என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி


   மாரிட்ஸ்பர்க்கில் ரயில் பெட்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட  காந்தி செய்வதறியாது திகைத்து நின்றார். .வெள்ளையர் அல்லாதவர் மீது காட்டப்பட்ட நிறவெறி அவர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறத் துவேஷத்தை ஒழிக்க தன்னாலானதை செய்யவேண்டும் என்று உறுதி பூண்டார். அடுத்த ரயிலில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் .அதற்குள் அவரை நேட்டாலில் இருந்து  அனுப்பிய அப்துல்லா சேட் தந்தி மூலம் தகவல் தெரிவிக்க மாரிஸ்பர்க்கில் இருந்த இந்தியர்கள் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வந்தனர் .காந்திக்கு ஆறுதல் கூறினர்.காந்தி சந்தித்த அனுபவம் மிக சாதாரணமான தென்றும் இதைவிட கஷ்டங்களை தாங்கள் அனுபவித்திருப்பதாகவும் கூறினர் ..
அடுத்த நாள் மாலையில் ரயில் வந்தது அதில் ஏறி  சார்லஸ் டவுனுக்க்கு  போய் சேர்ந்தார்.

     அங்கிருந்து கோச் வண்டியில் ஏறி ஜோகனஸ்பர்க்குக்கு செல்ல வேண்டும்.அதற்கான டிக்கெட்டும்  வைத்திருந்தார் காந்தி. கோச் வண்டி ஏஜென்டுக்கும்  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.. கோச் வண்டியின் பொறுப்புகளை பார்த்துக் கொள்ளும் வெள்ளைக் காரருக்கு தலைவர் என்ற படம் உண்டு. அவர் காந்தியைப் பார்த்து இந்தியன்  என்று அறிந்து கொண்டதால் அவரை வண்டியில் ஏற்ற மறுத்து "உமது டிக்கெட் ரத்தாகி விட்டது வண்டியில் இடமில்லை" என்றார். உண்மையில் வண்டியில் இடமிருந்தது , இந்தியரை கூலி என்று இழிவாகக் கருதுவது ஆங்கிலேயரின் வழக்கம் .

   ஆனால் காந்தியோ விடாமல் வாதாடினார். முந்தைய தின அவமானத்தில் இருந்தே மீளாத நிலையில்   காந்தியின்   உரிமைக்கான போராட்டம்  தொடர்ந்தது. கோச் வண்டியின் தலைவன் எவ்வளோ தவிர்த்துப்  பார்த்தும் காந்தி விடவில்லை. வண்டி ஓட்டுபவருக்கு இருபுறமும் இரு ஆசனங்கள் இருக்கும் அதில் கோச்சின்  தலைவர் அமர்ந்து வருவார். காந்தியை உள்ளே அமரவைக்க அவர் சிறிதும் விரும்பவில்லை . கடைசியாக வேறு வழியின்றி தான்  உள்ளே உட்கார்ந்து  ஓட்டுனரின் பக்கத்து இருக்கையை  காந்திக்கு அளித்தார்., தன்னை  கோச் வண்டியின் உள்ளே  அனுமதிக்kகாமல் வெளியே ஓட்டுபவரின் பக்கத்தில் உட்காரவைப்பதை பெரிய அவமதிப்பாக கருதினார் காந்தி.. மேலும் பிரச்சனை செய்ய விரும்பாமல் மனதுக்குள் பொருமிக்கொண்டே பயணம் செய்தார். 

   சிறிது  நேரத்திற்குப் பிறகு சுருட்டு பிடிக்க விரும்பிய கோச் தலைவன் காந்தி இருந்த இடத்தில் அமர்வதற்கு காந்தியை எழுப்பி கோச் வண்டியின் படிக்கட்டின்மீது ஒரு அழுக்குக்  கோணியை விரித்து அமரச் சொன்னான், ஆனால் காந்தியோ   "உள்ளே அமரவைக்க வேண்டிய என்னை வெளியே உட்கார வைத்தாய்.. சகித்துக் கொண்டேன் இப்போது படிக்கட்டின்மீது அமரச் சொல்கிறாய். நான் அங்கு உட்கார மாட்டேன். வேண்டுமானால் உள்ளே உட்காருகிறேன்" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார்.

    இதைக் கேட்டு கோபமடைந்த தலைவன்  "காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் .  பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றான்..காந்தி கோச் வண்டியின் கம்பிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.எலும்பே உடைந்தாலும் பிடியை விடகூடாது நினைத்துக் கொண்டார். ஆனால் தலைவன் தொடர்ந்து அடித்த படியும்  திட்டிக்கொண்டும் இருந்தான். காந்தி  அமைதியாகவே அவனது இம்சைகளை பொறுத்துக்  கொண்டார். இதை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர தடுக்க முயலவில்லை . கோச்சு தலைவன் திடகாத்திரமாய்  இருந்தான், காந்தியோ ஒல்லியாக பலம் குறைந்தவராக இருந்தார்.. ஒரு சிலர் பரிதாபம் கொண்டனர். அவரை விட்டுவிடச் சொன்னார்கள் .. "அவர்மீது தவறு இல்லை . அங்கு உட்காரக் கூடாது என்றால் எங்களுடனாவது அமர்ந்து பயணம் செய்ய அனுமதியுங்கள்" என்று கூறினர்.. ஆனால் அவன் அதை ஏற்று கொள்ளவில்லை. கடும் சொற்களால் காந்தியை தூற்றிக் கொண்டே வந்தான்.கடைசியில் ஓட்டுனரின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த கோச்சின் வேலைக்காரனை படிக்கட்டில்  உட்கார சொல்லி விட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டே காந்தியை முறைத்து கொண்டே வந்தான். நல்லவேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஸ்டாண்டர்டன்  நகரத்தை அடைந்தது வண்டி. அங்கிருந்து இன்னொரு வண்டியில் ஜோகன்ஸ்பர்க்  புறப்பட்டனர். ஆனால் அதில் இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை.

    பிரிட்டோரியாவை அடைய ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து  மீண்டும் ரயிலில் செல்ல வேண்டும்..ஜோகன்ஸ்பர்க்கில் ஹோட்டலில் தங்கவேண்டி வந்தது.. அப்துல்லா சேட் சொன்ன கடைக்காரரை தேடிப் போகாமல் ஓட்டலில் தங்க முயற்சி செய்தார்.  எந்த  ஹோட்டலிலும் இடம் கொடுக்கவில்லை. .வேறு வழியின்றி முன்னேற்பாட்டின்படி அப்துல் கனி என்பவற்றின் உதவியுடன் தங்கிவிட்டு அடுத்த நாள் ரயிலில் பிரிட்டோரியா செல்ல ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்.முதல் வகுப்பில்தான்  பயணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரை  அணுகி முதல் வகுப்பு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார். 

அவரோ"உங்கள் உணர்வை மதிக்கிறேன். முதல் வகுப்பு டிக்கெட் வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை . இடையில் மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கார்டு வற்புறுத்தினால் என்னை சிக்கலில் மாட்டிவிடக் கூடாது..  ரயில்வேயின்மீது வழக்கு ஏதும் தொடர்ந்து விட கூடாது" என்ரூ டிக்கட் கொடுத்தார்.

    ஒப்புக் கொண்ட காந்தி ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். எதிர்பார்த்தது போலவே சிறிது நேரம் கழித்து கார்டு அந்தப் பெட்டிக்கு வந்தார். காந்தியைப் பார்த்ததும் கோபம் கொண்டு மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கூறினார். தான் முதல் வகுப்பு டிக்கட் எடுத்ததைக் காட்டியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை .. அப்போது அந்தப் பெட்டியில்ஒரே ஒரு ஆங்கிலேயர் இருந்தார் .அவர் "அவரை௮ ஏன் தொல்லை செய்கிறீர்கள்.அவர்தான் முதல் வகுப்பு டிக்கட் வைத்திருக்கிறாரே. அவர் என்னுடன் பயணம் செய்வதில் ஆட்சேபனை இல்லை" என்று கார்டைக் கண்டித்தார்.

"ஒரு கறுப்புக் கூலியுடன் நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் எனக்கு என்ன கவலை" சொல்லிக் கொண்டே  போனார் . ஒரு சில நல்ல மனம் படைத்த ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்த காந்தி  அவருக்கு நன்றி கூறினார்.


ஒரு வழியாக பிரிட்டோரியாவை அடைந்தார் காந்தி.அப்போதைக்கு அவரது பயணம் முடிந்தது  என்றாலும் தென்னாப்பிரிக்காவில் . இந்தியர்களின் உரிமைக்கான பயணம் இனிமேல்தான் தொடங்கப் படவேண்டும்  என்பதை அவர் உணர்ந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

ரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி  எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும்  அனுபவங்களுமே  நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை 

இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம்  படித்து விட்டீர்களா?  15 கருத்துகள்:

  1. துணிச்சல் வீரம் தன்மானம் மிகுந்த அண்ணல் காந்தியின் அஹிம்சை போராட்டம் அயல்நாட்டிலேயே தொடங்கி விட்டது

   பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக, இந்த அனுபவ அவமானங்கள்தான் காந்தி தேசத்தந்தையும், மகான் ஆனதற்கு அடித்தளம் என்பதில் எந்த மிகையும் இல்லை. என்ன ஒரு சுயமரியாதை உள்ள மனிதர்!!!!

   பதிலளிநீக்கு
  3. திரும்ப திரும்ப அடிக்கப்பட்டும் பொன் ஒளிவிடுவதை போல காந்தியின் மனதில் துணிவு ஒளிவிட்டிருக்கிறது!!! சுவைபட விவரித்திருகிரீர்கள் அண்ணா!

   பதிலளிநீக்கு
  4. காந்தியின் சுயசரிதையில் இந்த சம்பவங்களை படித்து இருக்கிறேன்! தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய அவருக்கு இந்திய சுதந்திரம் அடைய அவருக்கு உதவியதில் இந்த சம்பவங்கள் முக்கிய பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  5. காந்தி அவமானப் பட்டதும் நமக்கெல்லாம் நல்லதாக போச்சு ,இல்லையென்றால் நமக்கு மகாத்மா கிடைத்து இருக்க மாட்டாரே !
   த ம 4

   பதிலளிநீக்கு
  6. மகாத்மா பட்ட அவமானங்கள்....
   தேசப்பிதா பற்றி நல்ல கட்டுரை....

   பதிலளிநீக்கு
  7. அறிய செய்தி, நல்ல கட்டுரை.. வாழ்த்துக்கள்..

   பதிலளிநீக்கு
  8. தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே,

   பதிலளிநீக்கு
  9. நன்றி முரளி.
   சத்திய சோதனை வாசித்தேன் .
   ஆயினும் பலதடவை வாசிக்கலாம்.
   என் தந்தையார் காந்தி இறந்த போது பல புத்தகங்கள் செயதிப் பத்திரிகைகள்
   வாங்கி வைத்து எமக்கெல்லாம் காட்டிய நினைவு வருகிறது.
   இனிய வாழ்த்து.
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

   கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி ...

   ரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது எண்ணும்போது தேச மக்களுக்காக போராட வித்திட்டார் காந்தி மகான்.

   நானும் காந்தியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

   நன்றி.
   -மாறாத அன்புடன்,
   மணவை ஜேம்ஸ்.
   manavaijamestamilpandit.blogspot.in

   பதிலளிநீக்கு
  11. காந்தியின் அரசியல் பற்றி எனக்குச் சில மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. என்றாலும் தனிமனிதப் பண்புகளைக் கற்றுக்கொள்ள அவரிடம் இன்றும் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. தன்னடக்கம், துணிவு, அவரிடம் எனக்குப் பிடித்தவை. நீண்டநாள் கழித்து உங்கள தளத்திற்கு வரும் வாய்ப்புததந்த காந்திக்கு நன்றி. தொடருங்கள்.

   பதிலளிநீக்கு
  12. தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!

   பதிலளிநீக்கு

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895