என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, July 21, 2012

கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

     வணக்கம். இந்தியாவின்  தென்பகுதியான தமிழகத்தின்  வசிக்கும் சாதாரண  கிரிக்கெட் ரசிகர்களில் ஓருவனாகிய நான் எழுதும் மடல் .
   கிரிக்கெட்டில் வல்லமையோ புள்ளி விவரங்களில் புலமையோ இல்லாத என்னைப் போன்ற சராசரி ரசிகர்கள்கூட  சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி கண்டு வேதனை அடைந்தோம்.
    கபில்தேவை பொது மன்னிப்பு கேட்க வைப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களாமே! .மன்னிப்பு கேட்டால் ஒரு கோடி ரூபாய், பென்ஷன், மற்றும் இதர சலுகைகள் கிடைக்குமாம்.
     நன்றாக இருக்கிறது. கபில்தேவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, புறக்கணிப்பு, அவமதிப்பு  இவற்றிற்கு பி.சி.சி.ஐ அல்லவா அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்?.
     பொதுமன்னிப்பு கோரும் அளவிற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன?
     இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது அந்த மாவீரன்தானே? அவர் உலகக் கோப்பையை வென்று தந்த பிறகுதானே உலகின் கிரிக்கெட் வல்லரசாகத் நாம் திகழ முடிந்தது!.மற்ற நாடுகள் இந்திய கிரிக்கெட்டை எள்ளி நகையாடிய வேளையில் எதிர் பாராத வகையில் உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவத்தை பெற்றுத் தந்தது கபில்தேவ்தானே!

    ஆமை வேகத்தில் பந்து  வீசுபவர்களை பார்த்து பழக்கப்பட்ட நாம் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இப்படி நமக்கு கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்  இந்தியத் துணைக் கண்டத்தில் புயலாய் நுழைந்த வேகப் பந்து வீச்சாளரல்லவா அவர்? வேகமாக ஓடி வந்து அழகாக எகிறி குதித்து பந்து வீசி எதிரணியைத் திணறச் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நினைவில்லாமல் போனது?அவரது பந்து வீச்சு அசைவுக்கு மயங்காதவர்கள்  யாரேனும் உண்டா?
      இந்திய வேகப் பந்து வீச்சும் எதிரணியை மிரளச் செய்யும் என்பதை முதலில் உணர்த்தியவர் அவர்தானே? இன்று வரை அவருக்கு ஈடான வேகப் பந்து வீச்சாளரை உங்களால் உருவாக்க முடியவில்லையே!
      அப்போதெல்லாம் டெஸ்ட் பந்தயங்களில் நமது முன்னணி வீரர்கள்கூட 6ம், 4ம் அடிப்பது அரிதாக அல்லவா இருக்கும்? ஆறாவது விக்கட்டுக்கு மேல் களத்தில்  புயல் போல் நுழைந்து வான வேடிக்கை நிகழ்த்தி ஆறும் நான்கும் அடித்து ரசிகர்களை  பரவசப்படுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை  என்றாலும் கேள்விப் பட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா என்ன?
      இத்தனைக்கும்  மேலாக 1983 உலகக் கோப்பையில்  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலையில் சூறாவளி ஆட்டம் அடி  175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததை எந்த  கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியுமா? அந்த  ஆட்டம்தானே உலகக் கோப்பையை நம் வசமாக்க வாய்ப்பளித்தது.
   என்றாவது அவர் சுயநலமாக விளையாடி இருக்கிறாரா?சொந்த சாதனைக்காக அணியின் வெற்றியை விட்டுக் கொடுத்திருக்கிறாரா? ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிராறாரா? இருக்கிறவரை தூய்மையாகத்தானே இருந்திருக்கிறார் 
    சாதரண நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர்களும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று இளைஞர்களுக்கு  நம்பிக்கை ஏற்பட்டது இவர் வரவுக்குப் பின்தானே!
     ரிச்சர்ட் ஹார்ட்லி யின் சாதனை முறியடித்தது மட்டுமில்லாமல் 
434 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர்  என்ற சாதனையை நீண்ட  நாட்கள் தக்கவைத்துக் கொண்ட தன்னிகரற்ற ஆட்டக்காரரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா?
 என்றாவது அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்கிரீர்களா?
   நுனி நாக்கு ஆங்கிலம் பேசி போர்டு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு வாரியத்தின் ஏதேனும் ஒரு பதவியை பெறத்  தெரியாதவராக இருந்ததும்  அவர் செய்த குற்றமோ?
    அவரது ஒய்வுக்குப் பின் உங்களில் ஒருவருக்குக் கூட அவருடைய திறமையை இந்திய கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பயன்படுத்த தோன்றவில்லையா? என்ன விந்தை இது?

   கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் எந்த முயற்சியும் செய்யாத நிலையில் கிரிக்கட்டை வளர்க்கவும் புதிய திறமை மிக்க வீரர்களை அடையாளம் காணவும் ICL என்ற அமைப்பை உருவாக்கியதுதானே அவர் மீது நீங்கள் சுமத்தும் குற்றம்?
    பி.சி.சி.ஐ க்குப் போட்டியாக ICL வந்துவிடுமோ என்று எண்ணிதானே அப்போட்டிக்கு தடை விதித்தீர்கள்?.அதில் பங்கேற்றால் தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்காது   என்று வீரர்களை மிரட்டினீர்கள்.  ICL ஐ பார்த்துத்தானே IPL உருவானது?  விளையாட்டை  வியாபாரம் செய்து கோடிகளில் இன்று குளித்துக் கொண்டிருப்பதெல்லாம் அவரது எண்ணத்தின் விளைவுதானே!அந்த நன்றியை கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?
  
     இது நாள் அவரை ஓரம் கட்டிவிட்டு இன்று மன்னிப்பு கேளுங்கள் பணமும் சலுகைகளும் தருகிறோம் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறீர்களே? இது எதற்காக? உங்கள் வற்புறுத்தலால் அவர் மன்னிப்பு ஏதும் கேட்டுவிடக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

   உண்மையாகவே அவரது திறமையும் அனுபவமும் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை என்று நினைத்தால் நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி மன்னிப்பு கேட்க மனம்  இல்லை என்றால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் அந்த சாதனை வீரனை வரவேற்று உரிய மரியாதை அளியுங்கள். ரசிகர்களாகிய நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.

நன்றி !


இப்படிக்கு
              
******************************* 
இதையும் படியுங்க! 

28 comments:

 1. அட, புதிய முயற்சியாக இருக்கிறதே... பதிவின் கருத்துக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. மிகப்பெரும் செயலை நிகழ்த்தவிருக்கும் திறமையானவர்களுக்கு அவ்வப்போது சவால்கள் வருவது இயல்பு. சுய நலம் கொண்ட பண முதலைகள் இருக்கும்வரை, இதுபோன்ற சோதனைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். கபில்தேவ் நிச்சயம் அவரது சோதனைகளை கடந்து வெற்றிபெறுவார். நாம் நம்பிக்கை வைப்போம்!

  ReplyDelete
 3. காணொளி வடிவிலான படைப்பு மிக அருமை. படத்தொகுப்பும், வடிவமைப்பும், பின்னணியில் ஒலித்த தெளிவான குரலும், படைப்புக்கு வலிமை சேர்க்கிறது.

  ReplyDelete
 4. செம பதிவு சார். நெத்தியடி

  ReplyDelete
 5. கபில்தேவின் ஆட்டத்திறன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமற்போயிருக்கிறது.காணொளி கருத்தையும் கேட்டேன்.சிறப்பு..

  ReplyDelete
 6. திறமைகள் மதிக்கப் படுவதில்லை மிதிக்கப் படுகின்றன... உங்கள் குரலுடன் எங்கள் குரலும் தேவ் காக சேர்ந்து ஒலிக்கட்டும்

  ReplyDelete
 7. BCCI-ஐ மீது எனக்கு இருக்கும் கோபம் அப்படியே உங்கள் பதிவில் வெளிப்பட்டிருக்கிறது!

  இந்திய கிரிக்கெட்டிற்கு புத்துயிர் தேட்டித்தந்த ஒரு மாபெரும் வீரனை அவமதித்துவிட்டு.., இந்திய கிரிக்கெட்டிற்கு அவபெயறை பெற்றுத்தந்த (பெயர் குறிப்பிட வேண்டாம் என எண்ணுகிறேன்) சிலரை தலையில் தூக்கிவைத்து ஆடிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் போர்டிடம் நன்றியை எதிர்பார்க்க முடியாது!

  ReplyDelete
 8. வித்தியாசமான பதிவு + நல்ல கருத்துக்களுடன்..
  பகிர்வுக்கு நன்றி... (த.ம. 7)

  ReplyDelete
 9. கபில்தேவின் பெருமைகளை எடுத்துக்கூறும் அருமையான பதிவு! காணொளியும் அருமை!

  ReplyDelete
 10. இதுவரை கபில் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஒரு சாதாரண கிரிகெட் வீரர் என்றுதான் இவர்தான் இந்தியாவுக்கான உலக கோப்பையை வென்று கொடுத்தவர் என்று கூட தெரியாது.....

  இப் பதிவின் மூலம் கபில் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
 11. வணக்கம் பாஸ் மிக அருமையான பதிவு
  என்னைக்கேட்டால் கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான்

  ReplyDelete
 12. நல்ல கருத்துக்கள்.....அருமை நண்பரே !

  ReplyDelete
 13. முதல் கருத்திட்டமைக்கு நன்றி ஸ்ரீராம்

  ReplyDelete
 14. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுப்ரமணியன்!

  ReplyDelete
 15. //மோகன் குமார் said...
  செம பதிவு சார். நெத்தியடி//
  நன்றி!நன்றி!

  ReplyDelete
 16. //மதுமதி said...
  கபில்தேவின் ஆட்டத்திறன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமற்போயிருக்கிறது.காணொளி கருத்தையும் கேட்டேன்.சிறப்பு..//
  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. //சீனு said...
  திறமைகள் மதிக்கப் படுவதில்லை மிதிக்கப் படுகின்றன... உங்கள் குரலுடன் எங்கள் குரலும் தேவ் காக சேர்ந்து ஒலிக்கட்டும்//
  காணொளி யையும் சேர்த்து ரசித்ததற்கு நன்றி

  ReplyDelete
 18. //வரலாற்று சுவடுகள் said...
  BCCI-ஐ மீது எனக்கு இருக்கும் கோபம் அப்படியே உங்கள் பதிவில் வெளிப்பட்டிருக்கிறது! //
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 19. //திண்டுக்கல் தனபாலன் said...
  வித்தியாசமான பதிவு + நல்ல கருத்துக்களுடன்..
  பகிர்வுக்கு நன்றி... (த.ம. 7)//
  தவறாமல் வருகை தந்து வாக்கும் கருத்தும் அளிக்கும் தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. //s suresh said...
  கபில்தேவின் பெருமைகளை எடுத்துக்கூறும் அருமையான பதிவு! காணொளியும் அருமை!//
  காணொளியையும் சேர்த்து ரசித்ததற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 21. //சிட்டுக்குருவி said...
  இதுவரை கபில் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஒரு சாதாரண கிரிகெட் வீரர் என்றுதான் இவர்தான் இந்தியாவுக்கான உலக கோப்பையை வென்று கொடுத்தவர் என்று கூட தெரியாது.....
  இப் பதிவின் மூலம் கபில் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி சார்//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

  ReplyDelete
 22. //K.s.s.Rajh said...
  வணக்கம் பாஸ் மிக அருமையான பதிவு
  என்னைக்கேட்டால் கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான்//
  நீங்கள் சொல்வது சரிதான் கபில்தேவ் நிச்சயமாக மன்னிப்பு கேட்கக் கூடாது.கோடிக்கு ஆசைப்படமாட்டார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 23. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அருமை .//
  நன்றி ராஜசேகர் சார்!

  ReplyDelete
 24. //வெங்கட் நாகராஜ் said...
  அருமை....//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 25. //Suresh Kumar said...
  நல்ல கருத்துக்கள்.....அருமை நண்பரே !//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 26. KODIKU MUNNE MANNIPPU VERU SADARANAMAPPA. KAPIL DEV MANNIPPU KETTU 1.5 CR VANGIKONDUVITTAR. MOONJIYIL KARIYAI POOSIKONDADHU NAMMAI PONRA PAITHIYANGAL THAN

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895