என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, August 20, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் -க்கு புக் பண்ணிட்டீங்களா?

பதிவர் திருவிழா
   சென்னை எக்ஸ்ப்ரெஸ் என்றதும் ஷாருக்கான்படம் என்று நினைத்tதிருக்கக் கூடும். மன்னிக்கவும்.  01.09.2013 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பதிவர் விழாவிற்கு வருகை தருவதற்காக  சென்னை எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்துவிட்டீர்களா என்பதைத்தான்  குறிப்பிட்டேன்.  நண்பர்களே!
   வலைப்பூக்கள் எழுதுபவர்கள். முகநூல் நண்பர்கள், டுவிட்டர்கள். கூகுள்+ பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, ஏன் இதுவரை எழுதாமலிருந்தாலும்  இனி எழுத ஆர்வம உள்ளவர்களும் இனைந்து மகிழ்வதற்காக  சிறப்பான இரண்டாம் ஆண்டு  தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 

   இதற்கான ஏற்பாடுகளை பதிவர்கள் மதுமதி,பட்டிக்காட்டான் பட்டணத்தில் ஜெயகுமார்,ஆரூர் மூனா செந்தில், அரசன், பாலகணேஷ், திடம கொண்டு போராடு சீனு உள்ளிட்ட பலரும் ஒருங்கிணைந்து நேரம் காலம் கருதாது செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள்.

  இதுவரை வலையில் நட்புகொண்டவர்கள் நேரில் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த பதிவர் திருவிழா ஒரு நாள் முழுக்க  01.09.2013   நடைபெற  அன்று  வடபழனியில் உள்ள Cine Musicians Auditorium தயாராக உள்ளது

  வலையில் மூலமே தொடர்பு கொண்ட முகம் அறியாத . உங்களுக்குப் பிடித்த, ,உங்களைப் பிடித்த, பதிவர்களையும்  கண்டு மகிழ்ந்து களிப்போடு உரையாட சென்னை பதிவர் சந்திப்புக்கு புறப்படுவதற்கான ஆயத்தம் செய்து விட்டீர்களா?
   உங்களை வரவேற்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். உங்கள் வருகையை கீழ்க்கண்ட பதிவர்களை தொடர்பு கொண்டு உறுதி  செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்து வரும் நண்பர்களுக்கு தேவைப்படின் முன் தினம் தங்குவதற்கான இட வசதி ஏற்பாடு செய்யப் படவும் விழா அன்று உணவு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளை செய்யவும் உங்கள் வருகையை உறுதி செய்ய பதிவரும் விழா ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான மதுமதி  9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இத் திருவிழாவின்போது நூல் வெளியிடல் மற்றும் பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இவ்வாண்டு பதிவர்கள் மோகன்குமார், சங்கவி, சேட்டைக்காரன்,   ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட உள்ளன.. வேறு யாரேனும் தங்கள் நூல்களை வெளியிட விரும்பினால், மதுமதி அவர்களை தொடர்பு கொள்ளவும்.
     பதிவர்கள்  பாட்டுப் பாடுதல், நாட்டியம் ஆடுதல்,மிமிக்ரி செய்தல்,குழுவாக இணைத்து நடித்தல், போன்ற பல்வேறு திறமைகளை இந்த  நிகழ்வின்போது வெளிப்படுத்தலாம்.இதற்கான  மேலதிக விவரங்களுக்கு மதுமதி அவர்களையே தொடர்பு கொள்ளவும்.
    கடந்த முறை இந்நிகழ்வு நடைபெற "மக்கள் சந்தை" வலைத்தளம் பெருமளவுக்கு உதவி செய்ததால் நிதி சுமை ஏற்படவில்லை. இம்முறை அதற்கான வாய்ப்பு இல்லாததால் பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற பதிவர்கள் தாங்களே முன்வந்து  தங்களால் இயன்ற தொகையினை அளித்து வருகின்றனர். நீங்களும் உங்களால் இயன்றதை-விரும்பியதை அளித்து உதவலாம். இதற்காக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்
First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact :044- 24849775
தொடர்புக்கு
அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
நன்கொடையை வங்கியில் செலுத்தியவர்கள் tamilbloggersinfo@gmail.com என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும்  அம் மின்னஞ்சலில் இருந்து பணம் பெற்றுக் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அனுப்பப் படும். வரவு செலவு கணக்கு விவரமும் பின்னர் வெளியிடப்படும். இது தொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    தமிழ் வலைப் பதிவர்களே வலைப்பதிவர் திருவிழா சிறப்புற திரளாகக் கலந்து கொள்வீர். தங்கள் வருகையை இன்றே உறுதி செய்வீர்.

வருக! வருக! இணையத்தால் இணைப்புக் கொண்டிருந்த நாம் நேரில் சந்தித்து மகிழ்வோம்.

*********************************************************************************************
கொசுறு: ( பதிவர்கள் அனைவரும் அறிந்த ,பதிவுலக மந்திரவாதி, பின்னூட்டப் புயல், திரு திண்டுக்கல் தனபாலனை சந்திக்க நிறையப் பதிவர்கள் ஆவலாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன)
26 comments:

 1. முரளி அய்யா மன்னிக்கணுமய்யா.
  பதிவர் திருவிழாவுக்கு வரவேண்டுமென்று ஆசைப்பட்டுத்தான் உங்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிததிருந்தேன். இப்ப... அதே செப்.1ஆம் தேதி திண்டுக்கல்லில் பேரா.குருவம்மா, தமுஎகச தலைவர் ஆர்.எஸ்.மணி இருவருமாக ஏற்பாடு செய்யும் கவிதைப் பயிற்சிமுகாமில் முதல்வகுப்பை நான்தான் எடுக்கவேண்டும் என்று அன்புக்கட்டளை. பதிவர் திருவிழாச் சிறகக என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுங்கள். வாய்ப்பிருந்தால் அடுதத சந்திப்பில் பார்ப்போம. மீண்டும் மன்னியுங்கள்.
  அன்புடன்,
  நா.முத்துநிலவன, புதுக்கோட்டை.
  வலை-http://valarumkavithai.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திக்கலாம்.

   Delete
 2. அவசியம் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளேன்
  பதிவில் நித்தம் சந்திப்பவர்களை வருடம் ஒருமுறையேனும்
  நேரில் சந்தித்தல் எத்தனை மகோன்னமானது என்பது
  கடந்த முறை கலந்துகொண்டவன் என்கிற முறையில்
  நானும் அனுபவித்ததுதானே

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார் வருக! வருக! தங்களை மீண்டும் சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி

   Delete
 3. பதிவர் திருவிழா சிறப்புடன் நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நட்ன்ரி ஜெயகுமார் சார். முடிந்தால் வாருங்கள்

   Delete
 4. சந்திப்போம்... இந்த முறை நீண்ட நேரம் உரையாடுவோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 5. தலைவா படத்துக்கும் ஜில்லா படத்துக்கும் விளம்பரத் தட்டி வைக்கிறோம் விளம்பரக் காசு கொடுங்கள் என்று கேட்டுப் பார்க்கலாமோ... இல்லை, வரவிருக்கும் ஏதாவது படங்களுக்கு...

  உண்மைத்தமிழன் சரவணனைக் கேட்டுப் பார்க்கலாமே...உதவுவாரே...

  ReplyDelete
 6. நானும் வருகிறேன். ஆனால் மதியத்திற்கு மேல். எல்லோரையும் சந்திக்க ஆசை.

  ஸ்ரீராம், நீங்கள் வருகிறீர்களா?

  ReplyDelete
 7. முதன் முதலில் வருவதால் எல்லோரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்...

  ReplyDelete
  Replies
  1. வருக எழில்!. நானும் அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

   Delete
 8. நன்று நன்று சகோதரரே!
  உங்கள் வரவேற்பும் பதிவர் கூடும் ஆரவாரமும் எம்மை இங்கிருக்கவிடாது ஓடிவரச் செய்கிறதே...:)

  விழா இனிதே நடைபெற என் இனிய வாழ்த்துக்கள்!

  த ம.4

  ReplyDelete
  Replies
  1. வருக! க்வீலிங் குயின் இளமதி அவர்களே!

   Delete
 9. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. ஒருநாள் நிகழ்ச்சியை தள்ளிவைத்துவிட்டு முத்துநிலவன் வந்தால் நன்றாய் இருக்குமே

  ReplyDelete
 11. சென்னையில் சந்திப்போமுங்க!!

  ReplyDelete
 12. விழா இனிதே நடைபெற என் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. அன்பின் முரளிதரன் - பதிவர் சந்திப்பு - திருவிழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. நான் புக் எல்லாம் பண்ணலீங்க! வித்-அவுட் தான்!

  ReplyDelete
 15. சென்ற வருடத்தை மிஞ்சும் அளவுக்கு சிறப்பா நடத்துங்க.... என்னால் முடிந்தது தூரத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895