என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 8 நவம்பர், 2013

நீங்கள் ஏழையா?பணக்காரரா?

எ.பா.ப.கு.க- 7
                யார் ஏழைகள்? 
       அவர் ஒரு பெரிய பணக்காரர். தன் ஒரே மகனை செல்லமாக வளர்த்து வந்தார். அவன் கேட்காததையும் வாங்கித் தருவது அவரது பழக்கம். தான் அவனை எவ்வளவு சிறப்பாக வளர்க்கிறோம் என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டுமென்று விரும்பினார். நாம் பணக்காரர்கள். நமக்கு உள்ள வசதிகள் பலருக்கு இல்லை என்பதை மகன் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஏழை கிராம மக்கள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிய வேண்டும். அப்போதுதான் அவன் எவ்வளவுஅதிர்ஷ்டம் செய்தவன் தெரிந்து கொள்வான் 

  எப்படி ஒரு வளமான வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது என்பதை புரிய வைக்க முனைந்தார். அவனை ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றார். அந்த கிராமத்தில் இருந்த ஓர் ஏழைக் குடியானவன் வீட்டில் சில நாட்கள் தங்க ஏற்பாடு செய்து, ஒரு வாரம் அவர்களோடு பழகி அவர்கள் அன்றாட வாழ்க்கையை கவனித்து வருமாறு பணித்துவிட்டு சென்றார்.

அந்த சிறுவனும் அவர்களுடன் தங்கி அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றும், அவர்களோடு உண்டும் உறங்கியும் வந்தான். சிறிது நாட்களுக்குப் பின் தந்தை மீண்டும் வந்து மகனை அழைத்து சென்றார்.


திரும்பும் வழியில் மகனைப் பார்த்து அப்பா கேட்டார், "இந்த அனுபவம் எப்படி இருந்தது?"

”மிகவும் நன்றாக இருந்தது அப்பா?” என்றான் மகன்

“ஏழைகள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை கவனித்தாயா? பணக்காரர்களாகிய நம்முடைய வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பாரத்தாயா? நீ கவனித்த விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்" என்றார் தந்தை

மகன் சொல்ல ஆரம்பித்தான்
 "அப்பா நம்மிடம் ஒரே ஒரு நாய்தான் இருக்கிறது. அவர்களிடமோ நான்கைந்து நாய்கள் இருக்கிறது,

விடியற்காலையில் நாம் அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கோ சேவல் கூவுவது அலாரமாக இருக்கிறது

நமக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக் கூட யார் என்று தெரியாது. அவர்களுக்கோ ஊரில் உள்ள அனைவரையும் தெரிந்திருக்கிறது.

நம் வீட்டு நீச்சல் குளம் சின்னதாக இருக்கிறது. அவர்களுடைய ஆறு ரொம்ப பெரிதாக இருக்கிறது. அது எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று கூட தெரியவில்லை.

நம் வீட்டு தோட்டத்தில் வெளி நாட்டு விளக்குகளை வைத்து அலங்கரித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் வயலில் நட்சத்திரங்கள் மின்னுகிறது.

நமக்கு பணிவிடை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களோ மற்றவர்களுக்கு பணிவிடை செய்கிறார்கள்.

நாம் கடையில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குகிறோம். அவர்களோ தங்கள் உணவுப் பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.

இங்கு காசு கொடுத்தால்தான் நாம் சொல்வதை கேட்கிறார்கள். அங்கு ஆடு மாடுகள் கூட அவர்கள் பேச்சைக் கேட்கின்றன

ஏ.சி இல்லாவிட்டால் நம்மால் தூங்க முடியவில்லை. அவர்கள் மின்சாரம் இல்லாவிட்டால் கூட நிம்மதியாக தூங்குகிறார்கள்.

இங்கு முன்னரே அறிந்தவராக இருந்தாலும் முகம் கொடுத்து பேச மறுக்கிறோம். அங்கோ முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் பல நாள் பழகியவர்கள் போல் பேசுகிறார்கள்.

நாம் சும்மா இருப்பதுபோல் தோன்று கிறது. அவர்களோ எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.............”

என்று சொல்லிக் கொண்டே போக தந்தை வாயடைத்து நின்றார்.

மேலும் அவன் தந்தையைப் பார்த்து, "அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்" என்றான்

"என்ன! சொல் மகனே!" -தந்தை 

  முகத்தில் ஐயம் நீங்காமல் அந்த சிறுவன் கேட்டான், "உண்மையில் நாம் பணக்காரர்கள்தானா?

              ******************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?   எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
 
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! 

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை

 எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!

28 கருத்துகள்:

  1. ஏற்கெனவே படித்திருக்கிறேன். எவ்வளவு பாசிட்டிவ் பையன், இல்லை?

    பதிலளிநீக்கு
  2. \\அவர்களுடைய ஆறு ரொம்ப பெரிதாக இருக்கிறது. அது எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது என்று கூட தெரியவில்லை.\\ இன்னைக்கு தமிழ் நாட்டில் ஆறுகள் இருக்கு, ஆனா அதில் மணலும் தண்ணீரும் தான் இல்லை...........

    பதிலளிநீக்கு
  3. அர்த்தமுள்ள விடயங்கள் அருமை...!

    பகிர்வுக்கு நன்றி...! தொடரவாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு
    இறுதியில் அவர் மகன் எழுப்பும்
    கேள்வி ஆயிரம் அர்த்தமுடையது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கேட்டானே கேள்வி! கன்னத்தில் அறைவது போல்!

    பதிலளிநீக்கு
  6. vanakam sir. nalla irukkuringala. ungal pathivukal padithalum comment panna mudiyarathu illa. intha kadhai rompa touch paniyathala comment pannuren sir. antha paiyanin pechu ethirparkkavillai.. kadhai arumai...

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் தேவைகளை தேடி ஓடுபவர்தாம் ஏழை...!

    பதிலளிநீக்கு
  8. குழந்தை மனம் வேண்டும். பார்த்தது பார்த்தபடி, உணர்ந்தது உணர்ந்தபடி. அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ''.. "உண்மையில் நாம் பணக்காரர்கள்தானா?..''
    good Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  10. ஏற்கனவே படித்த ஒரு கதை என்றாலும் உண்மையின் நிதர்சனத்தைக் கூறும் கதை எத்தனைமுறை படித்தாலும் சலிப்பதுல்லை

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    முரளி(அண்ணா)

    நன்றாக சிந்தித்து பதிவை எழுதியுள்ளிர்கள் ஒரு பணக்காரனுக்கும் ஒரு ஏழைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.... கடசியில் கேட்கும் வினா அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. ஏற்கனவே முகநூலில் படித்து இருக்கிறேன்! மீண்டும் படித்து ரசித்தேன்! அருமையானதொரு கதை! தேடிப்பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்றாலும் உங்கள் எழுத்து நடையில் படிப்பது வித்தியாசமாக இருக்கிறது,. பணக்காரர்கள் பணத்தை அளவிட்டு தாங்கள் பெரியவர்கள் என்று நினைக்கிறார்கள் ஏழைகளோ குணத்தை அளவிட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என நினைக்கின்றனர். பணக்காரனுக்கு கிடைக்கும் மதிப்பு அவன் பணத்தினால் மட்டுமே ஆனால் ஏழைக்கு கிடைக்கும் மதிப்பு அவன் குணத்தினாலேதான்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் அய்யா.
    அருமையான அற்புதமான படைப்பு. இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய வாழ்க்கை பாடம். அழகான முற்போக்கு சிந்தனையைத் தங்கள் நடையில் தந்தது சிறப்பு. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு நீதிக்கதை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. சிந்திக்க வைக்கும் பகிர்வு

    பதிலளிநீக்கு
  17. நல்லதொரு பகிர்வு.
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு விசயத்தில் ஏழைதான்!
    நல்ல கதை

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான பகிர்வு முரளிதரன்.... ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. சிறுவன் சொன்னது மனதால் ஏழைகள் தானே .இப்படித்தான் இன்றைய வாழ்க்கை அமைந்து விட்டது வருத்தமான விஷயமே.

    பதிலளிநீக்கு
  21. நகர வாழ்க்கை நரக வாழ்க்கை ! கிராம வாழ்க்கை சுகாதாரமான வாழ்க்கை ! நம்மிடம் இது இல்லை என்ற எண்ணமே ஏழ்மையின் வெளிப்பாடு .

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895