என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

என்னை நம்பி நான் பொறந்தேன்! போங்கடா போங்க!

(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது )
என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 
என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 

ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல 
ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல 
பட்ட நாமம் உங்களுக்கு   பரிசுதான் எங்களுக்கு 

        என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
        என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 

அஞ்சு கொடுத்தா அரை  ஒட்டு  பத்து கொடுத்தா பல  ஒட்டு 
அஞ்சு கொடுத்தா அரை  ஒட்டு  பத்து கொடுத்தா பல  ஒட்டு 

மொத்தமா  கொடுத்தா ஓட்டம்மா  மக்கள் நினச்சா வேட்டம்மா
பானையில சோறுவச்சா பூனைகளும் ஓடிவரும் 
கேனையனா  நினச்சீங்க   தனியாளா ஜெயிச்சேண்டா 

          என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
          என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 

திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக  
திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக 

நினத்ததை முடித்தேன் சரியாக! நான் யார் நீ யார் தெரிஞ்சிக்கடா 
சித்திரையில் வெதச்சது  மார்கழியில் அறுவடைதான் .
சத்தியமா சொல்லறேன் நான் சத்தமின்றி ஓடிவாடா   

       என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
       என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 
    -----------------------------------------

முந்தைய பதிவு
சோதனை மேல் சோதனை

20 கருத்துகள்:

  1. என்னை நம்பி நான் இருந்தேன் என் பணத்தை நம்பி ஓட்டு விழுந்தது . இப்ப என்ன சொல்லுவீங்க இப்பஎன்ன சொல்லுவீங்க

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவை போல தெரியவில்லையே...இருந்தாலும் அரை மணியில் அசத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா முரளி சகோ என்ன வெளுத்து வாங்கறீங்க!! செம! அரை மணி நேரத்தில் !!!வாவ்! முடிவுகள் வெளியாக வெளியாக வாத்தைகள் அப்படியே வந்து விழுந்துருச்சோ முரளிசகோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காலத்திற்கேற்றப் பாடல்
    ரசித்தேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  5. நான் ஓட்டு போடல! ஆனா போட்ட முன்னமே பதிவாச்சி வருது!!?

    பதிலளிநீக்கு
  6. பணம் வாங்கி வாக்குப் போடும் நிலை
    மாறாத வரைக்கும் தமிழகம் முன்னேறாதே!
    இது யார் விட்ட தவறு? - ஆண்டவா
    நீயே பதில் கூறு!

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  8. முரளி சகோ தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் கண்டு முடிந்தால் பதிவிடவும்..இது மதுரைத் தமிழனால் தொடங்கப்பட்ட தொடர் பதிவு மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அது சரி முரளி
    உண்மையைச் சொல்லுங்க
    20ரூபாய் டோக்கன் உங்களுக்கும் வந்துச்சு தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஏரியாலதான் எங்க ஆபீஸ் ஆனா வோட்டர் லிஸ்ட்ல இருந்தாத்தான் டோக்கன்

      நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895