என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, October 26, 2016

திருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ


  பாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே! தனி ஊசல் தத்துவம் வானியல் தொலை நோக்கி போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. வாழும் காலத்தில் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை. பழமை வாதிகளிடம்  போராட வேண்டி இருந்து .மத நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் எப்போதும் முரண்பாடு இருந்தே வந்ததுள்ளது அந்த முரண்பாடு கலீலியோவை நிம்மதியாக வாழ விடவில்லை.

   அக்காலத்து வானியல் அறிஞர்களும் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. என்று கூறினர். ஆனால் கோபர் நிகஸ் என்ற வானியல் அறிஞர்  சூரியனை சுற்றித்தான்  கோள்கள் இயங்குகின்றன என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ஆனால் அவர் கருத்தை அவரது சமகாலத்தவர்  ஏற்கவில்லை. ஆனால் அவருக்குப் பின் சில அறிஞர்கள் இக்கருத்தின் உண்மையை புரிந்து கொண்டாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்.

   ஆரம்பத்தில் இருந்தே கலீலியோ சூரிய மையக் கொள்கையை நம்பினார் என்றாலும் வெளியே சொல்லவில்லை. பல காலம் தான் கண்டுபிடித்த தொலை நோக்கி மூலம்  ஆரய்ச்சி செய்து தக்க சான்றுகள் கிடைத்ததும் பகிரங்கமாக கோபர்நிக்கசை ஆதரிக்கத் தொடங்கினார். கோபர் நிக்கசின் கோட்பாட்டைப் பற்றி இத்தாலி மொழியில் எழுதினார். அப்போதைய பல்கலைக் கழகங்கள் அதனை ஏற்கவில்லை எனினும் அவற்றிற்கு வெளியே பரவலான ஆதரவு கிடைத்தது. கலீலியோவின் புகழ் பரவத் தொடங்கியது .இது அரிஸ்டாட்டில் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ள பேராசிரியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.. 'ஒன்னு கூடிட்டாங்கய்யா  ஒன்னு கூடிட்டாங்க' என்ற வடிவேலு சொல்வதை போல பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி கோபர் நிக்கசின் கொள்கை விவிலியத்துக்கு எதிரானது என்று கூறி தடை செய்யும்படி கத்தோலிக்க திருச்சபையிடம் போட்டுக் கொடுத்தனர்.

    இதனால் வருத்தமுற்ற கலீலியோ சமய குருமார்களிடம் இதைப் பற்றிப் பேச ரோமாபுரி சென்றார். அறிவியல் கோட்பாடுகள் பற்றி நமக்கு சொல்வது விவிலியத்தின் நோக்கமல்ல எனவும் அறிவியலோடு விவிலியம் முரண்படும்போது அதனை உருவகமாகக் கொள்வதே வழக்கம் என்று வாதாடிப் பார்த்தார் . காதில் பஞ்சை வைத்துக் கேட்டால் இசை என்ன? இடியோசையாக இருந்தாலும் எப்படிக் கேட்கும்?  கோபர் நிகஸ் கொள்கை பொய்யானது;  பிழையானது என்று அறிவித்தது திருச்சபை . இக்கோட்பாட்டை ஆதரிக்கக் கூடாது என்று கலீலியோவிற்கு ஆணை இட்டது திருச்சபை . கலீலியோவும் வேறு வழியின்றி  பணிந்து போனார் 

   இந்நிலையில் கலீலியோவின் நெடு நாளைய  நண்பர் ஒருவர் போப்பாண்டவர் ஆனார்.கலீலியோவுக்கு  விதித்த தடை உத்தரவை நீக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஆனாலும் அரிஸ்டாட்டில், கோபர்நிகஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளைப் பற்றி விவாதம் செய்கிற நூல் ஒன்றை எழுத அனுமதி பெற்றுத் தந்தார் இரண்டு நிபந்தனைகளுடன். ஒன்று இந்த விவாதத்தில் கலீலியோ எந்தப் பக்கமும் சேரக் கூடாது இரண்டாவது உலகம் எப்படி இயங்குகிறது என்பதை மனிதனால் அறிய முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டும்.
    
     ஏதோ இந்த அளவுக்காவது அனுமதி கிடைத்ததே என்று மகிழ்ந்தார் கலீலியோ. Dialogue Concerning the Two Chief world systems" என்ற நூலை எழுதி முடித்தார். திருச்சபையின் தணிக்கைக்கு அனுப்பட்டு ஒரு வழியாக அனுமதிக்கப் பட்டு நூல் வெளியாகியது . இந்நூலுக்கு எதிர்பாராத வகையில் வரவேற்பு கிட்டியது. கோபர்நிக்கசின் கொள்கை உண்மை என்று ஏற்றுக்  கொள்ளத் தக்க வகையில் நூல் அமைந்துள்ளதாக பலரும் கருதினர். கோபர்நிகசின் சூரிய மையக் கொள்கையை நம்பத் தொடங்கினர் மக்கள்.

   இதன் காரணமாக நூல் எழுத அனுமதி தந்த போப்பாண்டவர் நூலை வெளியிட அனுமதி அளித்தமைக்காக வருத்தப் பட்டதோடு. நண்பர் என்றும் பாராமல் நிபந்தனைகளை மீறியதாக கலீலியோவை திருச்சபை மன்றத்தின் முன் நிறுத்தினார் . இம்முறை கலீலியோவுக்கு ஆயுட்கால தடை விதித்து வீட்டுக் காவலில் வைத்தது  திருச்சபை.  இரண்டாம் முறையாக அடங்கிப் போனார் கலீலியோ 

  கலீலியோ விசுவாசமான கத்தோலிக்கராக தன்னை காட்டிக் கொண்டாலும் அறிவியல் மீது அவர் கொண்ட நம்பிக்கையை கைவிடவில்லை. ஆயுள் முழுதும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டாலும் சும்மா இருக்கவில்லை. தன் இரண்டாம் நூலை எழுதி விட்டார் கலீலியோ. அவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவரது நூலின் கையெழுத்துப் பிரதி ஹாலந்திற்கு கடத்திச் செல்லப் பட்டது. இரு புதிய விஞ்ஞானங்கள் (Two New Sciences) என்ற இந்த் நூல் நவீன இயற்பியலின் தொடக்கமாக அமைந்தது எனலாம். 
விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் மதங்களுடன் போராட வேண்டி இருந்தது என்பதற்கு கலீலியோவின் வாழ்க்கை ஒரு உதாரணம் . 
 கலீலியோவுக்கு எதிராக திருச்சபை செயல்பட்டது அங்கிருப்பவர்களுக்கே நெடுநாள் உறுத்தலாகவே அமைந்தது. சில நூறாண்டுகள் கடந்த பின் 1992 இல் கலீலியோவை   திருச்சபையால் நடத்தப்பட்ட விதத்திற்காக  வருத்தம்   தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது   

*******************************************************************
கொசுறு : .."..அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்." என்று இப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . அப்படி என்ன கதி என்று நீங்கள் கேட்கலாம். அதைக் கேட்டால் கொஞ்சம் திகைத்துத் தான் போவீர்கள். இதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம் 

*************************************************************************

இதைப் படித்து விட்டீர்களா  • பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்? பகுதி 2

 • ஐசக் நியூட்டன்-விஞ்ஞானியா? அரசியல்வாதியா?

 • ******************************

 • 14 comments:

  1. வணக்கம்.

   ““அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்." என்று இப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . அப்படி என்ன கதி என்று நீங்கள் கேட்கலாம். அதைக் கேட்டால் கொஞ்சம் திகைத்துத் தான் போவீர்கள்.““
   தலையரிதலும் சிதையெரித்தலும் போன்ற கொடுந்தண்டனைகள் அன்று நடந்திருக்கலாம். ஆனால் அதைவிடக் கொடுமையான தண்டனைகள் இன்று இதே திருச்சபையின் ஊடே நடக்கின்றன என்று சொன்னால் ஒருவேளை நீங்கள் திகைப்படைதல் கூடும்.

   தொடர்கிறேன்.

   நன்றி.

   ReplyDelete
  2. கலீலியோ தி கிரேட்! கடைசி வரிகளைச் சொன்னதற்கு சொல்லாமலேயே இருந்திருக்கலாம்!! அல்லது அடுத்த பதிவு எப்போது என்றாவது சொல்லியிருக்கலாம்!!!

   நண்பர் விஜூவின் வரிகள் இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன!

   ReplyDelete
  3. TRUE JI Socrates isaac newton were also one among those intellectuals who were subjected to punishment when their views/inventions were not acccepted by the majority...

   ReplyDelete
  4. அன்று மட்டுமல்ல ,இன்றும் கூட மதவாதிகளுக்கு எதிராக பலரும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ,சமீபத்தில் ,நம் பாரதத்தில் இருவர் கொல்லப் பட்டதை மறக்க முடியுமா !

   ReplyDelete
  5. அறிந்த செய்தி, இருந்தாலும் அருமையான புதிய செய்திகள். தம5

   ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துகள்

   ReplyDelete
  7. அறிவியலாளர்கள் மதங்களிடம் பட்ட கொடுமைகள் கொஞ்சமா என்ன
   தொடருங்கள் ஐயா
   தம +1

   ReplyDelete
  8. நல்ல பதிவு. தொடரட்டும். வா.நேரு,மதுரை

   ReplyDelete
  9. நல்ல பதிவு. தொடரட்டும். வா.நேரு,மதுரை

   ReplyDelete
  10. எல்லா மதங்களிலும் இத்தகைய அடாவடித்தனங்கள் இருந்து வந்திருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு போராடியவர்கள் வரலாற்றில் நிலைக்கிறார்கள்

   ReplyDelete
  11. அருமையான கட்டுரை.

   இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் கலிலியோ வாழ்ந்து தொலை நோக்கு கருவிகள் குறித்து ஆராய்ச்சி செய்த வீட்டை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.

   கோ

   ReplyDelete
  12. உண்மைகள் ஏற்றுக் கொள்ளத் தாமதமாகும். ஆனால் வெளிப்பட்டே தீரும். உறுதியும் பெறும்

   ReplyDelete
  13. அருமையான கட்டுரை அய்யா ...
   தொடர்கிறேன்
   தம +

   ReplyDelete

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895