என்னை கவனிப்பவர்கள்

முல்லை பெரியாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லை பெரியாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 டிசம்பர், 2011

தமிழா! எழுவாய்!


தமிழர்களின் 
வாழ்வுதனை 
சூது கவ்வும் 

தமிழன் வெல்ல  
விரைவாய்  எழுவாய்!

சும்மா இருந்தால் 
பயனிலை!

 காத்திருக்கிறது 
பல செயப்படுபொருள்கள்!

வா!
தமிழனின் 
தனி இலக்கணத்தை 
பக்கத்து 
மாநிலத்தவருக்கு  
 பயிற்றுவிப்போம்! 

 ***************************************************************************
இதையும் படியுங்க:



வெள்ளி, 9 டிசம்பர், 2011

ஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்!



         
                    
    
    "என் பொண்ணுக்கு பார்த்திருக்கிற   
      மாப்பிள்ளை பெரிய பணக்காரர்"
       " எப்படி சொல்லற"             
    "தினமும் பஸ்ல ஆபீஸ் போறராம்"





 
 
"மின் கட்டணம் உயர்த்தப் படுகிறதே என்று நீங்கள் கவலைப்  படவேண்டாம். மின் கட்டணத்தை குறைக்க முடியா விட்டாலும் மின்சாரத்தை குறைத்து உங்கள் செலவை மிச்சப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்."





"முல்லை பெரியார் பிரச்சனை பற்றி எனக்குத் தெரியாதாம். எதிர் கட்சிக்  காரர்கள் என்னிடமே சவால் விடுகிறார்கள். பெரியாரை வம்புக்கிழுத்தால் நான் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டேன். அவருக்காக பெரும் போராட்டம் நடத்துவேன்  என்றும் எச்சரிக்கிறேன்."



 

"பெரியோர்களே! தாய்மார்களே! நம்முடைய அண்ணன்தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை  அதிக நேரம் அமைச்சராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்."





  
  
 "அனு உலையை  அனு  உலையை  மூடவேண்டும் என்று சொல்பவர்களே! என் உறவினர் அனு வந்து உலையை  மூடவேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."





*****************************************************************************************************************

இதையும் படியுங்க!
தலையிடாக் கொள்கை
ஜீவ காருண்யம் 
ஜூனோ! எங்கள் செல்லமே! கவிதை  
*************************************************************