என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, December 15, 2012

கள்ள நோட்டை கண்டறிவது எப்படி?


   நாம் 500 ரூபாயோ அல்லது 1000 ரூபாயோ வங்கியில் செலுத்தும்போது அது நல்ல நோட்டுதானா என்பதை  பலவித கோணங்களில் பார்த்து சோதிப்பார் கேஷியர்.ஆனால்  அவர் எப்படி என்னதான் பார்க்கிறார் என்பது எனக்கு புரியாது.வங்கிகளில் நல்ல நோட்டு எப்படி இருக்கும் அதை உறுதி செய்வது எப்படி என்று சில வங்கிகளில் பெரிய அளவில் படமாக வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவற்றை பொறுமையாக நின்று படிக்க முடிவதில்லை. அதனால் பொறுமையாக அறிந்துகொள்ள  ரிசர்வ்  வங்கி வெளியிட்டுள்ள பணத்தாள் பற்றிய ஒரு சில குறிப்புகளையும், அவற்றில் மறைந்துள்ள நுணுக்களை அறிந்து கொள்ள உதவும் படங்களும் இதோ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் ரூபாய் நோட்டுக்களில் உள்ளன. இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி எப்படித்தான் கள்ள நோட்டு அடித்துவிடுகிறார்களோ?

படங்களை கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும். (Ctrl + + கீயை அழுத்தி படத்தை பெரிதாக்கியும் பார்க்கலாம்.)
 1.  பாதுகாப்பு ழை: ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு ழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு ழையைக் கொண்டுள்ளது. இந்த ழை பாதி வெளியில் தெரிவதாகவும் பாதி உள்ளே பதிக்கப் பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும் போது இந்த ழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த ழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றமளிக்கும். ரூ.1000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் 1000, ‘RBI’ என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு ழைகளைக் கொண்டிருந்தன.
 2.  மறைந்திருக்கும் மதிப்பெண்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20,50,100,500,1000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லையேல் இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும்.
 3. நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்ககுத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருப்பெருக்கக் கண்ணாடியின் வழியே இதனைத் தெளிவாகக் காணமுடியும்.
 4. அடையாளக்குறியீடு: ரூ.10 தாளைத் தவிர மற்றவற்றில் நீர்க்குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20 இல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50 இல் சதுரம், ரூ.100இல் முக்கோணம், ரூ.500 இல் வட்டம், ரூ.1000 இல் சாய்சதுரம்) இது பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
 5.  செதுக்குருவம்: மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.
 6. ஒளிரும் தன்மை: தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.
 7. பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை: ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும்  ரூ.1000 இன் மேல் (லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில்)  ஆகியன பார்வைத் தோற்றத்தில் மாறுபடும் அதாவது வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்கள் கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.

  ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவற்றை அறிய முடிகிறதா என்று பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்
  . 8.   
  அழுக்கடைந்த/பழுதடைந்த  பணத்தாள்களுக்கு உரிய முழு மதிப்புத் தொகையினைப் ஒருவர் பெற முடியும்.
  அழுக்கடைந்த/சேதமடைந்த பணத்தாள்கள் எங்கே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன?
   எல்லா வங்கிகளுக்கும் தங்கள் கொடுக்கல் வாங்கல் முகப்புகளில் அழுக்கடைந்த தாள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மாற்று மதிப்பினைச் செலுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த/கிழிந்த நோட்டுகளை பணவறைகள் கொண்ட கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்.
  பின்வரும் பணத்தாள்கள் திரும்பப்பெறும் விதிகளின்கீழ் மாற்றுத்தொகையைப் பெறுவதற்கு உரியவை அல்ல.
   
  1.     முழு பணத்தாளின் பாதிப்பரப்புக்  குறைவாக உள்வை,
   

  2. வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை, அதாவது வரிசை எண்ணிற்கு முன்னெழுத்தும் மூன்று எண்களும் அல்லது நான்கு எண்களும் இல்லாத ரூ.5ம் அதற்குட்பட்ட இலக்க மதிப்புள்ள நோட்டுகள்,  ரூ.10ம் அதற்கு மேலும் உள்ள பணத்தாள்களில் இந்தக் குறைபாடு, வரிசை எண்கள் இருக்கும் இரண்டு இடங்களிலும் இருக்குமானால்,
   

  3. ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தினாலாவது அந்தத்தாள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தால் அல்லது முன்னமே தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருந்தால்.

  4.    கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டால்.
   

  5. வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால், சேதப்டுத்தப் பட்டிருந்தால்,   திருத்தப்பட்டிருந்தால்,
   

  6.  தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அரசியல் பண்புடைய செய்திகளைத் தரக்கூடிய அல்லது தருகின்ற நோக்கமுடைய வார்த்தைகள்/ படங்கள் கொண்டிருந்தால்.

  *********************************************************************************************************************
   இதைப் படித்து விட்டீர்களா?

58 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி அய்யா!

   Delete
 2. உபயோகமான, நல்ல தகவல்களைக் கொடுத்ததற்கு நன்றி. இதை நகல் எடுத்து லேமினேட் செய்து வைத்துக் கொள்ளப்போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி கந்தசாமி சார்!

   Delete
 3. மிகவும் தேவையான தகவல் பகிர்வு! மிக்க நன்றி!

  ReplyDelete
 4. பயனுள்ள தகவல் விரிவான பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்!

   Delete
 5. பயனுள்ள பகிர்வு

  ReplyDelete
 6. நல்ல பயனுள்ள பகிர்வு.

  விரிவாக தகவல்கள் சேகரித்து படங்களுடன் அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 7. நல்ல தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 8. Fantastic Boss!! Very useful info, Thanks.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   Delete
 9. Replies
  1. நன்றி நன்றி நண்பரே!

   Delete
 10. உங்கள் பதிவை படித்ததில் நல்ல உபயோகமான ஏராளமான தகவல்கள் கிடைத்தன.
  பகிர்விற்கு நன்றி.

  ராஜி

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. உங்கள் சிட்டுக் குருவி பதிவை படித்துவிட்டேன்.அருமை.

   Delete
 11. மிகவும் அவசியமான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன் சார்!

   Delete
 12. மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி

  ReplyDelete
 13. Replies
  1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

   Delete
 14. பொதுமக்களுக்கு பயனுள்ள ஒரு நல்ல பதிவு. இதுபோன்ற தகவல்கள் அடிக்கடி பதிவுகளில் வருவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   Delete
 15. நல்ல தகவல். ஒருமுறை எதோ வாங்கும் போது எனக்கு கடையில் மிச்சமாக கொடுத்த இரண்டு 100 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்து வேறு கேட்டு வாங்கினேன்.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை நீங்கள் உஷா(ர்) அன்பரசுதான்

   Delete
 16. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி முரளிதரன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார்!

   Delete
 17. நுணுக்களை அறிந்து கொள்ள உதவுமபபயனுள்ள தகவல்கள் ... பகிர்வுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

   Delete
 18. நிறைய ஹார்ட் வொர்க் பண்ணி தயாரித்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த பதிவு.

   Delete
 19. பலருக்கு உபயோகமாக இருக்கும்....
  கள்வர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தகவல்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மகிழ்ச்சி ஆத்மா

   Delete
 20. வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி.

   Delete
 21. பயனுள்ள விடயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கும் செலவழித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அய்யா!

   Delete
 22. பயனுள்ள பதிவு.... நன்றி முரளி....

  ReplyDelete
 23. பயனுள்ள பதிவு.... நன்றி முரளி....

  ReplyDelete
 24. பலரிற்கு உதவும் தகவல் தங்கள் சேவைக்கு நன்றி முரளி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மேடம்

   Delete
 25. தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி முரளி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனா அய்யா!

   Delete
 26. பயனுள்ள பகிர்விற்கு நன்றி முரளிதரன் ஐயா.

  ReplyDelete
 27. ஒரு நோட்டில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா... அனைவருக்கும் அவசியமான பதிவு சார்

  ReplyDelete
 28. நோட்டில் கதை,கவிதை, தூது எல்லாம் எழுதுவது வெக்கக் கேடான விசயம். அதை நான்காக மடிப்பதும் கூடாத செயல்.

  ReplyDelete
 29. தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் ஐயா!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 30. அருமையான தகவல்கள் ஐயா மிக்க நன்றி.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895