அக்டோபர் இரண்டு அன்று வெளியிட்ட காந்தி பதிவின் பதிவின் தொடர்ச்சி
முந்தைய பதிவை படிக்காதவர்கள் க்ளிக் செய்க
**************
முந்தைய பதிவின் தொடர்ச்சி
தவறை ஒப்புக் கொள்வதற்கு காந்தி கட்டாயப் படுத்தியதை கட்சிக்காரர் விரும்பவில்லை எனினும் ஏற்றுக் கொண்டார். .காந்திக்கு தான் கூறிய யோசனை சிறந்தது என்ற நம்பிக்கை இருந்தாலும் சரியானபடி இந்த வழக்கை நடத்த முடியுமா என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடுவர்கள் முன் எழுந்து நின்று தன கட்சிக் காரரின் கணக்கில் உள்ள தவறை நடுங்கிக் கொண்டே கூறி விட்டார் .நீதி பதிகளில் ஒருவர் "இது மோசடி வேலை அல்லவா? ஸ்ரீ காந்தி என்று கேட்டார். காந்தியின் உள்ளம் கொதித்தது. 'மோசடி வேலை செய்திர்ப்பதாக குற்றம் சாடுவது சகிக்க முடியாதது. இப்படி ஆரம்பத்திலேயே ஒரு நீதி பதி துவேஷம் கொண்டிருக்கும்போது இவழக்கில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் காந்தி
பிறகு தைரியமாக நீதிபதியை நோக்கி "நான் கூறுவதை முழுவதும கேட்காமல் இது
மோசடி வேலை என்று நீதிபதி அவர்கள் கூறுவது ஆச்சர்யம அளிக்கிறது " என்றார்
நீதிபதி கொஞ்சம் சமாதானமாக " அப்படி நான் குற்றம் சாட்டவில்லை
நீதிபதி கொஞ்சம் சமாதானமாக " அப்படி நான் குற்றம் சாட்டவில்லை
அது மாதிரி இருக்குமோ என்ற யோசனை தான் ” என்றார்
”அப்படி யோசிப்பது குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும் முழுவதும் கேட்டுவிட்டு பின்னர் காரணம் இருந்தால் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்”என்றார் காந்தி
இடையில் குறுக்கிடுவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதி காந்தி தனது விளக்கத்தை தொடர்ந்து அளிக்க அனுமதித்தார்
நீதிபதி ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சனையை கிளப்பியது நல்லதாயிற்று என்று நினைத்த காந்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு விளக்கினார். கவனமாக கேட்ட நீதிபதிகள் கணக்கில் ஏற்பட்ட தவறுகள் கவனக்குறைவால் ஏற்பட்டதே அன்றி வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தனர் . தவறு ஒப்புக் கொள்ளப் பட்ட படியால் தாம் அதிகமாக வாதம் செய்ய வேண்டியதில்லை என எதிர்தரப்பு வக்கீல் நினைத்தார். நீதிபதிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர் .காந்தியின் தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள் கணக்கிலிருந்த தவறை காந்தி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று எதிர்தரப்பு வக்கீலை கேட்டார் நீதிபதி. அதற்கு வக்கீல் சொன்ன பதிலால் திருப்தி அடையவில்லை நீதிபதிகள்
"சிறு தவறைத் தவிர வேறெதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை. இந்த சிறு தவறுக்கு வழக்கை நடத்தும்படியும் கட்சிக் காரர்களை செலவு செய்யும்படியும் கட்டாயப் படுத்த கோர்ட்டுவிரும்பவில்லை. எளிதில் சரி செய்யக் கூடிய தவறுக்காக வழக்கு தொடர வேண்டாம் " என்று காந்திக்கு சாதகமாக வழக்கை முடித்தனர் நீதிபதிகள்
கட்சிக்காரர்,மற்றும் பெரிய வக்கீலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் .
உண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழில் நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற நம்பிக்கை காந்திக்கு உண்டாயிற்று
எனினும் அத்தொழிலை சீரழித்து வரும் அடிப்படையான குறைபாடுகளை போக்கி விட முடியாது என்ற ஆதங்கமும் கந்தியிடம் இருந்தது.
ஒருமுறை காந்தியின் கொள்கையை அறிந்தும் அவரிடம் உண்மையை மறைத்து விட்டார் அவரது கட்சிக்காரர் ஒருவர். இதனை விசாரணையின் போது அறிந்த காந்தி உடனேயே தன் கட்சிக்காரை கண்டித்த தோடு நீதிபதியிடம் சிறிதும் தயங்காது தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக தீர்ப்பளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நம்பமுடிகிறதா? எப்படிப்பட்ட மனிதர் காந்தி!
நம்பமுடிகிறதா? எப்படிப்பட்ட மனிதர் காந்தி!
இப்படி யாரேனும் இன்றைய வக்கீல்களில் இருக்கிறார்களா?
நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒரு சிலரையாவது சுட்டிக் காட்ட முடியும் நேர்மையான போலீஸ் அதிகாரியைக் கூட காணமுடியும் .ஏன் நேர்மையான அரசியல்வாதி கூட இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வக்கீல் தொழிலில் அப்படி யாரேனும் இருக்கிறார்களா?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
************************************************************************
காந்தி தொடர்பானபிற பதிவுகள்
- 3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
- 4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
- 5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6.
************************************************************
வணக்கம் நண்பரே நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் சொந்தக் கருத்தை சொல்கிறேன் 30 வருசமா பொய்யும் புரட்டுமாக தொழில் செய்து பல கொலைகாரர்களை காப்பாற்றியவர் பணி உயர்வு பெற்று நீதிபதியானதும் அவரை கடவுளுக்கு இணை என்று சொல்கின்றார்கள் பாமரர்கள் என்ற வசனம் ஞாாபகம் வருகிறது நண்பரே
பதிலளிநீக்கு-கில்லர்ஜி
தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று
ஆஹா! மின்னல் வேக கருத்துக்கு நன்றி கில்லர்ஜி
நீக்குகாவல் துறையுடன் கூட்டு சேர்ந்து பேரம் பேசும் வக்கீல்கள் இன்று பெருகி விட்டார்கள் ,இதற்கா BL ,ML படிப்பு ?
பதிலளிநீக்குஇன்று வக்கீல் தொழிலே பணம் பார்க்கும் தொழில்தானே... அப்புறம் எப்படி நியாயம் இருக்கும்?
பதிலளிநீக்குகாந்தி குறித்து நல்ல பகிர்வு.
வாய் ஜாலம்தான் வக்கீல் தொழில் என்றானபின் அதில் எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்க முடியும்? சட்டத்துக்கோ உண்மைகளை விட, சாட்சிகள் அவசியம். என்ன சொல்ல? கில்லர்ஜி சொல்லி இருக்கும் கருத்துதான் எனக்கும் முதலில் நினைவுக்கு வந்தது. பார்த்தால் அவர் சொல்லி விட்டார்!
பதிலளிநீக்குஇன்றும் நியாயம்பேசும் வழக்கறிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவது இரண்டு வகையாகக் கொள்ளலாமோ....ஒன்று காந்தியின் செயல், மற்றொண்டு பொய் புரட்டைக் கூட உண்மையாக்கி வெல்லும் வாய் திறன்....சட்டம் ஒரு இருட்டறை என்பது பல சமயங்களில் உண்மையாகின்றது. கில்லர்ஜி கருத்து அதாவது நடிகவேள் ராதா அவர்கள் சொன்னது எங்களுக்குத் தெரியாது ஆனால் அதே கருத்தைத்தான் சொல்ல வந்தோம்...கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைகளில்....அவர் சொல்லிவிட்டார்.
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்து அப்படி யாரும் இல்லைதான்! இருந்தாலும் இருக்கவிட மாட்டார்கள்!
பதிலளிநீக்குநீதித்துறை என்று வந்துவிட்டாலேயே அது வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் என்று இருவரையும் சேர்த்ததுதானே? நீங்கள் வக்கீல்களில் மட்டுமே நியாயவாதிகளைத் தேடினால் எப்படி?
பதிலளிநீக்குவக்கீகல்களில் இருந்தே நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப் படுவதால் இருவருக்குமே பொதுவானதாகக் கொள்ளலாம்.
நீக்குவக்கீல்கள் தங்கள் கல்வி பயின்று முடிந்ததும் ஏற்கும் உறுதி மொழி யாது?
பதிலளிநீக்குஅவர்களை விடுங்கள் தீர்ப்பை தீர்மானம் செய்து விட்டு பேருக்கு விசாரணை நடத்திய நீதி தேவர்கள் நிறைந்த நல்நாடு நம்நாடு என்பதை இனி ஒருவன் வந்து சொன்ன பிறகுதான் நாம் ஏற்போம். ஏனெனில் சூடுபட்ட பிறகே சொரணை என்பது 'நமக்கும்' இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மையாளர்களைத்தானே நாம் தலைவர்களாகப் பெற்றிருக்கிறோம்.
அய்யா தங்கள் தளத்தை தொடர்ந்து அறிவு பெற்றவன் நான்.
தங்கள் பதிவில் பகிர்ந்த தகவல்கள் எதுவும் எனக்கு தவறாக தோன்றவில்லை. மாறாக மக்களை மாக்களாக கருதுபவர்களின் அய்யோக்கியத்தனத்தை இனியும் கண்டும் காணாமலும் போகிற நம் மக்களின் பொது புத்திக்கு கொஞ்சமாவது விழிப்புணர்வு வரட்டும் என்கிற ஆதங்கத்தில்தான் இவ்வாறு பொங்கி(பதிந்து) விட்டேன். பிழையிருப்பின் மன்னிக்க...
ஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குஎன்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....
உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்
காந்தி மீண்டும் பிறப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு. அப்படிப் பிறந்து, சட்டமும் படித்தால் அவர் தான் உங்களுடைய கேள்விக்கு பதில்
பதிலளிநீக்கு