என்னை கவனிப்பவர்கள்

சனி, 25 நவம்பர், 2017

சோதனை மேல் சோதனை

 

                     (சும்மா  ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே)
 
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது போ நீ!
                (சோதனை மேல் சோதனை )

நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது-ஒரு
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
                                                  (சோதனை மேல் சோதனை )

ஆதாரம் இருக்குதம்மா   ஆதரவில்லை-நான்
 அவதாரம் இல்லையம்மா தப்பித்து செல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல-எனது
அதிகாரம் செல்லலையே யாரிடம் சொல்ல
ஒரு நாளும்  நானிது போல் அழுதவனல்ல-அந்த
 திருநாளும் வந்ததை நான்  என்னென்று சொல்ல

                                                            (சோதனை மேல் சோதனை ) 

(மாமா!சொத்தை பறிகொடுத்தவன் எல்லாம் பறிச்சவனைப்  பாத்து பயப்படுவாங்க  . பறிச்சவனே பயந்து நின்னா
கடன் வாங்கினவன்  எல்லாம் கந்து வட்டிக்  காரனைப் பாத்து கலங்குவாங்க  . கந்து வட்டிக் காரனே கலங்கி நின்னா யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?)

சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-அட
ஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல
கூட வந்த கூட்டத்துக்கு குறைவே இல்லை-அதில்
ஒருத்தனையும் இப்போ இங்கே காணவும் இல்ல
கோடி கோடி பணம் இருந்தும் பயனும் இல்ல -ஒரு
மோடி வித்தை செய்தால்தான் தீரும் தொல்லை

                                                         (சோதனை மேல் சோதனை )


-----------------------------------------------------------------------------------------------------------


20 கருத்துகள்:

  1. இருந்தாலும் தினகரனை இப்படி எல்லாம் நக்கல்ஸ் பண்ணுவது நல்லாயில்லை.

    ஆனால் நான் பாடி இரசித்தேன் நண்பரே... ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள்
    உண்மையான காட்சியைப் பார்க்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒரு நிலை வரும் என்று அவர் கூட சிந்தித்து இருக்கமாட்டார் இதுவரை!

    பதிலளிநீக்கு
  4. ரீமிக்ஸ் நல்ல இருக்கு அவருக்கு

    பதிலளிநீக்கு
  5. கடைசி பத்தி எல்லாம் சந்தத்தோட சேரவில்லை என்றாலும் பதிவின் கருத்து புரிவதால் ரசிக்க முடிந்தது. ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரல் வளம் இல்லை என்றபோதும் பாடிப் பார்த்தே எழுதினேன். .பொருந்தி வருவதாகவே நினைக்கிறேன். கீதா வந்து சொல்லி விடுவார்.பார்ப்போம்

      நீக்கு
  6. ஹா ஹா ஹா ரொம்பவே ரசித்தோம்! செம கற்பனை.. நல்லா எழுதறீங்க முரளி ஸார்/சகோ

    இது எங்கள் இருவரின் கருத்து..

    கீதா: சகோ வந்துட்டேன்....ஸ்ரீராம் கு சொல்லிருக்கீங்களே!! ஆ!!! பாடிப் பார்த்தேன் செட் ஆவுது இரண்டு இடங்களில் மட்டும்....

    நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது.....முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் இடையே பாட்டில் வரும் அதில்??! உங்கள் வரிகளில் அது இல்லாததால் கொஞ்சம் இடிக்குது ஸோ கலங்குது வை கொஞ்சம் அப்படி நீட்டிப் பாடி இரண்டாவது வரியைப் பிடிக்க வேண்டி உள்ளது..

    அதே போன்றுதான்

    சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில
    ஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல // இந்த வரிகளிலும் கொஞ்சம் நீட்டி அட்ஜஸ்ட் செய்துவிட முடிகிறது..ஆனால் அடுத்த வரிகளில் "-அதில்"
    நீங்கள் போட்டிருப்பதால் சந்தம் செட்டாகிவிடுகிறது!!

    மற்றபடி பாடிவிட முடிகிறது சகோ!!! சூப்பர்!! கலக்குறீங்க போங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு என்ற வார்த்தைய சேர்த்து விட்டால் சரியாகி விடும் என நினைக்கிறேன்.

      நீக்கு

    2. சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-இதற்குப் பின் அட என்ற வார்த்தையை சேர்த்து விடலாம். ஒரிஜினல் பாடல் வரிகளை எடுத்து வைத்திருந்தால் இந்த குறைகளை சரி செய்திருக்கலாம். இப்போது செய்து விடுகிறேன். நன்றி கீதா மேடம்

      நீக்கு
  7. சோதனைதான். என்ன செய்வது. உங்களின் கற்பனாசக்தி அபாரம்.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. வரிகள் அருமை. காட்சியை முன் நிறுத்துகிறது

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895