என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

புதன், 1 ஜூன், 2016

முற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா?

   
   வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர்  ரிலாக்ஸ் ப்ளீஸ் வலைப்பதிவு எழுதி வரும் நண்பர் வருண் . அதிரடியாக கருத்துகளை முன்வைத்து 
விவாதிப்பவர். சமீபத்தில் நரிக்குறவர் எஸ் டி பட்டியலில் சேர்த்தது பற்றி ஒரு பதிவு (நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா?) எழுதி  இருந்தேன்.அவர்  அந்தப் பதிவில் தெரிவித்த கருத்து  ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் வேறு இனத்தின்  பெயரைச் சொல்லி சாதி சான்று பெற்று சலுகைகள் அனுபவத்து வருவது நடக்கிறது என்று  சுட்டிக்காட்டி இருந்தார்.  இத்தவறை பலரும் செய்துவருவது உண்மைதான். 
அந்தக் கருத்தே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது . 

   இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுக்க முழுக்க தன் இனத்தின் பெயரை வேறு இனமாகக் குறிப்பிடுவது . உதாரணமாக தான் எந்த இனமாக இருந்தாலும் தனக்கு தொடர்பு இல்லாத சலுகை கிடைக்கத் தக்க இனத்தை  குறிப்பிடுவது. இன்னொன்று தங்கள் இனத்தின் பெயர்ஓற்றுமை உள்ள  சலுகை இனத்தை குறிப்பிடுவது. முன்னதை விட இது அதிக அளவில் சாத்தியமானது   உதாரணத்திற்கு ரெட்டியார்,செட்டியார் ,நாயுடு இன்னும் பிற. ரெட்டியார்    இனம் முற்பட்ட இனம் . ஆனால் கஞ்சம் ரெட்டி என்ற இனம் பிற்படுத்தப் பட்டோர்  பட்டியலில் உள்ளது. செட்டியார் இனத்திலும் பல முற்பட்ட இனத்தவர் பட்டியலில் உள்ளது.  நாயுடு இனமும் இரண்டு பிரிவுகளில் உள்ளது . இது போன்ற பிரிவில்  இருப்பவர் சலுகைக்காக மற்ற பிரிவை சொல்லி தங்கள் செல்வாக்கை வைத்து சான்று பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.என் நண்பர் ஒருவர்  . நாங்கள் முறபட்ட இனத்தை சேர்ந்தவர்கள். என்ன செய்வது சலுகைக்காக மாத்தி வாங்கறோம் என்பார்.  இன்னும் ஒருசிலர் உண்மையாகவே தனக்கான உண்மையான சான்று பெற்றாலும் தங்கள் முற்பட்ட இனத்தவர்தான் சலுகைக்காக மாற்று சான்று பெற்றிருக்கிறோம் என்று தன் இனத்தையே தாழ்த்திக் கொள்வதும்  உண்டு.
  இட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது 
இது நாள்வரை முற்பட்ட இனத்தவர்களில் நான் அறிந்தது  பிராமணர், ஒரு சில முதலியார், ரெட்டியார்,நாயுடு மட்டுமே .
சரி! எவ்வளவுதான்  முற்பட்ட இனத்தவர் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிட்டத்தட்ட 79 வகை முறபட்ட இனத்தவர் பட்டியலில்  கிடைக்கப் பெற்றேன். இவர்களில் பிராமணர் தவிர பிறருக்கு பி.சி. சான்று பெற வாய்ப்பு உள்ளது. எனக்குத்  தெரிந்து முற்பட்ட ரெட்டியார்இனத்தை  சேர்ந்த பலர் BC என்றே சான்று பெற்றுள்ளனர்.
யாருக்கெல்லாம் இப்படி சான்று பெற வாய்ப்பு இருக்கிறது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களில் ஒரு சிலர்  மட்டுமே வேறு இனப் பெயரைக் காட்டி சான்று பெற முடியாது என்று நினைக்கிறேன்.
இதுதான் முற்பட்ட இனத்தவர் பட்டியல்.
1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  1. ஆங்கிலோ இந்தியர் (511)
  2. ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
  3. லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
  4. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
  5. ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
  6. முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
  7. தாவூத் (608)
  8. கட்ஸு (சைத்)(609)
  9. மீர் (610)
  10. மைமன் (சைத்) (611)
  11. நவாப் (612)
  12. (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
  13. 501 செட்டியார் (701)
  14. அச்சு வெள்ளாளர் (702)
  15. ஆதி சைவர் (703)
  16. ஆற்காடு முதலியார் (704)
  17. ஆரியர் (705)
  18. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
  19. ஆற்காட்டு வெள்ளாளர் (707)
  20. அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
  21. ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
  22. பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
  23. பேரி செட்டியார் (711)
  24. போகநாட்டு ரெட்டியார் (712)
  25. பிராமணர் (713)
  26. சோழபுரம் செட்டியார் (714)
  27. தேவதிகர் (715)
  28. எழுத்தச்சர் (716)
  29. ஞானியர் (717)
  30. ஜைனர் (718)
  31. கடையத்தார் (719)
  32. கதுப்பத்தான் (720)
  33. காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
  34. கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
  35. கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
  36. காசுக்கார ஆச்சாரி (724)
  37. காயல் செட்டி (725)
  38. கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
  39. கொண்டியர் (727)
  40. கொங்குச் செட்டியார் (728)
  41. கொங்கு நாயக்கர் (729)
  42. கொங்கு ரெட்டியார் (730)
  43. கொந்தல வெள்ளாளர் (731)
  44. கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
  45. கோட்டைப்புரச் செட்டியார் (733)
  46. கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
  47. குக வாணியர் (735)
  48. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
  49. மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
  50. மொட்டை வெள்ளாளர் (738)
  51. மூசிக பலிஜகுலம் (739)
  52. நாடன் (நாட்டார்) (740)
  53. நாயர் (மேனன், நம்பியார்) (741)
  54. நாங்குடி வெள்ளாளர் (742)
  55. நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
  56. ஒருகுண்ட ரெட்டி (744)
  57. இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
  58. பணிக்கர் (746)
  59. பத்தான் (பட்டானி), கான் (747)
  60. ராஜபீரி (748)
  61. ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
  62. ராவுத்த நாயுடு (750)
  63. சைவச் செட்டியார் (751)
  64. சைவ ஓதுவார் (752)
  65. சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
  66. சைவ சிவாச்சாரியார் (754)
  67. சைவ வெள்ளாளர் (755)
  68. சானியர் (756)
  69. க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
  70. திருவெள்ளறைச் செட்டியார் (758)
  71. திய்யர் (759)
  72. தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
  73. உலகமாபுரம் செட்டியார் (761)
  74. வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
  75. வெள்ளாளப் பிள்ளைமார் (763)
  76. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
  77. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
  78. வாரியர் (மலையாளம்) (766)
  79. சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)

எத்தனை சாதிகள்! சாதிகளின் பட்டியல் பார்க்கும்போது தலை சுற்றுகிறது .SC,ST,BC,MBC இனங்களையும் பட்டியலிடலாம் என்று நினைத்தேன். இடம் போதாது என்று கைவிட்டேன்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான் 
ஆனால் 

சாதிகள் உள்ளதடி பாப்பா-குல 
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம் 
நீதி உயர்ந்த மதி கல்வி -இந்
நிலையை மாற்றவில்லை பாப்பா 
என்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது 

********************************************************


16 கருத்துகள்:

  1. சாதிப்பெயரைப் படிக்கும்போதே தலை சுத்துகிறதே....

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா எம்பூத்தூ..
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஆம் முரளி சகோ என மகனின் கல்லூரிச் சேர்க்கையின் போது விண்ணப்பத்துடன் இந்தப் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. தலை சுற்றிவிட்டது.

    //இட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது // மிக மிக உண்மை சகோ. இதை நான் உங்கள் முந்தைய பதிவில் சொல்ல நினைத்து விட்டது. கருத்திடுவதற்கு ஒரு சிறு தயக்கம் இருந்தது உண்மைதான்.

    உங்கள் இறுதி வரிகள் அந்தப் பாட்டு வரிகள் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்த இன வேறுபாடு கூடாது என்னும் எண்ணமே என் பதிவில் அனைத்துச் சிறார்களுக்கும் ஏழை பணக்காரன் வித்தியாசம் பாராமல் ஒரேகல்வியை அரசே அதை அரசுடைமையாக்கி எல்லாமே இலவசமாகத் தரவேண்டும் என்று எழுதி இருந்தேன் நிறையவே ஹோம் வர்க் செய்திருக்கிறீர்கள் இதே போல் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கோத்திரங்கள் குறித்துப் படித்துக் கொண்டிருந்தேன் அங்கு கூறப்பட்டிருக்கும் கோத்திரங்களின் பெயர்களை அவற்றின் எண்ணிக்கையை என்னால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.கில்லர் ஜி வேறு சாதிகளின் பெயர்களைக் கற்பனையில் கண்டு பிடிக்கிறார்

    பதிலளிநீக்கு
  6. இத்தனையும் தமிழ் நாட்டில்தானா ,நம்ப முடியலே :)

    பதிலளிநீக்கு
  7. ஒரு முறை சலுகையை அனுபவித்தவர்களை ஒதுக்கிட்டு மற்றவர்களுக்கு கொடுத்தால் மொத்த சமூகமும் மேலேறி வர முடியும்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895