பெட்டிக்கடை 5
*********************************************************************************
முந்தைய பெட்டிகடை பதிவுகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
************************************************************************************************
இன்று திரைப்படத் துறையில் பல இளம் இசை
அமைப்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருவதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரகுமான்
தன் முதல் படத்திற்கு இசை அமைக்கும்போது அவரது வயது 25. ஆனால் யுவன் சங்கர்
ராஜா ஜி.வி பிரகாஷ் போன்றோர் அதை விட இளைய வயதில் இசை அமைக்கும் வாய்ப்பு
பெற்றதோடு தங்கள் திறமையையும் நிரூபித்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம்
இசைப் பின்னணி இருந்தது. ஆனால் இசைப் பின்புலம் ஏதுமின்றி, கேள்விஞானம்,
நிறைய ஆர்வம், இடைவிடாத் தேடல்,தொழில்நுட்ப அறிவு இவற்றைப் பயன்படுத்தியும்
தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர் சிலர். முதலில் உதவியாளராகப்
பணிபுரிந்து தெரிந்து கொள்ளவேண்டியவற்றை இணையம் என்னும் துரோணாச்சாரியார்
மூலம் ஏகலைவர்களாக கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு ஒரு
களமாக அமைந்திருக்கிறது. முக நூல் வலைப பூக்கள் ,யூ ட்யூப் முதலியவற்றில்
இவர்கள் திறமையை பார்க்க முடிகிறது. பல சமயங்களில் இவர்களின் திறமை
குடும்பத்தினருக்குக் கூட தாமதமாகத்தான் தெரிய வருகிறது.
அவர்களில்
ஒருவர் கெளதம் .ஒரு புதிய மெட்டை உருவாக்கி பின்னிசை சேர்த்து வரிகளற்ற
பாடலாக கணினியிலேயே உருவாக்கி பதிவு செய்திருக்கிறார். இதற்கு பாடல் எழுதி
விட்டால் ஒரு திரைப்படப் பாடல் கிடைத்து விடும். இதை கேட்டு உங்கள்
கருத்தை கூறலாம். பாடல் வரிகள் தந்தாலும் வரவேற்க தயாராக
இருக்கிறார் கெளதம். சிறந்த இசை அமைப்பாளராக வளர வாழ்த்துவோம்.
|
இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள் கணித மேதை ராமானுஜத்திற்குப் பிறகு கணிதத்தில் உலக அளவில் புகழ் பெற்றவராத் திகழ்ந்தவர் சகுந்தலா தேவி. மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப் படும் இவரது கணித ஆற்றல் அபாரமானது. கடின கணக்கீடுகளை மின்னல் வேகத்தில் சொல்லி அசத்தியவர். எண்கள் இவரிடம் கை கட்டி சேவகம் செய்தன. கணினியை விட வேகமாக செயல்பட்ட இவரது திறமை கண்டு உலகம் வியந்தது. அப்படி என்னதான் இவரது கணித திறமை என்று கேட்கிறார்களா? உதாரணத்திற்கு ஒன்று. நீங்கள் கணிதத்தில் வர்க்க மூலம் பற்றி அறிந்திருக்கக் கூடும். 5 இன் வர்க்கம் 5 x 5 = 25 25 இன் வர்க்க மூலம் 5 இதை 2 ம் படி மூலம் என்றும் கூறலாம்.4 x 4 x 4 = 64. 64 இன் மூன்றாம் படி மூம் 4 . இவரை சோதிக்க டெக்சாசில் உள்ள தெற்கு மெத்தேடிஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் 201 இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதற்கு 23ம் படி மூலத்தை கணக்கிடும்படி கூறினர். சரியாக 50 வினாடிகளில் 546,372,891 என்று சரியான விடை கூறி அசத்தினாராம். இதை சரி பார்க்க Univac 1101 என்ற கணினி பயன்படுத்தப் பட்டது. இதை கணினி கணக்கிட ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டு விடை சரியானது என்று உறுதிப் படுத்தியது. இதற்கான கணக்கீட்டு நிரல்களில் 13000 கட்டளைகள் பயன்படுத்தப் பட்டதாம் . இத்தகைய இந்திய மனித கம்யூட்டரை கௌரவிக்கும் வண்ணம் கூகிள் சகுந்தலா தேவியின் பிறந்த நாளான நவம்பர் 4 அன்றுஅவரது படத்தையும் google என்பதை டிஜிட்டல் எண்கள் வடிவத்தில் தேடல் பேட்டியின் மேல் லோகோவாக அமைத்தது. இவை Doodles என்று அழைக்கப் படுகின்றன. (எச்சரிக்கை: பின்னர் இவரைப் பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கலாம்.) இதே போல் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சார் சிவி ராமனுக்கும் நவம்பர் 7 அன்று கூகுள் சிறப்பு Doodle உருவாக்கி பெருமை சேர்த்தது . |
மனைவியை இப்படியுமா பழி வாங்குவாங்க ?
மனைவியை பழிவாங்கனும்னா நீங்க என்ன செய்வீங்க?உங்களால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றீங்க! அப்படித்தானே! இந்த சின்ன வீடியோ வை பாருங்க(முக நூலில் கிடைச்சது) இதை தயவு செய்து ட்ரை பண்ணி பாக்காதீங்க பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல. |
மாநகராட்சியின் சுராட்சிறுசுறுப்பு
என்னதான் டெங்கு காய்ச்சல் சென்னையில் இல்லை என்று மாநகராட்சி சொன்னாலும் ஆங்காங்கே டெங்குவின் தாக்குதல் இருக்கத்தான் செய்கிறது. எங்கள் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு தொடர்ந்து ஒரு வாரமாக காய்ச்சல். சந்தேகம் வந்து டெஸ்ட் செய்ததில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. ப்ளேட்லேட்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு நான்கைந்து நாட்கள் சிகிச்சை பெற்றதும் சரியானது. உடனே மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க உடனே ஒரு படை கொசுஎதிர்ப்பு ஆயுதங்களுடன் முற்றுகை இட்டது. சரசரவென வீட்டை சுற்றி மருந்து அடித்தனர். . கிணற்றில் மருந்து தெளித்தனர். சுற்றி கொட்டாங்குச்சி பிளாஸ்டிக், டயர் இன்ன பிறவற்றில் நீர்தேங்கி இருக்கிறதா என்று பார்த்து அவற்றை கசிழ்த்துப் போட்டு சுத்தப் படுத்தி விட்டு சென்றனர். கழிவு நீர்க் கால்வாயில் கொசு மருந்து அடித்தனர். கொசு புகை வண்டி வந்து அப்பகுதியி புகையால் நனைத்து விட்டு சென்றது. சுகாதாரத் துறையில் ஆட்கள் வந்து யாருக்கு எப்படி எங்கிருந்து டெங்கு வந்தது என்று விசாரித்து குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர். மாநகராட்சியின் பல்வேறு பணியாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து பலர் கார்ப்பரேஷனில் இருந்து வந்து இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டுச் சென்றனர். மாநகராட்சியின் துரித நடவடிக்கைகள் ஆச்சர்யப் படுத்தியது. சென்னை மாநகராட்சி தன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது
பொது மக்களும் தங்கள் பங்குக்கு சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும். வீடு சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
|
பஞ்ச் கவிதை
ஆதங்கம்
சே!
இந்த அலைபேசி சேவைரொம்ப மோசம். பக்கத்து அறையில் இருக்கும் மனைவியுடன் கூட பேச முடியவில்லை! |
*********************************************************************************
முந்தைய பெட்டிகடை பதிவுகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
************************************************************************************************
பெட்டிக்கடை சரக்குகள்
பதிலளிநீக்குவழக்கம் போல் பயனுள்ளவைகளாகவும்
ருசியுள்ளவைகளாகவும்
குறிப்பாக கணித மேதை குறித்த தகவல்
முதன் முதலாக தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
கடைசியாகக் கொடுத்த கவிதை மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
நீக்கு\\கணித மேதை ராமானுஜத்திற்குப் பிறகு கணிதத்தில் உலக அளவில் புகழ் பெற்றவராத் திகழ்ந்தவர் சகுந்தலா தேவி. \\This is incorrect. You cannot compare Sakuntala with Ramanujam. Whatever Sakuntala did in 50secs a computer may do the same in few minutes as you have mentioned here. But the theorems established by Ramanujam cannot be made by any computer, and human beings themselves are trying to understand his works till to date and few were understood to some extent many them were not understood so far. Ramanujam is a Genius and of course Sakuntala devi is talented but in a different sense.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயதேவ்
நீக்குபெட்டிக்கடையின் சரக்குகள் தரமானதாகவும் புதியனவாகவும் சிறப்பாக இருந்தது! அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குபக்கத்து அறையில் இருக்கும் மனைவிகிட்ட பேசறதுக்கு எதுக்குப்பா அலைபேசி..பெட்டிக்கடை இப்போ டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா மாறிட்டு வருது..அருமையான சரக்குகள்
பதிலளிநீக்குநன்றி பெருமாள்
நீக்குஅந்த அளவுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை சொல்லும் கவிதை.
நீக்குஅருமை ஐயா. கௌதம் இசை கேட்டு மகிழ்ந்தேன். சகுந்தலா தேவிக்கு கூகுள் செய்த மரியாதையும் அருமை. நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சார்
நீக்குகணித மேதை குறித்து விரிவான பதிவை எதிர்பார்க்கின்றேன். கௌதம் இதை அற்புதம். வளர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஜோதிஜி
நீக்குபெட்டிக்கடை வன்னமயமாக கண்களுக்கு குளுமையாக உள்ளது ..வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் css முறையில் படங்களும் இணையுங்கள்
பதிலளிநீக்குநன்றி பரிதி
நீக்குபெட்டிக்கடையின் சரக்குகள் எல்லாம் புதுசாகவே இருக்கிறது. இசையமைப்பாளர் கவுதம் அவர்களுக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். கணித மேதை பற்றிய செய்தி தங்களின் மூலமே அறிந்து கொண்டேன். அது போலவே சென்ற வாரம் சர்.சி.வி. ராமன் அவர்களையும் அவரது கண்டுபிடிப்பையும் வெளியிட்டு கூகுள் நிறுவனம் பெருமை படுத்தியது. மாநாகராட்சியின் சுறுசுறுப்பு எங்களுக்கும் வியக்க வைக்கிறது. அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். அத்தனையும் அருமை. தங்களின் பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குநன்றி பாண்டியன்
நீக்குபெட்டிகடையில் தரமான சரக்குகள் கிடைக்கின்றன... பெட்டிகடை முதலாளிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நன்றி
நீக்குதமிழ்மணம் பதிவுத் தலைப்புகளை மட்டும் மேய்ந்துகொண்டிருந்தேன், ‘பெட்டிக்கடை’ கண்ணில் பட்டதும் பதிவுக்குள் நுழைந்துவிட்டேன்; அனைத்தையும் படித்துச் சுவைத்தேன்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குசரக்கு ரொம்ப தூக்கலா நல்லாவே இருக்கு
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன் சான் சார்
நீக்குபெட்டிக்கடை சரக்குகள் எல்லாம் மிகவும் அருமையாய்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி குமார்
நீக்குசகுந்தலா தேவி, சி.வி.ராமன் டூடுள்கள் இந்தியாவில் மட்டும்தான் தெரியும்...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி பிராபகரன். உண்மையில் இந்தியாவுக்குத்தான் தேவை. ஏனென்றால் இந்தியாவிலும் இவர்களைப் பற்றி அறியாதவர்கள் இருப்பர்
நீக்குஎல்லா தகவல்களும் அருமை. கெளதம் இசை நன்றாக இருந்தது. தகவல்களைப் புதிய முறையில் தந்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துயக்கும் நன்றி
நீக்குசகுந்தலா தேவி பற்றிய தகவல்கள் அருமை... விரிவான பதிவுக்காகக் காத்திருக்கிறேன்....
பதிலளிநீக்குநன்றி ஸ்கூல் பையன்
நீக்குகவுதமின் இசை அருமை. மனைவியை இப்படியா நிந்திப்பது என்ற காணொளி ஏதோ நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட குறும்படம் போலுள்ளது. கடைசியில் வந்த தொலைபேசி துணுக்கும் அருமை... மொத்தத்தில் பெட்டிக்கடை வழக்கம்போலவே சிறப்பு.
பதிலளிநீக்குநகைச்சுவைதான்
நீக்குநன்று !பெட்டிக் கடை ! தரம் மிக்கது!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபெட்டிக்கடையில் எல்லாம் நல்ல பொருட்களாகவே இருக்கு..! சீசன் தொடங்கிவிட்டதும் இனி காய்ச்சல் அச்சங்கள் வேறு... வீட்டை சுத்தமா வச்சிகிட்டா போதாது...பொது மக்கள் தெருவையும் சுத்தமாக வைக்கவேண்டும்... ஆனா மக்கள் பொது இடங்கள் என்றால் எங்கே அக்கறை கொள்கிறார்கள்?
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குபெட்டிகடை தகவல்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்குகௌதம் இசை அருமை.. மற்ற செய்திகளும் நன்றாக இருக்கிறது..
பதிலளிநீக்குநன்றி ஆவி
நீக்குபெட்டிக்கடையில் அனைத்துத்ச் சரக்கு(தகவல்)களும் மிகவும்அருமை!
பதிலளிநீக்குசெல்பேசிக் கவிதை அருமையோ அருமை! கவிஞர் பாலா “நல்லகவிதை தன்னை மறக்க விடாமல் நம்முடன் ஒரு ஞாபக யுத்தம் செய்யும்” என்பார். பதிவுக்கு நன்றி.
கவிதை ரமணி சார்,தாங்கள் போன்ற ஒரு சிலரின் கவனத்தை மட்டுமே ஈர்த்திக்கிறது. நன்றி ஐயா
நீக்குபெட்டிக்கடையில் பகிர்ந்த அனைத்து விஷயங்களுமே அருமை. இளைய இசையமைப்பாளர் கௌதம் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். கவிஞர்களே உங்களுக்கான வாய்ப்பு தந்திருக்கிறார் முரளி - அசத்துங்க!
பதிலளிநீக்கு