பீப் சாங் பற்றி எழுதாவிட்டால் வலைப்பதிவர் என்று எப்படி சொல்லிக் கொள்வது? ஆனால் பீப் சாங் புகழ் இகழ் சிம்பு அனிருத் பற்றி அக்கு வேறு ஆணிவேராக அலசி விட்டனர். இத்தனை வாங்கிக் கட்டிக் கொண்டபின்னாவது திருந்துவார்களா? பார்ப்போம்.
இந்த விவாகரத்தில மக்கள் ரொம்ப டென்ஷன் ஆகிட்டதால கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கட்டுமேன்னு பீப் சாங் பற்றி வடிவேலுன்னு ஒரு நகைச்சுவை பதிவு போட்டேன். அதன் தொடர்ச்சியாக இந்த நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்து விட்டு பீப் பாடல் விவகாரத்தை மூட்டை கட்டிவிடலாம் என எண்ணுகிறேன். நான் சொன்னாலும் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது. அதான் நம்ம கேப்டன் வந்துட்டாரே!
பீப் சாங் ஜோக்ஸ்
இந்த நகைச்சுவை முழுக்க முழுக்க கற்பனையே .சிரித்து விட்டு மறந்து விடவும்.
*************************************************************************
*************************************************************************
மேடையில நம்ம தலைவர புகழ்ந்து பேசினதாத்தானே
சொல்றீங்க!அப்ப ஏன் கட்சிய விட்டு நீக்கிட்டாங்க
உங்க வீட்டில இருந்து அடிக்கடி பீப் சத்தம்
கேக்குதே ஏன் ?
நான்
கண்ட படி திட்டும்போது வெளிய கேக்காம இருக்கறதுக்காக எங்க வீட்டுக்காரர்தான் பீப்
சவுண்ட் குடுப்பார்.
டைரக்டர் சார்! இந்த பாட்டு பீப் சாங்குன்னு சொல்றீங்களே பிரச்சனை வராதா?
நிச்சயம் வராது பாட்டு முழுசும் பீப் சவுண்டு குடுத்துடுங்க லிரிக்சே கிடையாதே!
அந்த பிரபல பாப் பாடகர் ஏன் கோபமா இருக்கார்?
மேடையில அவரை பீப் பாடகர்னு
அறிமுகப் படுத்திட்டாங்களாம்
ஏன்யா நைட் ட்யூட்டி போக மாட்டேங்கறே?
ரோந்து போகும்போது விசில் ஊதினா
பீப் சாங்கா பாடறேன்னு அடிக்க வராங்களே
*********************************************************************************
படித்து விட்டீர்களா?
பீப் சாங் பற்றி வடிவேலு