என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, July 3, 2012

ஹோட்டலில் வடிவேலு


   வேலை தேடி வடிவேலு பட்ட அவஸ்தையை நீங்க படிச்சிருப்பீங்க.(படிக்காதவங்க இப்ப படிச்சி ஆறுதல் சொல்லலாம்..  
வேலை தேடும் வடிவேலு - பகுதி 1  
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 )
   அதனால நொந்து போன வடிவேலு கொஞ்ச நாள் வெளியில தல காட்டாம இருந்தார்.வீட்டுக்குள்ளயே எவ்வளவு  நாள் இருக்கிறதுன்னு எங்கயாவது போய்விட்டு  வரலாம் என்று நினைத்து மனம் போன போக்கில் ஒரு பஸ்சில் ஏறி சுற்றிக்கொண்டிருந்தார். மதிய நேரம் பசி எடுக்க ஆரம்பித்தது. எங்காவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்க்க அருகே ஒரு ஹோட்டல் ஒன்று கண்ணில் பட்டது. கையில் காசு இருக்கிறதா என்று பார்த்தார். நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லரைகளும் இருந்தது. பரவாயில்ல சமாளிச்சுக்கலாம். என்று ஹோட்டல் வாசலை  அடைந்த வடிவேலுவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. வாசலில் வைத்திருந்த போர்டுதான்.

   நீங்கள் சாப்பிடுவதற்கு பில் தொகை கொடுக்க வேண்டாம். உங்கள் பேரனிடம் வாங்கிக் கொள்வோம். வருக!வருக!
  ஒரு நிமிடம் நின்று போர்டைப் பார்த்தவர் ஆச்சர்யம் அடைந்தார். வடிவேலுவால் அதை நம்ப முடியவில்லை. அங்கு வேலை செய்யும் ஒருவன் வெளியே வந்தான். அவனிடம் விசாரித்தார்.
"ஏம்பா போர்டில போட்டிருக்கறது. உண்மையா?"
"ஆமா சார், உண்மைதான் உள்ள வாங்க!" 
  "எதுக்கும்  கல்லால ஒக்காந்திருக்கறவர கேட்டுடுவோம்." என்று போக முற்பட்டபோது
"சார்  நீங்க தான் முதலாளியா?ஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமா?"
"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க.நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் கிட்டதான் பிற்காலத்தில வாங்கிக்குவோம்.உள்ளே வாங்க "
   "என் பேரனை எப்படி கண்டுபிடிப்பீங்க."
  "உங்களை போட்டோ எடுத்து வச்சிக்குவோம்.அதை வச்சு உங்க பேரனை அடையாளம் கண்டுபிடிச்சிடுவோம்".
  "ஒ! டெக்னாலாஜி அவ்வளோ இம்ப்ரூவ் ஆயிடிச்சா! சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க!"
  "நீங்க சாப்பிடறதுக்கு உங்ககிட்ட பணம் வாங்க மாட்டோம்.உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்" என்று சொல்ல வடிவேலு தன் செல்ஃபோனை எடுத்து அவர் சொன்னதை ரெகார்ட் செய்து கொண்டார்.
  "பாவம் இவ்வளோ அப்பாவியா இருக்காங்களே என் பேரன் கிட்ட எப்படி வாங்க முடியும்.என் பேரன் இந்த கடைக்கு வருவான்னு எப்படி சொல்ல முடியும்?"

  "சார்!உங்க மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப நல்லவராத் தெரியுது. உங்க வாரிசுகளும் அப்படித்தான் இருப்பாங்க . நீங்க பட்ட கடனை நிச்சயமா.அவங்க அடைப்பாங்க! அது மட்டுமில்ல இவங்க ஏன் இப்படி ஹோட்டல  நடத்தணும்னு நீங்க நினைக்கறது எனக்கு தெரியுது.எங்க தாத்தாவோட ஆசை இது. அவர் ஆரம்பிச்ச பழக்கமிது. அதை அதை எங்கப்பா நான் தொடர்ந்துகிட்டு இருக்கோம்."
  "வித்தியாசமா ஹோட்டலை நடத்துறீங்க.

  "அண்ணே! கொஞ்சம் நில்லுங்கன்னே,உங்க கிட்ட விஷயம் சொல்லனும்"
  வடிவேலுவின்  நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

  "அடடா!இவனுங்க எங்க வந்தானுங்க. எப்படித்தான் மூக்கில வேர்க்குதோ தெரியலயே."
   "நீங்க  ஒன்னும் சொல்ல வேணாம் என் பொழைப்ப கெடுக்கறதே உங்களோட வேலையாப் போச்சு. மரியாதையா போயிடுங்க.
   "அவங்கள உள்ள விடாத துரத்தி விடுங்க?"

    வடிவேலு உள்ள போய் உட்கார்ந்தார்.

  "சார் ஏசி யில ஒட்காருங்க " என்று அழைத்துச் சென்றனர்.

  "சரி நாமளா காசு கொடுக்கப்போறோம்." என்னப்பா இருக்கு?

  "என்ன வேணுமோ கேளுங்க சார். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம்."

  "அப்படியா! ரொம்ப சந்தோஷம். மொதல்ல நாலு இட்லி கொண்டுவா."
  "அப்புறம் சார்!"

  "சோலா பூரி ரெண்டு., கீ ரோஸ்ட், பரோட்டா, அடுத்து கொண்டுவா!
அனைத்தும்  சாப்பிட்டு முடிக்க 
  "வேற என்ன வேணும் சார்?"
  "அட அட இவங்க அன்புத் தொல்ல தாங்க முடியலையே. இந்த  ஹோட்டல்ல என்ன ஸ்பெஷல்?"
  "அடை அவியல், இடியாப்பம் குருமா ........."இன்னும் சொல்லிக்கொண்டே போக,

  "சரி! சரி! எல்லாத்திலயும் ஒரு செட் கொண்டு வா! அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா!"

அனைத்தையும் முடித்துவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே கிளம்பினார்.
"சார், இந்தாங்க பில் 3000 ரூபா எடுங்க."
"யோவ். என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு. நான் பல தடவை கேட்டுட்டுதானே  சாப்பிட வந்தேன். நான் சாப்பிடறதுக்கு பில் கட்டத் தேவையில்லைன்னு நீங்க சொன்னத நான் ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். என் பேரன் கிட்டதான் வாங்கிக்கணும் என்ன ஏமாத்த முடியாது."
"சார் அவசரப் படாதே  இந்த பில் நீங்க சாப்பிட்டதுக்கு இல்ல உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு."
 "என்னது எங்க தாத்தா சாப்பிட்டதுக்கா?படு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே.! ஏன்யா  தெரியாமத்தான் கேக்கறேன்! அந்த காலத்திலேயேவா எங்க தத்தா 3000 ரூபாய்க்கு சாப்பிட்டார்?.எங்கிட்ட பணம் இல்லை."
  "நீயே இத்தனை ஐட்டம் தின்னயே. அந்த காலத்து ஆளு உங்க தாத்தா எவ்வளோ சாப்பிட்டிருப்பார். மோதிரம் போட்டிருக்க இல்ல அத கழட்டிக்குடு. உன் மோதிரத்த பாத்துட்டுதான் உன்ன சாப்பிட உள்ளே விட்டோம். உம் சீக்கிரம்."
   "மோதிரம் இல்லன்ன என்ன செய்வீங்க?"
  " உன்ன உங்க தாத்தா இருக்கிற இடத்துக்கே அனுப்பிடுவோம்"
 மோதிரத்தை உருவிக்கொண்டு வடிவேலுவை வெளியே தள்ளினர் 
"ஐயோ! நம்ம பசங்க அப்பவே இதைத்தான் சொல்ல வந்தாங்களோ. அதையும் கேக்காம அவங்களை துரத்திட்டேனே. சரி!சரி  உசுருக்கு சேதாரம் இல்லாம தப்பிச்சமே அது போறும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

***************************************************************************

29 comments:

 1. நல்லாத்தான் எழுதுறாங்கய்யா :D :D :D :D :D
  பேசாம வடிவேலுவுக்கு ஸ்கிறிப்ட் எழுதிக்குடுங்க சார். சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
 2. அடப்பிரமாதமாக இருக்கே
  உள்குத்து எப்படியும் கடைசியில் இருக்கும் எனத் தெரியும்
  ஆனால் இப்படி ஒரு கும்மாங்குத்து இருக்கும் என கற்பனை செய்யக் கூட
  முடியவில்லை
  ரசித்துப்படித்து மனம்விட்டுச் சிரித்தபதிவு
  தொட்ர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பதிவைப் படித்தால் வடிவேலுவே வாய்விட்டுச் சிரிப்பார் சகைச்சுவை நன்று!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 4. இந்த முடிவை எதிர்பாக்கவே இல்லை. செம

  சினிமாவிற்குள் நுழையும் ஐடியா இருக்கா முரளி ?

  ReplyDelete
 5. you are amazing you should definetly write for vadivelu

  ending i loved it

  ReplyDelete
 6. ஐயோ சூப்பர் பதிவு சார்....:)

  வீடியோவுல வடிவேலுட அக்டிங் பார்க்காதது தான் குறை....

  ReplyDelete
 7. ஹி ஹி ஹி எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க (TM 5)

  ReplyDelete
 8. அருமை அருமை.

  ReplyDelete
 9. sir, good joke, but then kachi ko swaminathan told it in intru oru thakaval 10 years back..

  ReplyDelete
 10. ரசிக்கும் படி இருந்தது..
  வசனத்தில் வடிவேலுவின் சில மானரிசங்களைச் சேர்த்திருக்கலாம்..சும்மா இன்னும் தூக்கி இருக்கும் பதிவு..

  ஆனால் இப்பவும் சிரிக்க வைக்கும் பதிவு.

  ReplyDelete
 11. பழைய கதைக்கு புதிய முலாமிட்டு இருந்தாலும் சுவாராஸ்யமாக இருந்தது! அருமை!

  ReplyDelete
 12. //Gobinath said..
  நல்லாத்தான் எழுதுறாங்கய்யா :D :D :D :D :D
  பேசாம வடிவேலுவுக்கு ஸ்கிறிப்ட் எழுதிக்குடுங்க சார். சூப்பரோ சூப்பர்//
  ரொம்ப நன்றி கோபி. தம்பி கோபிநாத் எப்பவுமே முதல் கம்மென்ட் போட்டா அந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிடுது.

  ReplyDelete
 13. //Ramani said...
  அடப்பிரமாதமாக இருக்கே
  உள்குத்து எப்படியும் கடைசியில் இருக்கும் எனத் தெரியும்
  ஆனால் இப்படி ஒரு கும்மாங்குத்து இருக்கும் என கற்பனை செய்யக் கூட
  முடியவில்லை
  ரசித்துப்படித்து மனம்விட்டுச் சிரித்தபதிவு
  தொட்ர வாழ்த்துக்கள்//
  ரமணி சார். உங்க கருத்தும் வாக்கும் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete
 14. //புலவர் சா இராமாநுசம் said...
  பதிவைப் படித்தால் வடிவேலுவே வாய்விட்டுச் சிரிப்பார் சகைச்சுவை நன்று!
  சா இராமாநுசம்//
  புலவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 15. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ரைட்டு..//
  வருகைக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 16. //மோகன் குமார் said...
  இந்த முடிவை எதிர்பாக்கவே இல்லை. செம
  சினிமாவிற்குள் நுழையும் ஐடியா இருக்கா முரளி ?//
  நன்றி மோகன் சார்!
  எனக்கு பாடல் எழுத ஆசை உண்டு.சினிமாவில் நுழைய காலம் கடந்து போச்சுன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 17. //சிட்டுக்குருவி said...
  ஐயோ சூப்பர் பதிவு சார்....:)
  வீடியோவுல வடிவேலுட அக்டிங் பார்க்காதது தான் குறை...//
  கருத்துக்கு மிகவும் நன்றி விமலன் சார்!

  ReplyDelete
 18. //வரலாற்று சுவடுகள் said...
  ஹி ஹி ஹி எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க (TM 5)//
  வருகைக்கும் வாக்குக்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 19. //Sasi Kala said...
  அருமை அருமை.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சசிகலா மேடம்

  ReplyDelete
 20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனேஷ் குமார்

  ReplyDelete
 21. //அறிவன்#11802717200764379909 said...
  ரசிக்கும் படி இருந்தது..
  வசனத்தில் வடிவேலுவின் சில மானரிசங்களைச் சேர்த்திருக்கலாம்..சும்மா இன்னும் தூக்கி இருக்கும் பதிவு..
  ஆனால் இப்பவும் சிரிக்க வைக்கும் பதிவு.//
  வருகைக்கும் ஆலோசனிக்கும் நன்றி அறிவன்.

  ReplyDelete
 22. //s suresh said...
  பழைய கதைக்கு புதிய முலாமிட்டு இருந்தாலும் சுவாராஸ்யமாக இருந்தது! அருமை!//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

  ReplyDelete
 23. //வெங்கட் நாகராஜ் said...
  அருமை....//
  நன்றி வெங்கட் நாகராஜ் சார்.

  ReplyDelete
 24. //திண்டுக்கல் தனபாலன் said...
  ஹா ஹா.. ரசித்தேன் நண்பரே ! வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 9)//
  நன்றி தனபாலன் சார்!

  ReplyDelete
 25. அருமை. சிரித்து ரசித்தேன். ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895