என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 20 மார்ச், 2015

வந்துட்டீங்க! சிரிச்சிட்டுத்தான் போங்களேன்!








‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’

‘அப்புறம் என்ன ஆச்சு’

‘பாவம்!மெட்ராஸ் ஐ வந்திடுச்சு’


 ‘அம்மா! அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல’
‘எப்படி சொல்ற?’
‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு  கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்’

  





  ‘புலிக்கும் எலிக்கும் என்ன    வித்தியாசம்'     
           
  ‘புலி பதுங்கிப் பாயும்.எலி       பாய்ந்து   பதுங்கும்’


‘மன்னா!  வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே  வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?’
‘முட்டாள் அமைச்சரே!அடுத்த நாட்டு மன்னன் திடீரென்று  படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா?’


 




  “அந்தப் படத்தில ஹீரோ,    
   ஹீரோயின் அரை குறை     
   ஆடையோடவே 
   நடிக்கிறாங்களாமே!

    "ஆமாம்!படத்தோட பேர் 'ஆள்    
    பாதி; ஆடை பாதி' யாம்"



****************************************************

இதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க