ஒரு வேளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.தெரியாதவர்கள் என்னதான் செய்வது? வெளியே விடமாட்டார்களே!
பொதுவாக அனைவராலும் வழங்கப்படும் அறிவுரைகள்
- . டி.வி.பார்க்காதீர்கள் (பெற்றோர்களுக்கு வழங்கும் அறிவுரை டிவியை மூட்டை கட்டி எடுத்து வைத்து விடுங்கள்)
- விளையாட்டை நினைத்துக் கூட பார்க்காதீர்கள். இரண்டு ஆண்டுகள் கஷ்டப் பட்டால் வாழ்க்கை முழுதும் கஷ்டப் படவேண்டாம்
- உங்கள் வாழ்க்கையே இதில்தான் அடங்கி இருக்கிறது.
- படித்ததை திரும்பத் திரும்பத் எழுதிப் பாருங்கள்
- முந்தைய ஆண்டு வினத்தாள்களை எழுதிப் பழகுங்கள்
இப்படி பல அறிவுரைகள். உண்மையில் இந்த அறிவுரைகள் ஏற்கனவே ஆசிரியர்கள் பெற்றோர்கள் நண்பர்களால் நாள்தோறும் பத்தாம் வகுப்பு , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதுதான். இதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தி மாணவர்களை வதைப்பது சரிதானா என்பதை சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பள்ளியிலேயே 8 மணிநேரம் உட்கார வைத்து கதற கதற பாடம் நடத்திவிட்டு பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறப்பு வகுப்புகளிலும் கொடுமைப்படுத்துவதோடு .நைட் ஸ்டடியும் செய்ய வைக்கும் கொடுமைகளுக்கு இடையில் ஞாயிறு ஒரு நாளிலும் இது போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பிள்ளைகளை அழைத்து சென்று காலையில் இருந்து காத்துக் கிடக்கும் பெற்றோர்களை என்ன செய்வது?
9 ம் வகுப்பு வந்து விட்டால் போதும், நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்களுக்குக்கூட குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்துவிடுவார்கள் . ஏன் குழந்தைகளை அழைத்து வருவதில்லை என்று உறவினர் கேட்டால் ."அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் ஆச்சே படிக்கிறான்." உறவினரும் "அப்படியா? நல்லது படிக்கட்டும்." என்பார்கள் (பையனோ பெற்றோர் இல்லாததால் சந்தோஷமா கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பான்) இதை சாக்காக வைத்துக் கொண்டுபெற்றோரும் உடனே கிளம்பி விடுவார்கள். வாழ்க்கை இந்த இரண்டு ஆண்டுகளில்தான் முடிவுசெய்யப்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்வதை என்னவென்று சொல்வது?
பள்ளியிலோ அதைவிட மோசம். ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும் படித்தது எல்லாம் வீணாய்ப்போனது போல பெற்றோரை காக்க வைத்து நிற்க வைத்து மிரட்டுவார்கள்
பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று ஒன்று இருக்கிறது.
இந்தப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பணி வினாவங்கி வெளியிடுவதுதான்.(வேறு பணிகள் இதற்கு உண்டு) அதற்கான விடைகளுடன் வெளியிடப்படும் இதை வாங்கிப் படித்து பயிற்சி செய்தால் போதுமானது. இதில் இருந்துதான் கேள்விகள் கேட்கப் படுகின்றன.ஒவ்வொரு மாணவனும் இந்த புத்தங்கங்களை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இது மட்டுமின்றிCOME BOOK என்று அழைக்கப்படும் புத்தகமும் அனைவராலும் வாங்கப் படுகிறது. COME என்பது Classsification of questions, Objective type questions, Model question papers, Evaluation Scheme என்பவற்றின் முதல் எழுத்துக்களை கொண்டு உருவக்கப் பட்டது. எந்த ஸ்டெப்புக்கு எவ்வளவு மதிப்பெண் என்று இதில் விவரிக்கப் பட்டிருக்கும். இதைத் தாண்டி கேள்வித்தாளில் வேறு கேள்விகள் இடம் பெறுவதில்லை. எழுத்துக்கள் எண்கள் கூட மாறுவதில்லை ஒரு கேள்விக்கு முழுதும் பதில் தெரியாவிட்டால் கூட இரண்டு மூன்று படிகளை எழுதி பாதிக்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று விடமுடியும். . பல பள்ளிகளில் இரண்டு ஆண்டு பயிற்சிகள் மூலம் இவற்றை திணித்து விடுகிறார்கள். அரசு பள்ளிகளும் இப்போது இதே நடைமுறைகளை பின்பற்றத் தொடங்கி விட்டன.
மாணவர்களை சிந்திக்க விடாமல் செய்வதில் இந்த வினா வங்கிகளுக்கு முக்கிய இடம். உண்டு. முன்பெல்லாம் கணிதத்தில் ஒரு கணக்கை போட்டுக் காட்டிவிட்டு மற்ற கணக்குகளை வீட்டுப் பாடமாக போடச் சொல்வார்கள். இப்போது ஆசிரியர்கள் அனைத்து கணக்குகளையும் போட்டுக் காட்டிவிட்டு அடுத்த நாள் அதில் டெஸ்ட் வைத்து விடுகிறார்கள். மாணவன் மனப்பாடம் செய்து எழுதி விடுகிறார்கள். கணக்கு பாடம்கூட மனப்பாடம் செய்து எழுதி 100 மதிப்பெண் பெற்றுவிடுவதை காண முடிகிறது. எந்தக் கணக்குக்கு என்ன விடை வரும் என்பதை மாணவர்கள் மனப்பாடமாக சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
பிழைப்பே பெரும்பாடாக அன்றாடங்காய்ச்சிகளாக அவதிப்படும் மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பை கவனிக்கவோ அக்கறை செலுத்தவோ முடிவதில்லை. மேல்தட்டு மக்களுக்கோ பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தர மக்களோ தன் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் இல்லையென்றால் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று மூளை சலவை செய்து குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
9ம் வகுப்பு வந்து விட்டால் போதும், அந்த மாணவன் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பள்ளிக்கும் வீட்டுக்கும் மட்டுமே சென்று வர அனுமதிக்கப் பட்ட கைதிதான் . கூடவே பெற்றோரும் சேர்ந்து கஷ்டப் பட தயாராக இருகிறார்கள். உறவினரின் நல்லது கெட்டது அனைத்தையும் ஒதுக்கிவிடுவார்கள். இப்படி எல்லாம் செய்து மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரி என்று தான் விரும்பும் கல்லூரியில் சேர்த்து விட்டால் பரவாயில்லை. மதிப்பெண் சற்று குறைந்து விட்டாலும் பெற்றோர் அளவிட முடியாக் கவலை அடைகிறார்கள்.
60 சதவீத மதிப்பெண் பெற்றால் கூட பர்ஸ்ட் கிளாஸ் என்று பெருமைப்பட்டுக் கொண்ட நிலை மாறி இன்று 60 சதம் பெரும் மாணவன் சராசரிக்கும் குறைவானவனாக கருதப்படுகிறான்.
பள்ளியில் படிப்பது போதாது என்று கோச்சிங் சென்டருக்கு வேறு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள்.அதுவும் ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் தனித்தனியாக வேறு வேறு இடங்களுக்கும் அனுப்புவதும் உண்டு. பல கோச்சிங் சென்டர்கள் இதனால் ஏராளமாக பணம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன.
பெற்றோரின் மதிப்பெண் மனநிலையை பத்திரிக்கைகள் வியாபாராமாக்கி விடுவதில் முனைப்பு காட்டுகின்றன. தினந்தோறும் மாதிரி வினா விடைகளை வெளியிடுகின்றன. தொலைக் காட்சிகளும் தங்கள் பங்குக்கு ஆசிரியரை வைத்து கேள்விகளை விளக்கிக் கொண்டிருக்கும்
இந்த வினாவிடை விளக்கங்கள் சிடிக்களாகவும் டிவிடிக்களாகவும் மாற்றப்பட்டு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது
மதிப்பெண் பெறுவது மட்டும்தான் தான் ஜெயித்துக் காட்டுவதாக நினைப்பதா? அதிக மதிப்பெண் பெறாதவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்களா? இதனால் சராசரி மதிப்பெண் பெறுபவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறோம் என்பதை உணர்கிறோம? இந்த மனநிலையை ஏற்படுத்துவது சரிதானா? இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. விடைதான் இன்னும் கிடைக்கவில்லை.
******************************************************************************************************
கொசுறு : இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு படித்து மாநில அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களின் பேட்டி பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் இடம் பெறும். எதிர் காலத்தில் என்னவாக ஆவீர்கள் என்று கேட்டால் மருத்துவராகி சேவை செய்வேன். கலக்டராகி தொண்டுசெய்வேன் என்று ஒவ்வொரு வருடமும் யாராவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை யாரவது சேவை செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இது வரை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்
**********************************************************************************
இதையும் படிச்சி பாருங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! l