என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 15 நவம்பர், 2013

ஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்?

குழந்தைகளின்  மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
இரண்டு மாறான உதாரணங்கள்  பார்ப்போம்.

  முதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரிந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர்களும் இருக்கலாம். பாசம் பொங்கும் கண்களுடன் அன்னை  மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூபமாக காட்சி அளிக்கும் இந்த ஓவியத்தை பார்த்தால் பாராட்டத் தோன்றாமல் இருக்குமா? ஆனால் பேரைக் கேட்டால் பாராட்ட மனம் வராது.

     சிறு  வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் விரும்பினான். ஆனால் அவன் அப்பாவோ  அவனது திறமையை அறிந்தவராக இல்லை. அவனை பொறியியல் படிக்க வற்புறுத்தினார். சிறிய தவறுகளுக்குக் கூட அவனை கடுமையாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தெருவில் நிறுத்தி பெல்ட்டால் மகனை அடிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. தந்தையின் மீது தீராத வெறுப்பு கொண்டான் அந்த சிறுவன். தந்தை இறந்த பின் அவன் தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்தான். ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட முயன்றார் அவரது தாய். ஆனால் அதிலும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.இரண்டாவது முறை முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது. (அந்தக் காலத்திலுமா நுழைவுத் தேர்வு) அவனுக்கு ஓவியம் வராது ஆனால் ஓவியத்தை விட Architecture வேண்டுமானால் படிக்கலாம் என்றனர். பிடிக்காத பள்ளிக்கே மீண்டும் செல்ல வேண்டி இருந்தது. இப்படி விருப்பப் பட்டது எதுவும் நடக்காமல் மன சிதைவுக்கு ஆளானான் அந்த சிறுவன். மேலுள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன்தான் பின்னாளில் இலட்சகணக்கான பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடால்ப் ஹிட்லர். 


தந்தையின் கொடுமை,பள்ளியின் கண்டிப்பு,ஓவியத் தேர்வில் தோல்வி போன்றவை ஹிட்லரை இரக்கமற்ற மனிதனாக மாற்றிஇருக்கக் கூடும்.  ஹிட்லர்கள் தானாக உருவாவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் . ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவனது வாழ்க்கையே திசை மாறி இருக்கலாம். ஏன் வரலாறே ஒருவேளை மாறி இருக்கலாம்.

  இதற்குநேர்  மாறாக இன்னொரு உதாரணம் பார்க்கலாம். சர்ச்சுக்கு வந்த அந்த சிறுவனின் வயது எட்டு அல்லது  ஒன்பது  வயது இருக்கலாம் ஒருநாள் பாதிரியார் அவனை ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்து வருமாறு கூறுகிறார். கோப்பையை கொண்டு வரும்போது கவனக் குறைவினால் கை தவறி கீழே போட்டு விடுகிறான். அது உடைந்து சிதறி விடுகிறது.பையனுக்கோ பயம் வந்து விட்டது பாதிரியார் தன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டப் போகிறாரோ?அல்லது அடிப்பாரோ என்று நடுங்குகிறான். கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட பாதிரியார் திரும்பிப் பார்க்கிறார். அடடா குட்டிப் பையா! கண்ணாடி கோப்பையை கை தவற விட்டு விட்டாயா? உடைந்து விட்டதே? கவனமாக இருக்கவேண்டாமா? காலில் குத்தி விட்டால் ஆபத்தாயிற்றே" என்று சொல்லிக் கொண்டே கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்த ஆரம்பித்து விட்டார்.

பையனால் இதை நம்ப முடியவில்லை. 'ஃபாதர் ஏன் தன்னை திட்டவில்லை? என்பது அவன் மனத்தில் எழுந்த கேள்வி .நெடு நேரம் அவனுக்கு அது உறுத்தியது. யோசிக்க யோசிக்க அவனுக்கு தெளிவு கிடைத்தது. அவன் தவறு செய்தான்.ஆனால் ஃபாதர் அவனை மன்னித்து விட்டார். தவறு எல்லோரும் செய்வார்கள். பெரியவர்கள் அதை மன்னித்து விடுவார்கள். இதுதான் அவனுக்கு தோன்றிய விடை. இதுதான் பிற்காலத்தில் அந்த சிறுவன் உலகம் வணங்கும் மனிதராக உருவாக காரணமாக அமைந்தது. அவர் பிற்காலத்தில் யாருடைய தவறையும் பொருட்படுத்தியதில்லை. அவரை கொல்ல ஒருவன் முயற்சி செய்தான். ஆனால் அதில் இருந்து நூலிழையில் தப்பி விட்டார். கொலை செய்ய முயன்றவனை கைது செய்து விட்டனர்.ஆனால் அவரோ  தான் மன்னித்ததோடு அவனை மன்னித்து விடுமாறு அரசாங்கத்தையும் கேட்டுக கொண்டார். அதுமட்டுமல்ல சிறைச் சாலைக்கு சென்று அவனை நேரில் சந்தித்து அவன் நன்மைக்காக பிரார்த்தனையும் செய்தார். அவர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் அவர்தான் இரண்டாம் போப் ஜான் பால். 


*********************************************************************************
குறிப்பு: குழந்தைகள் தினத்தன்று வெளியிட நினைத்தேன். உடல் நலமின்மையால் இன்றுதான் முடிந்தது
*********************************************************************************
படித்து விட்டீர்களா?
யார் ஏழை?


30 கருத்துகள்:

 1. சகோதரருக்கு வணக்கம்.
  எல்லா குழந்தைகளும் நல்லக்குழந்தைகள் தான். வளர்ப்பிலும் சூழ்நிலையிலும் அவர்கள் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் தீர்மானிக்கப் படுகிறார்கள். ஹிடலர்க்கு மட்டும் ஓவியக்கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் நிச்சயம் வரலாறு மாறியிருக்கும். கமல் சொல்வது போல் மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கிறவன் பெரிய மனிதன் என்பது போப்பிற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அழகான சிந்தனை. சொல்லி வந்த விதம் நலம். பகிர்வுக்கு நன்றி..
  உடல் நலத்தில் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்ளங்கள் சகோதரர்.

  பதிலளிநீக்கு
 2. முரளி,

  //குறிப்பு: குழந்தைகள் தினத்தன்று வெளியிட நினைத்தேன். உடல் நலமின்மையால் இன்றுதான் முடிந்தது //

  பதிவ விடுங்க , இது என்னா இன்னும் சின்ஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் போல:-))


  பதிவ நாட்கணக்கு வச்சு போடனும்னு போகிற அளவுக்கு ...தீவிரப்பதிவராக இருந்து என்னாக போகுது அவ்வ்?

  உடம்பு,மனசு , இத்யாதிலாம் போகத்தான் பதிவுக்கு மேட்டர் தேத்தனும் அவ்வ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவ நாட்கணக்கு வச்சு போடனும்னு போகிற அளவுக்கு ...தீவிரப்பதிவராக இருந்து என்னாக போகுது அவ்வ்?

   உடம்பு,மனசு , இத்யாதிலாம் போகத்தான் பதிவுக்கு மேட்டர் தேத்தனும் அவ்வ்!//கரெக்டு

   நீக்கு
 3. ஹிட்லர் மட்டுமல்ல பின்லேடன் கூட மிக மென்மையான ஆளாகத்தான் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள் அவர்களை அப்படியே திருப்பி போட்டு இருக்கின்றன

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  முரளி(அண்ணா)

  அருமையான தலைப்பு அதற்கு எடுத்துக்காட்டாக உலகம் மதிக்கும் மா மனிதனின் குழந்தை வரலாறு நல்ல எடுத்துக்காட்டான பதிவாக அமைந்துள்ளது..பிள்ளைகளின் விரும்பும் நல்ல விடயங்களுக்கு தாய் தந்தையர் ஒத்தாசை புரிய வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லிய விதம் அருமை.....வாழ்த்துக்கள்
  உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்......

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. // மேலுள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன்தான் பின்னாளில் இலட்சகணக்கான பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடால்ப் ஹிட்லர். //

  .ஆரம்பத்திலிருந்தே சஸ்பென்ஸில் தொடங்கி கல்லுக்குள் தேரை இருப்பதைக் காட்டி இருக்கிறீர்கள். நான் இந்த தகவலையும் ஹிட்லர் வரைந்த புகைப் படத்தினையும் பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. ஹிட்லர் மிகச் சிறந்த ஓவியர் என்று படித்திருக்கின்றேன். ஆனால் அவர் கட்டிடங்களை வரைவதில்தான் ஆர்வம் காட்சியதாக படித்த நினைவு. ஆனால் நீங்கள் காட்சிபடுத்தியிருக்கும் படம் அருமையாக, ஹிட்லரின் மறுபக்கத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.இரண்டாம் ஜான் பால் பற்றிய செய்தியும் அருமை ஐயா.
  இருவேறு துருவங்களை இணைத்து பகிர்ந்துள்ளீர்கள்.
  அருமை ஐயா மிக்க நன்றி
  உடல் நலனை கவனித்துக் கொள்ளவும் ஐயா

  பதிலளிநீக்கு
 7. நண்பரே ,.இன்றைய குழந்தைகளுக்கு இன்று நடந்துவரும் நிகழ்ந்துவரும் சமூகமே மாற்றத்தைக் கொடுக்கிறது.நல்லவனாகவோ ஒழுக்கமில்லாதவனாகவோ மாற்றுகிறது.தாய் தகப்பனைவிட சமூகமே பொறுப்பாகிறது.

  பதிலளிநீக்கு
 8. சம்பவங்கள் தரும் அனுபவங்கள் செதுக்கும் சிந்தனைகளே மனிதர்களை உருவாக்குகின்றன. நல்லவர் கெட்டவர் எல்லாம் அவரால் பயன் பெற்றோருக்கும் பாதிப்படைந்தோருக்குமான கணிப்பைப் பொறுத்தது, சிறு வயதில் ஏற்படும் ரணங்கள் வலிகள் பெரு வயதில் பன்மடங்கு பெருகி வெளிப்படும். ஒவ்வொரு குழந்தையும் எல்லா மகிழ்ச்சிகளைப் பெற்று நல்லவராய் வளர உரிமை உள்ளவர்களே, ஆனால் அவ் உரிமையை நாமும். சமூகம் கொடுக்கின்றனவா?!

  குழந்தைகள் பாலியல் வன்முறையில், சிறுமிகள் பாலியல் தொழிலில், வீட்டு வேலைகளில், சிறுவர்கள் தொழிற்சாலைகளில், கடைகளில், மேலும் பலர் சாலையில் வறுமையில் கல்வியின்றி, உறைவிடமின்றி உழலும் மாபெருந் தேசத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களுக்கும் மட்டும் பஞ்சமில்லை.

  பதிலளிநீக்கு
 9. சில சமயம் ஒரே குடும்பத்தில் ஒரே மாதிரி சூழ்நிலையில் வளர்க்கப் படும் குழந்தைகள் வேறுவேறு குணாதிசயங்களை பின்னர் பெருகின்றன. ஏன்? குழந்தைகள் பிறக்கும்போதே தலையெழுத்தும் தீர்மானிக்கப் படுகிறது. ஹிட்லர் வரப்போவது, அவர் என்ன செய்வார் என்பது பற்றி வேதங்களில் சொல்லப் பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 10. ஹிட்லர் + இரண்டாம் ஜான் பால் பற்றிய தகவல்களுக்கு நன்றி... (சில நாட்களாக கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை....)

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவை எந்த தினத்தில் எழுதினால் என்ன? நல்லதொரு பதிவு.

  பதிலளிநீக்கு
 12. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...! :)))

  பதிலளிநீக்கு
 13. சரியாக சொன்னீர்கள். ஒருவருடைய வளர்ப்பு எப்படியோ அப்படித்தான் இருக்கும் அவனுடைய குணநலன்களும்.

  பதிலளிநீக்கு
 14. குழந்தைகளின் குணநலன்களின் அடிப்படையை அருமையாக விளக்கிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 15. அருமை அய்யா வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. ஹிட்லரை பற்றிய தகவல் கேள்விப்பட்டுள்ளேன்! போப் ஜான் பால் பற்றியது எனக்கு புதிது! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. ஆனால் குழந்தைகள் விசயத்தில் தற்போது எந்த அவசர முடிவுக்கும் வந்துடாதீங்க. பயங்கர கில்லாடி ரங்காவாக இருக்குறாங்க. அடிப்படையில் கணவன் மனைவில் அவர்கள் முன்னால் சண்டை பிடித்துக் கொள்ளாமல் அவர்களுக்கு தொந்தரவாக இல்லாமலே இருந்தால் போதுமானது.

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு.பலருக்கு உதவட்டும்.
  என்ன அவ்வளவு நேர நெருக்கடியா!
  இடையிடையே வந்தாலும்
  மொத்தமாய்க் காணவில்லையே! நமது பக்கம்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 19. அருமையான பதிவு முரளி.

  //குழந்தைகள் பிறக்கும்போதே தலையெழுத்தும் தீர்மானிக்கப் படுகிறது.//

  தாஸ்,
  ஒரு குழந்தை பிறக்கும்போதே இன்ன நாள் இன்னாரை கொலை செய்வான் என்று கடவுள் அந்த குழந்தையின் தலையில் எழுதி வைத்திருந்தால், அந்த குழந்தை வளர்ந்து கொலை செய்யும் போது, அது அவன் செய்த தவறல்ல, அவனை தவறு செய்யுமாறு எழுதிவைத்த கடவுளின் குற்றம்.

  //ஹிட்லர் வரப்போவது, அவர் என்ன செய்வார் என்பது பற்றி வேதங்களில் சொல்லப் பட்டுள்ளது//

  இலட்சம் பேரை காப்பாற்ற முடியாமல், வெறுமனே சொல்லி வைத்த வேதத்தினால் என்ன பயன்? அப்படிப்பட்ட வேதம் இருந்தால் என்ன? இல்லாமலிருந்தால் என்ன?

  பதிலளிநீக்கு
 20. அருமையான பகிர்வு...
  உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 21. உலகறிவு (வரலாறு) தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்று உங்கள் பதிவையும் அடுத்தவர் கருத்தையும் பார்த்து தெரிந்து கொண்டேன்...

  பதிலளிநீக்கு
 22. உலகறிவு (வரலாறு) தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்று உங்கள் பதிவையும் அடுத்தவர் கருத்தையும் பார்த்து தெரிந்து கொண்டேன்...

  பதிலளிநீக்கு
 23. நல்ல பகிர்வு.... ஹிட்லரின் ஓவியம் வரையும் திறன் பற்றி முன்னர் ஆங்கில இதழ் ஒன்றில் படித்த நினைவு.....

  த.ம. 2

  பதிலளிநீக்கு
 24. ஹிட்லரின் அப்பாவின் அணுகுமுறைகள் ஹிட்லரின் வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தின என்பது உண்மை.ஜெர்மனியின் பெரும் பண்க்கரர்களாக யூதர்கள் இருக்க ஜெர்மானியர்களில் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதில் தான் ஹிட்லருக்கு முதலில் ஜூதர்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டது.முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும் அவர்களும் கம்யூனிஸ்ட்களும் தான் காரணம் என்று கருதினார் ஹிட்லர்.போதாக்குறைக்கு அடோல்ப் ஜோசப் லான்ஸ் என்ற யூத எதிர்ப்பு எழுத்தாளரின் எழுத்துக்களை வாசித்தமையும் அவரின் யூத எதிர்ப்பை கொலைவெறியாக மாற்றுவதில் பங்களித்திருந்தன.ஆனால் உலகம் கண்ட சிறந்த நிர்வாகிகளில் ஹிட்லரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை.
  ஜோன் பால் அவர்கள் பற்றிய தகவல் எனக்கு புதியது.நன்றி

  பதிலளிநீக்கு
 25. இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்...அருமையான பதிவு ஐயா. ஹிட்லரின் இத்தகைய ஓவியத் திறமை நான் அறியாதது.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 26. யார் எப்படி வரவேண்டுமோ அப்படியே உருவெடுப்பார்கள்.நல்ல தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895