என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, November 17, 2013

சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்

     சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப்  போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர்ந்து கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்து ரசிகர்களின் உதடுகள் சச்சின் சச்சின்என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. சச்சின் கோஷம் மைதான வான் வெளியில் நிறைந்திருந்தது. கிரிக்கட் கடவுள் சச்சின் அவதார நோக்கத்தை முடித்துக்கொண்டு கிளம்புவதை பார்க்க பரவசப் பட்டுக் கொண்டிருந்தனர் கிரிக்கெட் பக்தர்கள். அவரை வழியனுப்ப வந்த வி.ஐ.பி.களின் கூட்டம் ரசிகர்களின் கூட்டத்திற்கு இணையாகத் தான் இருந்தது. ஐந்து நாள் நடைபெற வேண்டிய ஆட்டம் மூன்றாவது நாளின் பாதியிலேயே  முடிந்துவிட்டதே என்று ஏங்கியவர்கள் அதிகம்.. சச்சின் சதம் அடிக்காமல் போனாலும் சதத்தை நெருங்கியது ஆறுதலாகவே கொண்டனர். விதம் விதமான பதாகைகள் சச்சின் மீதான அபிமானத்தை பறை சாற்றின. பல நாடுகளை சேர்ந்த முன்னாள் இந்நாள் விளையாட்டு வீரர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து சச்சினை புகழ் மழையில் நனைத்தனர். உலகின் வேறு எந்த விளையாட்டு வீரருக்கும் இப்படி ஒரு பிரிவுபசார விழா நடந்திருக்காது. இனி நடக்கவும் வாய்ப்பில்லை. உலகெங்கும் இருக்கும் புகழ் பெற்ற வீரர்கள் கூட  நாம் இந்தியாவில் பிறந்திருக்கக் கூடாதா ஏன்ற ஏக்கத்தை ஒரு சில நிமிடங்களுக்காவது  ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரிவுபசாரம்.இவ்வளவு பேரின் அன்பும் ஆதரவும் இவருக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது. பலரும் பல விதமாக பட்டியலிட்டுக் காட்டிவிட்டனர். அவரது பெருமைகளை சாதனைகளை. அமைதி அர்ப்பணிப்பு உணர்வு,அளவான(குறைந்த) பேச்சு, திறமை,உழைப்பு, மீண்டெழும் வல்லமை என அவர் வெற்றிக்காரணிகளின் பட்டியலின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். 

     இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றள்ளது என்பதைக் கூட யாரும் பொருட் படுத்தவில்லை.அனைவரின் கண்களும் அவரது அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தன. பரிசளிப்புவிழாவின் இறுதியில் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார் சச்சின். அவர் அநேகமாக அதிக நேரம் பேசியது இதுவாகத் தான் இருக்கும்.  "22 யார்டுகளுக்கு இடையிலான எனது கிரிகெட்ட் பயணம் இன்றோடு முடிந்ததை  என்னால் நம்ப முடியவில்லை" என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கிய சச்சின், தந்தை தனக்கு கொடுத்த சுதந்திரம்,அன்னையின் கவனம்,தமையனின் தியாகம் , குழந்தைகளின் ஒத்துழைப்பு,நண்பர்கள், பயிற்சியாளர்கள், உறவினர்கள்,சக வீரர்கள், என்று ஒருவரையும் விடாமால் குறிப்பிட்டு நன்றி கூறியது கூட்டத்தினரை நெகிழ வைத்தது. தான் பூச்சியம் அடித்தாலும் சென்சுரி அடித்தாலும் இதுநாள் வரை  ரசிகர்கள் காட்டிய அன்பும் ஆதரவும், சச்சின்! சச்சின்! என்று நீங்கள்(ரசிகர்கள்)  அழைக்கும் குரல்  என் கடைசி மூச்சு வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தன் நன்றிகளை நெகிழ்ச்சியோடு கூறி முடித்தார்.  மைதானத்தின் மையத்திற்கு சென்று மண்ணை தொட்டு வணங்கினார். கூட்டம் ஆர்பரித்தது. வீரர்கள் அவரை தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தனர். இனி சச்சினை மைதானங்களில் காண முடியாது என்றாலும் ரசிகர்களின் மனதில் அவர் என்றும் ஆட்சி செய்வார் என்பதில் ஐயமில்லை.

    சச்சின் விடை  பெற்ற சிறிது நேரத்தில் அந்த செய்தி வெளியானது. ஆம். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது . விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா வழங்கப் படுவது இல்லை. சமீபத்தில்தான்  பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டு வீர்களுக்கும் வழங்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்ப்பட்டது. கடந்த ஆண்டே சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.அப்போது ஹாக்கி வீரர் தியான் சந்துக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் யாருக்கும் பாரத ரத்னா வழங்கப் படவில்லை. அண்ணா அசாரே போன்றவர்கள் கூட சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க ஆதரவு தெரிவித்தனர். இப்போது பாரதரத்னா சச்சின் மற்றும் விஞ்ஞானி சி.என்.ராவ் இருவருக்கும் வழங்கப் பட உள்ளது. சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குவதில் அரசியல் உள்ளது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் சச்சினுக்கு எதிரான கருத்தை கூற யாருக்கும் துணிவில்லை. முன்னால் கேப்டன் கங்குலி(பாவம்) மட்டும் விசுவநாதன் ஆனந்துக்கும் பாரத ரத்னா வழங்கவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

   உயரிய விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு இப்போது தர வேண்டியதில்லை என்றே நானும் நினைத்தேன். அப்படி மிக உயர்ந்த  தியாகம் நாட்டுக்காக செய்தாரா? என்ற சிந்தனையும் ஏற்பட்டது..மேலும் தற்போது எம்பியாக உள்ள சச்சின் பிற்காலத்தில் அமைச்சராகலாம்.  பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் கொடுக்கப்பட்ட விருதுக்கு மதிப்பு இருக்குமா? . அதனால் பாரத ரத்னா விருது ஒருவருக்கு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு அல்லது இறந்தபின் விருது வழங்குவதே சிறந்தது என்பதும் என் எண்ணமாக இருந்தது, கடந்த ஆண்டே இது பற்றிய பதிவு ஒன்றை எழுதினேன். நாட்டுக்காகவும் மக்களுக்குக்காகவும் சேவை செய்தவர்களுக்குத்தான் இந்த விருது வழங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன்.ஆனால் இலக்கியம்,கலை,அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றிற்கு வழங்கலாம் என்றுவிதிகள் இடமளிக்கின்றன. இப்போது விளையாட்டும் சேர்க்கப் பட்டிருக்கிறது. அவசரப் பட்டு சச்சினுக்கு வழங்கப் பட்டதாக தோன்றினாலும்  அதற்குரியவராக இன்னும் மெருகேற்றிக் கொள்ளும் வல்லமை சச்சினுக்கு உண்டென்பதால் மனமார வாழ்த்துவோம்.சச்சினைப் பொருத்தவரை பல  விருதுகளில் இதுவும் ஒன்று.

நன்றாக கவனித்தால்  விருது முற்றிலும்  பெருமைக்குரியதா என்ற ஐயமும் ஏற்படும். அரசியல் கலந்திருப்பதும் அதற்கு காரணம் இந்தியக் குடியரசின்  முன்னுரிமை வரிசையில் இந்த விருது பெற்றோர்  ஏழாவது இடத்தை பெறுகிறார்கள் 


பாரத ரத்னா சில சுவாரசியங்கள்
 1.  பாரத ரத்னா விருதுடன் பரிசுத் தொகை ஏதும் வழங்கப் படமாட்டாது 
 2.  வேறு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது 
 3. முதன்முதலில் விருது தொடங்கப் பட்டபோது(1954)  இறந்தவர்களுக்கு விருது வழங்க பரிசீலிக்கப் படவில்லை. பின்னரே இறந்தோர்க்கும் விருது வழங்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப் பட்டது 
 4. காந்தியடிகளுக்கு இந்த விருது வழங்கப் படவில்லை.  (அவருக்கு கொடுப்பதால் என்ன லாபம் என்கிறீர்களா?)
 5. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு இவ்விருது வழங்கப் பட்டு யாரோ ஒரு பிரகஸ்பதி தொடுத்த வழக்காலும் சட்ட சிக்கல் காரணமாகவும்  பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
 6. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஜூலை 1977 இல இருந்து ஜனவரி 1980 வரை இவ்விருது தற்காலிகமாக நீக்கப் பட்டது 
 7. இவ்விருதை பெறுபவர்கள் சட்டப்படி இவ்விருதை தன் பெயரின் முன்பாகவோ பின்பாகவோ சேர்க்கக் கூடாது .(உதாரணத்திற்கு பாரத ரத்னா சச்சின் என்று போட்டுக் கொள்ளக் கூடாது) தன் சுய விவரத்தில் வேண்டுமானால் விருது பெற்றதை குறிப்பிடலாம்.
 8. இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு(அவர் அமைச்காராக இருந்த காலத்தில்) பாரத ரத்னா விருது வழங்க அரசு முன் வந்தபோது மறுத்து விட்டார். அவரது இறப்புக்குப் பின் விருது வழங்கப் பட்டது

ஓய்வுக்குப் பின்  திறமை இருந்தும் வசதி இல்லாத கிரிக்கெட் அல்லாத பிற ஆட்டக்காரர்கள், தடகள வீரர்களை கண்டறிந்து இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவ சச்சின் வேண்டும், அதுதான் அவர்மீது அன்பு கொண்டுள்ள, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு செய்யும் கைமாறாக அமையும்.

***************************************************************************************************

கொசுறு:  பாவம் சி என்  ஆர் .ராவ்;  சூரியன் முன் வந்த நட்சத்திரம் போல் ஆனார். பிறிதொரு நேரத்தில் இந்த விருது வழங்கப் பட்டிருந்தால் இவர் பக்கமும் கொஞ்சம் கவனம் திரும்பி இருக்கும்.

*********************************************************************************************
சச்சின்  பற்றி கடந்த ஆண்டு எழுதியது 
சச்சினுக்கு ஒரு கடிதம்.  

35 comments:

 1. எல்லா இடத்திலும் இப்ப அரசியல் காற்றுத்தான்!

  ReplyDelete
 2. இவர் ஒரு விளையாட்டு விரர்தான் இவர் இந்தியாவை காப்பாற்ற வந்த மகான் மாதிரி ஏன் இந்த பரபரப்பு. இந்தியாவில் லூசுங்க நிறைய இருக்காங்க என்பது மும்பை மைதானத்தில் கூடிய கூட்டத்தில் இருந்து தெரிகிறது..... இவர் தன் சம்பாத்தியத்தில் இருந்து மக்களுக்காக அல்லது இந்திய சமுதாயத்திற்காக என்ன செய்து விட்டார் என்று இவருக்கு இப்படி பாராட்டுரை.. பாரத ரத்னா விருது....


  நானும் இனிமே பாரத ரத்னா விருது எல்லோருக்கும் தரப் போறேன்

  ReplyDelete
 3. பாரத் ரத்னா விருது குறித்த தங்களது கருத்துதான் எனக்கும் ஐயா.நாட்டின் மிக உயரிய விருதுகளில் அரசியல் கலக்கப்படாமல் இருப்பதுதான் அவ்விருதிற்குப் பெருமை என எண்ணுகின்றேன்.
  விளையாட்டில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தமைக்காக சச்சினை வாழ்த்துவோம்

  ReplyDelete
 4. தேர்தல் கணக்கு அல்ல என நம்புவோம்

  ReplyDelete
 5. வணக்கம்
  முரளி(அண்ணா)

  பாரத ரத்னா சில சுவாரசியங்கள் மிக அருமையாக உள்ளது ஒரு சாதனை மிக்க விளையாட்டு வீரன் அவரைஅனைவரும் வாழ்த்துங்கள் பதிவு அருமை..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. பாரத் ரத்னா விருது குறித்த
  விரிவான அருமையான அலசல் அருமை
  இதுவரை அரசியல் கலக்காமல் இருந்த
  இதுபோன்ற விருதுகளில் இனி அது
  கலக்கப்படலாம் என்கிற அச்சம் கொஞ்சம்
  எழத்தான் செய்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. //பாரத ரத்னா சில சுவாரசியங்கள்// அறியத்தந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 8. //பாரத ரத்னா விருதுடன் பரிசுத் தொகை ஏதும் வழங்கப் படமாட்டாது
  வேறு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது. இவ்விருதை தன் பெயரின் முன்பாகவோ பின்பாகவோ சேர்க்கக் கூடாது//

  அப்புறம் எதுக்குய்யா அவார்டு?

  ReplyDelete
 9. உண்மையில் சச்சினை ‘கிரிக்கெட் கடவுள்’ என்று கொண்டாடுவதிலேயே எனக்கு உடன்பாடில்லை. திறமையான ஒரு விளையாட்டு வீரரை மிக அதிக உயரத்தில் இப்படித் தூக்கி வைத்து ஆடுவது சரியாக என் மனதுக்குப் படவில்லை. பாரத ரத்னா விருதும் அப்படித்தான்... இதன் பின்னணியில் இருக்கும் அரசியலை சாதாரண பொதுஜனம் கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

  ReplyDelete
 10. எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவு இருந்தால் காலம் அவர்களை மறக்காது... மற்றபடி விருது எல்லாம் ஜுஜுபி...!

  ReplyDelete
 11. எங்கும் எதிலும் அரசியல்! அரசியலே ஒரு விளையாட்டுதானே முரளி!

  ReplyDelete
 12. ஒரு விஞ்ஞானிக்கு கொடுத்த அதே நேரத்தில் ஒரு விளையாட்டு வீரருக்கும் கொடுத்து அந்த விருதின் தரத்தை சற்று குறைத்துவிட்டனர் என்பது என்னுடைய கருத்து. ஆனால் விளையாட்டுக்கு என்று ஒரு உயரிய விருது இருந்தால் அதை பெறும் தகுதி சச்சினுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. நாவடக்கம், தன்னடக்கம் கொண்ட சிறந்த சாதனையாளர் அவர்.

  ReplyDelete
 13. நமக்கு கிரிக்கெட் பற்றி ஒன்னுமே தெரியாது, மும்பையில் அவர் உணவு விடுதியில் போயி வயிறார குடும்பத்தோடு சாப்பிடுவதோடு சரி.

  சச்சின் புகழ் இன்னும் வளரட்டும்...

  ReplyDelete
 14. Just Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Rupan-Diwali-Special-Poetry-Results.html#more

  ReplyDelete
 15. தங்கள் ஆய்வுரையை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 16. விசுவநாதன் ஆனந்துக்கு முதலில் வழங்கி இருக்க வேண்டும் ,தனி மனித விளையாட்டில் சாதனை புரிந்தது அவரது +பாயின்ட் !
  விஞ்ஞானியை விட ஒரு விளையாட்டு வீரர் அதிகமாய் போற்றப் புகழப் படுவது நமது நாட்டின் சாபக்கேடு !
  த.ம 6

  ReplyDelete
 17. விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்குவதில் எனக்கும் உடன்பாடு இல்லை, எல்லாம் அரசியல்.

  ReplyDelete
 18. \\அப்படி மிக உயர்ந்த தியாகம் நாட்டுக்காக செய்தாரா? என்ற சிந்தனையும் ஏற்பட்டது..\\ பரிசாக கிடைத்த காருக்கு வரியை ஏய்க்க, தன்னை ஒரு தொழில் ரீதியான நடிகன் என்றும் தனது முதன்மை தொழில் விளம்பரங்களில் நடிப்பது என்றும் அறிவித்தது, பெப்சி விளம்பரத்தில் நடித்தது, இதற்கெல்லாம் பாரத ரத்னா கொடுக்கலாம்.


  \\பாவம் சி என் ஆர் .ராவ்; சூரியன் முன் வந்த நட்சத்திரம் போல் ஆனார்.\\ இந்த நாடு உருப்படாததற்கு காரணம் புரிந்திருக்கும்............

  ReplyDelete
 19. \\பாரத ரத்னா சில சுவாரசியங்கள்\\ இதெல்லாம் படிச்சா ஒன்னு தெளிவா தெரியுது, பாரத ரத்னா குடுத்தாங்கன்னு பேப்பரில் செய்தி வரும், மத்தபடி ஒரு ரயில்வே ரிசர்வேஷன் கூட பண்ண முடியாது.............ஹி ..............ஹி ...........
  ...ஹி ...........

  ReplyDelete
  Replies
  1. ஹி ..............ஹி ...........
   ...ஹி ...........ஹி ..............ஹி ...........
   ...ஹி ...........ஹி ..............ஹி ...........
   ...ஹி ...........ஹி ..............ஹி ...........
   ...ஹி ...........ஹி ..............ஹி ...........
   ...ஹி ...........ஹி ..............ஹி ...........
   ...ஹி ...........

   Delete
 20. சச்சின் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லியிருப்பது சிறப்பு

  ReplyDelete
 21. சச்சினுக்கு அவரது ஓய்வின்போது கிடைக்கும் பெருமை முற்றிலும் சரியானது. அவ்வளவு பெருமைக்கும் அவரே சொந்தக்காரர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், அதுவேறு பாரதரத்னா விருதுப் பெருமை வேறு. இரண்டையும் போடடுக் குழப்பியது அரசியல்தான். நீங்களாவது உடைத்துச் சொல்வீர்கள் என்று பார்த்தால் நீங்களும் ஏன் இப்படிப் பூசி மெழுகி... சச்சின் திறமைக்கு நிறையவே பெயரை மட்டுமல்ல பணமும் சம்பாதித்து விட்டார். ஆடிப் பெற்ற தொகையைவிடவும் விளம்பரததில் அதிகம் சம்பாதித்தவர் அவர்தான். அதுஒன்றே அவருக்கு பாரதரத்னா பொருந்தாது என்பதற்கான முதற்சான்று. குழப்புவது நம் அரசியல் வாதிகளுக்குப் புதிதல்லவே! பதிவுக்குப் பாராட்டுகள் முரளி.

  ReplyDelete
  Replies
  1. சச்சினுக்கு பாரத ரத்னா கொடுத்தாலும் அவர் மறுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே சச்சினுக்கு ஒரு கடிதம் என்ற பதிவில் எழுதி இருந்தேன் ஐயா!மேலும் பாரத ரத்னா விருதுக்கு சேவை மக்கள்செய்திருக்க வேண்டும் விதியும் இல்லை.
   சச்சினுக்கு ஒரு கடிதம்.

   Delete
  2. நன்றி நண்பர் முரளி, முன்னமே சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தே என் கருத்தும். பாராட்டுகள். மீண்டும் நன்றி

   Delete
 22. ஜெயதேவ் தாஸ், அவர்.உன்மைகள் சொல்வது எல்லாம் உண்மை.
  அவர்கள் பின்னூட்டங்கள் தான் என் பதில்!

  இந்தியா என்றும் வல்லரசு ஆகமுடியாது! ஏன் ஆகவே முடியாது! ஏன்?
  முதலில் நல்லரசு ஆகுங்கள்--அல்லது நல்லரசு ஆக முயற்சி செய்யங்கள்.

  ReplyDelete
 23. என் பார்வையில் உழைப்போடு அதிக அதிர்ஷடமுள்ள மனிதர் இவர்.

  ReplyDelete
 24. வணக்கம் அய்யா,
  தங்கள் பார்வை மிகத் தெளிவு. சச்சினுக்கு பாரதரத்னா முற்றிலும் அரசியல் சார்ந்தது. சச்சினிடமே விளையாடுகிறது அரசியல் போலும். அதற்காக கைமாறாக சச்சினிடம் நிறைய எதிர்பார்க்கிறது அரசியல் என்பது நாடே அறியும். பல சுழல் பந்துகளை சமாளித்த சச்சின் இந்த அரசியல் சுழலில் சிக்காமல் கரியேற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே.

  ReplyDelete
 25. சச்சின் திறமையானவர்.
  பாரத் ரத்னா முழுக்க முழுக்க அரசியல்.

  ReplyDelete
 26. சி.என்.ஆர்.ராவுக்கு இப்போது விருது வழங்கப்படதன் காரணமே சச்சினுக்கு வழங்கியதை நியாயப் படுத்தத்தான்!இங்கு அரசியல் இன்றி விருதுகள் உண்டோ?

  ReplyDelete
 27. அரசியல் முரளிதரன்!

  த.ம. 11

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895