என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்? பகுதி 2


  நியூட்டன் ப்ளாம்ஸ்டீட் டை படுத்திய பாட்டை படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
அதன்  தொடர்ச்சியே இந்தப் பதிவு.நியூட்டனை இழிவு படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ எழுதப் பட்டது அல்ல
நியூட்டன் இல்லாமல் அறிவியலை நினைத்துப் பார்க்க முடியாது . முக்கிய துறைகள் அனைத்திலும் அவரது கோட்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. அவர் எழுதிய நூல் அறிவியல் உலகில் ஒரு  புரட்சியை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களை மெய்ப்பிக்க பிற விஞ்ஞானிகளின் தரவுகளும் அவருக்கு தேவைப்பட்டன.

    அறிவு மிகுந்தவரான நியூட்டன் இனிமை மிக்கவராக இருக்கவில்லை. மற்ற விஞ்ஞானிகளுடன் எப்போதும் காரசாரமாக மோதிக் கொண்டிருந்தார்.அவர் ராயல் சொசைடியில் உறுப்பினராக இருந்த போதே அப்போது அதன்  முக்கிய பொறுப்பின் இருந்த  விஞ்ஞானி ராபர்ட் ஹூக்குடன்( இவரும் சிறந்த விஞ்ஞானி  Micrographia என்ற , இவரது நூல் புகழ் பெற்றது . செல் என்ற வாத்தையை உருவாக்கியவர் இவரே. புவி ஈர்ப்பு தொடர்பான ஆய்வுகளும் கோள்களையும் ஆராய்ந்தவர்) மோதல் தொடங்கி விட்டது. சாதாரன மனிதரில் தொடங்கி பேரறிஞர்கள் வரை பொறாமையின் பிடியில் சிக்காதவர் யாரும் இல்லை என்றுஆதான் வரலாறு தெரிவிக்கிறது. அப்படித்தான்  ராபர்ட் ஹூக் நியூட்டன் மீது பொறாமை கொண்டதாக தெரிகிறது. நியூட்டனுக்கும் ஹூக்குக்கும் கருத்து மோதல் ஆரம்பித்தது. ஒளி பற்றி இருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறினர். ஒளி துகள்களால் ஆனது என்றார் நியூட்டன். அது தவறு ஒளி அலைகளாக பயணிக்கிறது  என்றார் ஹூக் . நியூட்டனின் சோதனைகளையும் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்தார் . மற்ற விஞ்ஞானிகளையும் தூண்டிவிட முனைந்தார். கடுமையான கோபம் கொண்டார் நியூட்டன். ஹூக்கின் எதிர்ப்புகளை புறக்கணித்து விட்டு   Theory of Light and Colours”என்ற கட்டுரையை  ராயல் சொசைடி பத்திரிகையில் பிரசுரித்து விட்டார்.  இருவரும் தங்களுக்கென்று ஆதரவாளர்களைக் கொண்டிருந்தனர். ஆனால் நியூட்டனின் கையே மேலோங்கியது. ராயல் சொசைடியை விட்டு வெளியேறுவேன் என்று மிரட்டினார் நியூட்டன். சமாதனம் செய்யப்பட்டார் நியூட்டன் .ஆனாலும் இவர்களுக்கிடையே சுமுகமான உறவு ஏற்படவே இல்லை.,கைகலப்பில் ஈடுபடாத குறைதான்.

   1676இல் ஹூக் நியூட்டன் தனது  Micrographia ல் என்ற நூலில் இருந்து ஒளி பற்றிய கருத்துக்களை கருத்து திருட்டு செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். ஹூக்கின் தரவுகளை  தனது நூலில் குறிப்பிட முதலில் விரும்பினாலும் தொடர்ந்த ஹூக்கின் தொல்லை காரணமாக Principia மூன்றாவது பதிப்பில் அவற்றை மறைக்க முடிவு செய்தார். நியூட்டனின் நண்பர் எட்மன்ட் ஹாலீ சமாதானம் செய்தார். அரை மனதுடன் ஹூக்கின் தரவுகளை சுட்டிக் காட்டினார் என்று கூறப் படுகிறது. நியூட்டனுடனான மோதலில் வெல்ல முடியாத ஹூக் மனம் தளர்ந்து போனார். 1703 இல் ஹூக் இறந்து போக அதே ஆண்டில் ராயல் சொசைடி யின் தலைவர் ஆனார் நியூட்டன். அவர் இறந்தபின்னும் அவர் மீதான வன்மம் குறையவில்லை நியூட்டனுக்கு . தலைவரானதும் அவர் செய்த முதல் காரியம் ராயல் சொசைடி இல் மாட்டி வைக்கப் பட்டிருந்த அவரது ஒரே  உருவப் படத்தை (Portrait) அகற்றியதுதான். ( நம்ம ஊர் அரசியல் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல . இங்க்லீஷ் காரன் இங்க்லீஷ்காரன்தான்  காரன்தான் எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கானே!) அகற்றியதோடு விடவில்லையாம்.  அதனை  எரியும் நெருப்பில் வீசி எறிந்து விட்டு வைன் குடித்துக் கொண்டே மகிழ்ச்சியோடு   ஹூக் படம் எரியும் காட்சியை ரசித்தாராம்.  நியூட்டனின் ஆதரவாளர்கள் ஹூக்கின் படம்   யதேச்சையாகத்தான் காணாமல் போனது  நியூட்டன் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஹூக்குக்கு முன்னரும் பினரும் வந்தவர்களின் படங்கள் இருக்க இது மட்டும் எப்படிக் காணாமல் போகும் என்று ஒரு கோஷ்டியினர் நியூட்டன் மீது குற்றம் சுமத்தினர். ஆனால்  இதுவரை அந்த உருவப் படம் கிடைக்க வில்லை. அவர் இறந்தபின்அவரது சம காலத்தவர்களான ஆப்ரே மற்றும் வாலர் இருவரின் ஹூக் பற்றிய வடிவ அமைப்பின் வர்ணனையை வைத்து ரீட்டா கீர் என்பவர் பிற்காலத்தில் வரைந்த ஓவியமே கீழே உள்ளது .

13 Portrait of Robert Hooke.JPG

    ராபர்ட் ஹூக்கோடு நின்று விட்டதா நியூட்டனின் மோதல் குணம் என்றால் இல்லை.ஹைஜன்ஸ், லேப்னைஸ் என்று தொடர்ந்தது. (ராபர் ட் ஹூக் மோதலில் ஈடுபட்ட இன்னொரு ஆசாமி லெபனைஸ்)
ஜெர்மனியை சேர்ந்த  காட்ஃப்ரைட் வில்ஹெம் லெபனைஸ் என்ற கணிதமேதையுடன்  கொண்ட மோதல் பிரபலமானது. அப்படி என்ன இருவருக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு?

   கணக்கில் கால்குலஸ்  (நுண் கணிதம் )என்று உண்டு.கணக்கு பாடத்தை விரும்புபவர்களைக் கூட கலங்க வைக்கும் கணக்குப் பிரிவுதான் கால்குலஸ். அதை யார் முதலில் கண்டுபிடித்தது என்பதில்தான் இருவருக்கும் சண்டை
      அற்ப லிங்கா கதைக்கே எனது உனது என்று முட்டிக் கொண்டார்கள் என்றால் கணக்கில் புரட்சியை ஏற்படுத்திய கால்குலசை கண்டுபிடித்த உரிமையை விட்டுக் கொடுப்பார்களா என்ன? கச்சைகட்டிக்கொண்டு கோதாவில் இறங்காத குறையாக சண்டை போட்டுக் கொண்டார்கள்.   கால்குலசை 1675 இல் கண்டறிந்த போதும் 1684 இல்தான் இவரது நூல்  வெளியிடப்பட்டது. 

   நியூட்டனும் நுண் கணிதம் பற்றி தனது நூலில் தெரிவித்துள்ளார் . நியூட்டனின் நூல் லெபனிசின் நூலுக்குப் பிறகே வெளியானது. முன்னதாகவே இதைப் பற்றிய குறிப்புகளை நான் வைத்திருந்தேன். அதை அபகரித்துக் கொண்டார் லெபனைஸ் என்று குற்றம் சாட்டினார் நியூட்டன். 1672 இல் லண்டனுக்கு வந்திருந்தார் லெபனைஸ். அப்போது நியூட்டனின் கால்குலஸ் பற்றிய தகவல்களை  சேகரித்து சென்றிருக்கலாம்  என்கிறார்கள்  நியூட்டனின் ஆதரவாளர்கள்
\   லண்டன் விஜயத்தின்போது நியூட்டனைப் பற்றி கேள்வி பட்டிருந்தாலும் அவரை சந்திக்கவில்லை. அவரது வெளியீடுகள் எதனையும் படிக்கவும் இல்லை.உண்மையில் நியூட்டனின் கால்குலஸ் குறிப்புகள் நூல் அச்சமயம் வெளியிடப் படவில்லை. பல ஆண்டுகள் கழித்தே நியூட்டனின் நூல் வெளியிடப் பட்டது . இரு பக்கத்திலும் சூடான விவாதங்கள் ஆதரித்தும் எதிர்த்தும் எழுந்தன.  

      பத்திரிகைகளில் பல்வேறு தரப்பினர்  நியூட்டனுக்கு ஆதரவாக  எழுதினர். இதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால் இக்கட்டுரைகள் அனைத்தும் நியூட்டனால் எழுதப்பட்டு அவரது நண்பர்கள் பெயரில் வெளியிடப் பட்டது. நியூட்டன், லெபனைஸ் மீது கருத்து திருட்டு(Plagiarsim)  குற்றம் சாட்டினார் .   பூசல்கள் வளர்ந்தன. தனது கண்டுபிடிப்பின்மீது நம்பிக்கை கொண்ட லெபனைஸ் இந்தப் பூசலுக்கான தீர்வு காண ராயல் சொசைடியிடமே முறையிட்டார். 
     இது முட்டாள் தனமான முடிவாக கருதப் பட்டது . எதிரியிடமே நீதி வழங்கக் கோரினால் என்ன நடக்கும்? நியூட்டன்தானே அதன் தலைவர்? நேர்மையாக நடந்துகொள்வது போல நடுநிலையான ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். குழு உறுப்பினர்கள் அனைவருமே  நியூட்டனின் ஆதரவாளர்கள். விசாரணைக் குழு டம்மியாக உட்கார்ந்திருக்க விசரணை அறிக்கை அனைத்தையும் தானே எழுதி ராயல் சொசைடியின் பெயரில் வெளியிட்டு தான் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல அரசியல் வாதியும்கூட என்பதை நிரூபித்தார் நியூட்டன். அந்த அறிக்கை லெபனைஸ் கருத்துக் களவு செய்தார்(plagiarism) உறுதியாக உரைத்தது. லெபனிஸ் மனமுடைந்து போனார். அதோடு நியூட்டன்  திருப்தி அடைந்தாரா என்றால் இல்லை. ராயல் சொசைட்டியின் ஏட்டில் விசாரணை அறிக்கை பற்றிய கட்டுரை ஒன்றை  பெயர் குறிப்பிடாமல் தானே எழுதினாராம்.
இதெல்லாம் விடுங்கள்! 1716 இல் லெபனைஸ் இறந்தபோது நியூட்டன் சொன்னவை என்ன தெரியுமா?
"லெபனைசின் இதயத்தை நொறுக்கியதில் நான் அளவிலா மன நிறைவு பெற்றேன்"என்றாராம் 
(என்னா வில்லத்தனம்!)
கணிதத்திற்கு அருஞ்சேவை செய்த  லெபனைஸ் ராயல் சொசைட்டியின் ஆயுட்கால உறுப்பினராக   இருந்தாலும் அவர் இறப்பின்போது அதன் சார்பாக இரங்கல் செய்தி கூட ஏதும் வெளியிடப்படவில்லை.

 பிற்காலத்தில் நியூட்டன்  லெபனைஸ் இருவருமே யாரும் யாருடைய கண்டுபிடிப்பையும் அபகரிக்கவில்லை என ஏற்றுக் கொள்ளப்பட்டது இருவரது முறைகளிலும் ஒற்றுமைகள் இருந்தாலும் வேறுபாடுகள் அதிகம் இருந்தன. கால்குலஸ் குறியீடுகள் அமைப்பில் லெபனிஸ் அமைத்த முறையே இன்றும் பின்பற்றப் படுகிறது. தற்போது இருவருமே கால்குலசை  கண்டுபிடித்ததாக குறிப்பிடப் படுகிறது 

     1900 இல் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்  மற்றும் கவுடரட் என்பவர் லெபனிஸ் பற்றி எழுதிய  நூல்கள் லெபனிஸ்  மீதான ஆங்கிலேயர்களின் எண்ணத்தை மாற்றி அமைத்தது.

பல அரிய கண்டுபிடிப்புகளை அளித்த விஞ்ஞானிகள் எல்லாம் மேதைகள்தான். ஆனால் அவர்கள் நற்பண்புகள் உள்ளவர்களாக இருந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சரித்திரம் கூறுகிறது.

***************************************************************************

அடுத்த விஞ்ஞான வில்லன் யார்?   விரைவில் .





25 கருத்துகள்:

  1. அட நியூட்டனும் இப்படியா?, புதிய தகவல் பகிர்வு நன்றி அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  2. அடப்பாவி மக்கா..... இம்பூட்டு ஈகோ புடிச்ச ஆளா அவுரு! மேதையிலும் பேதை!

    பதிலளிநீக்கு
  3. படிக்க்ப் படிக்க வியப்புதான் மேலிடுகிறது ஐயா
    நீயூட்டனுமா?
    தம +1

    பதிலளிநீக்கு
  4. ஆழமாக விவாதித்துவிட்டு, இறுதியில் நச்சென்று ஒரே வரியில் முடித்துவிட்டீர்கள். மனிதர்கள்தாமே?

    பதிலளிநீக்கு
  5. அடக் கொடுமையே... மனம் முழுவதும் வஞ்சகமா...?

    பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வர வேண்டும் தோழா...
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வர வேண்டும் தோழா...

    பதிலளிநீக்கு
  6. மேதைகளும் சில நேரம் பேதைகளே என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அளவுக்கு வில்லத்தனமாகவெலலாம் நடந்திப்பதை அறிந்து வருத்தமாகத்தான் இருக்கிறது. மனம் விசாலமாகாமல், மண்டைமட்டும் விசாலமானால் வரும் சிக்கல் இதுதான். நம் ஊரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினைதான்! கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள்..மனுசன்னா இப்பிடித்தான் பா. எல்லாவற்றிலும் சிறந்த மனிதரும் கிடையாது, எல்லாவற்றிலும் மோசமான மனிதரும் கிடையாதுதான் போல.. “குணம் நாடி, குற்றமும் நாடி..?“ (லிங்கா உதாரணம், நம் ஊர் அரசியலை நினைவூட்டலும்தான் முரளியின் பஞ்ச்..!) அழகு

    பதிலளிநீக்கு
  7. நான் அறியாத அரிய தகவல்களைத் தந்ததற்காக பிடியுங்கள் முரளி த.ம.6

    பதிலளிநீக்கு
  8. இதென்ன அக்கிரமம். இங்கு தனி முன்னுரிமை.
    சிறப்பு மரியாதை போன்றவைதான் இல்லை.ஒரு நபர் ஒரு ஓட்டு தான் போடலாம் என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. எனக்கு ஒரு ஓட்டுக்கு மேல் அனுமதி இல்லை என்பதால் 1 ஓட்டு மட்டுமே செலுத்தியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  9. இவ்வளவும் செய்தது, உலகம் போற்றும் நியூட்டனா,டவுட்டாவே இருக்கு ,நம்ப முடியவில்லை ,இல்லை.இல்லை :)
    த ம 9

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    முரளி(அண்ணா)

    இப்படியான வஞ்சகமா... அறியவில்லை.. நான் தங்களின் பதிவு வழி அறிந்தேன்.. அதுவும் விரிவாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.. அண்ணா.
    த.ம10
    எனதுபக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. தாமஸ் ஆல்வா எடிசனும் அக்கிரமம் பிடித்த ஆசாமிதான். முரளிதரன் எழுதுவார் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. அதே ராயல் சொசைட்டி யில் ஹம்ப்ரி டேவிஸ் அவர்கள் மைகேல் பாரடே அவர்களை எப்படி பாடாய்ப்படுத்தினார், அதை எல்லாம் வெற்றிகொன்டு எப்படி மைகேல் பாரடே அதே ராயல் சொசைட்டியினநலைவர் ஆனார் என்பது மிக சுவாரஸ்ய்மானது ஆகும்.
    அதை விலாவாரியாக எழுதுங்கள் முரளிதரன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  13. அதேபோல அல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் நீல்ஸ் போர் இவர்களுக்கிடையே ஆன சண்டை (குவாண்ட்டம் அறிவியல் கொள்கையில்தான்) உலக பிரசித்தி பெற்றதாகும்..

    பதிலளிநீக்கு
  14. மிகவும் கொடூரம் ஐயா, நம்ம ஊர் தலைவர்களின் இலட்சணங்களையும் கொஞ்சம் எழுதுங்கள்......காத்திருக்கிறோம்..........

    பதிலளிநீக்கு
  15. //அனைவருமே வருமே நியூட்டனின் ஆதரவாளர்கள்// ஒரு வருமே தூக்கவும்

    பதிலளிநீக்கு
  16. தொடர் பட்டய கிளப்புது ..
    இன்றும் உயர்கல்வியில் இருக்கும் அரசியல் உங்களுக்குத் தெரிந்தால் எண்ணற்ற திரைக்கதைகள் உருவாகும்... நன்றி
    தம+

    பதிலளிநீக்கு
  17. நண்பர் முரளி,

    நியூட்டன் பற்றிய அதிகம் அறிந்திராத பக்கத்தை எழுதியது குறித்து பாராட்டுக்கள். இதுபோன்று பல மேதைகளுக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நியூட்டன் பற்றிய மற்றொரு அரிய தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்பம்.

    Coitophobia எனப்படும் செக்ஸ் பயம் கொண்டவர் நியூட்டன். அதனால்தான் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை என்று சொல்வார்கள். இதை விட அவர் இதுபோன்ற உலக சங்கதிகளில் அதிகம் நாட்டம் கொண்டவர் இல்லை என்று கூட கருத்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. அப்சலியூட் வில்லத்தனம் என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் நவீன தமிழ் படைக்க முயல்கின்றீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹா மன்னிக்கவும் .இந்தப் பதிவிற்காக பல ஆங்கில இனைய தளங்களை ஒரு வலம் வரவேண்டி இருந்ததால் அதன் தாக்கத்தில் எழுதப் பட்டுவிட்டது மாற்றி விடுகிறேன் .

      நீக்கு
  19. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  20. விஞ்ஞானியெல்லாம் புனிதமானவர்கள்னு நினைத்துக் கொண்டு இருந்தால் அது யார் தப்பு?

    அறிவியல் புனிதமானது.

    அறிவிலாளன் அப்படி புனிதமானவன் கெடையாது. இதைப் பத்தி பல தருணங்களில் பேசியாச்சு..

    அதென்ன "அற்ப லிங்கா?" பாவம் லிங்காவால் ஏகப்பட்ட வாத்திகள் கன்னா பின்னானு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல இருக்கு. படம் பார்க்காமல் விமர்சனம் எழுதுறது. இல்லைனா ஏதாவது இப்படி எதுக்கெடுத்தாலும் சம்மந்தா தம்மந்தம் இல்லாமல் அற்பத்தனமா "பாட் ஷாட்" எடுக்கிறது.


    ஆமா திருட்டுனு வந்துவிட்டால் அதென்ன "உயர் திருட்டு" "சின்னத் திருட்டு"????
    ஹாலிவுட் குப்பை தொட்டியிலிருந்து ஒலக நாயகன் திருடிக்கொண்டு வந்ததெல்லாம் "உலகமஹா" திருட்டாக்கும்?

    ----------------------

    Anyway, Recently George Olah and few others and H C Brown had an opinion difference about "non classical carbonium ion".

    Also, E J Corey and Barry Sharpless (both are still alive) had similar problems about Mechanism of Sharpless epoxidation. They HATE each other. They even make fun them with their coworkers. I heard my friend who worked for Sharpless telling about what kind of comments Sharpless used make on E J Corey. All these guys are Nobel prize winners. Big shots! They have opinion difference on some concepts. They will keep publishing papers supporting their beliefs. However, such issues get settled in the future. The truth wins eventually. Later developments in Science proves that one of them is wrong. Science never goes wrong. Only scientists go wrong and misinterpret their results based on what they believe. People who are in the scientific field knows the ugly part of scientists but not science. science is always beautiful.

    One of the Indian scientists got credit for a major discovery. I can not name him here. I mean, people will say, such and such thing is discovered by this guy. But if you dig deep into that people who worked with him but have little power will tell you who really discovered it. People do not feel ashamed of taking credit for someone else discovery. Scientists are human beings. They do have ugly part besides the one we see. People those who interact with them closely do know such things.

    In any case, I can not judge Newton or Hooke (who is good and who is bad) from the stories we hear- which you have translated in Tamil. The story is written based on who is the author of the article. Let me tell in a language which you can understand. We can not judge quality of Lingaa hearing the stories from you or some other teachers around here who hate some actors

    பதிலளிநீக்கு
  21. எல்லாமனிதர்களுக்கும் மறுபுறம் உண்டு. இதில் யாரும் விதிவிலக்கு இல்லை. அவர்கள் மனிதர்கள் மட்டுமே. நாம்தான் மகான்களாக்குகிறோம்.

    பதிலளிநீக்கு
  22. அடேங்கப்பா.. இந்த ஐசக் நியூட்டன் அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா.....?

    பதிலளிநீக்கு
  23. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நற்குணங்களும் தீய குணங்களும் உண்டு என்பதை இவரும் புரிய வைக்கிறார்..... :)

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. பலரும் அறிய தகவல்கள்! தந்த தங்களுக்கு வாழ்த்துகள்! மேலும் தருக!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895