என்னை கவனிப்பவர்கள்

ஜோக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 மார்ச், 2015

வந்துட்டீங்க! சிரிச்சிட்டுத்தான் போங்களேன்!








என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

அப்புறம் என்ன ஆச்சு

‘பாவம்!மெட்ராஸ் ஐ வந்திடுச்சு


 அம்மா! அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல
எப்படி சொல்ற?’
‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு  கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்

  





  ‘புலிக்கும் எலிக்கும் என்ன    வித்தியாசம்'     
           
  ‘புலி பதுங்கிப் பாயும்.எலி       பாய்ந்து   பதுங்கும்


‘மன்னா!  வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே  வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?
‘முட்டாள் அமைச்சரே!அடுத்த நாட்டு மன்னன் திடீரென்று  படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா?


 




  “அந்தப் படத்தில ஹீரோ,    
   ஹீரோயின் அரை குறை     
   ஆடையோடவே 
   நடிக்கிறாங்களாமே!

    "ஆமாம்!படத்தோட பேர் 'ஆள்    
    பாதி; ஆடை பாதி' யாம்"



****************************************************

இதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க 

வியாழன், 5 ஜனவரி, 2012

மரியாதையா சிரிச்சுடுங்க! இல்லன்னா........... அழுதுடுவேன்

இதைப் படிச்சாச்சா?
யாரோ பார்க்கிறார்கள்!

*********************************************************************************************************************

'உங்க வீட்டுக்காரர்  நியூ இயருக்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?'


'எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார். அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.'

**************************************************************************************************************

 
'சார்! கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில முதலாவதா வந்தீங்க?'

'என் மனைவி பின்னாடி துரத்திட்டு வர 
மாதிரி நினச்சிகிட்டேன்.'





'சரத் பவார் கன்னத்தில அடிச்சதுக்காக இன்னமும் கோவிச்சிக்கிட்டு இருக்காராமே?'

'அதுக்காக இல்லையாம். அவர  எல்லோரும் சரத் பளார் ன்னு  கூப்பிடராங்கலாம்.'
***************************************************************************************************************

'தலைவரே! நீங்க அந்த நடிகையோட உல்லாசமா இருந்தப்போ வீடியோ புடிச்சவங்களை கையும் களவுமா புடிச்சிட்டீங்கலாமே! என்ன பண்ணீங்க!'

'விடுவனா அவங்களை? சி.டி போட்டதும் முதல் காப்பி எனக்குதான் குடுக்கனுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.'

****************************************************************************************************************************
 
'ஏண்டா! தலைவர்  மீட்டிங்ல பேசறதுக்கு லோக்பால் பத்தி விசாரிச்சிட்டு வரச் சொன்னாரே விசாரிச்சயா  என்ன ஆச்சு?'


'அண்ணே! எல்லா பால்காரன் களையும் கேட்டுட்டேன். எருமைப்பால் பத்தி சொல்றாங்க பசும்பால் பத்தி  சொல்றாங்கஆட்டுப்பால்,  
கழுதைப் பால் ஏன் ஒட்டகப் பால் பத்தியும் 
சொல்றாங்க. ஆனா லோக்பால் பத்தி  
யாருக்குமே தெரியலன்னே.'

**********************************************************************************************************


'நம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம் அதிகம்.'

'எப்படி சொல்ற?'

'ஃபுட்பால்  வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல சேக்கனும்னு சொல்றாரு'.

****************************************************************************************************************************

வெள்ளி, 9 டிசம்பர், 2011

ஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்!



         
                    
    
    "என் பொண்ணுக்கு பார்த்திருக்கிற   
      மாப்பிள்ளை பெரிய பணக்காரர்"
       " எப்படி சொல்லற"             
    "தினமும் பஸ்ல ஆபீஸ் போறராம்"





 
 
"மின் கட்டணம் உயர்த்தப் படுகிறதே என்று நீங்கள் கவலைப்  படவேண்டாம். மின் கட்டணத்தை குறைக்க முடியா விட்டாலும் மின்சாரத்தை குறைத்து உங்கள் செலவை மிச்சப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்."





"முல்லை பெரியார் பிரச்சனை பற்றி எனக்குத் தெரியாதாம். எதிர் கட்சிக்  காரர்கள் என்னிடமே சவால் விடுகிறார்கள். பெரியாரை வம்புக்கிழுத்தால் நான் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டேன். அவருக்காக பெரும் போராட்டம் நடத்துவேன்  என்றும் எச்சரிக்கிறேன்."



 

"பெரியோர்களே! தாய்மார்களே! நம்முடைய அண்ணன்தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை  அதிக நேரம் அமைச்சராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்."





  
  
 "அனு உலையை  அனு  உலையை  மூடவேண்டும் என்று சொல்பவர்களே! என் உறவினர் அனு வந்து உலையை  மூடவேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."





*****************************************************************************************************************

இதையும் படியுங்க!
தலையிடாக் கொள்கை
ஜீவ காருண்யம் 
ஜூனோ! எங்கள் செல்லமே! கவிதை  
*************************************************************