என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்

   

   காந்தி ஒரு அதிசய மனிதர். அவர் பின்பற்றிய வழிமுறை,அவரது கொள்கைகள்,செயல்பாடுகள் இவற்றை ஆதரிப்போரும்  உண்டு . அவற்றை ஏற்றுக் கொள்ளாதவரும் உண்டு. ஏதோ ஒரு விதத்ததில் அதிகம் விவாதிக்கப்படும் மனிதராக இன்று வரை காந்தி விளங்குகிறார்.ஒவ்வொருவருக்கும் காந்தியைப்  பற்றிய கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்  இந்தியாவின் அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பதை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வர் . காந்தி போற்றுதலுக்கு உரியவராக விளங்குவதற்கு காரணம் தனது  பலவீனத்தையும் உண்மையாக உரைப்பதற்கு அவர் பெற்றிருந்த துணிவே.  
மக்களுக்காகப் போராடவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது முக்கியமான இரு சம்பவங்கள்

  ஒன்று தென்னாப்ரிக்காவில் ரயில் பயணத்தில் காந்திக்கு ஏற்பட அவமதிப்பு ( இது அனைவரும் பள்ளிப் பாடத்தில்படித்திருப்போம்) முதலில் அதைப் பார்த்து விடுவோம் 

 பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தும் இந்தியாவில் வழக்கறிஞராக சோபிக்க முடியாத காந்தி ஒரு கம்பெனியின் வழக்கு ஒன்றிற்கு உதவுதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு  அனுப்பப் பட்டார். அங்கு டர்பன் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு அவர் அறிமுகப் படுத்தப்பட்டார்.
அங்கு வந்த மாஜிஸ்ட்ரேட்  தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை வெறித்துப் பார்த்து தலைப்பாகையை எடுத்து விடும்படி கூறினார். காந்தியோ மறுத்து விட்டு நீதி மன்றத்திலிருந்து வெளியேறி விட்டார்
இதைப் பற்றி காந்தி 

    "தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு   எழுதினேன்.  கோர்ட்டில்   நான் தலைப்பாகை அணிந்திருந்தது  நியாயமே என்று வாதாடினேன்.   இவ்விஷயத்தைக் குறித்துப்    பத்திரிக்கைகளில்   பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிக்கைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன.
இவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே   இச்சம்பவம்  னக்கு   எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது.     சிலர் என்னை ஆதரித்தனர்; மற்றும்சிலரோ, “இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல்” என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்."
 நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசிவரையில்,   என் தலைப்பாகை  என்னிடம் இருந்தது......" என்று கூறுகிறார்

  பின்னர் அங்கிருந்து காந்தி பிரிட்டோரியா செல்ல நேரிட்டது  அப்போதுதான் அப்போதுதான் நாம அனைவரும் அறிந்த  அந்த சம்பவம் நடந்தது

காந்தி அதைஎவ்வாறு விவரிக்கிறார் என்று பார்ப்போம்

      ".....நான் சென்ற ரெயில்,      இரவு 9 மணிக்கு     நேட்டாலின் தலைநகரான     மாரிட்ஸ்பர்க் போய்ச்சேர்ந்தது.  அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒருரெயில்வே     சிப்பந்தி வந்து, எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார்.  “வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது” என்றேன். அவர் போய்விட்டார்.     ஆனால், வேறு ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்.      நான்,  கறுப்பு மனிதன்’ என்பதை அறிந்ததும்       அவருக்கு     ஆத்திரம் வந்துவிட்டது.  உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு  அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போகவேண்டும்” என்றார்.

     “என்னிடம் முதல் வகுப்பு   டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.

     “அதைப்பற்றி அக்கறையில்லை ;  நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.

     “நான் உமக்குச் சொல்லுகிறேன்.   இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே,   இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.


     “இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர்இறங்கிவிட வேண்டும்.     இல்லையானால்  உம்மைக் கீழே தள்ளப்
போலீஸ்காரனை அழைக்க வேண்டிவரும்” என்றார்.
 

  “அழைத்துக்கொள்ளும். நானாக இவ் வண்டியிலிருந்து  இறங்கமறுக்கிறேன்” என்று சொன்னேன்.

     போலீஸ்காரர் வந்தார்.    கையைப் பிடித்து இழுத்து என்னை  வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது.   போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு,        கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக்கொண்டு, பிரயாணிகள்     தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன்.     சாமான்கள் ரெயில்வே அதிகாரிகள் வசம்இருந்தன.

     அப்பொழுது குளிர்காலம்.   தென்னாப்பிரிக்காவில்       குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க்       உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக்  கடுமையாக இருந்தது.      என் மேல்  அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது.அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய்க்கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில்  விளக்கும் இல்லை.       நடுநிசியில்   ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச        விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

      என் கடமை என்ன என்பதைக்  குறித்துச்   சிந்திக்கலானேன். என்னுடைய    உரிமைகளுக்காக போராடுவதா,  இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா?   இல்லாவிடில்    அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல்   பிரிட்டோரியாவுக்குப் போய்,    வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறை வேற்றாமல்     இந்தியாவுக்கு     ஓடிவிடுவது   என்பது கோழைத்தனமாகும்.  எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது ;  நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி  மாத்திரமே அது. சாத்தியமானால்,   இந்த நோயை         அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும் ;   அதைச் செய்வதில்   துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப்  போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

     எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன்........"

     இப்படியாக அடுத்த வண்டியில் ப்ரிடோரியாவுகுப் போவது என்று முடிவு செய்தார். 

   இந்த சம்பவம் பற்றி புத்தகங்களில் படித்திருப்போம் . அவர் பிரிட்டோரியாவை அடையும்   முன்னமே அவரது உறுதியைக் குலைக்கும் வண்ணம் இன்னொரு சம்பவம் நடக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை ..

அப்படி என்னதான் நடந்தது




20 கருத்துகள்:

  1. அப்படி என்னதான் நடந்தது
    ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
    மதுரையில் சந்திப்போம் நண்பரே,,, எமது பதிவு
    http://killergee.blogspot.ae/2014/10/blog-post_2.html?showComment=1412276991809#c2495916440170783835

    பதிலளிநீக்கு
  2. என்ன நடந்தது?
    நானும் தொடர்கிறேன் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  3. தேசபிதா பற்றிய தொடர் அருமை. தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. மகாத்மா பற்றி அனைவரும் அறிய வேண்டிய செய்திகள்
    அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  5. ஆகா
    அடுத்த தொடரா?
    அருமை தொடர்க..
    இன்று
    அவர் இறக்கிவிடப்பட்ட அதே ஸ்டேசனில் அவருக்கு சிலை இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    முரளி (அண்ணா.)

    காந்தி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஒவ்வொரு படிமுறைகளையும் படிக்கும் போது நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கேன். த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    - ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதி இருக்கீங்க முரளி. தொடருங்கள்! :)

    --------------------------

    ஆனால் ஒன்னு முரளி, காந்தியை வெள்ளைக்காரன் மட்டமா நெனச்சான், துன்புறுத்தினான், கறுப்பர்னு சொன்னான். ஆனால் அவரை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லவில்லை!

    அவரை சுட்டுக் கொன்ற பெருமை, எந்த உயிரையும் கொல்வது பாவம், மாமிசம் தின்பது பாவம் என்று நினைக்கின்ற ஒரு "அப்பாவி"தான்.

    நாங்க ரொம்ப அப்பாவிங்க..பகவத்கீதை படிப்போம், இறைவனை பாட்டுப்பாடி தூங்க வைப்போம், ஆனால் கருத்து வேறுபாடுனு வந்துவிட்டால், காந்தினா என்ன சங்கர் ராமன்னா என்ன போட்டுத் தள்ளிடுவோம்! :)))))

    சரி சரி, விருந்தினர்களும், ஹோஸ்ட்டும் பின்னூட்டத்தில் இந்தப் பகுதியை படிக்காதமாரித் தொடருங்கள்! :)

    பதிலளிநீக்கு
  8. என்ன நடந்தது வரட்டும்! படிப்பேன்!சரி தங்களைக் காண வில்லையே! ஏன்! என்ன நடந்தது?

    பதிலளிநீக்கு
  9. விமர்சனம் எழுதியுள்ளேன். வந்ததா? என்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் முரளி காந்தி என்றாலேயே பென் கிங்ஸ்லீயின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு காந்தியைப் பற்றி திரைப்படம் எடுத்த அட்டென்பரோ வுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கடமைப் பட்டிருக்கிறோம் காந்தியின் சுய சரிதையைப் பல முறைபடித்தாலும் தெரிந்து கொள்ள நிறையவே இருக்கிறது. காந்தியை நேரில் தரிசித்ததை மறக்க முடியாது. வாழ்த்துக்கள் காந்தி பற்றித் தொடரே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  11. மிகவும் நல்ல பகிர்வு... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  12. ஆஹா ,காந்தி வரலாற்றிலும் சஸ்பென்சா ?தொடருங்கள் ..காத்திருக்கிறேன் !
    த ம 7

    பதிலளிநீக்கு
  13. டர்பன் கட்டிருந்ததால டர்பன் ல பிரச்சனையா????
    காமராஜருக்கு அப்புறம் இப்போ காந்தியோடு வெகு நாள் கழித்து வந்திருக்கும் அண்ணா நலம் தானே?:) தொடருங்க அண்ணா, அடுத்து அப்டி என்ன தான் நடந்துச்சு ????

    பதிலளிநீக்கு
  14. காந்தி மகானின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைக் காண
    மனம் ஏங்கும் அந்த வகையில் இத் தொடர் அறியாத பல தகவல்களையும்
    அறியத் தந்து செல்வது சிறப்பு !பாராட்டுக்கள் சகோதரா தொடருங்கள்
    நாமும் தொடர்கின்றோம் .

    பதிலளிநீக்கு
  15. திலுடன் அடுத்த அங்கம் எதிர்பார்த்து......

    பதிலளிநீக்கு
  16. அறியாத தகவல்கள். மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் பதிவு!
    வாழ்த்துக்கள்!

    தொடருங்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள முரளிதரன்

    வணக்கம். இது படிதத சம்பவம் என்றாலும் ஒவ்வொரு இந்தியனாலும் மறக்கமுடியாத வலி இது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895