என்னை கவனிப்பவர்கள்

உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 டிசம்பர், 2012

நாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என்ன செய்கிறார்கள்?

   நாளை உலகம் அழியப் போகுதாமே!  கொஞ்ச நாளா பதிவுலகத்துக்கு அல்வா  கிடைச்ச மாதிரி ஆளுக்காளு எழுதி தள்ளறாங்க.நாமளும் இதைப் பத்தி எழுதலைன்னா பதிவுலகத்தை விட்டே நம்மை தள்ளி வச்சுடுவாங்க!
என்ன எழுதலாம்னு தலையைப் பிச்சுகிட்டு யோசிச்சேன்.
  நமக்கு ஒன்னும் தோணல. சரி, இன்னைக்கு பிரபல  பதிவர்கள் என்ன செய்யறாங்கன்னு பாக்கலாம்னு கிளம்பிட்டேன்.
        முதல்ல எங்க ஏரியாவில இருக்கிற மோகன்குமார் வீட்டுக்கு போனேன். இன்னும் வீடு திரும்பலன்னாங்க. சரின்னு நானும் திரும்பிட்டேன். வழியில குப்பை பொறுக்கற பையன்கிட்ட யாரோ பேட்டி எடுத்துகிட்டு இருந்தாங்க! அட! நம்ம மோகன்குமார்தான். "நாளைக்கு உலகம் அழியப் போகுது.எதைப் பத்தியும் கவலைப் படாம இன்னிக்கும் உலகத்தை சுத்தப் படுத்துக்கிட்டிருக்கயே! உனக்கு பயமா இல்லையா!" என்று கேட்டுக் கொண்டிருக்க நான், "மோகன்சார்"  என்று கூப்பிட திரும்பிப் பார்க்காம நான் போனில் கூப்பிடுவதாக நினைத்து  செல் போனை எடுத்து "ஹலோ சார்!   உலகம் அழியதற்கு முன்னே ஒரு பதிவு போடணும்.நாளைக்கு முடிஞ்சா பாக்கலாம்" என்று கடமையே கண்ணாக பேட்டியைத் தொடர்ந்தார்.

  அங்கிருந்து  மாம்பலத்தை க்ராஸ் பண்றப்ப  மின்னல் வரிகள் கணேஷ், மனைவி சரிதாவோட  ரங்கநாதன் தெருவில சுற்றிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்துவிட்டு "முரளி! உலக அழிவுநாள் சிறப்பு தள்ளுபடி போட்டிருக்கானாம். இன்னைக்குத்தான் கடைசி நாளாம். வாங்கியாகனும்னு சரிதாவோட ஆசைய நிறைவேத்தனும் இல்ல?. வரட்டுமா" டாடா காட்டிவிட்டு முன்னால் சென்றுகொண்டிருந்த சரிதாவின் பின்னால் ஓடினார். கணேஷ் சாருக்கு இன்னைக்கு பதிவு ரெடி.

இதுக்கு மேல சுத்த முடியாம வீட்டுக்கு வந்துட்டேன். நெட்டுக்குள்ள நுழைஞ்சு பாத்தப்ப சில ரகசிய தகவல்கள் கிடைச்சது. யார் கிட்டயும் சொல்லாதீங்க!

  • சைதாப்பேட்டையில் ஒரு டீக்கடையில  கேபிள் அண்ணன் டீயை யும் பண்ணையும் க்ளோஸ் அப்ல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாராம்.சாப்பாட்டுக் கடை பதிவில் இது வரப் போகுதாம்.அதுக்கு ரெண்டு மணிநேரம்  முன்னாடி DTH ல பதிவை வெளியிடப் போறாராம். அதனால பதிவுக்கான ஹிட்ஸ் குறையாதுன்னு அடிச்சி சொல்றாராம் உலகம் அழியறதுக்கு முன்னாடி இந்த சாதனையை செய்யனும்னு அடம் பிடிக்கறதா கேள்வி.

  •  வரலாற்றுச் சுவடுகள் என்ன பண்றாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப முயற்சி பண்ணேன்.உலகம் அழியப் போறதால பாதாள அறைக்குள்ள பதுங்கிக் கிட்டிருக்கறதாகவும், "இரண்டாவது முறை அழியும் உலகம்" அப்படிங்கற பதிவுக்கு தகவல்கள் திரட்டிக்கிட்டு இருக்கறதா நம்பத் தகாத வட்டங்கள்ள இருந்து செய்தி வந்தது.


  • திண்டுக்கல் தனபாலன் உலகம் அழியறதுக்கு முன்பு மக்கள் நல்ல விஷயம் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டுமேன்னு திருக்குறள்ல இருந்து ஏராளமான தகவல்கள் திரட்டி நல்ல பதிவு ஒன்னு எழுதி இருப்பதாகவும் கரண்ட் வந்ததும் அதை வெளியிடப் போவதாகவும், ஆனால் உலகம் அழியும் முன் கரண்ட் வருமான்னு சந்தேகத்தில் இருக்கறதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கு. 

  • நம்ம மதுமதி 21.12.2012க்குள்ள TNPSC போட்டித்தேர்வுகளுக்கான பதிவுகளைப் போட்டு நிறையப் பேருக்கு உலகம் அழியறதுக்குள்ள அரசு வேலை வாங்கி கொடுக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காராம்.

  • டாப்  20 போட்டு கலக்கும் ஹாரி, சுஜாதாவோட புத்தகங்களை குவிச்சி வச்சு அதுக்குள்ள நுழைஞ்சி உலகம் அழியறதப் பத்தி சுஜாதா என்ன சொன்னாருன்னு தேடிப் பாத்து ஒரு  அதிர்ச்சி பதிவு போடற ஐடியாவில இருக்கிராம். 

  • பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும், கற்போம் பிரபு கிருஷ்ணா இவங்கல்லாம் ஆட்டோமேட்டிக்கா பதிவு போடறதுக்கும் கம்மென்ட் போடறதுக்குமான கோடிங் தீவிரமா எழுதிக் கிட்டிருக்காங்களாம். உலகம் அழியறதுக்கு முன்னாடி அது உங்களுக்கு கிடைச்சிடும்.

  • அப்புறம் அட்ராசக்க சிபி செந்தில்குமார்   உலகம் அழியறதுக்கு முன் தினமான இன்னைக்கு ஒரே நாள்ல நூறு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி இருக்காராம் . அவர் டேபிள்ள ஃபளாஸ்க்ல காபியும், பேஸ்ட்டும் இருந்தது அதை உறுதிப்படுத்துதாம்.    (தூக்கம் வராம இருக்கறதுக்காக  ராத்திரியெல்லாம் அடிக்கடி காபி குடிச்சிக்கிட்டு டூத் பேஸ்ட் வச்சி பல் தேச்சுகிட்டிருந்தாராம் )

   அது சரி நீ என்ன பண்ணறன்னு கேக்கறீங்க?  பாலகுமாரன்,  உலகம் அழியறதப் பத்தி பல்லி,தேள்,கரப்பன் பூச்சிகளை வைத்து கவிதைகள் எழுதி இருக்காறான்னு  பாத்துக்கிட்டு இருக்கேன். ஒண்ணும் கிடைக்கல. ஏதாவது இருந்தா சீக்கிரம் அனுப்பி வையுங்க பாஸ்.

***************************************************************************************************************
என் பாணியிலான பதிவு அல்ல இது. வித்தியாசத்திற்காக எழுதப்பட்ட  வெறும் கற்பனைதான். நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையேனும் வருத்தப் படுத்துமானால் தெரிவிக்கவும். நீக்கி விடுகிறேன். தொடர்ந்து இது போல் எழுத உத்தேசமில்லை. 
****************************************************************************************************************