இன்று(03.12.2013) உலக மாற்று திறனாளிகள் தினம். இந்த தினம் கொண்டாடப்படும் நோக்கம் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களின் உரிமைகள் மற்றும் நலனை மேம்படுத்துவதும் அரசியல் சமுதாய பொருளாதார கலாசாரத்தின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவர்களுக்குள்ளே மறைந்திருக்கும் திறனை வெளிக்கொணர்ந்து நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.
ஊனமுற்றவர்கள் என்று சொல்லாமல் மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் மாற்றம் செய்தது பாராட்டத் தக்கது. Disabled என்பதை differently abled என்று முதன்முதலில் உரைத்த புண்ணியவான் யாரோ? அவர் வாழ்க. இப்பெயர் பலருக்கு பொருந்தவும் செய்கிறது. பல சமயங்களில் அவர்கள் செயல் திறன் பிரமிக்க வைக்கிறது.சாதாரண மனிதர்கள் செய்வதைப் போலவே விரைவாகவும் பிழையின்றியும் செய்வது நம்மை ஆச்சர்யப் படுத்தும். ( இது போன்ற + ve செய்திகளை பத்திரிகைகளிலும் வலைப பக்கங்களிலும்(எங்கள் ப்ளாக்) காண முடிகிறது.
ஆனால் நம்மை சுற்றிலும் தினந்தோறும் பல மாற்றுத் திறனாளிகளை கடந்துதான் போகிறோம். அவர்களை கிண்டலாகவும் கேலியாகவும் பார்த்த சமூகத்தில் இன்று மாற்றம் மாற்றம் ஏறபட்டுள்ளது. ஆனாலும் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாட்டை காமெடி ஆக்குகின்றன. மாற்றுத் திறனாளிகளாக பிறந்தது சாபம் என்ற எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குடும்பத்தாரின் கடமை மட்டுமல்ல.சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையும் கூட.
அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் பகல் நேர மையங்கள் இவர்களுக்காக செயல் படுகின்றன. இங்கே இவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. இங்கு வர இயலாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று பயிற்சியும் உதவியும் செய்யப் படுகிறது. சென்னையில் இது சிறப்பாகவே இயங்குகிறது. முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகளை சாதாரண பள்ளிகளில் சேர்க்க தயங்குவார்கள். ஆனால் இப்போது சேர்க்கை மறுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது . இயலாமையின் சதவீதம் குறைவாக உள்ளவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வியையே அரசு வலியுறுத்துகிறது. எல்லோரும் படிக்கும் பள்ளியிலேயே அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காவே சாய்வுப் பாதை (ramp) அமைப்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இன்னும் விரிவாக இன்னொரு பதிவில் எழுத நினைத்திருக்கிறேன்.
இப்பதிவின் நோக்கம் ஒரு தேசிய நிறுவனம் இவர்களுக்காக இயங்கி வருகிறது என்பதே. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் என்று ஒன்று இருப்பது சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த அமைச்சகத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது . கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் இந்நிறுவனம் அமைந்திருக்கிறது.
அது என்ன ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் ?(Multiple disabilities)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊனங்கள் ஒருவருக்கே இருப்பதே ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் என்று அழைக்கப் படுகிறது.
உதாரணம் கண்பார்வைஇன்மையோடு இணைந்த காது கேளாமை,மூளை முடக்கு வாதம்,ஆட்டிசம்,மன வளர்ச்சி குன்றுதளோடு இணைந்த காது கேளாமை, காது கேளாமையோடு இணைந்த மூளை முடக்குவாதம் போன்றவை .
மேற்கண்ட குறைபாடுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு மருத்துவம் மற்றும் சேவைகள் னைத்தும் இந்த மத்திய அரசு நிறுவனத்தில் வழங்கப் படுகிறது. இந்த சேவைகளை அறியாத பலர் இருக்கக் கூடும்.
வறுமை மற்றும் அறியாமையில் வாடும் ஏழை மக்கள் இது போன்று பிறந்த தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இது நமது தலை விதி என்று பொறுத்துக் கொண்டு எந்த மருத்துவமும் செய்யாமல் வைத்திருக்கும் நிலையையும் பார்க்கமுடியும். ஊனமுற்றோருக்கான சலுகைகள் கிடைக்க உதவும் அடையாள அட்டைகள் கூட பெற முயற்சிப்பதிலை (ஆனால் குறைபாடு மிகக் குறைவாக உடைய ஒரு சிலர் அடையாள அட்டை வைத்தது சலுகைகள் அனுபவிப்பதும் உண்டு)
அப்படி யாரேனும் இருந்தால் இந்நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று இந்நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிறுவனம் என்னென்ன செய்கிறது ?
இங்கு செயல்படும் துறைகள்
- மறு வாழ்வு மருத்துவம்
- மறுவாழ்வு உளவியல்
- ஊனமுற்றோருக்கான தொழிற்பயிசி
- பேசுதல், கேட்டல்,மற்றும் தொடர்புக்கான பயிற்சி
- சிறப்பு கல்வி
- இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்வழி மருத்துவம்
- செயற்கை உறுப்புகள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல்
- உணர்வு உறுப்புகள் குறைபாட்டிற்கான ஒருங்கிணைப்பு பயிற்சி
- சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பயிற்சி
- கண்பார்வையோடு இணைந்த காது கேளாமை
- 0-3 ஆரம்ப கால பயிற்சி
இதனோடு இன்னும் பல சேவைகளை வழங்கி வருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
சில பட்ட படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளும் இங்குபயிற்றுவிக்கப் படுகின்றன.
- M.Phil (Clinical Psychology)
- PG Diploma in Developmental Therapy-Multiple Disabilities
- PG Diploma in Early Intervention
- B.Ed Special Education (Multiple Disabilities )
- D.Ed Special Education(Deafblind, Cerebral Palsy&Autism Spectrum Disorder
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் அரசு சாரா நிறுவனங்களையும் ஊக்குவித்து அவர்களின் சேவையைப் பாராட்டி விருதுகளும் அளிக்கப் படுகிறது
இந்நிறுவனத்தின் வேலை நாட்கள் : திங்கள் முதல் வெள்ளிவரை
வேலை நேரம் : காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 வரை
பேருந்து விவரம் :
பிராட்வே-கோவளம் 19G, PP19,19E
அடையார்-மாமல்லபுரம் 588
வேளச்சேரி -மாமல்லபுரம் 589
கோயம்பேடு -கோவளம் PP49
தி.நகர்-மாமல்லபுரம் 599
வேளச்சேரி-கோவளம் M19V
தாம்பரம் - கோவளம் 517
பேருந்து நிறுத்தம்: முட்டுக்காடு ஊனமுற்றோர் ஆபீஸ் பஸ் ஸ்டாப்
நிறுவன வலைப பக்கம் http://www.niepmd.tn.nic.in
தொலைபேசி எண்கள்- 044-2742113, 27472046 , 27472389
பணம் படைத்தோருக்கு சேவை செய்ய சிறப்பு பள்ளிகள் உள்ளன. ஆனால் ஏழை மக்களுக்கு?
இப்பதிவைப் படிக்கும் நீங்கள், தேவைப்படுவோருக்கு இவ்விவரத்தை சொல்லுங்கள் .
இப்பதிவைப் படிக்கும் நீங்கள், தேவைப்படுவோருக்கு இவ்விவரத்தை சொல்லுங்கள் .
இதனால் தினையளவு பயன் கிடைத்தாலும் பனையளவு மகிழ்வேன்.
மாற்றுத் திறனாளிகளை மதிப்போம்! அவர்களும் வகையாய் வாழ வழிகள் செய்வோம்.
நன்றி
********************************************************************************************
.
nalla thakavalkal sako..!
பதிலளிநீக்குennaal mudinthathu fb google + share seythu vitten.
மிகவும் அருமை நண்பர் முரளி அவர்களே! இதுபோலும் தகவல்களைத் தெரிவிப்பது தான் அவர்களைப் போன்றவர்க்குச் செய்யும் உதவியே அன்றி, அவர்கள் எதிர்பார்ப்பது பரிதாபத்தையோ தற்காலிகப் பண உதவியையோ அல்ல! தங்கள் பணி உன்னதமானது
பதிலளிநீக்குமிக நல்ல தகவல்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி மூங்கில் காற்று.
விரிவான தகவல்கள் + விளக்கங்கள்... மிக்க நன்றி...
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள். பேருந்து வழித்தடம், தொலைபேசி எண்கள் உட்பட எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல் ஐயா.
பதிலளிநீக்குநன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள்... மிக்க நன்றி!
பதிலளிநீக்குத.ம. +1
பயனுள்ள தகவல்.
பதிலளிநீக்குகருணை உள்ளங்கள் கருத்தில் கொள்வர்.
பாராட்டுகள்!
//Disabled என்பதை differently abled என்று முதன்முதலில் உரைத்த புண்ணியவான் யாரோ? அவர் வாழ்க.// ஊனமுற்றவர்கள் என்கிற சொல்லை மாற்றுத்திறனாளிகள் என்று மாற்றியது தலைவர் கலைஞர்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமிக முக்கியமான தகவல்கள் முரளிதரன்... அவசியமான பதிவும் கூட.. த.ம 6
கலைஞர் செய்தது மொழி பெயர்ப்பு மட்டுமே. ஆங்கிலத்தில் பல வருடங்களுக்கு முன்பே பயிற்சிகளில் Differently abled என்ற வார்த்தை பயன்படுத்துவது வழக்கம்தான். அதை அதிகாரபூர்வமாக பயன் படுத்த மொழி மாற்றம் செய்து மற்றுத் திறனாளிகள் என்று மாற்றியது கலைஞர் .
பதிலளிநீக்குநன்றி மணிமாறன்
நல்ல தகவல்கள்...
பதிலளிநீக்குமிகவும் நல்ல எண்ணம் கொண்டு எழுதப் பட்டுள்ள கட்டுரை. ஆனாலும் இத்தகவல்கள் தேவைப் படுபவருக்குப் போய்ச் சேர்ந்தால் மகிழ்ச்சியே. கரந்தை ஜெயக்குமார் அவரது பதிவு ஒன்றில் இருளில் இணைந்த இதயங்கள் என்று பார்வை இழந்த இருவர் நன்கு படித்து முன்னுக்கு வந்து மணமுடித்திருப்பதை சொல்லி இருக்கிறார். எல்லாப் புலன்களும் சரியாக இயங்கும் ஒருவர் மாற்றுத் திறனாளி ஒருவருடன் இணைவாரா என்பது கேள்விக் குறியே. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிகச் சிறந்த பணி நீங்கள் செய்வதும் சகோ!
பதிலளிநீக்குஅருமை! பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
இதுவரை அறியாத தகவல்
பதிலளிநீக்குஅறிந்திருக்கவேண்டிய தகவல்
விரிவாக அருமையாகப் பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
நானும் இதை பகிர்வு செய்கிறேன்
வாழ்த்துக்களுடன்...
tha.ma 10
பதிலளிநீக்குஇன்றுதான் இப்பதிவை படிக்க முடிந்தது. மாற்றுத் திறனாளி என்பது சரியான மாற்றுச் சொல் அல்ல. புதிய சொல்லை உருவாக்க வேண்டும். உடல் ஊனமுற்ற குழந்தைகளை , அவர்களுக்கான பள்ளிகளில் படிக்க வைப்பதே உளவியல் ரீதியாக நல்லது.
பதிலளிநீக்குமு.க கொடுத்த மொழி பெயர்ப்பு அருமை; ஆனால். அதில் யதார்த்காம் இல்லை! முரளி சொன்னதம் சரியில்லை!
பதிலளிநீக்குஇங்கு உபயோகப்படுத்தும் சொற்றொடர்...
Physically Challenged;
Mentally Challenged
Hard of Hearing
Visually Impaired
சுருங்க சொனால்...People with disability or disabilities---meaning: People FIRST...people comes always first..the disability comes next!
இவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்று சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கு; உண்மையில் அவர்கள்--அவர்களுடைய ஊனத்தால்--Challenged என்பதே உண்மை!
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குமிக மிக அருமையான பகிர்வு சார் தங்களுக்கு மிக்க நன்றி தங்கள் விரும்பினால் என் பக்கத்தில் இந்த பகிர்வை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்
பதிலளிநீக்குதாராளமாக குறிப்பிடலாம். எந்தவித ஆட்சேபனையும் இல்லை. யாருக்கேனும் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியே.பதிவு எழுதப் பட்டதன் நோக்கமே அதுதான்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி(அண்ணா)
மிக நல்ல தகவல் மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல தகவல்...
பதிலளிநீக்குசகோதரருக்கு வணக்கம்
பதிலளிநீக்குநிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். அறிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்தவும், நம்மாளான உதவியை மாற்றுதிறனாளி நண்பர்களுக்கு செய்வோம். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க..
நல்ல தகவல்
பதிலளிநீக்குஅன்பின் அருந்தகையீர்!
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் கருத்தினை தருக!
http://blogintamil.blogspot.fr/
நட்புடன்,
புதுவை வேலு
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇணைப்பு : http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_17.html