.
![]() |
| இந்த கலை நிகழ்ச்சி எப்ப நடந்தது? |
படத்துக்கு பொருத்தமான பஞ்ச் டயலாக் சொல்லலாம்
கற்றுக் குட்டின் கணினிக் குறிப்புகள் ( புதியவர்களுக்காக)
கற்றுக் குட்டின் கணினிக் குறிப்புகள் ( புதியவர்களுக்காக)
பிரபல பதிவர் கவியாழி கண்ணதாசனின் Google + பக்கத்திலிருந்து பிரபல பதிவர்கள் டான்ஸ் ஆடுவது போன்ற படத்தை ஸ்கூல் பையன் தனது பதிவில் பகிர்ந்திருந்தார். பார்க்க சுவாரசியமாக இருந்தது.அதை யார் உருவாக்கினார்கள் என்று கண்ணதாசனிடம் கேட்டேன். என் மொபைல் கேமராவில் எடுக்கப் பாத்தது என்றார்..நிச்சயமாக அது கேமராவினால் ஒரே படமாக நேரடியாக எடுக்கப் பட்டிருக்க முடியாது. அது ஒரு animated புகைப்படம். gif வகையை சார்ந்தது. ஒன்றுக்குமேற்பட்ட இணைத்துத் தான் இப்படத்தை உருவாக்கி இருக்க முடியும். படங்களை jpeg, bmp, png, gif என்ற பல்வேறு Format களில் சேமிக்க முடியும். அசைவுப் படங்களை உருவாக்க gif Format பயன்படுகிறது
சற்று ஆர்வம் ஏற்பட்டு அதில் உள்ள படங்களை பிரித்து எடுத்தேன்.
மொத்தம் 7 படங்கள் அதில் இருந்தன. இவை இணைக்கப்பட்டே பதிவர்கள் டான்ஸ் ஆடிய புகைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது அந்த ஏழு படங்களும் உங்கள் பார்வைக்கு
![]() |
| படம் 1 |
![]() |
| படம் 2 |
![]() |
| படம் 3 |
![]() |
| படம் 4 |
![]() |
| படம் 5 |
![]() |
| படம் 6 |
![]() | ||
| படம் 7 |
மேற்கண்ட ஏழு JPEG படங்களை இணைத்துத்தான் கண்ணதாசனின் படம் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும். சரியா என்று அவர்தான் சொல்லவேண்டும். பதிவின் தொடக்கத்தில் உள்ள அசைவுப் படம் மேலுள்ள படங்களை சேர்த்து நான் உருவாக்கியது
gif பைல்களை உருவாக்குவதற்கும் ஏற்கனவே இருக்கிற gif படங்களை பிரித்தடுப்பதற்கும் நிறைய ஆன்லைன் tool கள் உள்ளன அவற்றில் ஒன்று http://gifmaker.me
இந்த முகவரிக்கு சென்று படங்களை பதிவேற்றி,அசைவுப் படங்களை உருவாக்கலாம் ஏற்கனவே உள்ள gif படத்திலிருந்து தனித்தனியாக படங்களை பிரித்துவைத்து சேமித்தும் கொள்ளலாம்.
பறக்கும் கொடி, மலரும் பூ, சுற்றும் கடிகாரமுள் இவற்றை gif பார்மேட்டில் உருவாக்கலாம்.
பறக்கும் கொடி, மலரும் பூ, சுற்றும் கடிகாரமுள் இவற்றை gif பார்மேட்டில் உருவாக்கலாம்.
நான் பயன் படுத்தியது http://picasion.com/ இல் உள்ள ஆன் லைன் மென்பொருள்.
ஆர்வம் இருந்தா நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்
இது புதியவர்களுக்குத்தான். இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்க எஸ்கேப் ஆகலாம்.
***************************
எச்சரிக்கை: யாரேனும் ஒருவர் விருப்பம் தெரிவித்தால் கூட இது போன்று வேறு சில அசைவுப் படங்களை எப்படி உருவாக்குவதென்று
பதிவிடப்படும்
***********************************************************************************
படித்து விட்டீர்களா?






