பள்ளி வயதில் காந்தியைப் பற்றி பெரிய தாக்கம் ஏதும் இருந்ததில்லை. பாடப் புத்தகத்தில் படித்ததெல்லாம். அவர் மீதான பெரிய பிம்பத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காந்தியின் மீதான எதிர்மறை கருத்துக்கள் காநதியைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டின. பொதுவாக காந்தியின் மீது கூறப்படும் பல குற்றசாட்டுகள் என் மனதிலும் இருந்தது. சத்திய சோதனை மற்றும் காந்தி தொடர்பான கட்டுரைகளை படித்த போது காந்தியைப் புரிந்து கொள்ள இன்னும் பக்குவம் தேவை என்பதை மட்டும் உணர முடிகிறது.
நேர்மை வாய்மை என்பதெல்லாம் சாத்தியமா? அதுவும் வக்கீல் தொழிலில். தென் ஆப்ரிக்காவில் தன் வக்கீல் தொழிலைப் பற்றி காந்தி தன் நினைவுகளைக் கூறுவதை அவர் சொல்வதாகவே கேட்போம்
"அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம் சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது என் நோக்கத்திற்கும் மாறானது.ஆனால், அவைகளில் உண்மையைக் கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும்.எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். நான் நடத்திய வழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என் கையை விட்டுச்செலவு செய்த பணத்திற்கு அதிகமாக அந்த வழக்குகளுக்கு நான் பணம் வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என்சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு. இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு அவசியமானவைகளை யெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர்.
வக்கீல் தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில் சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச் சொல்ல விருபுகிறேன். வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதனால் பயனடையக் கூடும்
வக்கீல் தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில் சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச் சொல்ல விருபுகிறேன். வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதனால் பயனடையக் கூடும்
வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய் சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றிவிடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன் முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என் எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான் அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ பொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம். ஆனால், அத்தகைய ஆசையை நான் எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்.
ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன். வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட, அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும்என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை. கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும், என் கட்டணத்திற்கு அதிகமாகவோ, குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம் பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து,சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக்கொள்ளுவார்கள்
ஒரு வழக்கு மிகவும் கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரான ஒருவருடைய வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்கு வழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம் விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது. இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச் சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று.
இத்தீர்ப்பை, எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல் வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில் என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன். நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர் கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக் கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றேன்.
ஆனால், பெரிய வக்கீல் பின்வருமாறு விவாதித்தார்: “தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால், மத்தியஸ்தர்களின் தீர்ப்பு முழுவதையுமே கோர்ட்டு ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும் புதிதாக விசாரிக்கும்படி வழக்கு அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும், முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்?” இவ்விதம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார்.
நான் கூறியதாவது: “இதில் ஆபத்திருந்தாலும் அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும் உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன். நடந்திருக்கும் ஒருதவறை நாம் ஏற்றுக் கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக் கோர்ட்டுஅங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? நாம் தவறை ஏற்றுக் கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன தீங்கு நேர்ந்துவிடும்?”
“ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார், பெரிய வக்கீல்.
“அத்தவறைக் கோர்ட்டு கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும் கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றேன்,
நான்.“ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள் தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான்
தயாராயில்லை” என்று தீர்மானமாகப் பதில் சொன்னார் பெரிய
வக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்
“நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம் கட்சிக்காரர் விரும்பினால்,
நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.”
இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர் நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக நன்றாக அறிவார்.
அவர் சொன்னார்:
“அப்படியானால் சரி, வழக்கில் கோர்ட்டில் நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நம் கதி என்றால் இதில் தோற்றுப் போனாலும் போகட்டும். நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”
நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய வக்கீல் என்னை மீண்டும் எச்சரிக்கை செய்தார். என் பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில் எனக்கு வாழ்த்தும் கூறினார்.
கோர்ட்டில் என்ன நடந்தது
(தொடரும்)
அடுத்த பகுதி ****************************************************
காந்தி தொடர்பானபிற பதிவுகள்
(தொடரும்)
அடுத்த பகுதி ****************************************************
காந்தி தொடர்பானபிற பதிவுகள்
- 3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
- 4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
- 5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6.
**********************************
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான தொடர்... ஆவலுடன் காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்கு//பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து, //
பதிலளிநீக்குஇந்த வரிகள் இஅரண்டு முறை வந்துள்ளன.
சுவாரஸ்மாயிருக்கிறது. தொடர்கிறேன்.
தம +1
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம் சார் திருத்தம் செய்து விட்டேன்
நீக்குநீதிமன்ற வளாகத்திற்குள் அவர்கள் விவாதிப்பதைக் கேட்பதுபோல உள்ளது. தொடருங்கள்.
பதிலளிநீக்குஅடுத்து ..நடந்தது என்ன ?தொடர்கிறேன் :)
பதிலளிநீக்குசுவையான திருப்பம்.
பதிலளிநீக்குவக்கீல் என்றில்லை எந்தத் தொழிலிலுமே பொய்யர்கள் உண்டு.
அரசியல் மட்டுமே முழுக்க முச்சூடுட்ம் பொய்யர்களின் தொழில் என்று நினைக்கிறேன்.
சுவாரசியமான தொடராக இருக்கிறதே!
பதிலளிநீக்குவலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..
பதிலளிநீக்குஇதுவரை எங்கும் படித்தும் கேட்டும் இல்லை இந்த நிகழ்வுகளை அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஇதிலும் ஒரு தொடருமா . தொடர்கிறேன்
பதிலளிநீக்குகாந்தியின் நேர்மை குணம் போற்றத் தக்கது! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குதொடர்கிறேன்!
பதிலளிநீக்குவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பதிலளிநீக்குபணம்அறம்
நன்றி
சுவாரஸ்யமான தகவல்....கொடுத்தமைக்கு நன்றி....தொடரக் காத்திருக்கின்றோம்....
பதிலளிநீக்குசுவாரஸ்யம்!தொடரவில்லையே?
பதிலளிநீக்கு