அன்பு அன்பரே!
வணக்கம்.
திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபாலன் என்றே மாற்றிவிட்ட அற்புதத்தைச் செய்த நீ இப்போது எங்கே இருக்கிறாய். உமது பின்னூட்டங்கள் இல்லாமல் களை இழந்து தவிக்கிறது வலைப் பதிவுகள். காலை எழுந்ததும் கணினி உன் முகத்தில் தானே விழிக்கும். சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் திண்டுக்கல் தனபாலன் அல்லவா?
பின்னூட்டப் புயலே! என்னைப் போன்ற பலர் உனது பின்னூட்டங்களை நம்பித்தானே பதிவுகள் எழுதிக் கொண்டருந்தோம். நீ நுழையாத வலைப் பக்கங்கள் உண்டா? . வண்டு காணாத பூக்கள் இருக்கலாம். உன் பின்னூட்டம் காணாத வலைப் பூக்கள் காண இயலாதே? பல வலைப்பதிவுகளில் உனது பின்னூட்டம் மட்டுமே அல்லவா இருக்கும். உனது பின்னூட்டத்தால் யாரையும் காயப் படுத்தியது இல்லை. மோசமான பதிவு என்றாலும் பாரட்டித் தானே பின்னூட்டம் இடுவாய். பதிவு எழுதி முடிக்கும் அடுத்த வினாடி உனது பின்னூட்டம் எட்டிப் பார்க்குமே. எப்படி என்று நாங்கள் வியந்து போவோமே!
நீ பின்னூட்டத்தால் மட்டுமல்ல தரமான பதிவுகளாலும் அல்லவா எங்கள் உள்ளம் கவர்ந்தாய். திருக்குறளை வைத்து நீ எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்களாயிற்றே! வள்ளுவன் இருந்தால் உமது சுவாரசியமான குறள் வலைப் பதிவுகள் இல்லாதது கண்டு வருத்தப் பட்டிருப்பான். திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா? எந்த ஒரு கருத்தாக இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!
அதற்கும் மேலாக வலையுலக மந்திரவாதியாக அல்லவா விளங்கினாய். உனது வலைப் பக்கத்தில் விதம் விதமான தொழில் நுட்ப வித்தைகள் காட்டி எங்களை மகிழ்வித்தாயே! உனது வலைப்பதிவுகளில் எழுத்துகள் நடனமாடும் . படங்கள் பாடல் பாடும். சுட்டியை வைத்தால் ஒரு ஜாலம் எடுத்தால் இன்னொரு ஜாலம். சொடுக்கினால் பல வித்தை . உன்க வலைப்பூ காண்களுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாக திகழ்ந்ததே! இவற்றை எல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டாய் என்று நாங்கள் வியப்பால் விழிகள் விரிப்போம். நீயோ அமைதிப் புன்னகையால் எங்களை ஆட்கொள்வாய்.
பதிவுகளில் தொழில்நுட்ப மாயாஜாலம் செய்த நீ உனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்தததை நாங்கள் மறக்க முடியுமா? பலரது வலை வடிவமைப்பு உன்னுடைய கைவண்ணம்தானே! தொழில் நுட்ப சிக்கல்கள் தீர்க்க உதவி என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினால் போதும் இருந்த இடத்தில் இருந்து மட்டுமல்ல தேவைப் பட்டால் நேரில் வந்தும் உதவும் பண்பாளர் ஆயிற்றே.
கவிஞர் முத்து நிலவன் அவர்கள் உங்களுக்கு வலையுலகம் சார்பாக வலைச்சித்தர் என்று பட்டம் கொடுத்தார். சித்தர்கள் திடீரென்று திடீரென்று மறைவார்கள்.காட்சியளிப்பார்களாம் அது போல ஒளிந்து நின்று ஆட்டம் காட்டுகிறாயோ!
புதுக்கோட்டை வலைப் பதிவர் சந்திப்பின் வெற்றிக்கு காரணமானவனே! அந்த திருவிழாவிற்குப் பின்வலைப் பதிவிலும் உன்னை சந்திக்க முடியாமல் ஏங்குகிறோம். வலை வாசம் செய்த நீ வனவாசம் போனது ஏன்? முகநூலிலாவது முகம் காட்டிக் கொண்டிருந்தாய்.இப்போது முகநூல் பக்கமும் காணவில்லையே!
கணினியைத் தொடாமல் உன்னால் இருக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் ஏற்றங்கள் இறக்கங்கள் இடர்பாடுகள் வந்து செல்வது வழக்கம்தான்., ஆனால் அவை எல்லாம் வள்ளுவன் வழி அறிந்த உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிவோம்..
காவிரி நீர் காணாத தமிழகம் போல உன்னனக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் வலைப் பதிவுலகம். காவிரி நீரை அணை கட்டித் தடுக்கலாம். நீதிமன்ற ஆணை மறுக்கலாம். ஆனால் உன்னை வலைப் பக்கம் வர விடாமல் தடுத்தது எது? சொல்! உச்ச நீதி மன்றம் சென்று உத்தரவு பெற்று வருகிறோம்?
அன்புடன்
உந்தன் வரவை எதிர்நோக்கும்
வலைப்பூ நண்பர்கள்
வணக்கம் நண்பரே
பதிலளிநீக்குதங்களது கருத்தை முழுமையாக வழி மொழிகிறேன்
தங்களைப் போலவே நானும் ஆவலுடன்...
அன்புடன்
கில்லர்ஜி
உண்மைதான் அய்யா...
பதிலளிநீக்குதினம் தினம் நம் பக்கம் வருவாரா என்று ஏங்க வைக்கிறார்...
தொழில் முக்கியமே... அப்படியே கொஞ்சம் நம்ம பக்கமும் அண்ணன் வரணும்.... வருவார் என நம்புவோம்.
பதிவர்கள் அனைவரின் மனதிலும் உள்ளதை பதிவாக்கி விட்டீர்கள் !
பதிலளிநீக்குஏற்றி வைத்த ஏணியைக் காணாமல் தவிக்கிறோம் !
'அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்என்று ஆசை துடிக்கிறது'என்ற பாடத் தோன்றுகிறது :)
புதிய பதிவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்கம் அளித்தவர் இல்லாததினால் வலையுலகம் டல்லாகத்தான் இருக்கிறது. இப்படி துடிப்பாக இருந்தவர் இணையம் வராமல் இருக்கிறார் என்றால் அவருக்கு சொந்த பிரச்சனைகள்தான் காரணமாக இருக்க கூடும் அந்த பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் வர் நாம் பிரார்த்திப்போம்
பதிலளிநீக்குஅருமை நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் அருமையான மடலைப் படித்தேன். அதன் உண்மையை உணர்ந்தேன். அதனை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.
மூங்கில்காற்று முரளியின் எண்ணத்தில்
பதிவர்களின் உள்ளம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது...
தென்றல்காற்று உன்னை உரசும் வேளை
பதிவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வீர்...
http://www.ypvnpubs.com/2016/10/blog-post_23.html
உண்மைதான் தனபாலன் சார் வலைசித்தர் தொழில்நுட்பபுலி என்பது அவரின் பதிவுகளில் அவர் காட்டும் திறமை ஏங்க வைக்கும்! மீண்டும் தனபாலன் சார் வலைப்பக்கம் வரவேண்டும்!
பதிலளிநீக்குஅவரது சொந்த வேலைப் பளு காரணமாகத்தான் அவரால் வலைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க இயலவில்லை
பதிலளிநீக்குவலை அவரின்றி வாடி நிற்பதும் உண்மைதான்
ஆமாம். நானும் அவரை தொலைபேசியில் விசாரித்தேன்.வேலை பளு அதிகமென சொன்னார்.உங்கள் அனைவர் போல் நானும் அவர் தன எழுத்தை தொடர வேண்டும் என விரும்புகிறேன்.
பதிலளிநீக்குகார்த்திக் அம்மா
நம் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கடிதம் எழுதியமைக்கு நன்றி. அவர் வருவார், எழுதுவார். தினமும் பதிவினைப் பதியும்போது மறுமொழி கூறும்போதோ திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நினைவு இயல்பாகவே வந்துவிடும். அந்த அளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர். எழுதுவதற்கான உரிய சூழல் அவருக்கு அமையும் நாளை எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅவரின் வருகையின்மை வலைப்பதிவு பதிவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு, அவர் போன் நம்பர் இருந்தால் தொடர்பு கொள்ளுங்களேன்.
பதிலளிநீக்குமீண்டும் வந்து அசத்த வாழ்த்துக்கள்...
என்னுடைய மன உணர்வை அப்படியே தங்களின் பதிவு வெளிப்படுத்தியது. நான் வலைப்பக்கம் தொடங்கியபோது எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் தனபாலன் அவர்கள்தான். தொழிநுட்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்தவரும் அவர்தான். பதிவர்களுக்கு உந்து சக்தியாக இருந்த அவர் மீண்டும் வலையுலகம் வரவேண்டும். பதிவுகளாலும் பின்னூட்டங்களாலும் மனதை நிறைக்க வேண்டும். உங்களுடன் நானும் சேர்ந்து இந்த கோரிக்கையை நண்பர் தனபாலன் அவர்களுக்கு வைக்கிறேன். வாருங்கள் வலையுலகம் காத்திருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குவழிமொழிவு.
நன்றி.
வழிமொழிகிறேன். எங்களுக்கும் தமிழ்மண வாக்குப்பட்டை திரும்பப்பெற உதவியிருக்கிறார்.
பதிலளிநீக்குவல உலக நட்புகளை ஏன் தவிர்க்கிறார் தெரியவில்லை. முன்பு ஒரு முறை புடவை வியாபாரத்தில் கவனம் செலுத்தப் போவதாக எழுதி இருந்த நினைவு
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி அண்ணா
தனபாலன் அண்ணா பற்றி எழுதியது அருமை
நான் பேசினேன் மிகவிரைவில் வலைப்பக்கம் வருவார்.
நன்றி
அன்புடன்
ரூபன்
சரியான பதிவு. திண்டுக்கல் தனபாலன் எங்கிருந்தாலும் வரவும்.
பதிலளிநீக்குஎன் பதிவுகளுக்கும் டான்னானு முதல் கமென்ட் அவருடையாதாக தான் இருக்கும் இப்ப கொஞ்ச நாட்களாக கானும்
பதிலளிநீக்குஅனைவர் சார்பாகவும் நல்லதொரு வேண்டுகோளை, வலைச்சித்தர் - திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வைத்த நண்பருக்கு நன்றி. நான் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதுவிஷயமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் பேசியுள்ளேன். அவருடைய சூழலைச் சொன்னார். இருந்தாலும் அவ்வப்போது வருவேன் என்றார். இப்போது அவர் எழுதும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களைக் காண முடிகிறது.
பதிலளிநீக்குஎன்னைப் போன்ற அவ்வளவாகக் கம்பியூயூட்டரில் நகாசு வேலை பண்ணத்தெரியாதாவர்களுக்கெல்லாம் பதிவு எழுத ஆரம்பிக்க உதவினார் . பதிவு எழுதிய அந்த 5 நிமிடத்திற்குள் ஒரு காமெண்ட் வந்துவிடும் . சொந்தப் பிரச்சனைகளாக இருந்தால் அவற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனைகள் .
பதிலளிநீக்குவர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார் அவர்தான் நம்ம DD
பதிலளிநீக்குகடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் உண்மை. இருவாரங்களுக்கு முன்பு என் வலைப்பூவில் சிறிய மாற்றம் செய்தேன். கூகுள் ப்ளஸ் காணாமல் போய்விட்டது. google + followers எல்லாம் மாயமாய்ப் போய்விட்டார்கள். திண்டுக்கல் தனபாலனைத்தான் உதவி கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அவரே வலைக்கு வாராத நிலையில் அவரைத் தொந்தரவு செய்வது சரியல்ல என்று விட்டுவிட்டேன். வலையுலக ஆபத்பாந்தவன் என்றால் மிகையில்லை.
பதிலளிநீக்குஅருமையாக திண்டுக்கல் தனபாலன் பற்றிய பதிவு.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
விரைவில் தனபாலன் அவர்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
Sometimes personal issues take over our life. It happens to everyone now and then. After that it is hard to get back to valai ulakam with the "same energy" we had b4. Dhanabalan is NOT an exception to this I suppose!
பதிலளிநீக்குஎந்தப் பிரதிபலனும் (??!!) எதிர்பார்க்காமல் பின்னூட்டம் இடுபவர் அவர். நான் பதிவிடும் போது ஒரு பின்னூட்டமாவது நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையோடு இடுவேன் அவரை நம்பி,
பதிலளிநீக்குஎன்னவாயிற்று ?
உங்கள் பதிவு அனைத்தும் உண்மை. வருவார். என்ர்ங்களுக்கும் பல வகைகளில் உதவியவர். தொடர்பில் இருக்கிறோம். தற்போது சொந்த வேலைப்பளு காரணமாக அலைச்சல், அதில் ஊன்றிட முயற்சி என்று சுமை காரணமாக வரவில்லை. மீண்டும் வருவார்.
பதிலளிநீக்கு"திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா? எந்த ஒரு கருத்தாக இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!" நூறு விழுக்காடு உண்மை! நான் இதுபற்றிப் பலமுறை வியப்போடு அவரிடமே கேட்டிருக்கிறேன். சிரிப்புத்தான் பதிலாய் வரும். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர், குறிப்பாகத் தற்போது மேனிலைக்கல்வி பயின்று வரும் மகள் மீது அளப்பரிய பாசம் அவருக்கு. எனவே, இதுவரையில்லாவிடினும் இனியேனும் குடும்பப் பாதுகாப்புக்காக வருமானம் ஈட்டியே தீரவேண்டும் எனும் உறுதியோடு, தனக்கு மிகவும் பிடித்த வலைப்பக்கத்தையே மறந்துபோகும் அளவுக்கான உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவரது நினைவுகள் வராத நாள்கள் எமது (புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க) நண்பர்களுக்கு மிகவும் குறைவே எனும் அளவிற்கு, நமது பதிவர் திருவிழாவின் மையமாகவே அவர் விளங்கினார்! அவர் மீண்டும் பதிவுகள் எழுத வேண்டும் எனும் அக்கறையில் தங்கள் தனிப்பதிவு நெகிழ வைக்கிறது முரளி! தங்கள் வேண்டுகோளை எமது நண்பர்கள் சார்பில் நானும் வழிமொழிகிறேன்.
பதிலளிநீக்குஅப்புறம் முக்கியமான ஒரு திருத்தம்-
“வலைச்சித்தர்” எனும் பட்டம் மற்றும் கேடயத்தை நாங்கள் தந்தோம் என்பது உண்மையே என்றாலும், அவருக்கே பொருந்தக் கூடிய அப்பட்டத்தை எமக்கும் முன்னே முன்மொழிந்தவர் நம் கரந்தை ஜெயக்குமார் அய்யாதான்! (வரலாற்றில் பிழைநேரக்கூடாதில்லையா?)
அவர் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன் வருவார். (எங்கள் இனிய இலக்கியத் தங்கை மைதிலியும் இப்படித்தான் உள்ளுரில் இருந்து கொண்டே காணாமல் போயிருக்கிறார். அவரது உடல்நலம் கருதி வற்புறுத்தாமல் இருக்கிறோம். அவரும் வருவார். வருவார்கள்! நன்றி த.ம.12
ப்ளாக்ஸ்பாட்டில் எழுதும் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமல்லாமல் என்னுடைய வேர்ட்ப்ரெஸ் பதிவிற்கும் தவறாமல் வருகை தருவார். அவரது பின்னூட்டம் இல்லாமல் பதிவுகளில் பொலிவே இல்லை போல ஒரு உணர்வு. உங்களுடன் சேர்ந்து நானும் அழைக்கிறேன். விரைவில் வரவேண்டும், தனபாலன்.
பதிலளிநீக்குஇரயில் சிநேகம் அறிவேன் வலை சிநேகம் பிரமிப்பாய் இருக்கிறது
பதிலளிநீக்குவராததற்கு அலுவல் காரணமாக இருக்கலாம்...ஆனால் அவர் மீது தாங்கள் வைத்துள்ள அன்பை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கார் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.