என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு முன்பைவிட அதிகரித்திருக்கிறது  தமிழில் பல்லாயிரக்கணக்கான இணைய தளங்கள் இணைய சேவைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் தேடும் வசதிகளும் மேபடுத்தப் பட்டுள்ளன. இணையத் தமிழ் பயன்பாட்டை நல்ல விதமாக பயன்படுத்துபவர்களை விட ஆபாசம் பாலியல் தூண்டல் போன்றவற்றிற்கே அதிகம் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சமும் கூகுளில் தமிழில்தேடுதல் மேற்கொள்ளும்போது ஏற்படுகிறது.இந்த கூகுளில் தமிழில் தட்டச்சு செய்து தேடுதல் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். அம்மா அப்பா,தங்கை அத்தை என்று உறவுமுறையை தப்பித் தவறிக் கூட தட்டச்சு செய்துவிடக் கூடாது  அவ்வளவுதான் ஏராளமான தமிழின் ஆபாச தளங்களை பட்டியலிட்டுக் காட்டிவிடும். தமிழ் எழுத்தாளர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடும்.இவை கூகுளின் Content Policy க்கு எதிரானது என்றாலும் தடுக்க இயலவில்லை. இவற்றை தடை செய்ய அல்லது கட்டுக்குள் கொண்டு வர முடிவதில்லை. கூகுள் பல்வேறு மொழிகளில் வலைப்பதிவுகளை அனுமதிப்பதால் ஒவ்வொன்றின் உள்ளடக்கத்தையும் தணிக்கை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது . புகார் கொடுக்கப்பட்டால் வலைப்பதிவுகள் கூகுளால் நீக்கப் பட்டுவந்தன . எத்தனை முறை நீக்கினாலும் அதனை விட வேகமாக புதியவை முளைத்து விடுகின்றன. கூகுள் அவ்வப்போது எச்சரிக்கை செய்து  கொண்டுதான் இருக்கிறது.
    இரண்டு மூன்று  நாட்களுக்கு முன் ஒரு பதிவை போஸ்ட் செய்வதற்காக ப்ளாக்கரில் நுழையும் போது கூகுள் டேஷ் போர்டில் கீழ்க்கண்டவாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


இம்முறை 23 மார்ச் 2015 முதல்  ப்ளாக்கில் வெளிப்படையாக பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை  கட்டாயம் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளது கூகுள். ஆனால் நிர்வாணப் படங்கள்  கலையுணர்வு கல்வி,ஆவணப் படங்கள் , அறிவியல் விளக்கங்கள் போன்றவற்றிற்காக மட்டும் பயன்படுத்தப்பட அனுமதிக்கப் படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மார்ச் 23 க்குப் பிறகு என்ன நடக்கும்?. ஏற்கனவே பழைய பிளாக்கர் வலைப் பதிவுகளில் ஆபாசப் படங்களோ வீடியோக்களாக இருந்தால் உங்கள் வலைப் பதிவு ப்ரைவேட்டாக மாற்றப்படும். அதாவது இவ்வலைப் பதிவுகளை அதன் உரிமையாளர் மட்டுமே காணமுடியும்.மற்ற வலைப்பதிவுகளை காண்பது போல அனைவரும் காணமுடியாது . மார்ச் 23 க்கு முன்னதாக் ப்ளாக் தொடங்கியவர்கள் கூகுளின் இந்தக் கொள்கைக்கு மாறாக உள்ள ஆபாச படங்களையும் வீடியோக்களையும் நீங்களே நீக்கி விடுங்கள் அல்லது  உங்கள் வலைப்பதிவை  யாரும் பார்க்க முடியாத படி ப்ரைவேட்டாக மாற்றிவிடுங்கள் என்று எச்சரித்துள்ளது. உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே ஏற்கனவே கூகுள் விதிமுறைகள் வகுத்துள்ளன . அவற்றை அறிய விரும்பினால் இங்கே செல்லவும் நீங்கள் காணும் பிளாக்கர் வலைப்பூவின் உள்ளடக்கம் ஆபாசம், பாலியல் தூண்டல் வன்முறை முதலியவற்றை கொண்டதாக அமைந்து நீக்கவோ தடை செய்யவேண்டியது என்று நீங்கள் கருதினால்
https://support.google.com/blogger/answer/76314 என்ற இணைப்பிற்கு சென்று அங்கு ஆட்சேபத்துக்குரிய வலைப்பூவின் முகவரியை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூகுள் கூறியுள்ளது 


இவை ப்ளாக்கர் வலைப்பூகளுக்கு மட்டுமே பொருந்தும்.Wordpress போன்றவற்றிற்கு பொருந்தாது 

என்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.
ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்?


****************************************************************  


25 கருத்துகள்:

  1. வரேவேற்க கூடிய விடயம் வாழ்க இன்றைய இளைய சமூகத்தினர்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. நல்ல விஷயம். இதுக்கு ஏன் மார்ச் 23 வரை காத்திருக்கணும். இப்பவே தடை செய்தால் வலை சுத்தமாக இருக்குமே!

    பதிலளிநீக்கு
  3. அப்படி கூகில் நடந்து கொண்டால் அதைவிட ஆபாசம் வேறில்லை.

    பதிலளிநீக்கு
  4. அப்படி கூகில் நடந்து கொண்டால் அதைவிட ஆபாசம் வேறில்லை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல விஷயம்.... நானும் டாஸ்போர்டில் பார்த்தேன்.
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  6. நல்லவிடயம் ஆனால் செயல்பாடு எந்தளவு வெற்றியடையும் என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. கூகிளின் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. விவரமாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  8. தமிழ் வலைப் பதிவுகளில் ஆபாசம் இருக்கிறதா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா!உங்கள் பார்வை தருமர் பார்வை போல் இருக்கிறது. நல்லதே கண்ணுக்குத் தெரிகிறது

      நீக்கு
  9. வணக்கம்
    அண்ணா.

    தகவலை பகிர்தமைக்கு நன்றி... எந்தளவு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. கூகுள் எடுத்திருப்பது நல்ல முடிவு. அதை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரெ!

    பதிலளிநீக்கு
  11. தமிழ் திரட்டிகள் பலவற்றிலும் ஆபாசப் பதிவுகள் இடம் பெறுகின்றன .அவை தானாக திரட்டப் படுவதாலா ,இல்லை வேண்டுமென்றேதான் வெளியாகின்றனவா என்று தெரியவில்லை !கூகுளில் நல்லதே நடக்குமென்று நம்புவோம் !
    த ம 7

    பதிலளிநீக்கு
  12. ***I hear, google reversed the decision..

    http://www.theverge.com/2015/2/27/8119553/blogger-adult-content-ban-reversed***

    உடனே கெட்ட செய்தி கொண்டுவந்ததுக்காக ஆளாளுக்கு என்னைத் திட்ட ஆரம்பிச்சுடாதீங்கப்பா! :)))

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் பயனுள்ள வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி. தாங்கள் கூறுவதுபோல தனிமனிதன் திருந்தினால்தான் இவையெல்லாம் சாத்தியப்படும்.

    பதிலளிநீக்கு
  14. இந்தச் செய்தியை ஏற்கெனவே படித்தேன். வியாழன்வரை எனக்கு ப்ளாக் போஸ்ட் செய்யும்போது இந்தச் செய்தி இன்னும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  15. வருண் கொடுத்துள்ள லிங்க் இன்னும் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  16. நல்ல செய்தி.தொடர்ந்து நீங்களும் எழுதுங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  17. நல்ல செய்தி ஐயா
    வாழ்த்தி வரவேற்போம்
    தம +1

    பதிலளிநீக்கு
  18. "என்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.
    ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்?" என்ற தங்கள் முடிவுரையே எனது கருத்தாகும்

    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் முரளி அய்யா. ஒருவாரம் முன்னதாக எனது பதிவொன்றை வலையேற்றும் போது இப்படி ஒரு செய்தி வந்தது. ஆனால், அதுபற்றி -நம்தளத்தில் அப்படி ஏதும் இல்லையே என்று - கவலைப்படாமல் விட்டுவிட்டேன். ஆனால் நமக்கு மட்டுமா இந்தச் செய்தி என்று ஒரு சந்தேகம் இருந்தது.. இப்போதுதான் புரிகிறது. நல்லதொரு பகிர்வுப் பதிவு. நல்ல செய்திதான். வரவேற்போம். நல்லதே நடக்கட்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள அய்யா,

    ஆபாசப் படங்களுக்கு மார்ச் மாதம் முதல் வருகிறது ஆப்பு என்ற நல்ல செய்தியைச் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. இது போன்ற விடயங்களை விழிப்புணர்வு தரும் வகையில் தந்தமைக்கு மிக்க நன்றி!
    அம்மா போன்ற வார்த்தை பதிவில் இடம் பெறாதிருக்க சொல்லும் நிலைக்கு கொண்டு வந்த நிலை மிக்க வேதனையை தருகின்றது.
    த ம 14
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895