என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 26 டிசம்பர், 2013

எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?


கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள்.
கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும்  அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.
எக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும்  இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது.
நான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு  தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த  தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க. 
 
பள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும்.  எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்குவார்கள்.

எனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .
அப்படி  ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள்? எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார். 
அந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.
நான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.


DAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் .     DA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய  அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது. 
DA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம். 
இது ஏன்? எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா? சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அறிந்தால் சொல்லலாம்.  
ஒரு வேளை,  தெரியாதவர்கள் இருப்பின்  சனிக்கிழமை  வரை காத்திருக்கவும்.
அடுத்த பகுதி படிக்க
Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2

குறிப்பு ; தொழில் நுட்பப் பதிவர்கள், மற்றும் திண்டுக்கல் தனபாலன், வவ்வால் போன்றவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.(பதில் சொல்ல மட்டும்தான். கருத்து சொல்ல அல்ல)


*****************************************************************************************
  படித்து விட்டீர்களா

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா 
காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut


                     **********************************************

29 கருத்துகள்:

 1. Very simple.. you are rounding in cells. The total is 73248.50. Excel is rounding to 73249.
  Excel does not make mistakes..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான். இதற்கான விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். நன்றி

   நீக்கு
 2. காத்திருக்கிறேன் ஐயா
  Anonymous சொல்வது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது
  த.ம.2

  பதிலளிநீக்கு
 3. இதெல்லாம் நமக்கு ரொம்பவே தூரம்.

  பதிலளிநீக்கு
 4. சொல்லவேண்டாங்கறீங்க...மேல சொல்லியிருக்கறது சரின்னு தோணுது.... நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு பார்ப்போம்.... நாங்க lotus 123 பழகி இப்ப எக்சல்ல எங்க தேவையை செய்யறவங்க.... நீங்க சொல்வது ஏதாவது சொல்றது எனக்கும் பயன்படலாம்...நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. lotus patri எனக்கு தெரியாது. அதை பயன்படுத்தியதும் இல்லை. விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி எழில்

   நீக்கு
 5. புதியவர்களுக்காக பதில் தெரிந்தாலும் சொல்லலை..! ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள்... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்...! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.உஷா. தெரிந்தும் சொல்லாமல் இருந்ததற்கு. சும்மா ஒரு சின்ன ஆவலை உண்டாக்கத்தான்

   நீக்கு
 6. பாராட்டுகள்....! பயன் உள்ள விடயம்
  காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. சாதாரண பயனாளிகள் அதாவது முறையான கணிணி பயிற்சி அற்றவர்கள் இதனை புரிந்து கொள்வது சிறிது கடினமே. எக்செல்லில் இருக்கும் ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு விதமாக படிவம் அமைத்துக்கொள்ளலாம். வெறும் வார்த்தைகள், எண்ணினை குறிப்பிடும் படிவம், தேதியினை குறிப்பிடும் படிவம், மணித்துளியினை குறிப்பிடும் படிவம் என்று ஒவ்வொரு செல்லினையும் விருப்பத்திற்கேற்றவாறு அல்லது தேவைக்கேற்றவாறு வடிவமைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வடிவமைக்கையில் எண்ணிற்கான படிவத்தில், எந்த படிவத்தில் என்பதனை தெளிவுபட குறிப்பிடப்பட வேண்டும். ஒரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது இரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது தசமம் இல்லாமலா என்று குறிப்பிடப்பட வேண்டும். இரு கட்டங்களை கூட்டுகையில் அவற்றில் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்து கூட்டுவதில்லை.ஏனெனில் அந்த கட்டம், அதனில் பதியப்படும் எண்ணினை எவ்வாறு பிரதிபலிக்கவேண்டுமென்று வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்த கட்டத்திற்குள் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்துக்கூட்டாமல் சூத்திரத்தின்படி பெறப்பட்ட உண்மையான மதிப்பினை எடுத்து கூட்டுவதால், இரு எண்களின் தசம கூடுதல் .9 –ஐ தாண்டுகையில், ஒரு எண் கூடுதலாக பிரதிபலிக்கின்றது.

  பதிலளிநீக்கு
 8. Excel never make mistake. நீங்கள் formula-வை பின்வருமாறு போட்டால் சரியாக வரும். =ROUND(C2*91%,0). இது உங்கள் total-ஐ roundoff செய்து தரும். ”0”-க்கு பதில் 2 என போட்டால் இரு தசம ஸ்தானங்களுடன் total வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரி பொன் சந்தர். round function பயன்படுத்தாமல் மாற்று முறையும் கூறி இருக்கிறேன். சரி பார்க்கவும்

   நீக்கு
 9. சரியாக வருவதற்கு D2 மற்றும் D3 செல்களில் கீழ்கண்ட ஃபார்முலாவை பயன்படுத்தி சரியான விட பெறலாம்.
  =ROUND(C2*91%,0)
  =ROUND(C3*91%,0)

  பதிலளிநீக்கு
 10. நான் marketing பிரிவில் பணிபுரிந்தபோது ஒவ்வொரு நாளும் collection எவ்வளவு என்று துறை வாரியாக உள்ளீடு செய்ய வேண்டும், ஒரு துறையில் 1.5 லட்சமும் வேறு ஒரு துறையில் 2.5 லட்சமும் இருந்தால் முறையே 2 மட்டும் 3 என்று காட்டும் (தசமங்கள் ரிப்போர்ட்டுக்குத் தேவையில்லை) ஆனால் மொத்தம் நான்கு என்று காட்டும். என்னுடைய பாஸ் ரெண்டும் மூனும் எத்தனை? என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. அப்போது கற்றுக்கொண்டேன், Round function.... ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்க, அதனால நானும்....

  பதிலளிநீக்கு
 11. கற்றுக் கொள்ள உங்கள் பதிவு ஆர்வமூட்டுகிறது
  முன் பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன்
  அடுத்த பதிவை எதிர்பார்த்து...

  பதிலளிநீக்கு
 12. எனக்கும் எக்ஸ்செல் என்றால் கணக்குப் பாடம் படிப்பதுபோல நானும் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 13. பகிர்வு நன்று. தொடர்ந்து பயன்படுத்தும் மென்பொருள்.....

  பதிலளிநீக்கு
 14. தாமதமான வருகையால் எனது கருத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இருப்பினும் எக்ஸ்செல் பயன்பாடு தெரிந்தாலும் அது பற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு மிகவும் குறைவு தான். தங்கள் பதிவின் மூலம் நிறைய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றிகள் ஐயா. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895